கோபமே பாவங்களின் தாய்,தந்தை! (Post No.7750)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7750

Date uploaded in London – 27 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கோபத்தைக் கண்டித்துப் பாடாத சம்ஸ்கிருதப் புலவரோ தமிழ்ப் புலவரோ இல்லை. எல்லோரும் கண்டித்துப் பாடியும் கூட நாம் கோபத்தை விட்டபாடில்லை. பத்திரிக்கைகளில் வரும் கொடுமைகளை படிக்கும்போதே கோபம் பொத்துக் கொண்டு வருகிறது; நேரில் பார்த்தாலோ அதைவிட பன்மடங்கு அதிகம் வருகிறது. ஆகையால் கோபத்தின் கொடுமைகளை அவ்வப்போது நினைவில் வைத்துக் கொண்டு எப்போதும் அடக்கி வாசிக்க வேண்டும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒவ்வொரு புலவரும் ஒருவிதமாக கோபத்தின் கொடுமையை வருணிப்பர்.

வள்ளுவன் என்ன சொன்னான்?

‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ – கோபம் யாருடன் இருக்கிறானோ அவன் ‘சட்னி’ என்கிறான்.

‘தன்னைத்தான் காக்கின் சினம் காக்க’- என்பான்.  யாருக்கு கோபம் இல்லையோ அவனுக்கு அற்புத சக்திகள் கிடைக்குமாம்- ‘ள்ளியதெல்லாம் உடன் எய்தும்’ என்றும் சொல்லிவிட்டான்.

அறப்பளிஸ்வர சதகம் பாடிய அம்பலவணக் கவிராயர் எல்லாப் பாவங்களுக்கும் தாயும் தந்தையும் கோபம் தான் என்று உறுதிபட உரைக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவர் தரும் பட்டியல் எளிய தமிழில் உளது-

சீர்கேடுகளை உண்டாக்கும்;

உறவினரிடையே விரிசலை உண்டாக்கும்;

பழி , பாவங்களின் ஊற்று ;

அருளைப்  போக்கி பகைவன் என்ற பெயரைக் கொடுக்கும் ;

எவருடனும் சேராமல் நம்மைத் தனிமைப்படுத்திவிடும் ;

கடைசியாக நம்மை யமன் முன்னால் கொண்டு நிறுத்திவிடும். கோபத்துடன் இருக்கும்போது நாம் யமனைப் பார்த்தால்  பின்னர் நமக்கு நரகக் குழி  வாசம்தான் . tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவருக்கே உரித்தான பாணியில் செப்பிவிட்டார்.

இதோ அவர் பாடிய  பாட்டு-



tags – சினம், கோபம் ,பாவங்களின் ,தாய்,தந்தை

Leave a comment

Leave a comment