நிலமகள் ஏன் அழுதாள்? புறநானூற்றில் ஒரு புதிர்! (Post No.3617)

Written by London swaminathan

 

Date: 8 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 9-28 am

 

Post No. 3617

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

புறநானூற்றிலும் ஏனைய சங்க இலக்கிய நூல்களிலும் நிறைய புலவர்களுக்கு சம்ஸ்கிருதப் பெயர்கள்! அவர்களில் ஒருவர் பெயர் மார்க்கண்டேயனார். அவர் பாடிய பாடல் எண் 365. அவர் ஒரு விநோதச் செய்தியைச் சொல்கிறார். பூமா தேவி அழுதாளாம். ஏன் அழுதாள்? நான் ஒரு விலைமாது போல இருக்கிறேனே! எல்லா அரசர்களும் என்னிடம் வந்து போகின்றனரே! ஒருவரும் நிலைப்பதில்லையே!

 

 

பூமாதேவிக்கு மகளும் கிடையாது! இது ஏன்? இந்தப் புதிருக்கு வால்மீகி ராமாய ணத்தில் பதில் உள்ளது!

 

முதலில் புறநானூற்றுப் பாடலையும் அதன் பொருளையும் காண்போம்; பின்னர் வால்மீகியின் பதிலைக் காண்போம்; இந்தப் பாடல் ஆரிய-திராவிட வாதம் பேசும் புரட்டர்களுக்கும் பேதிலிகளுக்கும் செமை அடி கொடுக்கும் பாடல்!

மயங்கு இருங்கவிய விசும்பு முகன் ஆக,

இயங்கிய இருசுடர்க்கண் என, பெயரிய

வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்,

வயிரக் குறட்டின் வயங்கு மணி ஆரத்துப்

பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி

பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்

முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும்

விலைநலப் பெண்டிரின் பலர் மீக்குற

உள்ளேன் வாழியர், யான்’ எனப் பல் மாண்

நிலமகள் அழுத காஞ்சியும்

உண்டு உரைப்பரால், உணர்ந்திசினோரே

—பாடல் 365, மார்க்கண்டேயனார்

 

பொருள்:-

“வான்முகத்திலே சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களாகக் கொண்டு, இடையே காற்று நிலவும் இந்த நிலமகளாகிய (பூமாதேவி) என்னை விட்டுவிட்டு, மணி ஆரம் பொருந்திய, வெற்றியில் சிறந்த பல அரசர்களும் போய்விட்டார்கள். நானோ அவர்களுடன் போகாது, மற்றவர்கள் எல்லோரும் என்னை இகழ்ந்து பேசுமாறு விலைமாதர் போல வாழ்கின்றேனே என்று பூமாதேவியும் அழுகின்றாள். இது உலக வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தோரின் கூற்று. ஆகையால் தலைவனே! புகழ்தரும் செயல்களைள மட்டும் செய்வாயாக!”

 

பாடலை எழுதியவர் பெயரும் சம்ஸ்கிருதம்; பாடலில் உள்ள சொற்கள் பலவும் சம்ஸ்கிருதம்; படலின் பொருளும் புராணக் கருத்துகள்!

 

சூரியனும் சந்திரனும் கண்கள் என்பதும், பூமியைத் தாய் என்று சொல்வதும், அரசர்கள்ப அவர்களுடைய கணவர்கள் என்பதும்  புராணத்தில் உள்ள கருத்துகள்.

 

அடுத்ததாக நிலமகள் ஏன் இப்படி அழுதாள் என்பதும் வால்மீகி ராமாயணத்தில் உள்ள விஷயமாகும்.

 

வால்மீகி ராமாயணத்தில், பால காண்டத்தில் 36-ஆவது அத்தியாயத்தில் கீழ்கண்ட கதை உள்ளது:-

விஸ்வாமித்திரர் சொல்கிறார்: உமாவும் மஹாதேவனும் திருமணம் ஆகி நீண்ட காலமாகியும் குழந்தை பிறக்கவில்லை. தேவர்கள், பிரம்மாவின் தலைமையில் சென்று, மஹாதேவனை (சிவன்) வேண்ட, அவருடைய விந்து பூமியில் விழுந்தது. பூமி தனியாக, அதைத் தாங்க மாட்டாமையால் அக்னி தேவனும் வாயு தேவனும் ‘சர’ என்ற வனத்தையும் ‘ஸ்வேதா’ என்ற மலையையும் உருவாக்கி அதில் விந்துவை விழச் செய்தனர். அதிலிருந்து ‘சர’ வணன் என்னும் கார்த்திகேயன் தோன்றினான்.

 

உமாவுக்குக் கோபம் வந்தது. என் மூலம் குழந்தை உருவாகாமல் ‘சர’  ‘வன’த்தில் தோன்றச் செய்ததால், தேவர்களே உங்களுக்குக் குழந்தைகளே பிறக்காது. பூமாதேவியே நீயும் உதவியதால் உனக்கு கணவர்களாக அரசர்கள் வந்து செல்வார்கள். ஆனால் உனக்கும் மகன் என்று எவனும் இருக்க மாட்டான்.”

 

இந்த வால்மீகி ராமயணக் கதையையே புறநானூற்றுப் புலவர் குறிப்பிடுகிறார்.

புறநானூற்றின் மிகப்பழைய பாடல் என்று கருதப்படும் இப்பாடலில் இவ்வளவு புராண விஷயங்களும் சம்ஸ்கிருதச் சொற்களும் இருக்குமானால் சங்க காலத்தில் மக்கள் எந்த அளவுக்கு இந்துமதத்தில் பற்றுக் கொண்டிருந்தனர் என்பது விளங்கும். அது மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கிய பாரதத்தின் 15 லட்சம் சதுர மைல் பரப்பில் இக்கருத்து நிலவியது என்றால் ஆரிய- திராவிடம் பேசுவோர் இந்திய விரோதிகள், இந்து மதத் துரோகிகள் என்பதில் இனியும் ஐயப்பாடு உளதோ?

 

-Subahm–

Leave a comment

Leave a comment