Written by S NAGARAJAN
Date: 30 March 2016
Post No. 2676
Time uploaded in London :– 8-04 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
தெரிந்து கொள்ள வேண்டிய நூல்
இந்த நூல் எது? – 1
ச.நாகராஜன்
மாபெரும் மன்னன் இவன். பெரும் அறிவாளி. சகல கலா வல்லவன்.
சுமார் 84க்கும் மேற்பட்ட இவனது நூல்கள் உலகினரை பிரமிக்க வைப்பவை.
காதலை பிரதானமாகக் கொண்டு இவன் எழுதிய இந்த நூலுக்கு ஈடு இணை இல்லை.
அபிலாஷா, ஆகாங்க்ஷா, அபேக்ஷா, உத்கந்தா உள்ளிட்ட 64 வகைகள் காதலில் உண்டு.
இந்த 64 வகைகளில் ஒவ்வொன்றுக்கும் எட்டு வடிவங்கள் உண்டு.
பரத முனிவரின் பரத சாஸ்திரத்தில் உள்ளது போல இவனது நூலிலும் 36 அத்தியாயங்கள் உள்ளன.
ரஸம் என்பது வாழ்க்கையின் பிரதானமான அம்சம். அதனால் தான் ரஸிகன் என்று மனிதன் அழைக்கப்படுகிறான்.
சப்தம், அர்த்தம், சாஹித்யம் ஆகிய மூன்றிற்கும் இவன் தரும் விரிவான விளக்கங்கள் அற்புதமானவை.
சாஹித்யம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கான இலக்கணத்தை இவன் தரும் பாங்கே தனி! வாக்ய தர்மம் என்பதை எடுத்துக் கொண்டால் அதில் மட்டும் 48 வகை உண்டு.
அவற்றிற்கான இவனது விளக்கங்கள் அற்புதமானவை. சொற்களில் உள்ள தோஷங்கள் உள்ளிட்ட இவன் விளக்காத விஷயங்களே இல்லை.
கவிதையை அனுபவிக்கத் துடிப்பவர்கள் இவனது நூலைப் படித்த பின்னரே ஒரு கவிதையைத் தொட வேண்டும்.
சிருங்காரம் என்ற ரஸத்தைப் பிழிந்து அதன் சுவையை இவனைப் போல இன்னொரு கவிஞன் தந்ததில்லை என்பது மட்டும் உண்மை.
இவனது நூலைப் படிக்காதவர்களே இன்று திரைப்படத்தில் நாம் காணும் மலினமான சில காதல் காட்சிகளை உருவாக்குகிறார்கள் என்றால் அது மிகையல்ல!
இந்திய நாட்டிற்கே, ஹிந்து தர்மத்திற்கே பெருமை தரும் இந்த மன்னன் எழுதிய நூலின் பெயர் என்ன?
விடை: போஜ ராஜன் எழுதிய சிருங்கார ப்ரகாசா
–சுபம்–
You must be logged in to post a comment.