அசலாம்பிகையின் அற்புதக் கவிதை!

narsimehtha

Don’t Reblog it for at least for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by லண்டன் சுவாமிநாதன்

Date : 7 September  2015

Post No. 2133

Time uploaded in London: – 15-40

1910, 1920 ஆம் ஆண்டுகளில் பல ஆன்மீக நூல்களையும், சொற்பொழிவுகளையும் செய்தவர் திருமதி பண்டிதை அசலாம்பிகை. அவரைப் புகழ்ந்து திரு.வி.க. போன்ற தமிழ் அறிஞர்களும் சித்தாந்த தீபிகை போன்ற பத்திரிக்கைகளும் எழுதியிருப்பதிலிருந்தே அவர் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கு போலப் பிரகாசிக்கிறது. அவர் காந்தி புராணம் என்று காந்தியின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் எழுதி மூன்று பகுதிகளாக நூல்களாக வெளியிட்டுள்ளார். நல்ல கவி உள்ளம் படைத்தவர் என்று தெரிகிறது. முதல் முன்று பகுதிகள் காந்தியின் 1924 ஆம் ஆண்டுவரையுள்ள வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கிறது. அதற்குப் பின்னுள்ள காந்தியின் வரலாற்றை இவர் எழுதினாரா என்று தெரியவில்லை (பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள புத்தகங்களை அடிப்படையாக வைத்து இதை எழுதுகிறேன்).

காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று குஜராத் மகான் நரசிம்ம மேத்தா எழுதிய “வைஷ்ணவன் யார்?” என்ற கவிதையாகும். இதை இந்து யார்? என்ற கேள்விக்கு விடையாகவும் கொள்ளலாம். இதைப் பிற்காலத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மொழி பெயர்த்ததை நாம் அறிவோம். ஆனால் அதற்கு முன்னரே காந்தி புராணத்தில் அசலாம்பிகை அம்மையார் கவிதையாக மொழி பெயர்த்துள்ளார். அதில் இவருடைய செஞ்சொற் கவி நயத்தைக் காணலாம். இதோ இத்துடனுள்ள இணைப்பில் அதைக் காணுங்கள். அதைத் தொடர்ந்து நாமக்கல் கவிஞரின் மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளேன்

narsimehta1 (2)
IMG_3996 (2)

IMG_3995 (2)

IMG_3991 (2)

வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்)

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;
உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம். (வைஷ்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்
நாயக னாகிய சிறீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்
ஆகும்அவனே வைஷ்ணவனாம். (வைஷ்)

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமுடை வார்கள் எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரை சேர்வார். (வைஷ்)

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

மூலம்: நரசிம்ம மேத்தா

1969gandhi

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீட பராயே ஜானேரே
பரதுக்கே உபகார் கரே தோயே
மன் அபிமான் ந ஆனே ரே
(வைஷ்ணவ)

சகல லோக மான் சஹுனே வந்தே
நிந்தா ந கரே கேனீ ரே
வாச் கச்ச மன் நிஸ்சல ராகே
தன் தன் ஜனனீ தேனே ரே
(வைஷ்ணவ)

சம்திருஷ்டி நே த்ருஷ்ணா த்யாகீ
பரஸ்த்ரீ ஜேனே மாத ரே
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலே
பர தன் நவ் ஜாலே ஹாத் ரே
(வைஷ்ணவ)

மோஹ மாயா வ்யாபே நஹீ ஜேனே
த்ருட வைராக்ய ஜேனா மன்மாம் ரே
ராம் நாம் சூன் தாலீ லாகீ
சகல தீரத் தேனா தன்மாம் ரே
(வைஷ்ணவ)

வண லோபீ நே கபட-ரஹித சே
காம க்ரோத நிவார்யா ரே
பனே நரசய்யொ தேனுன் தர்ஷன் கர்தா
குல் ஏகோதேர் தார்யா ரே

நரசிம்ஹ மேதா
(கிபி. 1500)

1947 Gandhi Rs 10 Service

वैष्णव जन तो तेने कहिये जे पीड परायी जाणे रे।
पर दुःखे उपकार करे तो ये मन अभिमान न आणे रे॥
सकळ लोकमां सहुने वंदे, निंदा न करे केनी रे।
वाच काछ मन निश्चळ राखे, धन धन जननी तेनी रे॥
समदृष्टि ने तृष्णा त्यागी, परस्त्री जेने मात रे।
जिह्वा थकी असत्य न बोले, परधन नव झाले हाथ रे॥
मोह माया व्यापे नहि जेने, दृढ़ वैराग्य जेना मनमां रे।
रामनाम शुं ताळी रे लागी, सकळ तीरथ तेना तनमां रे॥
वणलोभी ने कपटरहित छे, काम क्रोध निवार्या रे।
भणे नरसैयॊ तेनुं दरसन करतां, कुळ एकोतेर तार्या रे॥
Next Post
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: