கம்ப ராமாயணத்தில் 60 கேள்விகள் (Post No.16,299)

Written by London Swaminathan

Post No. 16,299

Date uploaded in London – 12 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இதற்கு முன்னர் வெளியிட்ட50 கேள்விகளும் விடைகளும்எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

51

மத யானைகளை வருணிக்கும் கம்பன் , கண்ணனின் லீலையை எப்படி நினைவு கூறுகிறான் ?

52

போகிறபோக்கில், மத யானையை மந்திரிக்கடங்காத மன்னனுக்கு ஒப்பிட்டு கம்பன் அடிக்கும் ஜோக் / தமாஷ் என்ன?

53

 பெண்களும் மது அருந்தியதாகவும் அவர்கள் பல வகையான சேட்டைகள் செய்தனரென்றும் நிறைய பாடல்களை பாடியுள்ளான்.அவர்கள் தடுமாறியதைக் கம்பன் எப்படிப் பாடுகிறான்?

54

இபோதெல்லாம் பழரசம், கோகோ கோலா, இளநீர் குடிக்க ஸ்ட்ரா Straw தருகிறார்கள் : இதை மதுக் குடித்து, ஆட்டம்போட்ட பெண்கள்தான் உலகத்துக்கே சொல்லிக்கொடுத்தார்களாமே !

55

சோம்பேறிகளிடம் மூதேவியும் முயற்சியுடையவர் இடத்தில் மஹாலெட்சுமியும் வாசம் செய்வாள் என்று வள்ளுவன் செப்பினான் ; இதைக் கம்பன் எப்படிப் பயன்படுத்துகிறான் ?(திருக்குறள் 617:மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளான் தாமரையி னாள்)

56

இப்போதும், வடக்கத்திய ஆண்கள் ஒருவரை ஒருவர் முதல் தடவை சந்திக்கும் போது தழுவிக்கொள்வதைக் காணலாம் ; ஜனகனும் தசரதனும் தழுவிக்கொண்ட காட்சியின் சிறப்பு என்ன ?

57

ராம லட்சுமண பாரத சத்ருக்கனன் – ஆகிய நால்வரும் ருக், யஜுர் சாம அதர்வண வேதங்கள் என்று ஏன் கம்பன் சொன்னான் ?

58

ராமனைக் காண வந்த பெண்கள் வண்டுகளாம் ; ராமன் தேனாம்!  அத்தோடு நில்லாமல் தள்ளிப் போடி, தள்ளிக்கோடி, தள்ளிப்போங்கடி என்று பெண்கள் கூட்டம் வந்த காட்சி பற்றிக் கம்பன் என்ன சொன்னான்?

59

இவ்வளவு நெருக்கி அடித்துக் கொண்டு வந்த  எவரும் ராமனை முழுக்கப் பார்க்க முடியவில்லையாம் ; ராமன் நம்மவூர் அரசியல் வாதி போல BULLET PROOF JACKET/ புல்லட் ப்ரூப் கவசம் அணியவில்லை ! பின்னர் ஏன் அவனைக் காண முடியவில்லை? கம்பனே காரணம் சொல்கிறான்.

60

ஒரு பெண் ராமனை கொலைகாரன் என்று கூறியது ஏன்?

*************************************************************************

விடைகள்

51.திரண்ட தாள் நெடுஞ் செறி பணை  மருது இடை ஒடியப்

புரண்டு பின் வரும் உரலொடு   போனவன் போல.

உருண்டு கால் தொடர் பிறகிடு   தறியொடும். ஒருங்கே

இரண்டு மா மரம் இடை இற   நடந்தது – ஓர் யானை.

யசோதையால்     உரலில் கட்டப்பட்ட கண்ணன் அந்த உரலோடு

அருகில்   இருந்த  இரட்டை  மருத  மரங்களிடையே  செல்ல  அம்

மரங்கள் முறிந்து வீழ்ந்தன என்பது வரலாறு.

தன்னைக் கட்டியிருந்த கட்டுத்தறியை இழுத்துக் கொண்டு விரைந்து

செல்லுகையில்    அக்   கட்டுத்   தறியால்   இரண்டு    மாமரங்கள்

முறிந்துவிழச்   செய்தது   ஒரு   யானை.   இதற்குத்   தன்  தாயால்

கட்டப்பட்ட   உரலை    இழுத்துச்  செல்லுகையில்  இரட்டை  மருத

மரங்களை முறித்த கண்ணனை உவமையாக்கினார்.

***

42.கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான்   இனியன கழறி.

பதம் கொள் பாகனும் மந்திரி   ஒத்தனன்; பல் நூல்

விதங்களால். அவன். மெல்லென   மெல்லென விளம்பும்

இதங்கள் கொள்கிலா இறைவனை   ஒத்தது – ஓர் யானை.

பாகனுடைய     இன்சொல்லைக்   கேளாது   மதவெறி  கொண்ட

யானைக்கு.  அமைச்சனின்  இனிய  சொல்லைக் கேளாது மாறுவழியில்

நடக்கின்ற     மன்னவன்     உவமை.    

***             

53.மின் என நுடங்குகின்ற   மருங்குலாள் ஒருத்தி வெள்ளை

இன் அமிழ்து அனைய தீம் சொல்   இடை தடுமாறி என்ன

வன்ன மேகலையை நீக்கி   மலர்த் தொடை அல்குல் சூழ்ந்தாள்;

பொன்னரிமாலை கொண்டு  புரி குழல் புனையலுற்றாள்.

மின்னல் எனநெளிகின்ற  இடையினையுடையாள்  ஒருத்தி;   வெண்ணிற இனிய அமிழ்தம் போன்ற  செவ்விய பேச்சு   (மதுவின்  மயக்கால்) இடையில் குழறுண்டு;(தனது)  இடைப்  பகுதியில்   அணிந்திருந்த   அழகிய  மேகலையைக் கழற்றிவிட்டு   அங்கே   மலர்    மாலையைச்  சுற்றிக்   கொண்டாள்; அதுமட்டும் அன்றி. கழுத்தணியாகிய  பொன்அரி  மாலையை  எடுத்துச் சுருண்ட கூந்தலில் அணியத் தொடங்கினாள்!இது போன்ற நிறைய செயகைகளி கம்பன் பட்டியலிட்டுள்ளான்.

****

54.ஒருத்தி மலரின் நாளத்தால் மதுப் பருகுதல்

1065.      வான் தனை பிரிதல் ஆற்றா  வண்டு இனம், வச்சை மாக்கள்

ஏன்று அவர் நிதியம் வேட்ட    இரவலர் என்ன, ஆர்ப்ப,

தேன் தரு கமலச் செவ்வாய்    திறந்தனள் நுகர நாணி,

ஊன்றிய கழுநீர் நாளத்    தாளினால் ஒருத்தி உண்டாள்.

 உலோபிகளிடம் பொருந்திய பெருஞ்  செல்வத்தை;  (பெறுவதற்காக) விரும்பி  வந்துள்ள  யாசகர்கள்போல்;  பிரிய  மாட்டாமல் வான் அளவும் மொய்த்துக் கொண்டுள்ள வண்டுகளின் கூட்டம்  (கண்ட) ஒருத்தி  தேன்  சொரிகின்ற   தாமரைப்   பூப்  போன்ற  தன் சிவந்த வாயை  திறந்தால். வண்டுகள் உட்சென்று

விடுமென்று  நாணமுற்று, கிண்ணத்தில் ஊன்றி வைத்த செங்கழுநீரின்(உள்துளை கொண்ட) தண்டினால் (மதுவை உறிஞ்சி) உண்டாள்.

வண்டுகளையும்     உட்கொள்ள  நேரும்  அபாயம்  உள்ளது மதுவுண்ணும்  பழக்கம்  என்று  அதன்  இழிவு   சுட்டியவாறு.  “நெளிந்துஉறை புழுவை நீக்கி. நறவு உண்டு நேர்கின்றேன்”.  (கம்ப 4359)  என்று சுக்கிரீவன்   வாயாலும்  மதுவுண்ணும்  சூழலை   உரைப்பார்.   இன்று குளிர்பானங்கள்  பல்லில்  படாமல் உறிஞ்சு குழலால்  STRAW பருகும்  முறை அன்றே இருந்ததை இதனால் அறிக.

***

மன்னர்களிடத்தில் மகாலெட்சுமி இருப்பதால் நாட்டையே ராஜ்ய லெட்சுமி என்பர்; ஆனால் தசரதனிடத்தில் எங்கு லெட்சுமி வாசம் செய்கிறாள் என்று கம்பன் வியக்கிறான்.

55.கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்

படி உளாளோ? கடற் படை உளாளோ? பகர்

மடி இலா அரசினான் மார்பு உளாளோ? வளர்

முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம் – முளரியாள்.

முளரியாள்    – செந்தாமரை மலரில்   வதியும்  திருமகள்;  பகர்

மடிஇலா  அரசினான்  –  (புகழ்ந்து)  கூறப்படுகிற சோம்பல் இல்லாத அரசாட்சி   செய்யும்  தசரத  மன்னனுடைய;  கொடி  உளாளோ  – கொடியில்  உள்ளாளோ?; தனிக் குடை உளாளோ? – ஒப்பற்ற வெண் கொற்றக்   குடையிலே  இருக்கின்றாளோ;   குலப்படி  உளாளோ –

பரம்பரை    பரம்பரையாக   வருகின்ற   அவனது     இராச்சியத்தில் இருக்கின்றாளோ;  கடல்  படை உளாளோ? – கடல் போன்ற அவன் சேனையிலே  இருக்கின்றாளோ?;  மார்பு  உளாளோ? – அம் மன்னர் மன்னனின் மார்பிடத்தே இருக்கின்றாளோ?; வளர் முடி உளாளோ? –அழகு  வளரும்  அவன் மணிமகுடத்தில் இருக்கின்றாளோ?;  தெரிந்து உணர்கிலாம் – திருமகள்  இருக்குமிடம் இன்னது எனத் தெளிந்தறியக் கூடவில்லை.

Very Sorry; I don’t know என்று சொல்லி முடிக்கிறான் கம்பன்

***

எய்த அத் திரு நெடுந் தேர் இழிந்து இனிய தன்

மொய் கொள் திண் சேனை பின் நிற்க. முன் சேறலும்.

கையின் வந்து ‘ஏறு’ என கடிதின் வந்து ஏறினான்;

ஐயனும்முகம் மலர்ந்து அகம் உறத் தழுவினான்.

தசரதன் தேர் அருகே வந்து அடைந்த  சனகன்  தன் அழகிய நீண்ட தேரிலிருந்து இறங்கி;  அழகிய தனது  வலிமை  கொண்ட  சேனை   பின்னே  நிற்க  தான்  முன்னே சென்ற  அளவில்;   தசரதன்  தனது கரங்களைச்  சைகையால் காட்டி வந்து தேரில் ஏறுக என்று தெரிவிக்க;

விரைந்து வந்து (சனகன்) தசரதன் தேரில் ஏறினான்;  (அப்பொழுது)   தசரதச்   சக்கரவர்த்தியும்    முக  மலர்ச்சி   பெற்று மனத்திலும் மலர்ச்சி பொருந்தத் தழுவினான்.

சேனை     பின் நிற்கச் சனகன் முன் செல்லலும், தயரதன் கையால் சைகை  காட்டித்  தேர்  ஏறச்  செய்தலும்  முகமும்   அகமும்   மலர இருவரும்   தழுவுதலும்   ஒரேபாடலில்   சொல்    ஓவியப்   படிவம் ஆக்கியிருத்தல்    சுவைத்தற்    பாலது.  அக்காலத்து.  விருந்தினராம்  வேந்தரை   வரவேற்கும்  ஒழுங்காசாரம்  PROTOCOL  தெளிவுறச்   சுட்டப்படலும் உணர்க.  “கையின் வந்து ஏறு” என்பதற்கு  கைகொடுத்து வந்து ஏறுக என்றான்   எனினுமாம்.   “முகத்தான்   அமர்ந்து   இனிது   நோக்கி அகத்தான்  ஆம்  இன்  சொலினதே  அறம்”  (திருக். 93)  ஆதலின், “ஐயனும் முகம் மலர்ந்து அகம் உறத்தழுவினான்” என்றார்.      

***

57.நால்வரும் தந்தையை ,தாயை வணங்கினார்கள்; அதுமட்டுமல்லாமல் அண்ணன் மார்களைத் தம்பிமார்கள் ஒவ்வொருவராக வணங்கினர்; இதை மனக்கண்களில் கண்ட கம்பனுக்கு வியப்பு தாங்கவில்லை; உடனே பாடலைப் பொழிந்தான்:

‘கோல் வரும் செம்மையும்   குடை வரும் தண்மையும்.

சால் வரும் செல்வம்’ என்று   உணர் பெருந் தாதைதன்.

மேல் வரும் தன்மையால்   மிக விளங்கினர்கள் தாம்-

நால்வரும் பொரு இல்   நான்மறை எனும் நடையினார்.

அரசாளும் முறையில்  பொருந்தின  நீதியும்,  ஆளுகையில்  (மக்கட்குக்) குளிர்ச்சி

தரும்  கருணையும்; (தனக்கு)  ‘மிகப்  பொருந்திய  செல்வம்’ என்று  உணர்கின்ற

பெருமைக்குரிய   தந்தையாகிய  தயரத  வேந்தருடைய;   

மேன்மையை  நல்கும்  பண்புகளால்;  ஒப்பில்லாத நான்கு வேதங்களே

இந்நால்வரும்  எனச்  சொல்லத்தக்க  ஒழுக்கத்தையுடையவராய்; 

நான்கு  குமாரர்களும் சிறந்து விளங்கினர்.

***

58.விரிந்து வீழ் கூந்தல் பாரார்;   மேகலை அற்ற நோக்கார்;

சரிந்த பூந் துகில்கள் தாங்கார்;   இடை தடுமாறத் தாழார்;

நெருங்கினர்; நெருங்கிப் புக்கு   ‘நீங்குமின். நீங்குமின்’ என்று

அருங் கலம் அனைய மாதர் –   தேன் நுகர் அளியின் மொய்த்தார்.

 (அந்த மிதிலை நகருக்கு) அரிய அணிகலம்  போன்று  அழகு  ஊட்டும் மகளிர்;  (கூட்டத்தால்  நெருக்குண்டு)  விரிந்து  வீழ்கின்ற  தம்கூந்தலைப் பொருட்படுத்தார்;  (இடையில் அணிந்துள்ள)      மேகலைகள்       அற்று      வீழ்ந்தனவற்றைப்

பொருட்படுத்தார்;  பூப்போன்ற மெல்லிய  ஆடைகளின்  இடையிலிருந்து சரிவதைப்பிடித்து    ஏந்தவும் கருதார்; தங்கள் நுண்ணிய இடைகள்   (ஆற்றாது)   நிலைதளர்வது  கண்டு  சிறிதும்  தாழாமல்.(இராமபிரானை) நெருங்கினார்   ஆகிய   மகளிர்;    நெருங்கிய   வாறே   நுழைந்து

வழிவிடுங்கள்.  வழிவிடுங்கள்  என்று  கூறிய  வண்ணமே;   தேன்பருகத் துடிக்கும் வண்டுகளைப்போல (இராமபி ரானை) மொய்த்தனர்.

“செவிக்குத்தேனா”கிய  (கம்ப.   4966)   இராமபிரான் கண்ணுக்கும் தேனானான்;காணவந்த மகளிர் உண்ண வந்த வண்டானார் என்க.

இராமன்     அழகெனும்   தேனைப்பருக வந்த மகளிர். ஒருவர்க்குஒருவர்  இடித்துக்கொண்டு  நெருக்கியவாறு   முந்துதலால்.  கூந்தல்கள் சரிந்தன;  மேகலைகள்  அற்றன;   மெல்லிடைகள் நெளிந்தன என்றார்.

****

59.தோள் கண்டார். தோளே கண்டார்.

   தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார். தாளே கண்டார்;

   தடக் கை கண்டாரும். அஃதே;

வாள் கொண்ட கண்ணார் யாரே.

   வடிவினை முடியக்கண்டார்?-

ஊழ் கொண்ட சமயத்து அன்னான்

   உருவு கண்டாரை ஒத்தார்.

 (அங்குள்ள மகளிருள்) இராமபிரானது  தோள்  அழகைக் கண்டவர்கள்  (அவ்வழகை  முற்றும் கண்டுகளித்து முடியாமையால்  அதனால்  பிற உறுப்புக்களின் அழகைப்

பார்க்க  இயலாமையால்)  அத்தோள்  அழகினையே  கண்ட  வண்ணம் இருந்தார்கள்;   வீரக்  கழல்கள்  அணிந்த  தாமரைப்  பூக்கள்  போன்ற (இராமனது)   திருவடிகளைப்   பார்த்தவர்கள்   அவற்றையே  பார்த்துக்  கொண்டிருந்தார்கள் (அவனது)   பெரிய   திருக்கரங்களின்    அழகைப் பார்த்தவர்களும்    அவ்வாறே    (பிற    நோக்காது)   அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்;  ஆகவே.   வாள்   போன்ற கண்களையுடைய    பெண்டிருள்     இராமனது    திருமேனியழகினை முழுவதும்  பார்த்தவர்கள்  யாவர் உள்ளனர் (ஒருவருமில்லை) ;  (தமக்குத்

தாமே  ஒவ்வொரு) முறையினைக்  கொண்ட  சமயங்கள்.  பிறசமயங்கள் கூறும்   இறை   வடிவங்களை   நோக்காது.   தம்   வடிவங்களையே நோக்கியவாறு  இருப்பது  போல  இராமனைக்   காண   வந்த மகளிர் (அப்பெருமானின்)  உறுப்புக்கள்  பலவும்  நோக்காது   ஓர்  உறுப்பின்

அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர்.

***

பெண்களையே பார்க்காமல் போகிறானே; இவன் பெண்களைக் கொல்ல வந்தவன் போலும் 1 என்று கோபப்படுகிறாள் ஒருத்தி!

60. ‘மருள் மயங்கு மடந்தையர்மாட்டு ஒரு

பொருள் நயந்திலன் போகின்றதே; இவன்

கருணை என்பது கண்டு அறியான்; பெரும்

பருணிதன்கொல்? படு கொலையான்!’ என்றாள்.

‘இராமன்  (ஆகிய   இவன் எது கேட்டாலும் தரவுள்ள) மோக மயக்கில் உள்ள     மகளிர்      எவரிடத்திருந்தும்     ஒரு    பொருளையும் விரும்பாதவனாய்;   இவன்   இப்படிப் போகின்றானே!  (இது  தகுமா?);  (இவன்) அருள் என்னும்  (பெருங்)  குணத்தின்  தன்மையைச்  (சிறிதும்) அனுபவித்து  அறியானோ?;   (மகளிரைச் சிறிதும்   விரும்பாக்   குணம்)    பரிணமித்த    சிறந்த  ஞானியோ?;  (ஞானி மணந்து கொள்ளச் செல்லான்)

ஆதலின்   (இவன்   பெண்களைக்  கொல்லும்)  படுகொளையாளனே ஆகல் வேண்டும் என்றாள் ஒருத்தி.

—-SUBHAM—-

TAGS- கம்ப ராமாயணத்தில், 60 கேள்விகள், ராமன் கொலைகாரன், தோள் கண்டார். தோளே கண்டார் , இளநீர் குடிக்க ஸ்ட்ரா, மது அருந்திய  பெண்கள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-127; இந்து மத கலைச்சொல் அகராதி-127 (Post No.16,298)

Written by London Swaminathan

Post No. 16,298

Date uploaded in London – 12 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Words beginning with Y continued…………………….

Yavana

Earliest reference to YAVANAS comes from Ramayana. Later Sangam Tamil literature mentioned Yavanas in six places. But neither Ramayana reference nor 2000 year old Sangam Tamil reference meant Greeks. In Tamil, it is very clear that they meant Romans from Rome, Italy who brought wine and gold in exchange of pearls and pepper (black pepper). In Ramayana and Mahabharata they meant people living in North Western India. Greeks knew India evn before Allexander’s invasion. Yavanas were shown in very bad light in Hindu literature. They were caught by the Tamil Chera (Kerala) king and punished severely because they attacked Hindu commercial ships. Tamil King tied their hands behind, shaved off their hair, and poured oil on their  heads. When they apologised, they were asked to give gold and gems. Chera king got them and distributed to poets and bards according to Sangam Tamil literature. In Sanskrit books, they were shown as people eating lying down. Many references in the Mahabaharata showed them as the defeated Mlechas, a drogatory term for beef eaters and dog eaters in Sanskrit.

Yavanas in Ramayana era.—When Viswamitra showed his Kshatriya power to Vasistha Maharishi and forcefully took the Divine cow Nandini, Vasistha showed Brahmin power that can destroy rulers. From the tail of the divine cow, he created all bad armies and defeated Viswamitra. It is mentioned in Balakanda of Ramayana , Vasishtha produced Kambojas, Pahlavas, Yavanas and Sakas to counter King Vishvamitra.

Around middle ages Muslim or Non Muslim business men from the Middle East were dubbed Yavanas or Yonas.

Yavana (यवन).—General. There are many references to Yavanas and the land of Yavanas in the Purāṇas. There is a statement in Mahābhārata, Ādi Parva, Chapter 85, Verse 34, that the Yavana race takes its source from Turvasu, the son of Yayāti. There is another version in Mahābhārata, Ādi Parva, Chapter 174, Verse 36, that Yavanas were born from the sides of Nandinī, the Divine Cow.

(i) Arjuna’s brother Sahadeva once conquered the Yavana land. (Mahābhārata Sabhā Parva, Chapter 31, Verse 73).

(ii) Mahābhārata, Sabhā Parva, Chapter 32, Verse 17, mentions that on another occasion, Nakula defeated the Yavanas.

(iii) According to Mahābhārata, Vana Parva, Chapter 188, Verse 35, the world will be filled with Yavanas and other Mleccha (low class) kings.

(iv) In the course of his conquests, Karṇa once subdued the Yavanas. (Mahābhārata Vana Parva, Chapter 254, Verse 8).

(v) Mahābhārata, Udyoga Parva, Chapter 19, Verse 21, mentions that king Sudakṣiṇa of Kāmboja approached Duryodhana with an “Akṣauhiṇī” along with the Yavanas, to take part in Bhārata Yuddha.

(vi) Mahābhārata, Bhīṣma Parva, Chapter 9, Verse 65 states that at the time of Mahābhārata, Yavana land was part of India.

(vii) Originally Yavanas were Kṣatriyas. But they became Śūdras by the curse of Brāhmaṇas. (Mahābhārata Anuśāsana Parva, Chapter 35, Verse 18).

Black Yavana /Kaala Yavana :An asura who besieged Mathurā with three crores of mlecchas; Kala Yavana  ran towards Kṛiṣhṇa and Krishna tricked him to enter a cave. Black Yavana followed him and in the cave saw somebody sleeping; thought it was Kṛiṣhṇa and kicked him, when he woke up and burnt the asura to ashes by his energy. The sleeping person was Mucukunda .Thus he was vanquished by Kṛiṣhṇa. The sleeping person had got a boon to burn anyone who wakes him.

Yavanas in Mahabharata Era.—In Adi Parva, it is mentioned that a Yavana king was also present in Svayamvara of Panchali. Sabha Parva records that Nakula subjugated Yavanas, Sakas, Pahlavas, Kiratas etc. and made all of them pay tributes. Evidently, Mahabharata generally groups Yavanas with the Kambojas, Sakas and Pahlavas and indicates them to be Mlechchas/barbarians. Shanti Parva and Anushasana Parva also mentions Yavana kings. Udyoga Parva records that Yavanas, Kambojas and Sakas supported Kauravas in Mahabharata war under the leadership of Kamboja King Saddakshina.

In short, Yavanas were not Hindus, but Mlechchas, i.e.beef and dog eaters.

***

Yoga

Yoga (योग).— The word yoga, the basic meaning of which is “yoking, uniting”, also derives from the same verb-root, √yuj, “to yoke, conjoin”. In the religious-spiritual sphere, its meaning obtains in the sense of meditation, concentration of the mind, and techniques pertaining to them. Controlling the mind so that it focuses on God is called Yoga.

According to Pāṇini, a 8th-century BCE Sanskrit grammarian, the term yoga can be derived from either of two roots, yujir yoga (to yoke) or yuj samādhau (to concentrate). In the context of the Yoga Sutras of Patanjali, the root yuj samādhau (to concentrate) is considered by traditional commentators as the correct etymology.

A practical methodology attributed to sage Patañjali who taught that the means to liberation was eight-fold — aṣṭāṅga yoga. Four of the limbs apply to physical and moral development and the other four deal with meditation.

Sanskrit dictionary

[«previous (Y) next»] — Yoga in Sanskrit glossary

Yoga (योग).—[yuj bhāvādau ghañ kutvam]

1) Joining, uniting.

2) Union, junction, combination; उपरागान्ते शशिनः समुपगता रोहिणी योगम् (uparāgānte śaśinaḥ samupagatā rohiṇī yogam) Ś.7.22; गुणमहतां महते गुणाय योगः (guṇamahatāṃ mahate guṇāya yogaḥ) Kirātārjunīya 1.25; (vāṃ) योगस्तडित्तोयदयोरिवास्तु (yogastaḍittoyadayorivāstu) R.6.65.

***

Yoga Vasishta

The Yoga-vasistha is believed by some Hindus to answer all the questions that arise in the human mind, and can help one to attain Moksha (liberation). It recounts a discourse of sage Vasistha to Prince Rama. The content of Vasistha’s teaching to Rama is associated with Advaita Vedanta, the illusory nature of the manifest world and the principle of non-duality.

Other names of this text are

– Vālmīki Yogavāsiṣṭha (वाल्मीकि योगवासिष्ठ) or Valmiki Yoga-vasishtha

– Mahārāmāyaṇa (महारामायण) or Maharamayana,

– Ārṣarāmāyaṇa (आर्षरामायण) or Arsharamayana,

– Vāsiṣṭharāmāyaṇa (वासिष्ठरामायण) or Vasishtharamayana,

– Yogavāsiṣṭhamahārāmāyaṇa (योगवासिष्ठमहारामायण) or Yoga-vāsiṣṭha-mahārāmāyaṇa,

– Jñānavāsiṣṭha (ज्ञानवासिष्ठ) or Jnana-vasishtha.

The complete text contains over 29,000 verses, while the short version of the text, called Laghu Yogavāsiṣṭham, contains 6,000 verses, translated into Persian by the 15th-century. This is one of the longest Hindu texts in Sanskrit after the Mahabharata, and an important text of Yoga. It consists of numerous short stories and anecdotes used to help illustrate its ideas and message.

The traditional belief is that reading this book leads to spiritual liberation. The text discusses consciousness, cosmology, nature of the universe and consciousness, the ultimate dissolution of body, the liberation of the soul and the non-dual nature of existence. It is likely that the text evolved over several centuries, reaching its current form between the 10th and 14th centuries, incorporating influences from various Indian philosophical traditions,

***

Yuga

There are four yuga’s, 1. Kṛta or Satya, 2. Tretā, 3. Dvāpara, 4. Kali, of which the first three have already elapsed, while the Kali, which began at midnight between the 17th and 18th of Feb. 3102 BC. The duration of each yuga is said to be respectively 1,728,000, 1,296,000, 864,000, and 432,000 years of humanity, the descending numbers representing a similar physical and moral deterioration of men in each age.

The ages see a gradual decline of dharma, wisdom, knowledge, intellectual capability, life span, emotional and physical strength.

  • Satya Yuga (Virtue reigns supreme),
  • Treta Yuga (3 quarter virtue & 1 quarter sin),
  • Dwapar Yuga (1 half virtue & 1 half sin),
  • Kali Yuga (1 quarter virtue & 3 quarter sin).
  • Kali Yuga is mentioned in Aihole inscription and Parthiva sekarapuram Tamil Inscription. One more inscription is reported from Yogabadari

This is inscribed in a copper plate (mentioning Yuga), preserved in the temple of Yogabadarī (one of the Pañcabadarī) at Pāṇḍukeśvar (Pāṇḍukeśvara). It records the grant of many pieces of land, situated in the viṣayas (districts) of Ṭaṅgaṇāpura and Antaraṅga made by king Subhikṣa in favour of three deities.

 An age of the world; (the Yugas are four:-kṛta or satya, tretā, dvāpara and kali; the duration of each is said to be respectively 1,728,; 1,296,; 864.; and 432, years of men, the four together comprising 4,32, years of men which is equal to one Mahāyuga q. v.; it is also supposed that the regularly descending length of the Yugas represents a corresponding physical and moral deterioration in the people who live during each age, Krita being called the ‘golden’ and Kali or the present age the ‘iron’ age); धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे (dharmasaṃsthāpanārthāya saṃbhavāmi yuge yuge) Bhagavadgītā (Bombay) 4.8; युगशतपरिवर्तान् (yugaśataparivartān) Ś7.34.

Geographical Spread: Inscriptions utilizing Kali Yuga calendar markers are found not only across India (such as in Tamil Nadu, Karnataka, Assam, and Kerala) but also internationally—such as the Sanskrit Jaiya Inscription in southern Thailand tied to King Candrabhanu of Tambralinga.

The Aihole inscription, found in a Jain temple in Karnataka, praises Chālukya king Pulakeśin II and provides key evidence for Kali Yuga’s date. However, a single reference to Bhārata has sparked controversy, with two interpretations: it refers to either Kali Yuga’s start or the Mahābhārata war’s start.

Two researchers used the Aihole inscription to date the Mahābhārata: one (Chandru Ramesh) linked Kali Yuga’s date to the war, placing it at 3101 BCE (Kali Yuga’s actual start), and another (Vedveer Arya) interpreted it as the war’s date, placing it at 3162 BCE. Both are incorrect. This article clarifies the inscription’s meaning through word-by-word analysis and allied inputs. Two verses of this inscription, numbered 33 and 34 give the date of the Jain temple built by Ravikīrti. The importance of the verse is that it gives the time in both Kali years and the Śaka years.

Latest News in year 25-11-2025:

Tamil Nadu Governor Ravi released the books “Kali Yuga Dated Inscriptions – A Basis of Indian History and Chronology (Volumes 1 & 2)”, authored by historian and epigraphist Dr. M. L. Raja, at a function attended by hundreds of historians, scholars, researchers and students.

This Raj Bhavan–led initiative draws on around 1,000 ancient inscriptions spanning over 5,000 years from across India and its neighbouring regions. By providing a credible, evidence-based chronological framework, the work strengthens efforts to decolonise India’s history, deepens civilisational understanding and gives fresh impetus to future research.

***

Yupa

Yūpa.—(EI 2, 24, 33), sacrificial pillar; it was sometimes made of stone and inscribed

This Sanskrit word is found in 2000 year old Sangam Tamil literature. Yupa pillars erected after performing Yagas were found in the deepest forest of Borneo Island, now part of Indonesia. They belonged to Mula Varman and Purana Varman of fifth century CE. Tamil references are from first century CE or BCE.

Yūpa (यूप):—m. ([probably] [from] √yup; but according to, [Uṇādi-sūtra iii, 27], [from] √2. yu) a post, beam, pillar, ([especially]) a smooth post or stake to which the sacrificial victim is fastened, any sacrificial post or stake (usually made of bamboos or Khadira wood; in [Rāmāyaṇa i, 13, 24; 25], where the horse sacrifice is described, 21 of these posts are set up, 6 made of Bilva, 6 of Khadira, 6 of Palāśa, one of Uḍumbara, one of Śleṣmātaka, and one of Deva-dāru), [Ṛg-veda] etc. etc.

***

Yuwang suvang

Hiuen Tsang (commonly known today as Xuanzang) is pronounced roughly as “shwahn tsang” in standard Mandarin or “hyoo-en tsahng” in traditional English approximations.

Hiuen Tsang (629-645 CE) was a prominent Chinese traveller and Buddhist monk who visited India during the 7th century, significantly contributing to historical and cultural understanding. His extensive writings documented various aspects of Indian society, including religious practices, educational systems, and the prevalence of Siva worship. He is noted for his accounts of significant locations such as Nalanda and Takshashila, and for bringing valuable Buddhist teachings and artifacts back to China, influencing Buddhism’s spread in Asia; documented Indian charity practices during his expeditions, providing valuable insights into cultural and religious exchanges between China and India, highlighting the significance of altruism in both societies. When Hiuen-tsang visited India during Harsha’s reign, he found Taxila to be a dependency of Kashmir, indicating its reduced political status at that time; found shrines dedicated to local Nagas in Kashmir.

Even before Hiuen Tsang , Faxian visited India during Gupta period; after Hiuen Tsang,  Chinese traveller I-tsing journeyed to India to collect sacred texts and document ancient South Asian culture, education, and medicine.

—Subham—

Tags- Chinese traveller, Yuga, Yoga, Yavana, Yoga Vasistha, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-127; இந்து மத கலைச்சொல் அகராதி-127

மனிதன் இறைவனை அடைவதற்கான வழி! – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை! (Post.16,297)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,297

Date uploaded in London – 12 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

8-10-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

மனிதன் இறைவனை அடைவதற்கான வழி! – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை! 

ச. நாகராஜன்              

இறைவனின் எல்லா வடிவங்களிலும் மனித வடிவமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தெய்வம் மனுஷ்ய ரூபேண – தெய்வம் மனித வடிவத்தில் இருக்கிறது -. இதில் நீங்கள் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும்.

உங்களின் புலன்களை சரியான விதத்தில் பயன்படுத்துங்கள்.  அப்போது தான் நீங்கள் உண்மையான மனிதராக ஆவீர்கள்.

மனிதன் என்பவன் யார்?

மனிதகுலத்தைச் சரியாகப் படிப்பவனே மனிதன்.

இதன் அர்த்தம் என்னவெனில், எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் ஒன்று இன்னொன்றுடன் லயத்துடன் பொருந்தி இருக்க வேண்டும் என்பது தான்.

எண்ணம், சொல், செயல் ஆகியவை இணைந்திருப்பதே மனிதத்தன்மை ஆகும்.

த்ரிதளம், த்ரிகுணகரம், த்ரிநேத்ரம்ச த்ரியாயுதம்;

த்ரிஜன்ம பாப சம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்

திரிதளமுள்ள வில்வத்தை மூன்று ஜென்ம பாவத்தைப் போக்கும் திரிசூலம் ஏந்தியுள்ள முக்கண்ணனான சிவபிரானுக்கு அர்ப்பணம் செய்யுங்கள்.

 உங்கள் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யுங்கள். 

இறைவன் உங்களுடனேயே இருந்தாலும் கூட, உங்களுக்குள்ளேயே இருந்தாலும் கூட,, உங்களைச் சுற்றியே இருந்தாலும் கூட நீங்கள் அவனை வெளியிலே தேடி உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். நேரத்தை விணடிக்காதீர்கள். ஏனெனில் காலமே இறைவன். ஆகவே தான் அவன் கால ஸ்வரூபாய நமஹ என்று துதிக்கப்படுகிறான்.

நீங்கள் இறைவனுடன் எல்லா சமயத்திலும் நெருக்கமாக இருக்கும்போது, நீங்கள் ஏன் கவலைக்கு இடம் கொடுக்க வேண்டும்? கடவுள் உங்களைத் தவிர வேறேங்கும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள புனிதமான பணிகளை மேற்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

 ஹஸ்தஸ்ய பூஷணம் தானம்

சத்யம் கண்டஸ்ய பூஷணம்

ஸ்ரோத்ரஸ்ய பூஷணம் சாஸ்த்ரம்

கைகளுக்கு அணி தானம் செய்வது

கழுத்திற்கு அணி சத்தியமே

புனிதமான சாஸ்த்ரமே காதுக்கு அணி

இவையே நீங்கள்  உங்களை அலங்காரம் செய்து கொள்ள இறைவன் விரும்பும் ஆபரணங்களாகும்.

ஆனால் மனிதனோ உலகியல் ஆபரணங்களுக்காக ஏங்குகிறான்; அதனால் தன்னை தூஷணத்திற்கு (கெட்ட விமரிசனத்திற்கு) உட்படுத்திக் கொள்கிறான்.

 உங்கள் அனைவரிடமும் அன்பே அடிப்படையான அம்சமாகும். அது புனிதமானது; மாறாதது. ஆனால் அந்த புனிதமான அன்பை நீங்கள் லோகாயத உலகில் திசை திருப்பி உங்களை வசைக்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்கிக் கொள்கிறீர்கள். புனிதமான பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கென நற்பெயரை சம்பாதியுங்கள். உங்கள் உடல் நீடித்திருப்பது இறைவனாலேயே தான்.  ஆகவே அதை உன்னதமான செயல்களுக்காகப் பயன்படுத்துங்கள். 

தீயதைப் பார்க்காதே, நல்லதையே பார்,

தீயதைக் கேட்காதே,  நல்லதையே கேள்,

தீயதைப் பேசாதே, நல்லதையே பேசு,

தீயதை எண்ணாதே, நல்லதையே எண்ணு,

தீயதைச் செய்யாதே, நல்லதையே செய்,

இதுவே இறைவனை அடைவதற்கான வழி! 

உங்கள் உடலில் உள்ள எல்லா அங்கங்களையும் சுயநலமற்ற  செயல்களில் ஈடுபடுத்தி அவற்றைப் புனிதமாக்குங்கள். ஆனால் இதை செயல் படுத்துவது சுலபமல்ல. மனிதன் எதைச் செய்தாலும் அதில் கொஞ்சம் சுயநலம் இருக்கவே செய்கிறது. சுயநலம் என்பது தேவை தான், ஆனால் அது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும்.

கடவுள் அருள் கடல். உங்கள் கையில் இருக்கும் பாத்திரத்தின் அளவே தான், அதில் நீங்கள் எவ்வளவு கடல்நீரை எடுக்க முடியும் என்பது. நீங்கள் அதிகமாக இறைவனின் அருளைப் பெற வேண்டுமெனில், நீங்கள் உங்கள் பாத்திரத்தின் அளவைப் பெரிதாக்க வேண்டும். அதாவது உங்கள் அன்பை அதிகரிக்க வேண்டும். அன்பை விஸ்தரிப்பது வாழ்க்கையாகும். அன்பைச் சுருக்குவது மரணமடைவதாகும்.

அன்பைப் பெருக்குங்கள், அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதுவே உண்மையான தியாகமாகும்.

ந கர்மணா ந ப்ரஜயா, தனேன

த்யாகேனைகேன அம்ருதத்வமானஸு

(அமரத்தன்மை செயலினாலோ, ப்ரஜைகளாலோ, செல்வத்தினாலோ அடைய முடியாது; தியாகம் ஒன்றினாலேயே மட்டுமே அடையப்படுவதாகும்)

 ஓ, கடவுளே, நீ எனக்குத் தந்த இதயத்தை நான் உன்னிடம் அர்ப்பணிக்கிறேன். உனது தாமரைப் பாதங்களுக்கு இதை விட வேறெதை என்னால் அர்ப்பணிக்க முடியும்? தயவு செய்து எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்.  – (ஒரு தெலுங்கு கவிதை)

இதுவே கடவுளுக்கு ஒருவன் செய்யும் உண்மையான அர்ப்பணமாகும்.

9-10-2001 அன்று பிரசாந்தி நிலையத்தில் நடந்த பாதுகா மஹோத்ஸவத்தில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை!

கம்ப ராமாயணப் பாடல்களில் 50 கேள்விகள் (Post.16,296)

Written by London Swaminathan

Post No. 16,296

Date uploaded in London – 11 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இதற்கு முன்னர் வெளியிட்ட40 கேள்விகள் கடைசியில் உள்ளன ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

41

கெளசிகி என்ற நதி பற்றி ராம லட்சுமணர் வினவியபோது தன்னுடைய சகோதரியின் பெயர் அது என்று கூறிய விச்வாமித்ரன் அவனுடைய அப்பா, தாத்தா பற்றி என்ன சொன்னான் ?

42

கணவனே கண்கண்ட தெய்வம் என்ற வள்ளுவனின் கருத்தை நைசாக கம்பன் சொல்லும் இடம் எது ?

43

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இரண்டு பிராமணர்கள்தான் குரு; மஹாபலியிடம் திருமாலே வாமனன் என்ற பிராமணச் சிறுவனாக வந்த போது பிராமண குரு சுக்கிர ஆச்சாரியார் எச்சரிக்கிறார் ; அப்போது அசுரர் சக்கரவர்த்தியான மஹாபலி சொன்ன 3 புல்லெட் பாயிண்டுகள் என்ன?

44

பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

கண்வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்- என்ற கண்ணதாசனின் பாசம் திரைப்படப் பாடலுக்கு மூலம் கம்ப ராமாயணத்தில் எங்கு வருகிறது?

45

மிதிலை நகரை அயோத்தி போல விரிவாக வருணிக்கும் கம்பன் , நமக்கு முதல்  முதலில் சீதா தேவி பற்றி என்ன செப்பினான் ?

46

கண்டதும் காதல் LOVE AT FIRST SIGHT லவ் அட் பஸ்ட் சைட் பற்றிக் கம்பன் பாடியது என்ன ?

47

சீதையும் ராமனும் ஒருவரை ஒருவர் பார்த்த பார்வை பற்றி Ayodhya Today, Mithila Times 5000 BCE நியூஸ் பேப்பர்களில் எப்படி FLASH NEWS செய்தி வெளியிட்டார்கள் ?

48

சிவ தனுஷ் என்னும் வில் எவ்வளவு பெரியது?

49

வில்லினை ராமன் எடுத்து, நாண் ஏற்றியதை கம்பன் எவ்வாறு வருணிக்கிறான்? 

50

சீதா தேவி பூமியில் கிடைத்த வரலாறு என்ன ?

 ************************

விடைகள்

41. ‘அன்னவன் தனக்கு வேந்தன்   அரசொடு முடியும் ஈந்து

பொன்னகர் அடைந்த பின்னர்   புகழ்மகோதயத்தில் வாழும்

மன்னவன் காதிக்கு யானும்   கவுசிகை என்னும் மாதும்

முன்னர் வந்து உதிப்ப அந்த   முடியுடை வேந்தர்வேந்தன்.

 அந்தக்  காதி  என்னும் பெயருடைய   அரச  குமாரனுக்கு   தந்தையான குசநாபன்; ஆட்சியுடன்   அதற்குரிய  மணிமுடியும்  தந்து; விண்ணுலகு சென்றபின்பு;  புகழ்மிகுந்த மகோதயம் என்ற நகரில்அரசு  புரிந்து  வாழ்ந்து  வந்த  காதிக்கு;  யானும் எனக்கு முன்பு வந்துதித்த கவுசிகை  என்ற பெண்ணும் வந்து பிறக்க; மணிமுடி   புனைந்த  அந்த மன்னர் மன்னனான காதி வேந்தன் கெளசிகியை இரிசியன் என்பவனுக்கு மணம் செய்வித்தான் ; அவ இறந்த பின்னர் எனது சகோதரி கெளசிகி நதியாவிவிட்டாள்

விச்வாமித்ரனின் தாத்தா- குசநாபன்; அப்பா- காதி ;

***

ஒரு அழகிய சோலையைக் கண்டு இது என்ன இடம் ? என்று ராம லெட்சுமணர்கள் கேட்டார்கள்; அப்போது கம்பன் கொடுத்த பதில்:

‘தங்கள் நாயகரின் தெய்வம்

   தான் பிறிது இலை’ என்று எண்ணும்

மங்கைமார் சிந்தை போலத்

   தூயது; மற்றும் கேளாய்;

எங்கள் நான்மறைக்கும். தேவர்

   அறிவிற்கும். பிறர்க்கும். எட்டாச்

செங் கண் மால் இருந்து மேல்நாள்

   செய் தவம் செய்தது அன்றே.

தங்களது கணவரைக் காட்டிலும்  தெய்வம் வேறு இல்லை; 

என்று கருதும் பெண்ணரசிகளது;  மனத்தைப்போல  (இச்சோலை) தூய்மையானது

பின்னும் சொல்லுகிறேன்  கேட்பாயாக;   எங்களுடைய  நான்கு   வேதங்களுக்கும்;  

மற்றவர்களுக்கும்  (உள்ளம்  உரை) செயல்களால்

எட்டமுடியாத  திருமால்;  இங்குத் தங்கி முன்

ஒரு  காலத்திலே; செம்மையான தவத்தைச் செய்த இடமல்லவா?

***

(43)1.ஹலோ மிஸ்டர் சுக்ரா! வந்தவன்  திருமாலே என்றல் பார்!  என் கை உயர்ந்து நிற்க அவன் கை தாழ்ந்து பிச்சை எடுப்பதைப் பார் . இதைவிட எனக்கு என்ன பெருமை தேவை ?

2.செத்துப் போன வார்களெல்லாம் செத்தவர்கள் இல்லை; கொடுப்பதால் அழியாத புகழ் எய்துவர்

3.யு ஆர் மை எனிமி! U R MY ENEMY கொடுப்பவர்களைத் தடுக்கிறானே! அவன்தான் எதிரி/எனிமி!

‘நினக்கு இலை; என் கை   நிமிர்ந்து இட, வந்து

தனக்கு இயலா வகை    தாழ்வது, தாழ்வு இல்

கனக் கரி ஆனது    கைத்தலம் என்னின்,

எனக்கு இதன் மேல் நலம்    யாது கொல்? ‘என்றான்..

’மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது

ஏந்திய கைகொடு இரந்தவர்;- எந்தாய்!-

வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்.

ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரோ?

‘அடுப்ப அரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்

கொடுப்பவர் முன்பு ‘கொடேல் ‘என நின்று

தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்

கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை ‘என்றான்.

***

44.‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்   இனி. இந்த உலகுக்கு எல்லாம்

உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்   துயர் வண்ணம் உறுவது உண்டோ?

மை வண்ணத்து அரக்கி போரில்   மழை வண்ணத்து அண்ணலே! உன்

கை வண்ணம் அங்குக் கண்டேன்;   கால் வண்ணம் இங்குக் கண்டேன்

(பாலகாண்டம்-அகலிகைப் படலம் பாடல் 24)

அற்புதமான கருத்து நயம்; ஓசை நயம், எழுத்து நயம், வார்த்தை நயம் உள்ள இதற்கு இணையான இன்னொரு

பாடலை எந்த இலக்கியத்திலுமே காண முடியாது என்பது மட்டும்; உண்மை!

ராமனின் கை வண்ணத்தை அரக்கி தாடகை அழிவில் கண்ட மஹரிஷி விஸ்வாமித்திரர்

அவன் கால் ஒரு கல்லில் பட அகலிகை சாப விமோசனம் பெற்று எழும் போது கால் வண்ணத்தையும் கண்டு

கூறிய வார்த்தைகள் இவை!

மைவண்ணத்து   அரக்கி   –    அஞ்சனம்   போலும்   கரிய

நிறத்தையுடைய தாடகை என்னும் அரக்கியோடு; போரில் – செய்த

போரில்;   உன்   வைண்ணம்   கண்டேன்  –  உன்  கையின்

திறத்தைப்  (வில்லினது  ஆற்றலை)  பார்த்தேன்;  இங்குக்  கால்

வண்ணம்  –    இந்த   இடத்தில்  உன்  திருவடியின்  திறத்தை;

கண்டேன்  – பார்க்கலானேன். 

கல் போல சித்தப் பிரமையில் இருந்த அகலிகை, ராமன் கால் பட்டவுடன், உயிரும் உணர்வும் பெற்று எழுந்தாள்

***

செப்பும்காலை. செங்கம   லத்தோன் முதல் யாரும்.

எப் பெண்பாலும் கொண்டு   உவமிப்போர் உவமிக்கும்.

அப் பெண் தானே ஆயின   போது. இங்கு. அயல் வேறு ஓர்

ஒப்பு எங்கே கொண்டு. எவ் வகை   நாடி. உரை செய்வோம்?

சீதைக்கு     உவமை கூற இயலாது: ஏனென்றால் அவள் உவமை கடந்தவள்.  எவ்வாறெனில்.  எல்லாப்  பெண்களுக்கும்  எல்லாராலும் உவமையாக   எடுத்துச்   சொல்லப்படுகிறவள்   திருமகள்.  அவளே இப்போது  மிதிலையில் சீதையாகப் பிறந்திருக்கிறாளே! அப்படியிருக்க

அவளுக்கு வேறுயாரை உவமையாகக் கூறமுடியும்?              24 

உமையாள் ஒக்கும் மங்கையர்`   உச்சிக் கரம் வைக்கும்

கமையாள் மேனி கண்டவர்   காட்சிக் கரை காணார்.

‘இமையா நாட்டம் பெற்றிலம்’   என்றார்; ‘இரு கண்ணால்

அமையாது’ என்றார் – அந்தர   வானத்தவர் எல்லாம்.

மண்ணவர். விண்ணவர்: சீதையைப் பார்த்தவர்கள்அவளது  மேனி

யழகிற்கு  எல்லை  காண  முடியாது  வருந்தினார்கள்.  அவர்களிலே

நிலவுலகத்தவர்  தேவர்களைப்  போலத்  தமக்கு  இமையா  நாட்டம்

இல்லையே  என்று  வருந்தினர். ஆனால் அவ் வானத்தவரோ தமக்கு

இமையா  நாட்டம்  இருந்தும்  அவை  இரண்டாக அமைந்தமையால்

சீதையின்  அழகை  முற்றும்  ஒருங்கே பார்க்க அவை போதா என்று குறைபட்டனர்.      

***   

46.இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர்

கண்டுகொள்ளல்

எண் அரும் நலத்தினாள்    இனையள் நின்றுழி,

கண்ணொடு கண் இணை    கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும், நிலை பெறாது    உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான்!    அவளும் நோக்கினாள்.

   அண்ணலும்நோக்கினான் – இராமனும்   (சீதையைப்)   பார்த்தான்;   அவளும்

நோக்கினாள்  – சீதையும் (இராமனைப்) பார்த்தாள்.

இராமனும் சீதையும். இராமனது பார்வை சீதைமேல் செல்ல. அவள்

கண்  இராமன்  மேல்  பாய்.  அப்போது இருவரது  மனவுணர்ச்சியும்

ஒன்றுபட்டு ஒரு தன்மைத்தான காதலைக் கொண்டது புலனாகும்.

***

47.வில் படை வீரனும் வாள் படை (வாள் போன்ற விழியுடையாள்) வீராங்கனையும் சந்திப்பு !

மிதிலை முழுதும் கிசு கிசு செய்திகள்! Flash News in Ayodhya Today 5000 BCE, Mithila Times 5000 BCE!

பருகிய நோக்கு எனும்    பாசத்தால் பிணித்து,

ஒருவரை ஒருவர் தம்     உள்ளம் ஈர்த்தலால்,

வரி சிலை அண்ணலும்    வாள் கண் நங்கையும்

இருவரும் மாறிப் புக்கு    இதயம் எய்தினார்.

மருங்கு இலா நங்கையும். வசை இல் ஐயனும்.

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்-

கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்

பிரிந்தவர் கூடினால். பேசல் வேண்டுமோ?

மருங்கு இலா நங்கையும்- இடையில்லாத (நுண்ணிய   இடையைக்

கொண்ட) சீதையும்; வசை இல் ஐயனும் – குற்றம் இல்லாத இராமனும்

(ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மிக்க காதலால்); ஒருங்கிய இரண்டு

உடற்கு  –  ஒன்றுபட்ட  இரண்டு  உடல்களுக்கு;  உயிர்    ஒன்று

ஆயினார் – ஓர் உயிர் என்று சொல்லுமாறு ஆனார்கள்;  கருங்கடல்

பள்ளியில் – மிகப்  பெரிய  பாற்கடலில்  ஆதிசேடனாகிய   பாம்புப்

படுக்கையிலே; கலவி  நீங்கி –  (ஒருவரோடு  ஒருவர்   கலந்திருந்த)

கூட்டம் நீங்கி;  போய்ப்   பிரிந்தவர்  –  (தனித்தனியே)   பிரிந்து

சென்றவர்கள்;  கூடினால்  –  மீண்டும் (ஓர்  இடத்தில்)  சேர்ந்தால்;

பேசல்  வேண்டுமோ?  – (அவர்களுக்குள் உண்டாகும்   காதலைச்)

சொல்லவும் வேண்டுமோ? 

விஷ்ணு- லெட்சுமி இருவரும் பூமியில் பிறந்து மிதிலை நகரில் மீண்டும் சந்தித்துவிட்டனர்!

***

48.உறுவலி யானையை ஒத்த மேனியர்.

செறி மயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்.

அறுபதினாயிரர். அளவு இல் ஆற்றலர்.

தறி மடுத்து. இடையிடை. தண்டில் தாங்கினர்.*

(விற்சாலையுள்     புகுந்த ஏவலாளர்  தெரிவித்தவாறு) 

மிக்க  வலிமையுடைய  யானையை; ஒத்த  திடமான உடலையுடையவர்களும்; மலை

போலத்   திரண்டு;   மயிர்  அடர்ந்த தோளினரும்;    அளவிடமுடியாத

வல்லமையுடையவர்களுமாகிய;  அறுபதினாயிரம்

வீரர்கள்;  (அந்த  வில்லின்) நடு இடங்களில்;

தூண்களை  வைத்து;  (அத் தூண்களோடு

நெடுகக்  கட்டிய) தண்டுகளில்; (தம் தோள்களில் வைத்து

சுமந்து வந்தார்கள்.

அறுபதினாயிரம் 60,000 என்ற எண், இந்துமத நூல்கள் முழுவதிலும் எண்ணற்ற, கணக்கில்லாத என்ற பொருளில் வருகிறது.

***

49.தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்

மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;

கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்

எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.

கண்     இமை   கொட்டினால்    இராமன்     வில்லையெடுத்து

நாணேற்றுவதைக்  காணாமற்போய் விடுவோம்  என்று கண் கொட்டாது

பார்த்தவர்களும் அந்த இராமன் வில்லை எடுத்ததையும்.  அது  முறிந்த

ஓசையையும்  கேட்டனரே  அல்லாமல் அதை   நாணேற்றியதைக் காண

முடியாதவராயினர் என்பது. இற்றது – இறுதலால் தோன்றிய ஒலி    

***

50.யாகம் செய்வதற்காக மன்னர்கள் தங்க- ரத்தினக் கலப்பை கொண்டு உழுவது சம்பிரதாயம் ;

அவ்வாறு ஜனக மன்னன் நிலத்தை உழுத போது சீதையைக் கண்டான்

‘உழுகின்ற கொழு முகத்தின்.

   உதிக்கின்ற கதிரின் ஒளி

பொழிகின்ற. புவி மடந்தை

   திரு வெளிப்பட்டென. புணரி

எழுகின்ற தெள் அமுதோடு

   எழுந்தவளும். இழிந்து ஒதுங்கித்

தொழுகின்ற நல் நலத்துப்

   பெண் அரசி தோன்றினாள்.

சீதை   கொழுமுகத்தில் தோன்றினாள் என்றார். சீதையின் திருமேனி

பொன்னிறமாதலால்    ‘உதிக்கின்ற    கதிரின்     ஒளி   பொழிகின்ற

புவிமடந்தை’  என்றார்  இலக்குமியும்  தாழ்ந்து  வணங்கத்தக்க  பேரழகு

படைத்தவள் சீதை .                                 

கொழு: நிலத்தை உழுவதற்காக ஏரில் பயன்படுத்தப்படும் இரும்பு முனை (Ploughshare).

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இதற்கு முன்னர் வெளியிட்ட 40 கேள்விகள் ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்

1

அஞ்சிலே ஒன்று பெற்றான் — என்னும் அருமையான கம்பன் பாடலின் பொருள் என்ன?

2

ராம என்ற இரண்டே எழுத்துக்கள் தரும் அற்புதப்  பலன்கள்  பற்றி  கம்ப இராமாயண சிறப்புப் பாயிரத்தில் ஒரு பாடல் உள்ளது. நினைவுக்கு வருகிறதா அந்தப்பாடல்?

3

எந்த ஒரு நூலினையும் மங்களச் சொற்களுடன் துவங்க வேண்டும் என்ற விதி சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளது ; கம்பன், தனது ராமாயணத்தை, எந்தச் சொல்லுடன் துவங்குகிறான்?

4

கம்பனும் காளிதாசனும் என்ன சொல்லி நூலை எழுதத் துவங்கினார்கள் ?

5

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் ; போங்கடா போங்க! நான் சொல்வது தெய்வ மாக்கவி எழுதிய கவிதை என்று கம்பன் செப்பியது எங்கே ?

6

வால்மீகியைத் தவிர வேறு இருவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதினார்கள் என்று கம்பன் ஒரு புதிர் போடுகிறானே ! அந்தப் புதிருக்கு விடை கிடைத்ததா?

7

தெய்வ மாக்கவி, முதலில் ராமாயணம் சொன்னவர் என்றெல்லாம் வான்மீகி முனிவரைப் போற்றிய கம்பன் அவருடைய பெயரை எங்கேயாவது பகர்ந்தானா?

8

கம்பன் சர்வ சமய நோக்குள்ளவன்; சைவ, வைணவ பேதம் பாராட்டாதவன் ; முடிந்த அளவுக்கு சிவன் பெருமையை அவன் பாடுகிறான் ; சரயு நதிப் பாடலில் சிவனை அவன் எப்படிப் புகழ்கிறான்?

9

ஆகாசாத் பதிகம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதி கச்சதி – என்று பிராமணர்கள் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தன மந்திரத்தில் சொல்கிறார்கள் ; இதைக் கம்பனும் சொல்லி, சர்வசமய பொதுநோக்கினைக் காட்டும் பாடல் எது?

10

கம்பன் போகிற போக்கில் Music மியூசிக் பற்றி ஒரு அருமையான உவமை சொல்கிறான் ; இந்தப்பாடலின் பொருள் விளங்குகிறதா?

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,

பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,

விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.

***

11

கம்பன் சொல்லும் அதிசய மூலிகைகள் எவை ?

12

தூக்கணாங் குருவிகள்தான் மனிதனுக்கு வீட்டில் விளக்கு ஏற்றுவதைச் சொல்லிக் கொடுத்தன; அவை மின்மினிப் பூச்சிகளை பிடித்துக் கொண்டு போய் கூட்டில் வைத்து அழகு பார்க்கும்; இதைத் தற்கால தீபாவளி, நவராத்ரி, கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்களுடன் DECORATIONS ஒப்பிடலாம் ; இந்த அதிசயத்தைக் கம்பன் எங்கே குறிப்பிடுகிறான் ?

13

கோசல நாட்டுப் பெண்கள் நல்ல படித்த பணக்கார பெண்களாம்; ஆயினும் அவர்கள் ஆபீசுக்குப் போகாமல் வந்த விருத்தினர்களைக் கவனிப்பதே வேலையாகச் செய்தார்களாம்   ; கம்பனின் இந்த கற்பனை வளத்தை எங்கே காணலாம்?

14

வாலிபால் என்னும் விளையாட்டினைக் கண்டு பிடித்தவர்கள் தமிழ்ப் பெண்கள்தான் ! பிற்காலத்தில் பூப்பந்தாட்டம் துவங்குவதற்கு அவர்களே காரணம் ; இதைச் சங்க இலக்கியப்பாடல்களில் காண்கிறோம்; கம்பன் அவர்கள் தினசரி ட்ரெயினிங் எடுத்தத்தைச் சொல்கிறானே ! அது என்ன பாடல்?

15

தாலி பற்றி அடிக்கடி தாலி அறுக்க விரும்பும் பெண்கள் கட்டுரைகளை எழுதி அவர்களின் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்ப் THOUSAND WATT BULB போட்டு காட்டுவதை  அவ்வப்போது படிக்கிறோம்; ஆனால் மு.சண்முகம் பிள்ளை , கம்பனும் மில்டனும் நூல் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் எஸ் ஆர் கே ஆகியோர் தாலி உண்டு என்று இலக்கியக் குறிப்புகளைக் காட்டினார்கள் !கம்பனும் தாலி உண்டு என்கிறான் ! அது எங்கே?

16

பட்டி மண்டபம் இன்று பட்டி மன்றமாகிவிட்டது ; பட்டி விக்ரமாதித்யன் என்ற மாபெரும் மன்னனும் அறிஞனும் உண்டாக்கிய விவாத சபை இது ! மாணிக்க வாசகரும் ஒன்றும் அறியாத என்னை பட்டி மண்டபம் ஏற்றினையே என்கிறார் ; ஏனெனில் அவரை புத்தர்களுடன் வாதிடும்படி சிதம்பரம் தீட்சிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர் ; அயோத்தியில் பல MANY HALLS ஹால்கள்;உண்டாம்; அதில் ஒன்று அறிஞர்கள் மோதும் பட்டி மண்டபம் என்கிறானே கம்பன் ; அதைச் செப்பிய இடம் யாதோ!

17

யுவான் சுவாங் என்னும் சீன யாத்ரீகன் அப்பர், மஹேந்திர பல்லவன் காலத்தில் வந்தான் ; அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் குப்தர் காலத்தில் வந்த சீன யாத்ரீகன் பாஹியான்– குப்தர் காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை; அந்த நாட்டில் திருடர்கள் இல்லை என்றான்; கம்பன் கண்ட அயோத்தியின் நிலை என்ன?

18

முதல் முதலாக கம்பன் ராவணனை அறிமுகப்படுத்தும் இடம்– தேவர்கள் அவன் செய்த அட்டூழியங்களை முறையிட்ட இடம் –ஆகும் . வால்மீகியில் இல்லாத அவதார விஷயத்தைக் கம்பன் இங்கே செப்பினானா ?

19

கம்பன் கருத்துப்படி வானரங்கள் – குரங்குப்படை யார் ?

20

துளசிதாஸ் எழுதிய ஹனுமான் சாலீஸாவில் அனுமன், சிவ பெருமானின் அவதாரம் என்கிறார் ; கம்பன் என்ன சொன்னான் ?

21

விஷ்ணு ராமனாகவும், சிவன் அனுமனாகவும் தேவர்கள் வானரங்களாகவும் அவதரித்ததாகக் கம்பன் சொன்னதைப் பாடல்களில் கண்டோம்; வாலி, சுக்ரீவன் யார் அவதாரம் ?

22

ரிஷ்யஸ்ருங்க முனிவரின் தமிழ்ப் பெயர்  கலைக்கோட்டு முனிவர் (கலை-மான்); அவரை கம்பன் எப்படிப் புகழ்கிறான் ?

23

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை — என்று மூதுரை நூலில் தமிழ் மூதாட்டி ஔவையார்  பாடியுள்ளார்.ரிஷ்ய ச்ருங்க முனிவர் நகருக்குள் நுழைந்தவுடன் என்ன நடந்தது ?

24

சோழர்கள் ஒரிஜினல் தமிழர்கள் அல்ல என்று புறநானூற்றுப் புலவர்களும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் குறிப்பால் உணர்த்துகின்றார்கள்.வடமேற்கு இந்தியாவை ஆண்ட சிபி என்னும் சூரியகுல மன்னன் அவர்களின் முன்னோன் ; கம்பன் செப்புவது என்ன ?

25

கலைக்கோட்டு முனிவன் தசரதனுக்காக புத்ர காமேஷ்டி யாகம் செய்தவுடன் அக்கினி குண்டத்திலிருந்து வந்த தேவன், பாயசம் ஏந்திய கலத்தைக் கொண்டுவந்தான் என்று வால்மீகி கூறுகிறார்; கம்பன் வேறு கதை சொல்கிறானே!

26

சுமித்திரைக்கு மாட்டும் இரட்டைப்பிள்ளைகள்  பிறந்தது ஏன் என்று கம்பன் காட்டுகிறான்?

27

கம்பன் சொல்லும் ஜாதகக் குறிப்புகள் என்ன ? ராமன் , லெட்சுமணன் நட்சத்திரங்கள்- ராசிகள் என்ன ?

28

வள்ளுவர் பற்றிக் கம்பன் புகல்வது யாது?

29

ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு என்று விச்வாமித்ர முனிவன் சொன்னவுடன் தசரதன் அவனைவிட்டுவிடு, நானே வருகிறேன், என்று சொல்லி எப்படித்துடித்தான் ?

30

விசுவாமித்திர முனிவரின் கோபத்தையும் எக்காளச் சிரிப்பையும் கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான்?

31

விசுவாமித்திர முனிவன் அதி பயங்கர கோபத்துடன் எக்காளச் சிரிப்பு சிரித்து வெளியேற எத்தனித்தபோது , வசிட்ட மாமுனிவன் ப்ளீஸ் வெயிட், ப்ளீஸ் பி பேஷண்ட் PLEASE WAIT, PLEASE BE PATIENT என்று சொல்லி தசரதனுக்கு என்ன சொன்னான் ?

32

நீ தேரோட்டி மகன் ; க்ஷத்ரியர்கள் போட்டியில் நீ இடம்பெற முடியாது என்று கர்ணனிடம் சொன்னபோது, உடனே அவனை இன்று முதல் அங்க நாட்டுக்கு மன்னன் என்று டிக்ளேர் DECLARATION  செய்து பிளாஷ் நியூஸ் FLASH NEWS வெளியிட்டான் துரியோதனன் ; அந்த அங்க நாட்டுக்கு ஏன் அங்கம் என்று பெயர் வந்ததாகக் கம்பன் செப்புகிறான் ?

33

ராம லெட்சுமணர்களுக்கு பலா , அபலா என்ற இரண்டு மந்திரங்களை விச்வாமித்ரன் அளித்தானே ; அவைகளின் பொருள் என்ன? காளிதாசன் இது பற்றி விளம்பியது என்ன ?

34

தாடகை என்னும் அரக்கியை கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான் ?

35

ராமனைப் பார்த்த ஆண்களுக்கு, தாங்கள் பெண்களாகப் பிறந்து இவரை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை எழுமாமே! கம்பனின் அதீதக் கற்பனை வரும் பாடல் எது ?

36

இந்தியாவில் எரிமலைகள் /VOLCANOES  கிடையாது ; ஆயினும் தாடகையை கம்பன் வால்க்கேனோ – எரிமலை என்று வருணிக்கும் வியப்பான இடம் எது?

37

தமிழ்க்கடல் தந்த அகத்தியனை கம்பன் எப்படி அறிமுகப்படுத்துகிறான் ?

38

செவிடன் காதில் ஊதிய சங்கு போல என்று தமிழ்ப்பழமொழி உண்டு; ஆனால் கம்பன், தீயவர் காதில் போட்ட சொற்கள் ஒரு காதில் சென்று மனத்தில் தங்காமல் மறு காது வழியாகப் போய் விடும் என்ற உவமையைப் பொருத்தமாகப் பயன்படுத்துவது எங்கே?

39

கம்பன், ராமாயணம் இயற்றும் காலையில், அவருக்கு பேருதவி புரிந்தவர் சடையப்ப வள்ளல் என்னும் பெருந்தகை ஆவார்; அவரை அவ்வப்போது கம்பன் புகழ்ந்து நன்றிக் கடன் செலுத்துவான்; அவ்வாறு முதல்முதலில் புகழும் பாடல் எது ?

40

ஒருவன் செய்த நற்பயன்/ கல்வி அனைத்தும் மறுபிறப்பில் (ஏழு பிறப்புக்கும்) வரும் என்று வள்ளுவன் சொன்னதைக் கம்பன் எப்படிப் பாட்டில் வடிக்கிறான் ?

–subham—

Tags- கம்ப ராமாயணம், பாடல்கள், 50 கேள்விகள்

Chanakya and Manu agree with Vallluvar: Tirukkural Encyclopaedia -Avoidance of Faults (Post.16,295)


Written by London Swaminathan

Post No. 16,295

Date uploaded in London – 11 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Chanakya and Manu agree with Vallluvar: Tirukkural Encyclopaedia Chapter 44 –Avoidance of Faults; குற்றங்கடிதல்

Part 62

xxxx 

Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!

****

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

POINTS TO PONDER:

In Kautilya’s Arthashastra, the concept of Arishadvarga (or Shadripu) refers to the six internal enemies or detrimental vices of the human mind that a king must completely conquer to rule effectively. While traditionally viewed as obstacles to spiritual liberation (Moksha) in Hindu philosophy, Chanakya (Kautilya) repurposes them as political and practical imperatives for governance, leadership, and statecraft.

Chanakya famously emphasizes that “he is the most powerful person who has conquered himself”. In Book 1, Chapter 6 of the Arthashastra, he explicitly states that a king who fails to control these six internal enemies will ultimately destroy himself and his kingdom, regardless of how large his army or empire is.

The Six Internal Enemies (Arishadvarga) in Leadership

Vice (Sanskrit)         Meaning       Political Risk in the Arthashastra

Kama Lust / Uncontrolled Desire           Leads the king to neglect state duties, squander resources on personal pleasures, or make decisions based on infatuation rather than merit.

Krodha          Anger / Rage            Causes impulsive, tyrannical decision-making, harsh punishments, and alienation of loyal subjects, ministers, or allies.

Lobha Greed / Avarice       Results in over-taxing citizens, hoarding state wealth, or engaging in corrupt practices, which triggers internal rebellion.

Moha Delusion / Attachment     Blinds the king to imminent threats, causes poor judgment, and creates biases toward preferred individuals or failing strategies.

Mada Arrogance / Ego      Breeds complacency and overconfidence. An arrogant king ignores the sound advice of experienced ministers and underestimates external enemies.

Matsarya      Envy / Jealousy       Leads to distrust within the administration. The king may envy the capabilities of his own ministers or generals, destroying internal unity.

**

Kamandakiya Nitisara (also known as the Nitisara of Kamandaki or Kamantakam in certain regions like South India and Bali). It is an ancient Sanskrit treatise on statecraft and polity written as a metrical summary of Kautilya’s Arthashastra.

Summary of Chapter 1 (Verses 1–57)

The first section is dedicated to Indriyajaya (the control of the senses) and the foundational moral qualities required of a ruler.

तस्माद्व्युदस्य व्यसनं सर्वमेतदशेषतः ।

जितेन्द्रियो भवेद्रजा नीतिशास्त्रानुगः सदा ॥ ५६ ॥

tasmād vyudasya vyasanaṃ sarvam etad aśeṣataḥ |

jitendriyo bhaved rājā nītiśāstrānugaḥ sadā || 56 ||

Translation: Therefore, casting away all these vices entirely, a king must master his senses and always follow the dictates of the science of polity (Nitisara).

जितेन्द्रियस्य नृपतेर्नयमार्गानुसारिणः ।

भवन्त्यविचला लक्ष्म्यः कीर्तिश्च गगनस्पृशी ॥ ५७ ॥

jitendriyasya nṛpater naya-mārga-anusāriṇaḥ |

bhavanty avicalā lakṣmyaḥ kīrtiś ca gagana-spṛśī || 57 ||

Translation: For a king who has conquered his senses and walks the path of righteousness, royal fortune (Lakshmi) remains steadfast, and his fame touches the very heaven

**

Praise is poison; criticism is honey- Manu

A Brāhmaṇa should constantly shrink from honour as from poison, and always long for disrespect as from nectar.

MANU SMRITI

सम्मानाद् ब्राह्मणो नित्यम् उद्विजेत विषाद् इव ।

अमृतस्येव चाकाङ्क्षेद् अवमानस्य सर्वदा ॥ १६२ ॥

sammānād brāhmaṇo nิทyam udvijeta viṣāḍ iva |

amṛtasyeva cākāṅkṣed avamānasya sarvadā ||

• Sammāna (सम्मान): Honor or social respect; viewed here as hazardous and toxic (“like poison”) because it breeds pride and worldly attachment.

• Avamāna (अवमान): Disrespect, scorn, or dishonor; viewed here as beneficial (“like nectar”) because it keeps the mind humble, detached, and free from ego.

XXXX

Chapter 44- Eschewing of Faults; Avoidance of Faults; குற்றங்கடிதல்

*******

431.There is a grace about the riches of the king who is free from pride, anger and lust –A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

431.Freedom from Arrogance, Anger and Meanness

Spells dignity in greatness– S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

431
Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.
Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.- Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***
431.Plenty is their prosperity
Who’re free from wrath pride lust petty.  Suddhananda Bharathiyar – SB     

***

431.Exalted in nature is the greatness of them that have neither pride nor anger nor meanness –EVS Publishers, Singapore – EVS, Year 1986

***

431. செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

432.Niggardliness, overweening pride, and sensuality are grievous faults in a king– ANM+2

***

432.Parsimony born out of greed, selfish pride and excessive pleasure seekin,

All three are faults in a prince- SMD

***

432
A niggard hand, o’erweening self-regard, and mirth
Unseemly, bring disgrace to men of kingly brith.
Avarice, undignified pride, and low pleasures are faults in a king. – GUP

***

432.Mean pride, low pleasure, avarice
These add blemishes to a prince.     – SB       

***

432.Miserliness, overbearing, pride and vulgar pleasures are faults to a leader- EVS

***

432. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

433.Faults, small as a millet seed, loom as big as a giant palm in the eyes of those who are jealous of their reputation– ANM+2

***

433.People, who fear disgrace, should avoid even tiny millet sized faults,

Treating them as of major dimension like a palm tree- SMD

***
433
Though small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace ’twill seem.
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree. – GUP

***

433.Though millet-small their faults might seem
Men fearing disgrace, Palm-tall deem.       – SB     

***

433.Those who fear guilt, were they to commit a fault as small as millet seed would consider it to be as large as a palmyra nut- EVS

***

433.When men who fear dishonour a fault commit, though small as millet seed,

They will always think it great as palm tree’s bulky fruit – H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***

433. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

434.Beware of your faults, for they are a deadly enemy– ANM+2

***

434.As faults are one’s worst enemy leading to ultimate ruin,

It is wise to guard against all faults- SMD

***

434
Freedom from faults is wealth; watch heedfully
‘Gainst these, for fault is fatal enmity.
Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy. – GUP

***

434.Watch like treasure freedom from fault
Our fatal foe is that default.  – SB          

***

434.Let a man guard against faults, holding them serious;

They alone are the foes that bring about a fall- EVS

***

434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

435.Behold the man who does not nobly plan out the future and protect himself against coming evils; he perishes like a

heap of straw before a consuming fire– ANM+2

***

435.The life of a man who does not guard against untoard developments,

Will be like a haystack before an advancing fire- SMD

***

435
His joy who guards not ‘gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.
The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire. – GUP

***

435.Who fails to guard himself from flaw
Loses his life like flame-lit straw.    – SB        
***

435.One must guard oneself against coming evil; or not,

Life will be lost like straw before fire- EVS

***

435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

436.He is a perfect king who, blameless himself,  scans the faults of others– ANM+2

***

436.Faultless will be the king, who correct himself

Before he goes on to spot other’s faults- SMD

***

436
Faultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men.
What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others. – GUP

***

436.What fault can be the king’s who cures
First his faults, then scans others.   – SB         
***

436.Let a man cure his faults and then scan others’. Who then can find fault with him? – EVS

***

436.What fault can that king ever commit

Who first his own and then the faults of others checks? H A Popley – HAP

***
436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

437. Close fisted parsimony, which is blind to its welfare, goes to rack and ruin– ANM+2

***

437.The miser, who does not put his money to legitimate and purposeful use,

Will find his wealth decline and vanish- SMD

***

437
Who leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind.
The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue. – GUP

***

437.That miser’s wealth shall waste and end
Who would not for a good cause spend.    – SB        

***

437.The wealth of a miser who fails to do what should be done, perishes without growth- EVS

***

437. செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

438.Miserliness is the darkest of all faults and stands out in sinister isolation– ANM+2

***

438.Avarice, which is the denial of all charitable inclinations in man,

Is not just a vice; it is the worst- SMD

***
438
The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.
Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone – greater than all). – GUP

***
438.The gripping greed of miser’s heart
Is more than fault the worst apart.    – SB      

***

438.The close -fisted greed of a miser is the worst, apart from all other defaults- EVS

***
 438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

439.Allow not the spirit of self-complacency to get the better of you; embark not on vain enterprises– ANM+2

***

439.Never indulge in self- praise; nor should you go in

For activities that produce no good results- SMD

***

439
Never indulge in self-complaisant mood,
Nor deed desire that yields no gain of good.
Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things. – GUP

***

439.Never boast yourself in any mood
Nor do a deed that does no good.    – SB        

***

439.Never extoll yourself in any mood nor do any act that is good for nothing- EVS

***

439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

XXXXXXXXXXXXXXXXXX

440.Let your heart’s desires be hidden from your enemy, lest you should fall a prey to their machinations– ANM+2

***

440.If the king is resourceful enough to enjoy his delights in secret

His enemies’’ machinations will be of no avail- SMD

***
440
If, to your foes unknown, you cherish what you love,
Counsels of men who wish you harm will harmless prove.
If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless. – GUP
***
440.All designs of the foes shall fail
If one his wishes guards in veil.   – SB         

***

440.The schemes of enemies shall be frustrated if you work out your design in calm, secretly – EVS

***



440. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

–subham—

Tags- Chanakya and Manu, agree with Vallluvar, Tirukkural Encyclopaedia, Chapter 44 ,Avoidance of Faults; குற்றங்கடிதல்

Three lesser-known Tamil Philosophic Poets (Post.16,294)

Written by London Swaminathan

Post No. 16,294

Date uploaded in London – 11 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

OZIVIL ODUKKAM BY KANNUDAIYA VALLALAR;

GNANAMIRTHAM BY VAGEESAR;

KAIVALYA NAVANEETHAM BY THANDAVARAYA SWAMIGAL;

About seventy years ago A V SUBRAMANIYA AYYAR wrote a short book titled THE POETRY AND THE PHILOSOPHY OF THE TAMIL SIDDHARS, year 1957. Of the famous 18 TAMIL SIDDHARS, only Tirumular is known to many Tamil devotees. He was the only one recognised by Tamil Saivites; others are treated as iconoclasts though they were also Siva devotees. Apart from the Tamil Siddhars, there are other great saints like Pattinathar and Thayumanavar and later Vallalar Ramalinga Swamikal. Because of a clash between famous Saivite scholar Arumuga Navalar and Vallalar, his Thiru Arutpa is also rejected by Saivite scholars and Saivite Adeenams. Later years produced some Tamil philosophic poets, and they are not known to many devotees. Thanks to AVS Ayyar, a short summary of their works is available.

ஒழிவில் ஒடுக்கம் – கண்ணுடைய வள்ளலார் ;

ஞானாமிர்தம் – வாகீசர்;

கைவல்ய நவநீதம் – தாண்டவராய சுவாமிகள்

Swami Omkarananda of Theni Vedapureeswara Ashram made the Kaivalya Navaneetham a popular through his excellent talks. They are available on You Tube and CDs released by the Ashram in Theni, Tamil Nadu.

Here is what AVS Ayyar says,

1

There are three outstanding works, which are technically outside the range of Siddhar literature., but which deserve special mention as constituting philosophic poetry of the highest quality with considerable literary value. These are the Jnanamirtham of saint Vagisar, Olivilodukkam of Kannudaiya Vallalar and Kaivalya Navaneetham of Thandavaraya Swamigal. These works are not generally considered to be part of Siddhar literature, but their content and conclusions, developed with argument and force in a terse and vigorous poetic style, emphasize in the main, the outlook and the general philosophy for which the Siddhars stood. There is an essential unity between the look on life here and hereafter and that of the Siddhars.

(Pronunciation guide- Vagisar= vaageesar; Jnanamirtham = jnaanaamirtham ).

Vagisar, the author of Jnanamirtham was a philosopher who lived probably in the 12th or 13th century. His work is one of the most profound philosophical treatises in Tamil literature. It contains about 75 poems; all of them are in Ahaval metre in which all the stiffness of the ancient usage has been retained.  In spite of this, the poet has shown extraordinary command over the Ahaval form and has made his style and diction vigorous and somewhat smooth.

The poem stresses the importance of the path of Jnana for salvation and leans toward the Saiva Sidhdhanta system in its philosophy. It contains an indictment of the life of senses and also a powerful plea for a virtuous life and avoidance of all evil. A brilliant exposition of the doctrine of Karma is found in a number of poems, in which it has been maintained, with illustrations from the Itihasas and Puranas, that even Jnanis are not exempt from the influence of Karma. The attributes of those who have attained spiritual realization have been described with imagination and power. Their state of bliss is as ineffable, says the poet, as that of the union of a lover and his beloved and can be known only to those who have enjoyed it. Quite a number of lyrics in this work have outstanding poetical qualities, though they deal with abstruse philosophy.

2

Kannudaiya Vallalar  was a Saiva mystic, who lived in the 14th or 15th century. His work Olivilodukkam, which contains a little over 250 stanzas in Venba metre, is one of the most thoughtful and philosophic poems in Tamil literature. It is an endless mine of intellectual similes. Compared with his merciless sarcasm on all kinds of idolatry, the words of Sivavakkiyar and others, so frequently quoted,  are the tamest of the jejune platitudes. Sivavakkiyar adopted the language of the common man and wanted to appeal to him while Kannudaiya Vallalar has written for the cultivated reader. That explains the real difference between them.

Whatever that may be, Olivilodukkam is a highly intellectual poem. its verses have excellent form and are pregnant with thought and meaning. There is an introductory stanza (Paayiram), which has called forth an elaborate commentary from Ramalinga Swamigal . the poem lays greater emphasis on Jnana than Yoga, Bhakti or Karma. In a magnificent stanza that contains beautiful similes, the poet has drawn a fine picture of the joy of the soul that has divested  itself of Avidya or ignorance and seen light. He does not believe in idol worship and condemns false ascetics. That the ultimate condition of bliss which a Vedantin or Sidhdhantin enjoys is one and the same is pointed out by this philosopher. He pays a glowing tribute to Pattinathar and Bhadragiriyar and holds them up as the highest examples of renunciation. Those who have attained the supreme spiritual state, form a class of supermen by themselves. They have neither name nor caste nor religion; they are merely embodied souls. The mystic and philosophical teachings of this poem which are enshrined in splendid poetry unmistakably  gives the author a high place among the Tamil Sidhdars in the general sense of that term.

3

The Kaivalya Navaneetham of Thandavaraya Swamigal, who lived than later than the two philosophers mentioned above, is a poem that expounds pure Vedantic Advaitism. It is more well known than the other two works mentioned above. It contains nearly 300 stanzas in two sections; the first expounds philosophic principles and the second clarifies possible doubts. The poem is in the form of an exchange of views between the Guru and his Sishya. The poem is intellectual and argumentative and as such, from a purely literary point of view, it is inferior to the other two poems. Most of its verses are only pedestrian; but as a clear and lucid summary of Advaitic philosophy in simple and forcible language in readable verses, it is unrivalled and masterly. The familiar and well known arguments of the Vedantin are marshalled with cogency and insight. 

A V S Ayyar has given some verses in Tamil to illustrate his points. He has also given inscriptional evidence to find the approximate dates of the poets.

All the three poems must be given more publicity.

–subham—

Tags- Three, lesser-known, Tamil Philosophic Poets ,OZIVIL ODUKKAM , KANNUDAIYA VALLALAR;GNANAMIRTHAM , VAGEESAR;KAIVALYA NAVANEETHAM , THANDAVARAYA SWAMIGAL, ஒழிவில் ஒடுக்கம் , கண்ணுடைய வள்ளலார், ஞானாமிர்தம், வாகீசர், கைவல்ய நவநீதம், தாண்டவராய சுவாமிகள்

திருக்கோவலூர் உலகளந்த பெருமாள் கோவில்! (Post16,293)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,293

Date uploaded in London – 11 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-10-26 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

திருக்கோவலூர் உலகளந்த பெருமாள் கோவில்!

ச. நாகராஜன்

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவலூர் (திருக்கோவிலூர், திருக்கோயிலூர் என்றும் அழைக்கப்படும்) 108 வைணவ திவ்ய திருத்தலங்களுள் ஒன்றாகும்.

இத்தலம் விழுப்புரம்- காட்பாடி ரயில் பாதையில் உள்ளது.

தூவடிவின் பார்மகள் பூ மங்கையோடு

     சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற

காவடியின் கற்பகமே போல நின்று

     கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை

சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை

     செம்பொன் செய் திருவுருவம் ஆனான் தன்னை

தீவடிவின் சிவன் அயனே போல்வார்

     மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே

                       திருமங்கையாழ்வார், பெரியதிருமொழி 2-10-9

மூலவர்: திரிவிக்ரமன், உலகளந்த பெருமாள் – திருவடியை உயரத் தூக்கிய நிலையில் நின்ற திருக்கோலம். மூலவர் தாரு மரத்தால் ஆனவர்.

உற்சவர்: ஆயனார் கோவலன் (கோபாலன்)

தாயார்: பூங்கோவல் நாச்சியார்

தல விருட்சம்: புன்னை மரம்

தீர்த்தம்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், சக்ர தீர்த்தம்

விமானம்: ஶ்ரீகர விமானம்

மூலவர் வலக்கையில் சங்கும் இடது கையில் சக்ரமுமாகக் காட்சியளிப்பதோடு வலது காலால் பூமியை அளந்தவாறு நிற்கிறார்.

இந்தத் தலத்தைப் பற்றிய பழம்பெரும் புராண வரலாறு ஒன்று உண்டு.

திருமால் திரிவிக்ரம அவதாரம் எடுத்த போது பூமியை அளந்த அவரது திருவடியை பூமாதேவி பூஜித்துப் பெருமையுற்றாள்.

விண்ணோக்கி சத்யலோகம் சென்ற திருவடியை பிரம்மா பூஜித்துப் பெருமையுற்றார். தமது கமண்டல நீரால் பிரம்மா திருமாலின் திருவடியை பூஜித்த போது திருவடியில் பட்டுச் சிதறிய நீர்த் துளிகளே கங்கை, கிருஷ்ணா, பத்ரா, சிலம்பாறு உள்ளிட்ட நதிகளாயின என்று புராணங்கள் கூறுகின்றன.

தனது மூன்றாவது திருவடியால் மாவலியை பாதாளத்தில் புகுத்தி அங்கும் பெருமாள் காட்சியளித்தார்.

அதே அவதாரத்தை இந்தத் திருத்தலத்திலும் காட்டி அருளியதால் இந்தத் திருத்தலம் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.

இது வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் மிக முக்கியமான க்ஷேத்திரமாக விளங்குகிறது.

இங்கு பெருமாள் வழக்கத்திற்கு மாறாக வலது கரத்தில் சங்கையும் இடது கையில் சக்கரத்தையும் கொண்டு காட்சி தருகிறார்.

பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றாகவும் இது அமைகிறது.

இங்கு கர்பக்ருஹத்திலேயே விஷ்ணு துர்க்கை எழுந்தருளியிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

இது தான் திவ்யபிரபந்தம் விளைந்த விளை நிலமாகும்.

திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும் இது.

இங்கு ஓடுகின்ற பெண்ணையாறே கிருஷ்ணா பத்ரா நதியாகும்.

வேணுகோபாலர் க்ஷேத்ர பாலக வேடத்தில் இருக்கிறார்.

பிரகாரத்தில் வேணுகோபால், லட்சுமி நாராயணர், லட்சுமி ராகவர், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆஞ்சநேயர், ஆண்டாள், சுக்ராசாரியார் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.

மிக உயரமான கோபுரத்தைக் கொண்டுள்ள தலங்களில் இதுவும் ஒன்று. 11 அடுக்குகளைக் கொண்டதாய் 192 அடி உயரமுள்ளதாய் விளங்குகிறது இங்குள்ள கோபுரம். ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த்க் கோவிலில் மூலவரின் பின்னால் வாமனமூர்த்தி இருந்து அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் தான் முதல் மூன்று அந்தாதிகள் தோன்றின.

ஒரு சமயம் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களும் இந்த ஊரில் ஒருவரை ஒருவர் அறியாமல் தனியே சஞ்சரித்து வந்தனர். ஒரு நாளில் பெரும் மழை பொழியவே இரவு நேரத்தில் மூவரும் ஒரு வீட்டின் இடைகழியில் வந்து தங்கினர். அப்போது ‘ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்’ என்ற அளவில் அந்த இடம் அமைந்திருக்க  நான்காவதாக அங்கு வந்த பெருமாள் அவர்களுடன் சேர இட நெருக்கடி ஏற்பட்டது.

இப்படி நெருக்கம் ஏன் ஏற்பட்டது என்பது மூவருக்கும் விளங்கவில்லை.

ஆகவே பொய்கையார் பூமியை அகல் விளக்காக்கி கடல் நீரை நெய்யாக்கி சூரியனை விளக்காக ஏற்றினார். முதல் பாடல் இப்படி மலர்ந்தது:

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று.

அடுத்து பூதத்தாழ்வார் அன்பாகிய அகல் விளக்கில் ஆர்வத்தையே நெய்யாக்கி சிந்தை என்னும் திரி கொண்டு ஞான விளக்கை ஏற்றினார். இரண்டாவது பாடல் மலர்ந்தது இப்படி:

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புறு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்.

இருள் நீங்க இறைவனின் திருக்காட்சியைக் காண முடிந்தது.

பேயாழ்வார் இறைவனின் வடிவழகைக் கண்டு மகிழ்ந்தார்.

உடனே அவரது பாடல் மலர்ந்தது:

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று.

இங்கு பொய்கையாரின் பாசுரங்கள் முதல் திருவந்தாதியாகவும், பூததாழ்வாரின் பாசுரங்கள் இரண்டாம் திருவந்தாதியாகவும், பேயாழ்வாரின் பாசுரங்கள் மூன்றாம் திருவந்தாதியாகவும் மலர்ந்தன.

இந்தப் பாசுரங்களில் இறைவன் இங்கு இப்படி காட்சி அளித்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆண்டு முழுவதும் ஏராளமான திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.

பக்தர்கள் திரளாகக் கூடி அருள் பெறும் முக்கிய திவ்ய திருத்தலமாக திருக்கோயிலூர் அமைகிறது.

**

கம்ப ராமாயணப் பாடல்களில் 40 கேள்விகள் (Post.16,292)

Written by London Swaminathan

Post No. 16,292

Date uploaded in London – 10 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இதற்கு முன்னர் வெளியிட்ட 30 கேள்விகள் கடைசியில் உள்ளன ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

31

விசுவாமித்திர முனிவன் அதி பயங்கர கோபத்துடன் எக்காளச் சிரிப்பு சிரித்து வெளியேற எத்தனித்தபோது , வசிட்ட மாமுனிவன் ப்ளீஸ் வெயிட், ப்ளீஸ் பி பேஷண்ட் PLEASE WAIT, PLEASE BE PATIENT என்று சொல்லி தசரதனுக்கு என்ன சொன்னான் ?

32

நீ தேரோட்டி மகன் ; க்ஷத்ரியர்கள் போட்டியில் நீ இடம்பெற முடியாது என்று கர்ணனிடம் சொன்னபோது, உடனே அவனை இன்று முதல் அங்க நாட்டுக்கு மன்னன் என்று டிக்ளேர் DECLARATION  செய்து பிளாஷ் நியூஸ் FLASH NEWS வெளியிட்டான் துரியோதனன் ; அந்த அங்க நாட்டுக்கு ஏன் அங்கம் என்று பெயர் வந்ததாகக் கம்பன் செப்புகிறான் ?

33

ராம லெட்சுமணர்களுக்கு பலா , அபலா என்ற இரண்டு மந்திரங்களை விச்வாமித்ரன் அளித்தானே ; அவைகளின் பொருள் என்ன? காளிதாசன் இது பற்றி விளம்பியது என்ன ?

34

தாடகை என்னும் அரக்கியை கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான் ?

35

ராமனைப் பார்த்த ஆண்களுக்கு, தாங்கள் பெண்களாகப் பிறந்து இவரை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை எழுமாமே! கம்பனின் அதீதக் கற்பனை வரும் பாடல் எது ?

36

இந்தியாவில் எரிமலைகள் /VOLCANOES  கிடையாது ; ஆயினும் தாடகையை கம்பன் வால்க்கேனோ – எரிமலை என்று வருணிக்கும் வியப்பான இடம் எது?

37

தமிழ்க்கடல் தந்த அகத்தியனை கம்பன் எப்படி அறிமுகப்படுத்துகிறான் ?

38

செவிடன் காதில் ஊதிய சங்கு போல என்று தமிழ்ப்பழமொழி உண்டு; ஆனால் கம்பன், தீயவர் காதில் போட்ட சொற்கள் ஒரு காதில் சென்று மனத்தில் தங்காமல் மறு காது வழியாகப் போய் விடும் என்ற உவமையைப் பொருத்தமாகப் பயன்படுத்துவது எங்கே?

39

கம்பன், ராமாயணம் இயற்றும் காலையில், அவருக்கு பேருதவி புரிந்தவர் சடையப்ப வள்ளல் என்னும் பெருந்தகை ஆவார்; அவரை அவ்வப்போது கம்பன் புகழ்ந்து நன்றிக் கடன் செலுத்துவான்; அவ்வாறு முதல்முதலில் புகழும் பாடல் எது ?

40

ஒருவன் செய்த நற்பயன்/ கல்வி அனைத்தும் மறுபிறப்பில் (ஏழு பிறப்புக்கும்) வரும் என்று வள்ளுவன் சொன்னதைக் கம்பன் எப்படிப் பாட்டில் வடிக்கிறான் ?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடைகள்

31.கறுத்த மா முனி கருத்தை உன்னி. ‘நீ

பொறுத்தி’ என்று அவற் புகன்று. ‘நின் மகற்கு

உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்

மறுத்தியோ?’ எனா வசிட்டன் கூறினான்.

கறுத்த   மாமுனி   –   சீற்றம்  கொண்டெழுந்த   விசுவாமித்திர

முனிவனது;  கருத்தை  உன்னி  –  உள்ளக்  கருத்தை   நினைத்துத்

தேர்ந்து  (அவனை  நோக்கி); நீ பொறுத்தி என்று  அவன்புகன்று –

நீ பொறத்தருள்வாயாக  என   அவனுக்குச்   சொல்லிவிட்டு    (பிறகு

மன்னனைப் பார்த்து); நின் மகற்கு – உனது மகனாகிய  ராமபிரானுக்கு;

உறுத்தல் ஆகலா உறுதி – அடைவித்தற்கு அரிய நன்மைகளெல்லாம்;

எய்தும் நாள் மறுத்தியோ  –  வந்து  கூடும் நாளை  வேண்டாமென

மறுத்துக்  கூறுவாயோ; எனா வசிட்டன் கூறினான் –  என்று வசிட்ட

முனிவன் கூறலானான்.

***

32.‘வாரணத்து உரிவையான் மதனனைச்   சினவு நாள்.

ஈரம் அற்றும் அங்கம் இங்கு உகுதலால். இவண் எலாம்.

ஆரணத்து உறையுளாய்! அங்க நாடு; இதுவும். அக்

காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே.

ஆரணத்து   உறை யுளாய்   –  வேதங்களை  வாழும் இடமாக

உடையவனே;  வாரணத்து   உரிவையான்  –  யானைத்  தோலைப்

போர்த்தவனாகிய  சிவபிரான்; மதனனைச் சினவு நான்- மன்மதனைக்

கோபித்த  நாளில்;  ஈரம்  அற்று  அங்கம்  இங்கு உகுதலால்  –

பசையற்றுப்    போய்    அவனது    சிதைந்த  உடல்  இங்குச் சிதறி

வீழ்ந்ததால்;  இவணெலாம்  அங்கநாடு – இந்த இடமெல்லாம் அங்க

நாடு  என  அழைக்கப்படும்  இடமாகும்; இதுவும்  அக் காரணக்குறி

உடைகாமன்  ஆச்சிரமமே – இந்த இடமும். அந்தக்காரணக் குறியை

உடைய காமன் ஆச்சிரமம் என்று சொல்லப்படுவதாகும்.

வாரணம்:  யானை.  ஆரணம்:   வேதம்.  அங்கம் =Body: உடல் (உடம்பு). மன்மதன் எரிந்து

உடலற்றுப்போனதால் அவன் அநங்கன் ( NO BODY; BODY LESS) ஆனான்.

 ANGA COUNTRY= BIHAR+ PART OF NEPAL

***

33.நோக்கினன் அவன் முகம்; நோக்க. நோக்குடைக்

கோக் குமரரும் அடி குறுக. நான்முகன்

ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி

ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார்.

 (விசுவாமித்திர  முனிவன்)  அந்த அரசகுமரர்களுடைய  முகங்களைப் பார்த்தான்;

அவ்வாறு   பார்க்கவே.  அவ்வரச   குமாரர்களும்;  முனிவரின்

பாதங்களை வணங்க; பிரம்ம தேவனால் தனக்களிக்கப்பட்ட இரண்டு அரிய

வித்தைகளை;  அப்பார்வையின்  வழியே அவர்கள் மனத்தில் பதியுமாறு ஊக்குவித்தான்; 

அவைகளை  அக்குமரர் தமது உள்ளத்தில் நினைத்தனர்.

நோக்கின் வழி ஊக்கினன் என்பது நயன தீட்சை எனப்படும்.

நான்  முகன்  ஆக்கிய   விஞ்சைகள்  இரண்டு. பலை அதிபலை என்ற

மந்திரங்களாகும் (விஞ்சை:  வித்தை.  ஊக்குதல்: செலுத்துதல்.)

இவைகள் களைப்பினைப் போக்கும் ; தன்னுடைய தாயின் அரவணைப்பில் செல்லும் நினைப்பினை உண்டாக்கும்; உலககப் புகழ்பெற்ற காளிதாசன்தான் இதனை விளக்குகிறான் :

तौ बलातिबलयोः प्रभावतो

विद्ययोः पथि मुनिप्रदिष्टयोः।

मम्लतुर्न मणिकुट्टिमोचितौ

मातृपार्श्वपरिवर्तिनाविव॥ ११-९

tau balātibalayoḥ prabhāvato

vidyayoḥ pathi munipradiṣṭayoḥ |

mamlaturna maṇikuṭṭimocitau

mātṛpārśvaparivartināviva || 11-9) RAGHUVAMSAM

பொருள் – கற்கள் நிரம்பிய கடினமான பாதையில் சென்ற இருவர்க்கும் பலா, அதி பலா என்ற இரண்டு வேத மந்திரங்களும் களைப்பினை நீக்கின; தாயாருடன் செல்வது போன்ற எண்ணத்தை உண்டாக்கின. ரகுவம்சம் [11-9]

***

34.‘பெரு வரை இரண்டொடும். பிறந்த நஞ்சொடும்.

உரும் உறழ் முழக்கொடும். ஊழித் தீயொடும்.

இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம்எனின்.

வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே:

 பெரியமலைகள்  இரண்டுடனும்; தன்னிடம் தோன்றிய  நஞ்சுடனும்;

இடிக்கு ஒப்பான முழக்கத்துடனும்; –   ஊழிக்  காலத்துப்  பெரு  நெருப்புடனும்; 

இரண்டு  பிறைச்  சந்திரர்கள் சேர்ந்து; எழுகின்ற கடல் ஒன்று உண்டென்றால் அது;

யாவரும் அஞ்சத்தக்க தோற்றத்தை உடைய அவளது உடலை ஒத்ததாகும்.

பெருவரை:  பெரியமலை. கொங்கைகள் இரண்டும் மலைகள் கண்கள்

இரண்டும்.   நஞ்சு:   பெருங்குரல்.   இடிமுழக்கம்.  கூந்தல்:  ஊழித்தீ.

கோரைப்பற்கள். 

***

35.‘சூடக அரவு உறழ் சூலக் கையினள்;

காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.

ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-

‘’தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே;

ஆடவர்   கண்ணில்  காண்பரேல்  பெண்மையை   அவாவும்

தோளினாய் – ஆண்களும்    உன்னைக்     காண்பாராயின்

பெண்தன்மையை   விரும்பத்  தகுந்த தோளாற்றலுடையவனே; 

கையணியாகப்  பாம்புகளை உடையவள்  சூலம்  உடையவள்;  

இவ்வனத்தில்  வாழும்  வாழ்க்கை  உடையவள்; 

இத்தகைய  இக்கொடியவளது (சழக்கி)  பெயர்  தாடகை என்பதாம்.

ராமனது தோளாற்றல்  கண்ட  ஆண்களும். பெண்மையை அவாவுவர்  என்றார்.

அவாவுதல்: விரும்புதல். சழக்கி: கொடியவள்.

****

36.கைவரை எனத் தகைய காளை உரை கேளா

ஐவரை அகத்திடை அடைத்த முனி ‘ஐய!

இவ் வரை இருப்பது அவள்’ என்பதனின் முன்பு ஓர்

மை வரை நெருப்பு எரிய VOLCANO வந்ததென வந்தாள்.

 துதிக்கையையுடைய மலையை ஒத்ததான    யானை    போன்றவனும்,   காளையை  ஒத்தவனுமாகிய

இராமன்; உரையைக்  கேட்டு;     இந்திரியங்கள்    ஐந்தினையும்  மனத்தில்

அடக்கியமுனிவன்; இராம! அந்தத் தாடகை இருப்பது இந்த  மலைதான்;

என்று சுட்டிப் காட்டுவதற்கு  முன்பாக;   

ஒரு கரியமலை உச்சியில்  நெருப்பு  எரிந்து  கொண்டிருக்க VOLCANO;

எதிரில்  வந்தது போலத் தாடகை எதிரே வந்தாள்.

‘ஓர்  மைவரை  நெருப்பு   எரிய  = எரிமலை = VOLCANO

***    

37.‘தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்

உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து

“அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே

இழிக!” என உரைத்தனன் அசனி எஞ்சவே.

தமிழ் என்னும் கடல் போன்ற மொழியைத் தந்தவன் என்றும் கடலைக்குடித்த முத்தமிழ் முனிவன் அகத்தியன் என்றும் பொருள் சொல்லலாம் ;

அவருடைய வனத்திலுள்ள மான்களைத் தின்ற பெண்ணை அரக்கியாகுக என்று அவர் சாபம் இட்டதை இப்பாடல் இயம்புகிறது .

****

38.சொல் ஒக்கும் கடிய வேகச்  சுடு சரம் கரிய செம்மல்

அல் ஒக்கும் நிறத்தினாள்மேல்   விடுதலும் வயிரக் குன்றக்

கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது   அப்புறம் கழன்று கல்லாப்

புல்லார்க்கு நல்லோர் சொன்ன   பொருள் என போயிற்று அன்றே!

மந்திரம் ஓதும் ரிஷிகளின் சாபச்   சொற்களை  ஒத்த  கடிய வேகமுடைய ஒரு ஒரு அம்பினை  கரிய நிறமும்,

அழகும்   உடைய   இராமபிரான்,  இருள்  போன்ற  நிறத்தை உடைய தாடகையின் மீது  செலுத்தி  விடவே;   (அந்த  அம்பு)  வைரம் பாய்ந்த கல்போன்ற

அத்தாடகையின்    நெஞ்சில்   தங்கியிராமல்;  (நெஞ்சில்  பாய்ந்து)   பின் முதுகின்    புறமாகக்    கழன்று; கல்வி அறிவில்லா புன்மையாளருக்கு    நல்லவர்கள்   சொன்ன   நல்ல பொருளைப் போல  ஓடிப்போய்விட்டது!

 தாடகையின்   முதுகுப்புறம்  ராமனது    அம்பு விரைந்து சென்றது என்ற உவமை நயம் உணரத்தக்கது.

***

தாடகையை வீழ்த்தியதற்காக தேவர்கள் ராம பிரானை வாழ்த்தினர் .

39.விண்ணவர் போய பின்றை   விரிந்த பூமழையினாலே

தண்ணெனும் கானம் நிங்கி   தாங்க அருந் தவத்தின் மிக்கோன்

மண்ணவர் வறுமை நோய்க்கு  மருந்து அன சடையன் வெண்ணெய்

அண்ணல்தன் சொல்லே அன்ன  படைக்கலம் அருளினானே.

தேவர்கள் வாழ்த்திச் சென்ற  பிறகு; தேவர்கள்  பொழிந்த  விரிந்த  மலர்

மாரியாலே; ‘குளிர்ந்த அந்தக் கானத்தை விட்டகன்று; தாங்குதற்கரிய

தவம்  மிகுந்த விசுவாமித்திர முனிவன்; – உலகத்தவரின் ‘வறுமை’ என்னும் நோய்க்கு; 

மருந்தைப்போன்றதான   சடையப்ப வள்ளலாகிய  திருவெண்ணெய்  நல்லூர்  அண்ணலுடைய; 

சொல்லையே  போன்றதாகிய படைக்கலங்களை இராம. இலக்குவர்களுக்கு ஈந்து அருளினான்.

***

40.ஆறிய அறிவன் கூறி   அளித்தலும். அண்ணல்தன்பால்.

ஊறிய உவகையோடும்   உம்பர்தம் படைகள் எல்லாம்.

தேறிய மனத்தான் செய்த   நல்வினைப் பயன்கள் எல்லாம்

மாறிய பிறப்பில் தேடி  வருவபோல் வந்த அன்றே.

ஆறிய அறிவன் கூறி அளித்தலும்-துயர்தீரப்பெற்ற  அறிவனாகிய

முனிவன்  உரிய  மந்திரங்களைக் கூறி ஈந்ததும்; உம்பர்தம் படைகள்

எல்லாம் –   தெய்வத்தன்மை   உடைய  அப்படைக்கலன்களெல்லாம்;

தேறிய மனத்தான்  செய்த  –  தெளிந்த  மனம் உடையவன் முன்பு

செய்த;  நல்வினைப்   பயன்கள்  எல்லாம்  –  நல்வினைப்  பயன்

அனைத்தும்; மாறிய பிறப்பில்  தேடிவருவ  போல்  – மாறி எடுத்த

அடுத்த  பிறவியிலும்   செய்தவனைத்   தேடிவந்து  அடைவது போல;

ஊறிய உவகை  யோடும்  – ஊற்றம் மிக்க களிப்போடும்; அண்ணல்

தன்பால் வந்த – பெருமைமிகுந்த ராமபிரானிடம் வந்து சேர்ந்தன.

****************************************************************

இதற்கு முன்னர் வெளியிட்ட 30 கேள்விகள் ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்

1

அஞ்சிலே ஒன்று பெற்றான் — என்னும் அருமையான கம்பன் பாடலின் பொருள் என்ன?

2

ராம என்ற இரண்டே எழுத்துக்கள் தரும் அற்புதப்  பலன்கள்  பற்றி  கம்ப இராமாயண சிறப்புப் பாயிரத்தில் ஒரு பாடல் உள்ளது. நினைவுக்கு வருகிறதா அந்தப்பாடல்?

3

எந்த ஒரு நூலினையும் மங்களச் சொற்களுடன் துவங்க வேண்டும் என்ற விதி சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளது ; கம்பன், தனது ராமாயணத்தை, எந்தச் சொல்லுடன் துவங்குகிறான்?

4

கம்பனும் காளிதாசனும் என்ன சொல்லி நூலை எழுதத் துவங்கினார்கள் ?

5

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் ; போங்கடா போங்க! நான் சொல்வது தெய்வ மாக்கவி எழுதிய கவிதை என்று கம்பன் செப்பியது எங்கே ?

6

வால்மீகியைத் தவிர வேறு இருவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதினார்கள் என்று கம்பன் ஒரு புதிர் போடுகிறானே ! அந்தப் புதிருக்கு விடை கிடைத்ததா?

7

தெய்வ மாக்கவி, முதலில் ராமாயணம் சொன்னவர் என்றெல்லாம் வான்மீகி முனிவரைப் போற்றிய கம்பன் அவருடைய பெயரை எங்கேயாவது பகர்ந்தானா?

8

கம்பன் சர்வ சமய நோக்குள்ளவன்; சைவ, வைணவ பேதம் பாராட்டாதவன் ; முடிந்த அளவுக்கு சிவன் பெருமையை அவன் பாடுகிறான் ; சரயு நதிப் பாடலில் சிவனை அவன் எப்படிப் புகழ்கிறான்?

9

ஆகாசாத் பதிகம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதி கச்சதி – என்று பிராமணர்கள் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தன மந்திரத்தில் சொல்கிறார்கள் ; இதைக் கம்பனும் சொல்லி, சர்வசமய பொதுநோக்கினைக் காட்டும் பாடல் எது?

10

கம்பன் போகிற போக்கில் Music மியூசிக் பற்றி ஒரு அருமையான உவமை சொல்கிறான் ; இந்தப்பாடலின் பொருள் விளங்குகிறதா?

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,

பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,

விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.

***

11

கம்பன் சொல்லும் அதிசய மூலிகைகள் எவை ?

12

தூக்கணாங் குருவிகள்தான் மனிதனுக்கு வீட்டில் விளக்கு ஏற்றுவதைச் சொல்லிக் கொடுத்தன; அவை மின்மினிப் பூச்சிகளை பிடித்துக் கொண்டு போய் கூட்டில் வைத்து அழகு பார்க்கும்; இதைத் தற்கால தீபாவளி, நவராத்ரி, கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்களுடன் DECORATIONS ஒப்பிடலாம் ; இந்த அதிசயத்தைக் கம்பன் எங்கே குறிப்பிடுகிறான் ?

13

கோசல நாட்டுப் பெண்கள் நல்ல படித்த பணக்கார பெண்களாம்; ஆயினும் அவர்கள் ஆபீசுக்குப் போகாமல் வந்த விருத்தினர்களைக் கவனிப்பதே வேலையாகச் செய்தார்களாம்   ; கம்பனின் இந்த கற்பனை வளத்தை எங்கே காணலாம்?

14

வாலிபால் என்னும் விளையாட்டினைக் கண்டு பிடித்தவர்கள் தமிழ்ப் பெண்கள்தான் ! பிற்காலத்தில் பூப்பந்தாட்டம் துவங்குவதற்கு அவர்களே காரணம் ; இதைச் சங்க இலக்கியப்பாடல்களில் காண்கிறோம்; கம்பன் அவர்கள் தினசரி ட்ரெயினிங் எடுத்தத்தைச் சொல்கிறானே ! அது என்ன பாடல்?

15

தாலி பற்றி அடிக்கடி தாலி அறுக்க விரும்பும் பெண்கள் கட்டுரைகளை எழுதி அவர்களின் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்ப் THOUSAND WATT BULB போட்டு காட்டுவதை  அவ்வப்போது படிக்கிறோம்; ஆனால் மு.சண்முகம் பிள்ளை , கம்பனும் மில்டனும் நூல் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் எஸ் ஆர் கே ஆகியோர் தாலி உண்டு என்று இலக்கியக் குறிப்புகளைக் காட்டினார்கள் !கம்பனும் தாலி உண்டு என்கிறான் ! அது எங்கே?

16

பட்டி மண்டபம் இன்று பட்டி மன்றமாகிவிட்டது ; பட்டி விக்ரமாதித்யன் என்ற மாபெரும் மன்னனும் அறிஞனும் உண்டாக்கிய விவாத சபை இது ! மாணிக்க வாசகரும் ஒன்றும் அறியாத என்னை பட்டி மண்டபம் ஏற்றினையே என்கிறார் ; ஏனெனில் அவரை புத்தர்களுடன் வாதிடும்படி சிதம்பரம் தீட்சிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர் ; அயோத்தியில் பல MANY HALLS ஹால்கள்;உண்டாம்; அதில் ஒன்று அறிஞர்கள் மோதும் பட்டி மண்டபம் என்கிறானே கம்பன் ; அதைச் செப்பிய இடம் யாதோ!

17

யுவான் சுவாங் என்னும் சீன யாத்ரீகன் அப்பர், மஹேந்திர பல்லவன் காலத்தில் வந்தான் ; அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் குப்தர் காலத்தில் வந்த சீன யாத்ரீகன் பாஹியான்– குப்தர் காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை; அந்த நாட்டில் திருடர்கள் இல்லை என்றான்; கம்பன் கண்ட அயோத்தியின் நிலை என்ன?

18

முதல் முதலாக கம்பன் ராவணனை அறிமுகப்படுத்தும் இடம்– தேவர்கள் அவன் செய்த அட்டூழியங்களை முறையிட்ட இடம் –ஆகும் . வால்மீகியில் இல்லாத அவதார விஷயத்தைக் கம்பன் இங்கே செப்பினானா ?

19

கம்பன் கருத்துப்படி வானரங்கள் – குரங்குப்படை யார் ?

20

துளசிதாஸ் எழுதிய ஹனுமான் சாலீஸாவில் அனுமன், சிவ பெருமானின் அவதாரம் என்கிறார் ; கம்பன் என்ன சொன்னான் ?

21

விஷ்ணு ராமனாகவும், சிவன் அனுமனாகவும் தேவர்கள் வானரங்களாகவும் அவதரித்ததாகக் கம்பன் சொன்னதைப் பாடல்களில் கண்டோம்; வாலி, சுக்ரீவன் யார் அவதாரம் ?

22

ரிஷ்யஸ்ருங்க முனிவரின் தமிழ்ப் பெயர்  கலைக்கோட்டு முனிவர் (கலை-மான்); அவரை கம்பன் எப்படிப் புகழ்கிறான் ?

23

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை — என்று மூதுரை நூலில் தமிழ் மூதாட்டி ஔவையார்  பாடியுள்ளார்.ரிஷ்ய ச்ருங்க முனிவர் நகருக்குள் நுழைந்தவுடன் என்ன நடந்தது ?

24

சோழர்கள் ஒரிஜினல் தமிழர்கள் அல்ல என்று புறநானூற்றுப் புலவர்களும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் குறிப்பால் உணர்த்துகின்றார்கள்.வடமேற்கு இந்தியாவை ஆண்ட சிபி என்னும் சூரியகுல மன்னன் அவர்களின் முன்னோன் ; கம்பன் செப்புவது என்ன ?

25

கலைக்கோட்டு முனிவன் தசரதனுக்காக புத்ர காமேஷ்டி யாகம் செய்தவுடன் அக்கினி குண்டத்திலிருந்து வந்த தேவன், பாயசம் ஏந்திய கலத்தைக் கொண்டுவந்தான் என்று வால்மீகி கூறுகிறார்; கம்பன் வேறு கதை சொல்கிறானே!

26

சுமித்திரைக்கு மாட்டும் இரட்டைப்பிள்ளைகள்  பிறந்தது ஏன் என்று கம்பன் காட்டுகிறான்?

27

கம்பன் சொல்லும் ஜாதகக் குறிப்புகள் என்ன ? ராமன் , லெட்சுமணன் நட்சத்திரங்கள்- ராசிகள் என்ன ?

28

வள்ளுவர் பற்றிக் கம்பன் புகல்வது யாது?

29

ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு என்று விச்வாமித்ர முனிவன் சொன்னவுடன் தசரதன் அவனைவிட்டுவிடு, நானே வருகிறேன், என்று சொல்லி எப்படித்துடித்தான் ?

30

விசுவாமித்திர முனிவரின் கோபத்தையும் எக்காளச் சிரிப்பையும் கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான்?

–subham—

Tags- கம்ப ராமாயணம், பாடல்கள்,40 கேள்விகள்

பாணினியும் சங்கப் புலவர் கபிலரும் சொல்லும் அதிசய வரலாற்றுச் செய்திகள் ! (Post.16,291)

Written by London Swaminathan

Post No. 16,291

Date uploaded in London – 10 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English Part is at the end of this article

கிருஷ்ண பரமாத்மாவும் ராமனும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் , அதாவது 100 ஆண்டு வித்தியாசத்தில் இருந்தவர்கள்– என்று ஆர் மார்ட்டன் ஸ்மித் எழுதிய புஸ்தகத்தை மீண்டும் படித்தவுடன் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

DATES AND DYNASTIES IN EARLIEST INDIA by R.MORTON SMITH, TORONTO, CANADA, 1973

சங்க காலப் புலவர் கபிலர் புறநானூற்றுப் பாடலில் 49 தலை முறைகள் தனக்குத் தெரியும் என்று பாடினார். அவருக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உலகப்புகழ்பெற்ற, உலகத்தின் முதல் இலக்கண நூலினை வியக்கவைக்கும் முறையில் எழுதிய, பாணினி 21 தலைமுறை 53 தலை முறை பற்றிப் பேசினான் . அதற்கு முன்னர் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் வெறுமனே எண்களை மட்டும் சொல்லாமல் உண்மையிலேயே இருந்த 57 குருமார்களின் பெயர்களையும் வரிசைக்கிரமத்தில் சொல்லிவிட்டது . இன்றும் காஞ்சி,  சிருங்கேரி மடங்களின் சங்கராசார்யர்களைச் சொல்லும் போது இவர் இத்தனையாவது பட்டம் என்று சொல்லி அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காண்கிறோம் .

***

புறநானூற்றுப் பாடல்

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன் : இருங்கோவேள்.

(பாரி மகளிரை அழைத்துக் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.)

`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்: இவர்என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,
உவரா ஈகைத், துவரை ஆண்டு,
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்!
யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்,
கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே!

இருங்கோவேள் என்ற சிற்றரசனைப்பாடிய கபிலர், “நான் பிராமணன் சொல்கிறேன் ; உன்னுடைய 49 தலைமுறைகளை எனக்குத் தெரியும்” என்று அவனைப் புகழ்கிறார் ; அதுமட்டு மல்லாமல் ஜாதி வெறியை உடைத்துப் புரட்சியும் செய்தார் ; க்ஷத்ரியனான பாரியின் மகள் இருவரையும் தன்னுடைய மகள்கள் என்றும் அறிவிக்கிறார் . சுமார் 50 தலைமுறைகளுக்கு , உலகம் ஒப்புக்கொண்ட சராசரி மன்னன் ஆட்சி ஆண்டான 25 ஆண்டுகள் என்பதை ஒப்புக்கொண்டாலும் அவருக்கு முன்னர் 1250 ஆண்டு வரலாற்றினை அவர் கூறினார் ; அதாவது இற்றைக்கு 3250 ஆண்டுகளுக்கு முன்னர் துவரை என்னும் துவாரகாவை ஆண்ட மன்னன் வழிவந்தவர் . மேலும் யாகத்தீயில் மன்னர்கள் தோன்றிய.  மஹாபாரதக் கதைகளையும் நினைவு படுத்துகிறார்; கபிலரைத் தோற்கடிக்கும் முறையில் பாணினி எழுதிய அஷ்டாத்யாயி நூலில் , பாணினிசூத்திரம் 2-1-19 க்கு உதாரணம் காட்டுகையில் சங்க்யா வம்சேன என்பதற்கு, ஏகவிம்சதி பாரத்வாஜம், த்ரி பஞ்சாசத் கெளதமம் என்கிறார் . இதன் பொருள் வம்ச பரம்பரையைக் கூறுகையில் 21 ஆவது தலைமுறை, 53 ஆவது தலைமுறை என்று கூறலாம் என்பதாகும் . அதற்கும் முந்தைய பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் 57 தலைமுறை  குருமார்களின் பெயர்களையே சொல்லி உலகையே வியப்பில் ஆழ்த்திவிடுகின்றனர். (அவர்கள் பெயர்களை முன்னொரு கட்டுரையில் எழுதியுள்ளேன்). ஆகவே கபிலரும் பாணினியும் சொன்னது வெறும் எண்கள் அல்ல .

***

பேராசிரியர் ஆர். மார்ட்டன் ஸ்மித், 38 ஆண்டுகளுக்கு சம்ஸ்க்ருதம் பயின்றவர். ஆக்ஸ்போர்ட், கனடாவிலுள்ள டொராண்டோ பல்கலைக் கழகங்களில் பணியாற்றியவர்; இந்துமத நூல்கள் குறித்துப் பல புஸ்தகங்களை எழுதியுள்ளார் . அவர் சொல்லும் வினோத விஷயங்களை நாம் அப்படியே நம்ப வேண்டிய அவசியமில்லை . ஆனால் அவர் கொடுத்த பட்டியல் மிகவும் வியப்பானது! புராணங்களிலிருந்து எடுத்த சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார் .அவர் 40, 50 தலைமுறை யாதவ மன்னர்களின் பெயர்களை கி மு 1800 ஆம் ஆண்டிலிருந்து தருகிறார்;  நான்கு தசரத மன்னர்கள், ஆறு ஜனமேஜர்கள் , 3 கிருஷ்ணர், பல வசிஷ்டர், பல விச்வாமித்திரர்களையும் பட்டியலிட்டுள்ளார் . இதனாலதான் அவர் குறிப்பிடும் தேதிகளில் சந்தேகம் எழுகிறது ; ராமாயணத்துக்கும் மஹாபாரதப்போருக்கும் இடைவெளி நூறு ஆண்டுகள்தான் என்கிறார்! நேற்று எழுதிய ஆங்கிலக்  கட்டுரையில் நீண்ட பட்டியல் கொடுத்துள்ளேன்; இங்கு சுருக்கமாகத் தருகிறேன். அவருடைய தேதிகளிலேயே நாம் முரண்பாட்டினையும் காணலாம். ராமனுக்கு வேறு தேதி; அகஸ்தியருக்கும்  ராவணனுக்கும் 200 ஆண்டுகள் முந்திய தேதியைக் கொடுத்துள்ளார் !!

***

தமிழில் மிகவும் புகழ்பெற்ற பாஷ்யக்காரர் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் ஆவார்; அந்த மதுரை நகர பாரத்வாஜ கோத்திர பார்ப்பான், நமக்கு ராவணன் – பாண்டியன் சமாதான உடன்படிக்கை, அகஸ்தியர்– தொல்காப்பியர் மோதல் , த்ருணதூமாக்கினி என்னும் பார்ப்பான்தான் தொல்காப்பியன் என்ற சுவையான செய்திகளையும் கொடுத்தார்; அந்தப் பிராமணன் ஒரு தமிழ் வெறியன் ;வேதத்திலுள்ள ஒரு ஷாகையே தமிழ் மொழிக்குப் பின்னால்தான் வந்தது என்றும் எழுதியுள்ளான். ஆனால் அந்தத் தவற்றினை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) தவறு என்பதைத் தனது உரையில் விளக்கியுள்ளார் . இப்பொழுது PROFESSOR  R. MORTON SMITH சொன்ன காலக் கணக்கினைக் காண்போம்  

ஒரு முக்கிய விஷயம்:- அவர் யயாதி என்ற மன்னற்குக் கொடுத்த தேதி சிந்து சமவெளி நாகரீகத்தை ஓரம் கட்டுகிறது! மாக்ஸ்முல்லரின் தேதிகளைக் குப்பைத் தொட்டியில் வீசி எரிகிறது! தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகஸ்தியனைக் கி.மு 1230-ல் இருந்தவன் என்கிறது ; இதனால் தமிழின் 3255 ஆண்டுப் பழமை புலனாகிறது !!!

இதோ தேதிகள் ; அனைத்தும் கி. மு. BCE ஆண்டுகள்:–

ராம தாசரதி / தசரதன் மகன் ராமன் -1060 BCE;

ராம ஜமதக்கினி /பரசுராமன் 1327;

பலராமன் – 1080 ;

ராமனும் பரசுராமனும் மோதிய செய்தி எல்லா ராமாயங்களிலும் உளது ; ஆனால் இவர் கொடுக்கும் தேதியில் பெருத்த இடைவெளி .

அர்ஜுனன் கார்த்தவீரியன் – 1375;

இவன் ராவணனை வென்று விரட்டியடித்தவன்;

ராவண அனாரண்ய – 1400;

ராவண த்ருணபிந்து- 1250;

க்ருஷ்ண அர்ஜுனை யாதவ – 1320;

கிருஷ்ண வாசுதேவ – 980;

கிருஷ்ண ஷ்யாம–1115 ; இவர்தான் மஹாபாரத கிருஷ்ணன் .

வேத வியாசர்- 1050-980;

அர்ஜுனன் பாண்டவ – 975;

Source book- DATES AND DYNASTIES IN EARLIEST INDIA by R.MORTON SMITH, TORONTO, CANADA, 1973

***

இந்தப் பெயர்களில் குழப்பம் இருந்தாலும் , இராமாயண கதாபாத்திரங்கள் மஹாபாரத கதாபாத்திரங்களுக்கு 100 ஆண்டுகளுக்கு முந்தியவர்கள்தான் என்பதாகும் .

அவரைக் குற்றம் சொல்வதற்கு முன்னர், நமது உபன்யாசகர்கள் சொல்வதையும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும் . மஹாபாரத கர்ணன், பிராமணன் போல நடித்து க்ஷத்ரியர்களின் மஹாவிரோதியான பரசுராமரிடம் பாடம் கற்றபோது, வண்டு துளைத்த தொடையில் ரத்தம் வந்தபோதும் ஆடாமல் அடங்காமல் இருந்த கர்ணனைப் பார்த்து டேய் , நீ பிராமணன் இல்லை ; பிராமணர்கள் தொடை நடுங்கிகள்; பயங் கொள்ளிகள். நீ யாரடா? என்று கேட்டதை அறிகிறோம் ; இதே போல பீமனும் அனுமனும் சந்தித்த கதைகளும் உண்டு; அவைகளைப் பார்க்கையில் மார்ட்டன் ஸ்மித் கொடுக்கும் தேதிகளில் பசை இருப்பது போலத் தோன்றுகிறது!

***

அவர் சொன்ன நான்கு தசரதர்களைத் தவிர எகிப்திலுள்ள தசரதர் கடிதங்களை அவர் சேர்க்கவில்லை ; அமர்னா கடிதங்கள் / தசரதன் , துருக்கியிலிருந்து எழுதிய கடிதங்கள்! நல்ல வேளையாக அப்படியே கியூனிபார்ம் எழுத்தில் களிமண்  கல்வெட்டுகளில் உள்ளன . வேத கால தெய்வங்களை ரிக் வேத மந்திரத்தில் உள்ள  அதே  வரிசையில் சொல்லி கைச்சாத்திட்ட உடன்படிக்கையும்  அப்படியே கியூனிபார்ம் எழுத்தில் களிமண்  கல்வெட்டுகளில் துருக்கி நாட்டில் கிடைக்கிறது ; அத்தோடு பிரதர்தனன் என்ற  சூரிய குல மன்னன் பெயரும், கிக்குலி ஸம்ஸ்க்ருதக் கட்டளைகளுடன் எழுதிய குதிரைப் பயிற்சி நூலும் நமக்கு கியூனிபோர்ம் லிபி கல்வெட்டில் கிடைத்துள்ளது ;இவையனைத்தும் மாக்ஸ்முல்லர்  செத்துப்போன (1921) பின்னர் வெளி வந்தன . மாக்ஸ் முல்லர்  உளறல்களை தவிடு பொடியாயின! கல்வெட்டு சான்றுகளை எவரும் புறக்கனிப்பதில்லை ; இவை அனைத்தும் கி.மு 1400 தேதியிடப்பட்டவை ; உலகிலுள்ள அவ்வவளவு என்சைக்ளோ பீடியாக்களிலும் போகஸ்கொய் கல்வெட்டு , அமர்னா கடிதங்கள் என்ற பெயர்களில் பதிவிடப்பட்டுவிட்டன. ஆகையால் ஆராய்ச்சியாளர்கள் இவைகளை ஆதாரமாக வைத்து, மார்ட்டன் ஸ்மித் சொன்ன வரிசையையும் கருத்தில் கொண்டு, ஆராய வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக துருக்கி நாட்டு, எகிப்திய நாட்டு சம்ஸ்க்ருத கல்வெட்டு விஷயங்களை முதலில் பாடப் புஸ்தகத்தில் சேர்க்க வேண்டும் ; அகஸ்தியர் போன்ற ரிக்வேத குறிப்புகளால் தமிழின் பெருமையும் பழமையும் உலகிற்குத் தெரியவரும்!

கீழே ஆங்கிலத்தில்:  ALL DATES ARE IN BCE:

ABHIMANYU-992 BCE

AKRURA -1110

AMBA -1110 (Princess of Kasi who cursed Bhisma)

AMBARISHA MANDHATA 1460 (Choza’s Ancestor)

ARJUNA KARTAVIRYA-1375 (Ravana was crushed by this king)

ARJUNA PANDAVA- 975 (Bhagavad Gita Fame)

BALARAMA -1110

BAGIRATHA – 1200 (Greatest Hindu Engineer who diverted River Ganga)

BHARADWAJA BARHAPASTYA – 1295 (B for Bharadwaja)

B DIVODAASA-1330 (Rid Vedic King)

BHARATA DAASARATHI -1060 (Rama’s Brother)

BHIMASENA PANDAVA-975 (Mahabharata)

BHISMA-1055(Mahabharata)

DAMAYANTI NALA 1370

DASARATHA LOMAPADA 1090 (Ramayana)

DIRGHTAMAS – 1295 (Rig Vedic Rishi)

DRAUPADI-980(Mahabharata)

DRONA BHARADVAJA 1030(Mahabharata)

DURYODHANA 980(Mahabharata)

GAADHI KAUSIKA- 1340

GALAVA VAISVAMITRA 1285

IKSVAKU MAANAVA-1840- oldest king

JAMADAGNI AARCIKA 1344

J –SUNASHEPA – 1260 (Parasurama???)

JANAKA VIDEHA 810 (Sita Devi’s Father)

JANAKA MITHILA- 1500

KAKSHIVANT- 1215

KANCANAVARMAN– 1520 (note Varman of Pallava/Pandyas)

KRSNA ARJUNI YADAVA 1310 (confusion)

KRSNA SYAMA- 1115(confusion)

KRSNA VASUDEVA- 980(confusion)

Morton Smith is not sure about which Krishna married Sathyabama, which Krishna was the driver of Arjuna’s Car)

LOPAMUDRA AGASTYA- 1240 (Tamil Saint)

MADHUCHANDAS VAISVAMITRA-1260

MATIVAJA MITANNI 1400 (Hindu King who ruled Turkey)

NAHUSA AAYAVA 1820

Pandya eponym -1160

RAMA DASARATHI 1060

RAMA JAMADAGNYA 1327-1280 (note the difference between Rama and Parasurama???)

RAVANA ANARANYA – 1400

RAVANA TRNABINDHU 1250

PRATARDANA OF KASI 131O (This name is in Mitanni King list 1400 BCE)

PURU YAYATEYA 1780

PURURUVA AILA 1860

SARASVATI ANTINARA 1540

SARMISHTA VAARSAPARVANI 1800 BCE

SATYABHAMA KRSNA-1080

SIBI AUSINARA 1345 (Purananuru Choza ancestor)

SINDHUDWIPA AMBARISHA 1410 (Indus Valley King)

SITA RAMA 1060 (Lord Rama’s wife)

xxxxxxx

Supporting Information

FROM TURKEY:

The Boğazköy Inscription (dated to roughly 1400–1380 BCE) is a cuneiform clay tablet recording a political treaty between Hittite King Suppiluliuma I and Mitanni King Shattiwaza (Matiwaza), discovered at the ancient Hittite capital of Hattusa (modern Boğazkale/Boğazköy in Turkey).

• Mitanni-Hittite Treaty: The document outlines a peace agreement and alliance between the two ancient Near Eastern kingdoms.

• Invoked Vedic Deities: As part of the treaty’s divine witnesses, four major Vedic gods are invoked: Mitra, Varuna, Indra, and the Nasatyas (the Ashvins).

• Order of Deities: The names appear in a sequence that is found in the Rig Veda according to Asko Parpola, the most famous Indus Valley Civilization Scholar.

XXXX

FROM EGYPT

The Amarna letters of Dasaratha (historically and linguistically known as Tushratta) are a vital subset of the famous Amarna Letters archive discovered in Egypt.

Dasaratha/Tushratta was the ruler of Mitanni, a powerful empire located in northern Mesopotamia (modern-day Syria and Turkey) during the 14th century BCE. Written in Akkadian cuneiform (the international diplomatic language of the Late Bronze Age), his correspondence spans 13 letters cataloged as EA 17 through EA 29. They were addressed to Pharaohs Amenhotep III, Akhenaten, and Queen Mother Tiye.

• The “Hurrian Letter” (EA 24): While twelve of his letters are written in Akkadian, EA 24 stands out as an artifact of immense linguistic importance. Comprising 494 lines written almost entirely in the Western dialect of Hurrian, it remains the longest contiguous text surviving in the Hurrian language today.

• Dynastic Marriages: A central theme in his letters is negotiating political alliances through royal marriages. In letters like EA 19 and EA 22, Dasaratha arranges for his daughter, Princess Taduhepa (sometimes equated with Queen Kiya or Nefertiti in alternative historical theories), to marry Amenhotep III.

• Demands for Gold: Egypt controlled massive gold mines in Nubia, making it the financial powerhouse of the ancient world. Dasaratha frequently pleads with the Pharaoh to send gold, famously using variants of the phrase, “May my brother send gold in very great quantity… for gold is as common as dust in my brother’s land”.

• The Traveling Goddess (EA 23): In this letter, Dasaratha mentions sending a sacred, miraculous statue of the Hurrian goddess Šauška (Ishtar) of Nineveh to Egypt. It was meant to bless and heal an aging and ill Amenhotep III.

Historians and scholars are particularly fascinated by Dasaratha’s letters because they provide absolute archaeological evidence of Vedic culture in the ancient Near East.

The ruling elite of the Mitanni empire spoke a language with clear SANSKRIT roots. The cuneiform spelling of the king’s name—Tushratta—is widely accepted by linguists as the Akkadian rendering of the Sanskrit name Dasaratha (meaning “he who has ten chariots”) or Tvesharatha (“having splendid chariots”). Other Mitanni kings mentioned in these records bear names like Artatama (Rtatama, “most righteous”) and Sutarna (Sutarna, “good sun”).

XXXX

PANINI SUTRA ABOUT 53 GENERATIONS

In Pāṇini’s Aṣṭādhyāyī, Sūtra 2.1.19 states: “संख्या वंश्येन” (saṅkhyā vaṃśyena). This rule dictates that a numeral (saṅkhyā) is compounded with a term denoting a lineage or family descendant (vaṃśya), and the resulting compound is classified as an Avyayībhāva samāsa.

The phrase “त्रिपञ्चाशत् गौतमम्” (tripancāśat gautamam) is a classic illustrative example of this specific sūtra:

• त्रिपञ्चाशत् (tripancāśat): The numeral meaning 53.

• गौतमम् (gautamam): Refers to the descendants of the sage Gautama (a lineage / vaṃśya).

***

एकविंशतिभारद्वाजम् (Ekaviṃśatibhāradvājam) is a classic example of an अव्ययीभाव समास (Avyayībhāva compound) in Paninian grammar. It is formulated under the rule संख्या वंश्येन (२-१-१९) (Sūtra 2.1.19, often numbered 2.1.18 in some recensions).

• The Sūtra: Saṅkhyā vaṃśyena (संख्या वंश्येन) states that a numeral (संख्या) compounds with a word denoting a member of a lineage/family (वंश्य), resulting in an Avyayībhāva समास.

• Lineage Types: Panini explains that a lineage (vaṃśa) can be of two types:

            1. Vidyā (Learning/Guru paramparā): e.g., Dvimuni vyākaraṇam (The grammar belonging to the two sages—Pāṇini and Kātyāyana).

            2. Janma (Birth/Family descent): This is where our example fits.

• Laukika Vigraha (Literal Meaning): Ekaviṃśatibhāradvājāḥ (एकविंशतिभरद्वाजाः), which translates to “Twenty-one generations / descendants in the lineage of Sage Bharadwaja

XXXXX

DATE OF MAHABHARATA WAR

R.Morton Smith – 1050 BCE
Srinivas Raghavan 3067 BCE
P C Sen Guptas 2449 BCE
Dr Sankalia – later than 15th century BCE
S B Roy on the basis of astronomical calculations – 1424 BCE
S B ROY in his book “Date of Mahabharata Battle” has beautifully summarised the views of scholars in this field as follows:–

D R Mankad- 3201 BCE
M M Krishnamachari – 3137 BCE
C V Vaidya – 3102 BCE
V B Athvale – 3016 BCE

XXXXX

TAMIL INSCRIPTION GIVES KALIYUGA IN DAYS!

The Parthivasekarapuram copper plate inscription (dated around 865 CE) of Ko Karunathadakkan states that 1,449,087 days of the Kali Yuga had passed.

• Parthivasekarapuram Copper Plate: Recorded in Tamil and points to the traditional commencement of the Kali Yuga around 3100–3102 BCE.

• Calculation Context: This total of 1,449,087 elapsed days corresponds historically to the mid-9th century CE dating of the record, showing that early South Indian epigraphy tracked time using exact day counts from the start of the Kali era.

XXXXX

HINDU WONDER – 57 GENERATIONS AT ONE GO! (Post No.7480)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7480

Date uploaded in London – 21 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

(List of 57 generations of Gurus is attached at the end)

Hindus are the only people in the world who use geographical and historical data in their everyday ritual. No where in the world we can see such a historical sense. While they do Pujas in the temple or at home, they begin it with Sankalp (vow) in which they refer to Manvantara, Yuga, Year, Date, Day and their location on earth. It will even beat the google map. Because they have divided the entire northern hemisphere into several ‘dwips’ (land mass), and they say where in the world they do that ritual. Let us forget all these Mantra stuff and come to the real world!

Foreign ‘scholars’ who have no faith in Hinduism or practical experience accused Hindus of  people with no historical sense. They praised only one Kashmiri Brahmin as the first one with Historical sense. That Brahmin named Kalhana wrote Raja Tarangini (River of Kings) with the names of Kings and their periods which can be understood by foreigners. But surprise, surprise! the foreign ‘scholars’ rejected his first four chapters in Raja Tarangini saying it contains myths and unhistorical information.  It is like praising a beautiful woman and saying the part above her neck is Ugly!!! The fact of the matter is Kalhana challenges the date of Buddha, Kali Yuga, Kanishka etc which didn’t suit the ‘scholars’.

Let me come to the topic of the day!

I titled it as ‘57 generations at one go’. What is it?

Brihad Aranyaka Upanishad is the oldest of the 108 Upanishads. Even the jaundice eyed foreigners generously dated it as 850 BCE material. But Hindus believe it is still older which is proved by the internal evidence. This Big Forest (Brihad Aranyaka) Upanishad has a chapter called Vamsa Brahmana in which it gives 57 generations of teachers and two gods.

Foreign historians give 25 years per generation/ per king. But when it comes to forest living , peace loving, meditative, god fearing, vegetarian Gurus it must be longer than 25 years. So let me stretch it to 30 to 40 years and give a rough calculation.

30X 57 generations  =1710 years or

40 X 57 = 2280 years

Before 850 BCE which means , the first Guru for this particular Upanishad lived 2560 years or 3130 years before our time!!

Can we rust this information?

Yes , you can trust it because,

Even foreigners believe all that is said in Vedic literature is true, but they doubt Puranic information. But we have other strong proof from archaeological and historical sources.

Kabilar, the Brahmin poet, who contributed the highest number of Tamil poems to Sangam Tamil Corpus, sings about a chieftain named Irungovel in Purananuru verse 201 as the person in the 49th generation in his line. The most famous Tamil commentator Nacchinarkiniyar , a Brahmin belonging to Bharadwaja Gotra, says that the Yadavs came to Tamil Nadu with a group after Krishna’s demise. Kabilar lived 2000 years ago and if we add another (25 X49) 1225 years it means 3225 years. This is about Irugovel’s forefather’s  arrival in Tamil Nadu. I am referring it to prove that the number of generations is used commonly and to prove Hindus had this historical sense of accounting.

If one comes to all Mutts and Adeenams in Tamil Nadu one can see they always use the generations to say this ascetic is the 68th in the line of Acharyas or 157 th etc.This accounting generation is used even today.

Aihole Inscription and Parthivasekarapuram Copper Plates used Kaliyuga years even during fifth century.

ROME POPES AND NUMBERS

In the list of 57 generations we see some strange names of Rishis. That proves it is very ancient.

In the list we see several Rishis has the same name. This is very important. Hindus very often come across the names of Indra, Agastya, Visvamitra, Vasistha, Bhoja, Vikramditya, Sankaracharya, Janaka, Avvaiyar etc and get confused. The Pauranic speakers projected them as one person. It is incorrect. Look at the list of Popes in Vatican City.

Popes with the name of John – 23 Popes!

Benedict -16, Leo- 13, Gregory 16!

Go to the list of Pharaohs of Egypt; there are 14 Ramesses!

So, Hindus must number them like Westerners to avoid confusion (Eg. Pope John XIV, Gregory XIII).

One more information about Indian Geography in the list:-  One name has the prefix Vidharbi meaning he is from Vidharba region. So even thousands of years ago we have used the prefix showing the region. Most of Sangam Tamil Poets have prefix such as Madurai, Karur, Uraiyur etc showing where they came from. So they had geographical sense 2000 years ago.

If we read chapters after the ‘Vamsa Brahmana’ , we will come across several states in North India such as Videha (Bihar, Nepal), Panchala (Punjab, Haryana). Buddhist literature of sixth century BCE mentioned 16 Mega Kingdoms (Maha Janapada) in North India. Vedic literature belongs to a period long before Buddha’s time.

Now read the list and see that it goes beyond the time of Indus-Sarasvati River Civilization!

–SUBHAM—

TAGS- Kali Yuga date, Hindu Wonder, History Wonder, பாணினி, சங்கப் புலவர் , கபிலர் , ராமாயண காலம், மஹாபாரத காலம்,  அதிசய வரலாற்றுச் செய்திகள்

முஸ்லீம்கள் பற்றி அம்பேத்கர்! (Post No.16,290)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,290

Date uploaded in London – 10 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

முஸ்லீம்கள் பற்றி அம்பேத்கர்!

ச. நாகராஜன்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தின் வரைவை உருவாக்கிய கமிட்டியின் தலைவராக இருந்தவர். தலித் சமூகத்திற்காகப் பாடுபட்ட அவர் கஷ்டப்பட்டு ஒரு வக்கீலாக முன்னுக்கு வந்தவர். ஆழ்ந்த சிந்தனையாளர். அரசியல் சட்டத்தில் நிபுணர்.

அவர் 1945ம் ஆண்டு Pakistan or the Partition of India என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். பின்னால் இது  Thoughts on Partition என்று பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

மூஸ்லீம் லீக் தனி நாட்டைக் கேட்பது பற்றிய ஆழ்ந்த ஆய்வை அவர் மேற்கொண்டு தனது கருத்துக்களை இந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

492 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.

முகலாய சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஹீரோக்களாகக் கொண்டாடப்படும் அனைவரும் அழிவையும் கொள்ளையையும் அடிப்படிக் கொள்கையாகக் கொண்டு ஏராளமானோரைக் கொலை செய்தவர்கள். தங்களுக்குள்ளும் அடித்துக் கொண்டு கொலை செய்து மாண்டவர்கள்.

அம்பேத்கர் முகம்மது கஜினி இந்தியாவுக்குள் நுழைந்தது முதல் அஹ்மத் ஷா அப்டல் சென்றது வரை 762 ஆண்டு கால வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்தார். வரலாற்று ஆசிரியர்கள் பலரது மேற்கோள்களை அவர் விரிவாக இந்தப் புத்தகத்தில் தருகிறார். (பக் 54-63) ஆலயங்களை இடித்துத் தரமட்டமாக்கல், கட்டாயமாக இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்தல், பெண்களைக் கற்பழித்தல், குழந்தைகளைக் கொல்லல் போன்ற ஈவு இரக்கமற்ற படு பாதகங்களை அவர்கள் செய்தனர்.

1920 முதல் 1940 முடிய நமது நாட்டில் நடந்த மதக் கலவரங்களை அவர் விரிவாகக் கூறுகிறார். (பக் 163-184)

1919 முதல்ல் ஏற்பட்ட பிரிட்டிஷாருக்கும் முஸ்லீம் லீகிற்கும் இடையேயான நெருக்கமான உறவைப் பற்றியும் அவர் விளக்குகிறார்.

ஜனத்தொகையில் 25 சதவிகிதமே இருந்த முஸ்லீம்கள் ராணுவத்தில் 36 சதவிகிதம் இடம் பெற்றதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்.

இதில் இடம் பெற்றுள்ள சில குறிப்புகளைக் கீழே காணலாம்:

1)      பக் 352 முஸ்லீம்கள் தேசபக்தி இல்லாதவர்கள்.

2)      பக் 123 இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லீம்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும்.

3)      பக் 125 இந்தியாவில் தொடர்ந்து இருக்க முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட்டால் மத நல்லிணக்கம் இந்தியாவில் ஒருபோதும் வராது.

4)      பக் 294 முஸ்லீம்கள் பாரதத்திற்கு எதிராக ஜிஹாத் தொடங்குவார்கள்.

5)      பக் 294 முஸ்லீம்கள் பாரதத்தை தாருல்- ஹர்ப் ஆகக் கருதுகிறார்கள்.

6)      பக் 294 அவர்கள் நாட்டின் சட்டத்திற்கு எதிராக ஷரியா சட்டத்தை அமுல் படுத்த சதி செய்கிறார்கள்.

7)      ஷரியா சட்டத்தின் படி இந்த நாட்டை தார்- உல்- இஸ்லாம் ஆக ஆக்கப் பார்ப்பார்கள்.

8)      முஸ்லீம்கள் சமூக சீர்திருத்தத்திற்கு மிக மிக எதிரானவர்கள்.

பர்காவை பயன்படுத்துவது என்பது இஸ்லாமில் செக்ஸ் உறவில் தவறை உருவாக்கும்.

அம்பேத்கரைப் போற்றி வீதிக்கு வீதி அவர் படத்தைச் சுவரில் சித்தரிக்கும் பகுத்தறிவுகளுக்கு இதெல்லாம் தெரியுமா அல்லது தெரிந்தாலும் இவற்றை மூடி மறைக்கப் பார்க்கிறார்களா?

தெரியவில்லை.

ஆனால் அம்பேத்கர் சொன்னது பின்னால் காஷ்மீரிலும், சம்பல் பள்ளத்தாக்கிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் நாட்டின் இதர பகுதிகளிலும் உண்மையானதைப் பார்க்கிறோம்.

அவர் நமது நாட்டினருக்கு முன்னதாகவே எச்சரிக்கை கொடுத்தவர்.

அவர் கூறியதை உன்னிப்பாகக் கவனித்து நாம் முன்னேற வேண்டும் என்பது தான் காலத்தின் கட்டாயம்!

***