திருக்குறளில் அந்தணரும் வேதமும் ! (Post No.3296)

img_8188

Written by S. NAGARAJAN

 

Date: 28 October 2016

 

Time uploaded in London: 5-38 AM

 

Post No.3296

 

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 1

 

திருக்குறளில் அந்தணரும் வேதமும் !

 

                      ச.நாகராஜன்  

இந்த ஆய்வில் சங்க இலக்கியம் மட்டுமே இடம் பெறுகிறது. சங்க இலக்கியம் என்பது : –                               எட்டுத் தொகை நூல்கள்,

பத்துப்பாட்டு  நூல்கள்,

பதினெண்கணக்கு நூல்கள் ஆகியவையே.

 

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்    

செந்தண்மை பூண்டொழுகலான்   (குறள் 30)

 

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் அந்தணர் என்போர் அறவோர்.

இனிய நீர்மையும் கருணையும் கொண்டவர் ஆதலின் அந்தணர் அறவோர் ஆவர்.

ஈர நெஞ்சத்து அந்தணர் (பரிபாடல் 14) என்பதால் கருணை உள்ளம் கொண்டவர் அந்தணர் என்பது பெறப்படுகிறது

அறவாழி அந்தணன் (குறள் 8)

இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலி 88) என்ற இடங்களில் இறைவனை அந்தணன் என்ற சொல் குறிக்கிறது.

 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்   (குறள் 134)

ஓத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல்.

ஒருவேளை வேத்ம ஓதுவதை மறந்தாலும் கூடத் திருப்பி ஓதிக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் பார்ப்பான் உயர்வு ஒழிந்து இழிவான்.

மறப்பினும் என்று உம் போட்டுச் சொல்லப்படுவதால் வேதம் ஓதுவதை அந்தணன் ஒருபோதும் மறக்க மாட்டான் என்பதை அவர் குறிப்பிடுகிறார்..

மிகக் கடினமான பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டியிருப்பதாலும் தொடர்ந்து தினசரி அதை ஓத வேண்டியிருப்பதாலும் வேதத்தை மாற்றவும் முடியாது. மறக்கவும் முடியாது.

ஜட பாடம், கன பாடம் என்பது எல்லாம் சிக்கல் நிறைந்த ஓதல் பயிற்சிகள். கனபாடத்தில் தேர்ந்தவர்களே கனபாடிகள் ஆவர். ஆனால் இந்த வேதம் ஓதுதல் மறந்தாலும் கூட ஒருவேளை திரும்பப் பெறக்கூடும். ஆனால் ஒழுக்கம் இழந்தாலோ, பிறப்பே கெடும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் என்று இந்த இரண்டையும் இணைத்துப் பின்னாலே வந்த நறுந்தொகை கூறுகிறது.

பார்ப்பான் என்பது மெய்ப்பொருள் அல்லது பிரம்மத்தைப் பார்ப்பான் என்பதைக் குறிக்கும்.

 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்    (குறள் 28)

 

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பிய வரிகளை இங்கு நோக்கினால் அர்த்தம் எளிதாகப் புரியும்.

 

தவமும் தெய்வத்திருவருளும் அறிவும் உடையோரின் சொல்லே மந்திரம் ஆகிறது. அதையே மறைமொழி என்று இங்குக் காண்கிறோம்.

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்                    

நின்றது மன்னவன் கோல்         (குறள் 543)

அந்தணர் நூல் வேதமாகும். அதற்கும் அறத்திற்கும் ஆதியாய் நிற்பது மன்னவனால் செலுத்தப்படும் செங்கோல்.

ஆகவே அறத்தை அடிப்படையாகக் கொண்டு வேத நூலைப் போற்ற மன்னவன் கோல் செங்கோலாக அமைதல் வேண்டும்.

 

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்                          

பெருமிறை தானே தனக்கு        (குறள் 847)

 

அரிய மறைப்பொருளை உணர்ந்து அதன் வழி நடக்காமல் இருக்கும் அறிவிலாதவர் தனக்குத் தானே பெரும் தீங்கினை இழைத்துக் கொள்வர்.

இங்கு உபதேசம் குறிப்பிடப்படுகிறது. கேட்ட மறைப் பொருளை – உபதேசப் பொருளை உட்கொள்ளாதவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை இந்தக் குறள் நன்கு உணர்த்துகிறது.

 

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்               

ஆன்றாரோ டொப்பர் நிலத்து   (குறள் 413)

செவியுணவு என்பது கேள்வி.

வேள்வியில் ஆகுதியாக்கப்படும் அவி உணவு தேவருக்கான உணவு.  செவி உணவாகிய கேள்வியில் மிக்கார் இங்கு நிலவுலகில் இருப்பினும் கூட அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

கேள்வியையும் வேள்வியையும் வள்ளுவர் கையாளும் பாங்கு நம்மை பிரமிக்க வைக்கிறது.

 

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து உண்ணாமை நன்று  (குறள் 259)

இந்தக் குறளில் மாபெரும் அறப் பண்பை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஹவிஸ் என்பது தமிழில் அவி ஆயிற்று. நெய்யை ஆகுதியாக ஹவிஸாகக் கொடுத்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.

ஆக, –

அந்தணர் அறவோர் எனப்படுவதும் அவர்கள் வேதம் ஓதுதலைச் செய்யும் ஒழுக்கம் உடையவர் என்பதும், இந்த அந்தணர், வேதம், அறம் இவை செழித்திருக்க மன்னவன் செங்கோல் சரியாக இருக்க வேண்டும் என்பதும் வள்ளுவரின் கூற்று.

மறைப்பொருளை உணராமல் இருப்பவன் தனக்குத் தானே கெடுதி செய்து கொள்கிறான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர் அவி உணவை உட்கொள்ளும் தேவரோடு கேள்விச் செல்வத்தில் மேம்பட்டவர் ஒப்பாவார் என்றும் அவி சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நன்று என்றும் கூறுகிறார்.

வேதம், பார்ப்பான், ஹவிஸ், தேவர், மன்னவன் கோல், அறம் ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் இணைக்கப்பட்ட அறச் சாறை சில குறள்களிலேயே அள்ளித் தருகிறார் வள்ளுவர்.

மிக உயரிய நூலாக வேதம் கருதப்படுவதையும், அதை ஓதுபவர் அறவோர் என்பதையும், அதைக் காப்பதே மன்னவன் கடமை என்பதையும் வள்ளுவர் குறள்களில் நிலை நிறுத்திக் காண்பிக்கிறார்.

இதுவே வேதம் மற்றும் அந்தணர் பற்றிய வள்ளுவர் கொள்கை!

 

பின்னாலே எழுந்த ஏராளமான தமிழ் இலக்கிய நூல்களில் இந்தக் குறள்களை அடியொட்டிய ஏராளமான பாக்களைப் பார்க்கலாம். அதன் அடியொட்டிய அற்புத வரலாறுகளையும் படிக்கலாம்.

******

சங்க இலக்கியம் குறிக்கும் தெய்வங்களைப் பற்றிய எனது முந்தைய கட்டுரையைப் படித்த தமிழ் ஆர்வலரின் மடலே இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கக் காரணம். (அவரது மடலைக் கட்டுரையின் விமரிசனப் பகுதியில் காண்க)

பல ஆண்டுகளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த இந்தத் தொடருக்குப் பிள்ளையார் சுழி போட வைத்த அன்பருக்கு நன்றி. சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.

Leave a comment

3 Comments

  1. Visweswaran Subramanyam Family

     /  May 11, 2018

    அன்பிற்குரிய நாகராஜன் ஸ்வாமிநாதன் அண்ணாவிற்கு, நமஸ்காரம். I happened to receive the message below from a contact of mine.  A KIND NOTE: *நான்* *பிராமணன்* *அல்ல* .. *A.M.N.Pandian*  சுமார் 40 வருடங்களுக்கு முன்பு அக்ரஹாரங்களில் ப்றாமணர்கள் குடியிருந்தனர். கோவில்களில் பூஜை புனஸ்காரம் ஒழுங்காய் நடந்தது. தேவாரமும் திருவாசகமும் வைணவ கோவில்களில் ஆழ்வார் பாசுரங்களும் பய பக்தியுடன் பாடப் பட்டன. மாதம் மும்மாரி பெய்தது. விவசாயம் சுபிட்சமாயிருந்தது. பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். கல்வி வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர்கள் மும்பை டோம்பிவிலியையும் மாதுங்காவையும் தங்களது இரண்டாம் அக்ரஹாரமாக்கினர். மராட்டியம் வளம் பெற்றது. இங்கிலாந்து சென்று இன்புற்றனர். அமெரிக்கா சென்று ஆனந்தமடைந்தனர். அக்ரஹாரங்களில் இறையச்சமில்லா மக்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கி குடியேறினர். கோவில் வளம் குன்றியது. கடவுளர் கண்டு கொள்ளப்படவில்லை. கோவில்கள் பாழடைந்தன. கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வௌவ்வால்களின் பங்களா ஆயின இறைவனிருக்குமிடங்கள். அக்ரஹாரங்களில் அந்தணர்களில்லை. அதனால் மழையும் பொய்த்தது. விவசாயம் நலிவுற்றது. குடியானவன் இடம் பெயர்ந்தான் ஒருவாய் உணவு வேண்டி (பிறாமணர்களை துரத்திய பாவம் சும்மா விடுமா என்ன!!). கிராமங்களும் அழியத்துவங்கின. தர்மம் என்றால் என்ன என்று தேடும் நிலை வந்தது. விளைச்சல் முடங்கியது.  விவசாயிக்கு உண்டான தானியத்தை அள்ளித்தந்த பிறாமணர் புறந்தள்ளப்பட்டனர். அதர்மம் தலைவிரித்தாட துவங்கிற்று.  பிறாமண துவேஷிகள் கோடிகளில் புரண்டனர். ஆனால் அந்தணர் தளர வில்லை. அழிய வில்லை. கலை, இலக்கியம், விஞ்ஞானம், ஆன்மீகம் மருத்துவம் என்று பல்வேறு துறைகளில் தங்கள் திறமையினால் மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர்.அவர்கள் அக்ரஹாரங்களை காலி செய்யும்போது விட்ட சாபம் இன்றும் நாட்டை எரித்துக் கொண்டிருக்கிறது. இவை என்  சொந்த கருத்துக்கள். அடித்து உதைத்து மிதித்தாலும் என் கருத்துக்களை மாற்றிக்கொள்ள மாட்டேன்.பிறாமணர்களில்லா அக்ரஹாரங்கள் பூவும் பொட்டும் இழந்த கைம்பெண்ணிற்கு ஒப்பாகும். A.M. N. Pandian, Retired Income tax Officer Tirunelveli. anna, my humble, at the same time, strong openion is :  No one can be be blamed as பிறாமண துவேஷிகள். His (Brahmin’s) own conduct only has pushed him down in the society.  As ThurukkuraL stated, and as you nicely and rightly compiled in your post# 3296, Brahmin also is the culprit for his own defame.  Namaskaram.   வாழ்க வளமுடனே தொடர்ந்து… (Wishing, with sincere prayers, a continued Blessed life..)

    “The only wish that is fit to be entertained in the mind of a devotee is the desire to realize the Lord in this very birth.” Life is too short to waste time hating any one. With sincere prayers and unconditional growing love… Visweswaran A. Subramanyam & family +001 (780) 705-7101 P.S: a) Any TRUE Thamizh lover WILL NOT miss to visit and get excited at the website www.azhagi.com [ An ‘unusual’ Transliterator from a ‘not-so-usual’ Developer ]  !        b) Any TRUE searcher of The Great Indian Scientific Heritage WILL not miss to visit and be with http://www.iish.org 

  2. Excellent analysis. I am copying this to be used in my FB page. Hope I have your permission. Should you object I will remove it.

  3. Please go ahead; you may publish it with the name of the writer and the blog. When you use our pictures, please use your discretion. Many pictures are taken from face book friends.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: