ஒரு நல்ல கதை -வாளும் நாளும் ஒன்று ! (Post No.7777)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7777

Date uploaded in London – 3 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கிரேக்க நாட்டிலிருந்து ஒரு சுவையான கதை !

டமோக்ளிஸ் ஸ்வோர்ட் – (Sword of Damocles) டமக்ளிஸின் வாள் – கதை தெரியாத ஆங்கில மாணவன் இருக்க முடியாது. ஏனெனில் கிரேக்க நாட்டில் தோன்றிய இக்கதை சிசரோ (cicero) மூலம் பரவி, ஷேக்ஸ்பியர் , சாசர் , ஜான் எப் கென்னடி, நிகிதா குருஷேவ் மூலம் உலகம் முழுதும் பரவிய விஷயம்.

கிரேக்க நாட்டின் கீழ் இருந்தது சிசிலி (Syracuse, Sicily, now in Italy) தீவு.

சிராக்கியுஸ் என்ற நகரிலிருந்து சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர், டயோனிஸ் (Dionysius)  என்ற மன்னன் ஆண்டு வந்தான் . நம்மூர் புலவர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் புகழ்வது போல டாமோக்லிஸ் என்பவர் அவ்ருடைய புகழ் பாடிக்கொண்டே இருந்தார்.

“மன்னா, நீ மிகவும் அதிர்ஷ்ட சாலி ;  உனக்கு என்ன சுகபோகம்தான். நீ ஒரு நித்ய ஆனந்தன் ; மஹா ஆ னந்தன் ; பிராம்மானந்தன்” — என்று சொல்லிக் கொண்டே இருந்தார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆனால் மன்னன் டயோனிச்சுக்கோ ஏராளமான எதிரிகள். யார் எப்போது தன் மீது கத்தியைப் பாய்வார்களோ என்று பயந்து கொண்டே ஆண்டான். தனக்கு முடி வெட்டிவிடக் கூட மகளை மட்டுமே அனுமதித்தான். அந்த மன்னன் ஒரு சர்வாதிகாரி. எல்லோரையும் தன் ஒரு விரல் அசைவுக்குள் அடக்கி வைத்திருந்தான் .

பிரதமர் பதவி, ஜனாதிபதி பதவி, மன்னர் பதவி எல்லாம் “நித்ய கண்டம்  பூரண ஆயுசு” போன்றது என்பதை டமாக்கிளிசுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டான். ஒரு நாள் அவரைக் கூப்பிட்டு “அன்பரே யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நீரும் இந்த ஆசனத்தில் அமர்ந்து ஒரு நாளாவது இந்த தேசத்தை ஆள வேண்டும் என்பது எம் அவா”- என்றான்

இதைக்கேட்டவுடன் அவருக்கு மிக்க சந்தோசம் ; கட்டாயம் நாமு ம ஆள்வோம் என்று அரியணையில் அமர்ந்தார். மன்னன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு குதிரை மயிரில் ஒரு கொலை வாளினை அவர் தலைக்கு மேல் தொங்க விட்டிருந்தான். அது எந்த நேரத்திலும் தலை மீது விழுந்து கபா லத்தைப் பிளந்து விடும் என்று பயந்தான் டமாக்கலிஸ் . அய்யயோ எனக்கு இந்த மரண பயம் உள்ள பதவி வேண்டாம் அப்பா என்று ஒடி வந்து விட்டான் .

ரு மன்னர் பதவி என்பது  ஆபத்து நிறை ந்தது.  யார் எப்போது குழி பறிப்பார் என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும் . பிரதமர், ஜனாதிபதி பதவி வகிப்போர் , எதிர்க் கட்சியினரின் சதி வேலைகளை சமாளிக்க வேண்டும் . இதனால்தான் பெரிய பதவிகளை சிசரோ போன்றோர் வாளுக்கு ஒப்பிட்டனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியக் கவிஞர்களும் வாள் என்பதை யமனுக்கு ஒப்பிட்டனர்

xxxxx

நாள் என்றால் என்ன?

பகற்பொழுது.

அதாவது ஒவ்வொரு முறை சூரியன் உதிக்கும்போது ஒரு நாள்.

இதைக் கவிஞர்கள் பெரிதும் வருணித்து விதந்து ஓதுவர் .

ஆனால் திரு வள்ளுவனும், குறுந்தொகைப் பாடல் பாடிய அள்ளூர் நன்முல்லை ( மிஸ் சுகுமாரி)யும் , ஆங்கில அந்தகப் புலவன் ஜான் (Milton) மில்டனும், நாலடியார் பாடிய ஒரு புலவனும் நாள் என்பது ஒரு கத்தி, ஒரு வாள் போன்றது என்று வருணித்துள்ளனர் . ஏன் ?

கடவுள் நமக்குக் கொடுத்த வாழ் நாளில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டிக் கொண்டு இருக்கிறது. தலைக்கு மேல் இப்படி ஒரு வாள் , நமக்கு எதிராகச் சதி செய்து கொண்டு இருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. அதாவது கூடவே இருந்து நமக்குக் குழி பறித்துக் கொண்டு இருக்கிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதை வள்ளுவன் தன் ஞானக் கண்களால் பார்த்துவிட்டான். உடனே

“நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப்  பெறின்” – குறள் 334

என்றான்.

நிலையாமை என்னும் அதிகாரத்தில் பாடிய பத்து குறள்களும் பத்து ரத்தினங்கள்.

இந்தக் குறளின் பொருள் என்ன?

‘நாள் என்பது காலத்தைக் காட்டும் அளவுகோல் போல பாசாங்கு செய்துவிட்டு, உண்மையில் உயிரை உடம்பினின்று வெட்டும், அறுக்கும் ஒரு வாளாகச் செயல்படுகிறது . இது யாருக்குத் தெரியும்?  ஆராயும் அறிவுடையோர்க்கு  மட்டும் தெரியும்’ .

TIME SEEMS ALL SMILES AND LAUGHTER, BUT VERILY IT IS A SAW THAT CEASELESSLY SAWS AWAY THE LIFE OF MAN.

XXX

குக்கூ என்றது கோழி! என்ற சங்கத் பாடலில் நன்முல்லையும் இதைப் பாடுகிறார். ஒவ்வொரு நாள் வைகறைப் பொழுதையும் வாள்  என்று வருணிக்கிறார். இதோ அந்தப் பாடல் – tamilandvedas.com, swamiindology.blogspot.com

குக்கூ என்றது கோழி; அதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் —

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

–அள்ளூர் நன்முல்லை (MISS SUKUMARI)

–குறுந்தொகைப் பாடல் 157

பாடலின் பொருள்-

“கோழி குக்கூ என்று கூவியது. அதற்கு நேராக எம் தோளைத் தழுவும் காதலரைப் பிரியச் செய்யும் வாளைப் போன்ற விடியற் காலைப் பொழுது வந்தது. எனது தூய நெஞ்சம் அதனால் அச்சத்தை அடைந்தது”.

இதை ஆங்கிலக் கவிஞன் ஜான் மில்டன் இப்படிப் பாடுகிறான்–

The scythe of time mows down – Milton

அவர்க்கு ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே நாலடியார் பாடிய புலவர்களில் ஒருவர் சொல்கிறார்

((‘சுகுமாரி’ என்பது மல்லிகை, முல்லை, பிச்சிப் பூ   வகையில் ஒன்று. அதைத் தமிழில் ‘நன்முல்லை’ என்று மொழிபெயர்த்துக் கொண்டார் அந்த பெண்பாற் புலவர். பிற்காலத்தில் வி.கோ.சூர்ய நாராயண சாஸ்திரி என்பதைத் தமிழில் ‘பரிதிமாற் கலைஞர்’ என்று மொழிபெயர்த்துக் கொண்டு தமிழ் கூறு  நல்லுகத்துக்கு ஒரு மதுரைப் பிராம்மணன் சேவை செய்ததை நாம் அறிவோம்.))

இதோ நாலடியார்  பாடிய பு லவர்களில்  ஒருவரின் பாடல்

“தோற்றஞ் சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றமளந்து நுந்நாளுண்ணும் – ஆற்ற

அறஞ் செய் தருளுடையீ ராகுமின் யாரும்

பிறந்தும் பிறவாதாரில்” .–நாலடியார் , பாடல் 7

பொருள் tamilandvedas.com, swamiindology.blogspot.com

“ஒளிமிக்க சூரியனை அளக்கும் ‘படி’ – யாகக் கொண்டு யமன் உங்களுடைய ஆயுளை தினமும் அளந்து கொட்டிக்கொண்டு இருக்கிறான் . ஆகையால் அதிக தருமங்களைச்  செய்து பிறர் இடத்தில் அருள் மழை பொழியுங்கள் . அப்படிச்  செய்யாவிடில் இருந்தும் இறந்தவர்களே” .

Yama, the God of Death devours away your life daily using the resplendent sun as his measure.  Perform therefore virtuous deeds and become compassionate, for otherwise all those that are born will be considered as unborn.

(They alone live who live for others, the rest are more dead than alive – Swami Vivekananda)

ஒருவர்  வாள் என்றார் . இன்னும் ஒருவர் நெல் அளக்கும் ‘படி’ என்கிறார்.

வாழ்க தமிழ்!

Tags –

டமாக்களிஸ் , வாள் , வாழ்நாள் , அறுக்கும் , சிராக்கியூஸ், வாளும் நாளும்

–subham–