கடவுள் செய்த ஆறு தவறுகள்- அம்பலவாணர் பட்டியல் (Post No.7581)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7581

Date uploaded in London – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கொல்லிமலை சதுரகிரியில் வாழும் அறப்பளீச்சுரனே ! சிவ பெருமானே. நீ கீழ் கண்ட ஆறு செயல்களை ஏ ன் செய்தாய் ? (பதில் சொல்லாவிடில் என் தொகுதி எம்.எல்.ஏ. மூலம் சட்டசபையில் கேள் வி கேட்பேன். பார்லிமெண்டில் எங்கள் தொகுதி எம்.பி.யும் இதுபற்றிக் கதைப்பார். எச்சரிக்கை)

1.கொஞ்சம்  கூட ஈவு இரக்கம் இல்லாதவர்களினிடையே, ஏனப்பா, கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்தாய்? சொல், சொல்.

2.அது சரி, போகட்டும். நல்ல புண்ணிய ஆத்மாக்களைப் பார்த்தால் ஏழைகளாக இருக்கிறார்களே. அவர்களிடம் ஏனப்பா வறுமை என்னும் கொடுமையை வைத்தாய்?

3.கொஞ்சம் கூட நீதி நெறி தெரியாத மூடர்களுக்கு கற்பு நெறி தவறாத அருந்ததி போன்ற கற்புக்கரசிகளை மனைவியாக வைத்தாயே . இது என்னப்பா, நியாயம்?

4.நிதானமாகச் சிந்தித்துச் செயல்படும் உத்தமர்க்கு பாசாங்கு செய்யும் நீலி போன்ற பெண்களைக் கொடுத்த்தனை . ஏன் , ஏன் ?

5.கற்றோரும் மற்றோரும் , குணமற்ற கீழ்மட்ட மக்களிடையே கைகட்டி, வாய் புதைத்து, அடிமை வேலை செய்ய வைத்தனையே . அது நியாயமா?

6.அதையெல்லாம்கூட பொறுத்துக்கொள்வேன். தமிழின் பெருமையே தெரியாத ஆட்கள் மீது நல்ல புலவர்களைக் கவிபாட வைத்தனையே. என்ன கொடுமை இது? பதிலைச் சொல்லிவிடப்பா.

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு

Leave a comment

Leave a comment