மனைவிகளின் பெருமையும், லேக தோஷமும்!

gossip at village well

சம்ஸ்கிருத செல்வம் அத்தியாயம் 29

ச.நாகராஜன்

இரண்டு பெண்மணிகள் ஓரிடத்தில் கூடினர். தங்கள் தங்கள் கணவன்மார் ‘பெருமையைப்’ பேசி மகிழ்ந்தனர்.

ஒருத்தி சொன்னாள்: “ எனது அன்பிற்குரிய கணவர் எப்படி எழுதுவார் தெரியுமா? பெரிய புத்திசாலி! அவர் எழுதுவதை அடுத்தவர் யாராலும் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதுவார்”.

இதற்கு அடுத்தவள் பதில் சொன்னாள்: “ஹூம்! இவ்வளவு தானா! என் புருஷர் இன்னும் அதிக புத்திசாலி. அவர் எழுதுவதை அவராலேயே புரிந்து கொள்ள முடியாது.

இந்தக் காட்சியைக் கண்ட கவிஞர் அப்படியே நையாண்டிப் பாடலாக எழுதி விட்டார். பாடலைப் பார்ப்போம்:-

சதுர: சகி மே பர்த்த யத் லிகதி

தத் பரோ ந வாசயதி I

தஸ்மாத் அபி அதிக: மே ஸ்வயம் அபி

லிகிதம் ஸ்வயம் ந வாசயதி II

gossiping

சகி – ஹே! சகியே
மே பர்த்த சதுர: – எனது கணவர் மிகவும் திறமைசாலி
யத் லிகதி தத் பரோ ந வாசயதி – அவர் எதை எழுதுகிறாரோ அதை வேறு யாராலும் படிக்க முடியாது

மே தஸ்மாத் அபி அதிக: – அதைக்காட்டிலும் என் கணவர் இன்னும் அதிக புத்திசாலி.

ஸ்வயம் அபி லிகிதம் ஸ்வயம் ந வாசயதி – தான் எழுதியதை அவரால் தன்னாலேயே படிக்க முடியாது!

சரி, எழுதுவதை எப்படி எழுத வேண்டும்?

இதைச் சொல்வதற்கு சாணக்கியரை விடத் தகுதி வாய்ந்தவர் யார்? அவர் ‘லேக தோஷ:’ என்று எழுதுவதில் உள்ள ஐந்து தோஷங்களைக் கூறுகிறார்.

1) அகாந்தி – எளிதில் புரியாதபடி எழுதுதல்
2) வ்யாகத – முரண்பட்டு எழுதுதல் (முன்னுக்குப் பின் முரணாக எழுதல்)
3) புனருக்த – சொன்னதைத் திருப்பிச் சொல்வது போல எழுதியதையே திருப்பி எழுதுதல்
4) அப சப்த – இலக்கணமின்றி வார்த்தைகளை கண்டபடி எழுதுதல்
5) சம்ப்லவ – ஒழுங்கான வரிசையின்றி மாற்றி மாற்றித் தொடர்பில்லாது எழுதுதல்

two women tying

அகாந்திர்வ்யாகாத: புனருக்தமபசப்த:
சம்ப்லவ இதி லேக தோஷா: I
அர்த்த சாஸ்திரம் II – 10 – 57
இந்த ஐந்து எழுத்து தோஷங்களையும் நீக்கி எழுதினால் வெற்றி தான்!

**********

Pictures are used from different sources.Thanks.
swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: