பணம் எங்கே நிலைத்து நிற்கும் ? (Post No.7604)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7604

Date uploaded in London – 22 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் உள்ள எல்லா நீதி நூல்களிலும் லெட்சுமி வசிக்கும் இடமும் அவளுடைய அக்காள் வசிக்கும் இடமும் சொல்லப்பட்டுள்ளன. திருவள்ளுவரும் கூட இந்த இரண்டு இந்து தெய்வங்களைப் பலமுறை சொல்கிறார். அதற்கு முன்பாக, நமக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அம்பலவாணக்கவிராயர் அறப்பளீச்சுர சதகத்தில் செப்புவதைக் காண்போம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

நீண்ட பட்டியலைப்  படியுங்கள் –

நல்ல லட்சணமுள்ள குதிரையின் முகத்தில், அரசனிடத்தில் , பண்பாடு உடையவர் இல்ல த்தில், தாமரை மலரிடத்தில் , வில்வ மரத்தில், துளசியில், கற்புடைய பெண்கள் இடத்தில், கடலில், கொடியில், கல்யாண வீட்டு வாசலில், நல்ல நகரத்தில்,நல்ல நெற்பயிரில், ஒளி உமிழும் விளக்கில்,வலம்புரிச் சங்கில், நல்லோர் சொல்லும் வாக்கில் (சொல்லில்),பொய் பேசாதவர் இடத்தில் , புஷ்பங்கள் மலர்ந்த குளத்தில் , பால் குடத்தில் , யானையின் தலையில் மலர் மங்கை அதாவது செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லெட்சுமி தேவி உறைவாள் (வசிக்கிறாள்).

இதில் மனிதர்களைத் தவிர மிருகங்களும் செடிகொடிகளும் , பால்குடம் போன்ற பொருட்களும் வருகின்றன. இந்துக்கள் இவைகளை சுப சின்னங்களாகக் காண்பர். மேலும் அத்தகைய இடங்களில் பாஸிட்டிவ் அலைகளை (Positive vibrations) அதிகம் இருக்கும். எடுத்துக் காட்டாக ஒரு கல்யாண வீட்டில்  என்னதான் செலவானாலும், உள்ளுக்குள் என்னதான் கசமுசா இருந்தாலும், அங்கே உள்ள மேள தாள முழக்கமும், மந்திர கோஷமும், அறுசுவை உண்டியின் மணமும் நல்ல உணர்வு அலைகளைப் பரப்புகின்றன. வில்வம் , துளசி போன்றவை மருத்துவ குணம் உள்ள மரம், செடிகள்; தாமரை மலரோ இந்தியாவின் தேசீய மலர். லெட்சுமியும், சரஸ்வதியும் காயத்ரியும், பிரம்மாவும் அமரும் மலர்.

இனி லட்சுமியின் அக்காள் / தமக்கை /மூ தேவி / முகடி/ஜேஷ்டா தேவி/ தெவ்வை  (திருக்குறள் 617,936) வசிக்கும் இடங்களை அம்பல வாணர் பட்டியலில் உள்ளவாறு படிப்போம்:-

சாப்பாட்டு ராமன்கள் , வாயாடிகள், பொய் பேசித் திரியும் பாவிகள் , ஆதரவற்ற அநாதைகள் , அழுக்கும் கந்தலும் உடைய ஆடைகளை அணிவோர் நாய் போலச் சீறும் பேய் மகள்கள் (துஷ்டைகள்) வாழும் வீடுகள் , தயிர்க்குடம் ,கழுதை , ஆட்டுமந்தை, பிணம் ஆகியன tamilandvedas.com, swamiindology.blogspot.com .

இவற்றில் பல சுகாதாரக் கேடானவை என்பது எல்லோரும் அறிந்ததே . இன்னும் சில, வெறி நாய் போன்ற பெண்கள் வசிக்கும் வீடுகள் முதலியன எதிர்மறை / நெகட்டிவ் (Negative vibrations) அலைகளைப் பரப்பும் இடங்கள் என்பதும் அனுபவத்தில் காணும் உண்மைகள். அங்கெல்லாம் போகக்கூடாது . போனால் குளிக்க வேண்டும். நெகட்டிவ் அலைகள் கரைந்து, நமக்கு ப்ரெஷ்னஸ் Freshness  / புத்துணர்வு பிறக்கும்

இறுதியாக இலக்குமி பற்றி தமிழ் இலக்கியக் குறிப்புகளைக் காண்போம்.

திருக்குறளில் லக்ஷ்மி – 179, 519, 617, 920, 1101.இது தவிர பத்து குறட் பாக்களில் செல்வம், அழகு என்றும் பாடுகிறார் அவையும் லெட்சுமிகரமானவை என்பதை மேலே அம்பலவாணர் விளக்கிவிட்டார் .

சங்கத் தமிழ் இலக்கியத்தில் லக்ஷ்மி வரும் tamilandvedas.com, swamiindology.blogspot.com இடங்கள் —

புறம் 358, 395, 7. பரிபாடல், கலித்தொகை மற்றும் பத்துப்பாட்டின் 10 நூல்களில் நிறைய இடங்கள்.

Tags  —  லெட்சுமி, மூதேவி,வசிக்கும் , இடங்கள்

–subham–

Leave a comment

Leave a comment