Dont Reblog it for at least a week; dont use pictures.
மஹாபாரத வழிகாட்டி
ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்
Research Article written by S NAGARAJAN
Date: 17th September 2015
Post No: 2165
Time uploaded in London :– 12-11
(Thanks for the pictures)
ச.நாகராஜன்
வாழ்நாள் முழுவதும் படிக்க வேண்டிய இதிஹாஸங்கள் ராமாயணமும், மஹாபாரதமும்.
இதில் மஹாபாரதம் உலகின் மிகப் பெரும் நூல் என்ற பெருமையைப் பெறுகிறது. இதில் இல்லாத விஷயங்களே இல்லை என்பது இதன் சிறப்புகளில் ஒன்று.
நூலின் பிரம்மாண்டத்தை எப்படி அறிவது?
கீழே உள்ள பட்டியலைப் பார்த்து அறியலாம்.
தமிழில் மிகவும் அரும்பாடு பட்டு மஹாபாரதத்தைப் பதிப்பித்தவர் ம.வீ.இராமானுஜாசாரியர். இவரது பதிப்பு மொத்தம் சுமார் 8895 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. 2314 அத்தியாயங்கள் இதில் உள்ளன.
1896இல் K.M. கங்குலி அவர்களால் 1896ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட மஹாபாரதத்திலோ 2113 அத்தியாயங்கள் உள்ளன.
ஹிந்தியில் மஹாபாரதம் பற்றி எழுதியுள்ள அறிஞர் வாசுதேவ குப்தா தனது மஹாபாரத் தர்ஷன் (2011 வெளியீடு, புனீத் ப்ரகாஷன், ஜய்பூர்) என்ற நூலில் 1923 அத்தியாயங்களில் உள்ள 96244 ஸ்லோக பட்டியலைத் தருகிறார்.
நூலின் பிரம்மாண்டம் இப்போது புரியும்.
மூன்று பட்டியல்களையும் கீழே காணலாம். இன்னும் சில பட்டியல்களும் கூட இருக்கக் கூடும்.
தமிழ் மஹாபாரதம் – ம.வீ.ராமானுஜாசாரியர் பதிப்பு
- ஆதி பர்வம் 260 அத்தியாயங்கள் 956 பக்கங்கள்
- சபா பர்வம் 103 அத்தியாயங்கள் 359 பக்கங்கள்
- வனபர்வம் 315 அத்தியாயங்கள் 1242 பக்கங்கள்
- விராட பர்வம் 78 அத்தியாயங்கள் 337 பக்கங்கள்
- உத்யோக பர்வம் 196 அத்தியாயங்கள் 663 பக்கங்கள்
- பீஷ்ம பர்வம் 122 அத்தியாயங்கள் 510 பக்கங்கள்
- துரோண பர்வம் 203 அத்தியாயங்கள் 858 பக்கங்கள்
- கர்ண பர்வம் 101 அத்தியாயங்கள் 482 பக்கங்கள்
- சல்ய பர்வம் 66 அத்தியாயங்கள் 303 பக்கங்கள்
- சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள் 72 பக்கங்கள்
- ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள் 72 பக்கங்கள்
- சாந்தி பர்வம் 375 அத்தியாயங்கள் 1414 பக்கங்கள்
- அநுசாஸன பர்வம் 274 அத்தியாயங்கள் 1068 பக்கங்கள்
- அஸ்வமேதிக பர்வம் 118 அத்தியாயங்கள் 403 பக்கங்கள்
- ஆஸ்ரமவாசிக பர்வம் 41 அத்தியாயங்கள் 98 பக்கங்கள்
- மௌஸல பர்வம் 9 அத்தியாயங்கள் 28 பக்கங்கள்
- மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள் 10 பக்கங்கள்
18 ஸ்வர்காரோஹண பர்வம் 5 அத்தியாயங்கள் 20 பக்கங்கள்
மொத்தம் 2314 அத்தியாயங்கள் 8895 பக்கங்கள்
ஆங்கிலத்தில் உள்ள மஹாபாரதம் – கே.எம். கங்குலி பதிப்பு
- ஆதி பர்வம் 236 அத்தியாயங்கள்
- சபா பர்வம் 80 அத்தியாயங்கள்
- வனபர்வம் 313 அத்தியாயங்கள்
- விராட பர்வம் 72 அத்தியாயங்கள்
- உத்யோக பர்வம் 199 அத்தியாயங்கள்
- பீஷ்ம பர்வம் 124 அத்தியாயங்கள்
- துரோண பர்வம் 203 அத்தியாயங்கள்
- கர்ண பர்வம் 96 அத்தியாயங்கள்
- சல்ய பர்வம் 65 அத்தியாயங்கள்
- சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள்
- ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள்
- சாந்தி பர்வம் 364 அத்தியாயங்கள்
- அநுசாஸன பர்வம் 168 அத்தியாயங்கள்
- அஸ்வமேதிக பர்வம் 92 அத்தியாயங்கள்
- ஆஸ்ரமவாசிக பர்வம் 39 அத்தியாயங்கள்
- மௌஸல பர்வம் 8 அத்தியாயங்கள்
- மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள்
18 ஸ்வர்காரோஹண பர்வம் 6 அத்தியாயங்கள்
மொத்தம் 2113 அத்தியாயங்கள்
ஹிந்தியில் உள்ள மஹாபாரத தர்ஷன் நூலில் கே.எம்.வாசுதேவ குப்தா தந்துள்ள பட்டியல்
- ஆதி பர்வம் 227 அத்தியாயங்கள் 8884 ஸ்லோகங்கள்
- சபா பர்வம் 78 அத்தியாயங்கள் 2511 ஸ்லோகங்கள்
- வனபர்வம் 269 அத்தியாயங்கள் 11664 ஸ்லோகங்கள்
- விராட பர்வம் 67 அத்தியாயங்கள் 2050 ஸ்லோகங்கள்
- உத்யோக பர்வம் 186 அத்தியாயங்கள் 6698 ஸ்லோகங்கள்
- பீஷ்ம பர்வம் 117 அத்தியாயங்கள் 5884 ஸ்லோகங்கள்
- துரோண பர்வம் 170 அத்தியாயங்கள் 8909 ஸ்லோகங்கள்
- கர்ண பர்வம் 69 அத்தியாயங்கள் 4964 ஸ்லோகங்கள்
- சல்ய பர்வம் 59 அத்தியாயங்கள் 3220 ஸ்லோகங்கள்
- சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள் 870 ஸ்லோகங்கள்
- ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள் 775 ஸ்லோகங்கள்
- சாந்தி பர்வம் 329 அத்தியாயங்கள் 14732 ஸ்லோகங்கள்
- அநுசாஸன பர்வம் 146 அத்தியாயங்கள் 8000 ஸ்லோகங்கள்
- அஸ்வமேதிக பர்வம் 103 அத்தியாயங்கள் 3320 ஸ்லோகங்கள்
- ஆஸ்ரமவாசிக பர்வம் 42 அத்தியாயங்கள் 1111 ஸ்லோகங்கள்
- மௌஸல பர்வம் 8 அத்தியாயங்கள் 320 ஸ்லோகங்கள்
- மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள் 123 ஸ்லோகங்கள்
18 ஸ்வர்காரோஹண பர்வம் 5 அத்தியாயங்கள் 209 ஸ்லோகங்கள்
மொத்தம் 1923 அத்தியாயங்கள் 84224 ஸ்லோகங்கள்
19 ஹரிவம்சம் 12000 ஸ்லோகங்கள்
மொத்தம் 96244 ஸ்லோகங்கள்
ஆக தீவிரமாக இதைப் படிக்க விழையும் ஒருவர் நாள் ஒன்றுக்கு நூறு பக்கங்கள் வீதம் படித்தால் 100 நாட்களில் படித்து முடிக்கலாம். நாள் ஒன்றுக்கு 1000 ஸ்லோகங்கள் என்ற கணக்கில் படித்தாலும் 100 நாட்களில் படித்து முடித்து விடலாம்.
பல முறை படிக்க வேண்டிய நூல் என்பதால் முக்கியமான பகுதிகளை மீண்டும் திருப்பிப் படிக்கக் கூடிய அளவில் குறிப்புகளும் எடுக்க வேண்டியிருக்கும்.
அதற்கான் ஆயத்தங்களுடன் விநாயகரையும் வியாஸரையும் வணங்கி படிக்க ஆரம்பிக்கலாம்.
படிக்க முனையும் பாக்கியசாலிக்கு வாழ்த்துக்கள்.
***********
You must be logged in to post a comment.