தங்கம் விலை உயரும்

2013ஆம் ஆண்டில் தங்கம் விலை உயரும்

தங்கம் விலை உயரும் என்று ஒரு கட்டுரையைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக செட்டியார் சமூகத்தினர் இதை அறிந்து தங்கத்திலும் வீட்டு மனையிலும் மட்டுமே காசை முதலீடு செய்வார்கள். வீட்டு விலையும் தங்கம் விலையும் உயராத காலமே இல்லை. தங்கத்தில் உள்ள ஒரே சிக்கல் அதைத் திருடர்களிடமிருந்தும் பேராசைக்கரர்களிடமிருந்தும் காப்பாற்றுவதுதான். பல குடும்பங்கள் தங்க நகைகளுக்காக சண்டை போட்ட கதைகளை நாம் அறிவோம்.

இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் சொக்கத் தங்கத்தின் விலை பத்து கிராம் 31,200 ரூபாயில் நிற்கிறது. இது 2013 ஆம் அண்டில் 37,000 ரூபாயாக அதிகரிக்கும். இது 24 காரட் தங்கம்.

ஆபரணத் தங்கம் ஒரு பவுன் /சவரன் 23,000 ரூபாயாக இருக்கிறது. இது 27000 வரை உயரக்கூடும்.

2012 தங்க அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் பல சுவையான விஷயங்கள் இருக்கின்றன.:

தங்கத்தின் விலை 2009 ஆம் ஆண்டிலிருந்து 60 சதவிகிதம் உயர்ந்து விட்டது. தங்கம் வாங்கும் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் இதில் பத்தில் அல்லது எட்டில் ஒரு பகுதிதான் கிடைத்திருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் 2500 டன் தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறது. இதில் 80 சதவிகிதம் நகை செய்யப் பயன்படுகிறது. ஏனைய 20 சதவிகிதம் மின் அணுக் கருவிகளிலும் மருத்துவத் துறையிலும் பயன்படுகிறது. பெரும்பாலான மின்னணுக் கருவிகளில் (எலெக்ட்ரானிக்) கொஞ்சம் தங்கம் இருக்கும். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், கார் பிரேக் சிஸ்டம்,  மொபைல் போன்களிலும் தங்கம் உண்டு.

மருத்துவத்தில் பல் கட்டும் பிரிவு, புற்று நோய் மருந்துகள் தயாரிப்பதற்கான ஆய்வுகள், சூரிய செல்கள் ஆரய்ச்சி ஆகியவற்றில் தங்கம் பயன்படுகிறது. நமது உடலிலும் கடல் தண்ணீரிலும் தங்கம் உண்டு.

எகிப்து, இந்தியா, கிரீஸ், மாயா போன்ற பழைய நாகரீகங்கள் அனைத்தும் தங்கத்தைப் பயன்படுத்தின. கி.மு 2600 முதல் பழங்கால தங்க நகைகள் கிடைக்கின்றன.

சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, பெரு, கனடா, கானா, இந்தோநேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் தங்க உற்பத்தியில் முதலிடம் வகித்தன.

உலகில் அதிக அளவுக்கு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தை வகித்து வருகிறது. 2011ல் 911 டன்னும், 2012ல் 800 டன்னும் இறக்குமதி செய்தது. அடுத்த ஆண்டு இது 600 டன்களாக குறையும் என்று உலோகத்துறை நிபுணர்கள் கணக்குப் போடுகிறார்கள்.

Gold coins issued by Raja Raja choza and Kumara Gupta

உலக மார்க்கெட்டில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நாலு சவரன். இது சொக்கத் தங்கம்=24 காரட் தங்கம். இப்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1666 டாலர். இது 2000 டாலராக உயரும் என்று எதிர்பார்த்தனர். 2012ல் அப்படி உயர்வில்லை. ஆனால் 2013ல் கட்டாயம் 2000 டாலர் ஒரு அவுன்ஸ் என்ற நிலை வரும் என்பது அவர்கள் கருத்து. இதற்குக் காரணம் ஆட்டம் காணும் மேலை நாட்டுப் பொருளாதாரமாகும். பங்கு மார்க்கெட், பாங்குகள் எல்லாம் சாண் ஏறினால் முழம் சறுக்குகின்றன. ஆகையால் புத்திசாலி முதலீட்டாளர்கள் எல்லோரும் தங்கமே தங்கம் என்று புகழ்பாடத் துவங்கிவிட்டனர். பெரும்பாலான பாங்குகளும் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: