Written by London swaminathan
Date:24 July 2016
Post No. 3000
Time uploaded in London :– 5-22 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
இப்பொழுது பல மாயாஜாலக் கதைகளைப் படிக்கிறோம். ஏராளமான சித்திரத் தொடர்கதைகளைப் படிக்கிறோம். ஹாரி பாட்டர் போன்ற புதிய கதைகளும், திரைப்படங்களும் கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கின்றன. ஆனால் எல்லா கதைகளிம் கருக்களும், விதைகளும் இந்திய இலக்கியங்களில் உள்ளன. சம்ஸ்கிருத இலக்கியத்திலும், நாட்டுப்புற கதைகளிலும் இதை அதிகம் காணலாம். ஈசாப் கதைகளானாலும் சரி, ஜோனதன் ஸ்விப்டின் கலிவரின் யாத்திரை ஆனாலும் சரி, பொக்காஸியோவின் டெக்காமொரோன் ஆனாலும் சரி — எல்லாக் கதைகளின் கருத்துகளும் வடமொழியில் இருப்பதைக் காணலாம்.
வால்மீகி ராமாய ண த்தில் அலிபாபா-அலாவுதீன் விளக்கு , கதைகளை விட அதிசயமான கதைகள் இருக்கின்றன. பரத்வாஜர் கதை. மாண்டகர்ணி என்ற ரிஷியின் கதை ஆகியன குறிப்பிடத்தக்கன.
காளிதாசன் சொல்கிறான்:-
“இதோ தெரியும் இந்த பஞ்சாப் சரஸ் ஏரியானது சாதகர்ணி என்னும் முனிவரின் ஏரி ஆகும் இது அவர் நீர்விளையாட்டுக்காக அமைத்தது. நான்கு புற ங்களும் அடர்ந்த, இருண்ட காடுகள் இடையே இது பள, பள என்று பிரகாசிப்பதால் இதை இருண்ட வானத்தில் செல்லும் சந்திரனுக்கு ஒப்பிடலாம்”.
ஏதத்முனே: மானினிசாதகர்ணே: பஞ்சாப்சர: நாம விஹாரவாரி
ஆபாதி பர்யந்தவனம் விதூராத் மேகாந்தர் ஆலக்ஷ்யம்இவ இந்து பிம்பம்
–ரகுவம்சம், 13-38
காளிதாசன் சாதகர்ணி என்று சொல்லும் முனிவரின் பெயர் ராமாயணத்தில் மாண்டகர்ணி என்று வருகிறது. அவர் 16,000 ஆண்டு தவம் செய்துகொண்டிருந்தார் (16000 ஆண்டு = நீண்ட காலம்). தேவர்களுக்கு அச்சம் நிலவியது. உடனே ஐந்து அப்சரஸ் அழகிகளை அனுப்பிவைத்தனர். அவரும் சொக்கிப்போனார்.
அவர் அந்த ஐந்து பேரையும் மண ந்து கொண்டார். தன்னுடைய தவ வலிமையால் அந்த ஏரியின் அடிப்பகுதியில் ஒரு அரண்மனையைக் கட்டினார். அதில் அவர்களுடன் வசித்தார். ஐந்து அப்சரஸ் பெண்களின் நினைவாக அந்த ஏரி பஞ்சாப் சரஸ் என்று அழைக்கப்படும்.
முன்பு தர்ப்பைப் புல்லின் குருத்துக்களை மட்டும் உண்டு, மான்களோடு விளையாடி வந்த முனிவர், இந்திரனின் கபடத்தால், “ஐந்து அழகிகளின் இளமை என்ற கூட்டு”க்குள் அடைக்கப்பட்டார் என்று காளிதாசன் மேலும் வருணிக்கிறான்.
நீருக்கடியில் மறைந்திருந்த அந்த மாளிகையிலிருந்து எழுந்த இன்னிசை ஒலி (சங்கீத – மிரிருதங்க – கோஷம்) ஆகாயத்தை அடைந்து அங்கே சென்ற விமானங்களில் மீது மோதி எதிரொலித்தன.
வால்மீகி ராமாயணந்த்தில் ஆரண்ய காண்டத்தில் 11ஆவது சர்கத்தில் 15 ஸ்லோகங்களில் வரும் வருணனைகள், காளிதாசனின் மனதை மிகவும் கவர்ந்ததால், இந்த சர்கத்தில் இப்படி வருணித்தான்.
இதிலிருந்து நாம் அறியும் விஷயங்கள்:–
1.அந்தக் காலத்தில் நீருக்கு அடியில் கட்டிடம் அமைக்கும் பொறியியல் வல்லுநர்கள் இருந்தனர்.
2.காட்டுக்கு அடியில் தவ வலிமை மூலம் அமைத்தாலும், ஒரு கட்டிட வரைபடம், அமைப்பு இல்லாமல் இது நடந்திராது.
- வானில் விமானங்கள் சென்று கொண்டிருந்ததையும் அறிகிறோம்.
- இன்று சாமியார்கள், பெண்களிடம் சரணடைவது போல அன்றும் பல முனிவர்கள் அடிமையானதையும் அறிகிறோம்.
- காட்டில் முனிவர்கள் தவம் செய்கையில், இலை, தழைகளைச் சாப்பிட்டுக் கொண்டு, மான்களோடு விளையாடி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை நடத்தினர்.
- நீண்டகாலம் என்பதை- 16,000 ஆண்டுகள் — என்ற மரபுச் சொற்றொடர் மூலம் (இடியம்) எழுதும் வழக்கம் இருந்ததையும் காண்கிறோம்.
7.பரத்வாஜர் கதையும், விஸ்வாமித்ர/காமதேனு கதையும், மாண்டகர்ணி கதையும் பல மாயாஜால விஷயங்களை கூறுகின்றன. இவை அனைத்தும் தவ வலிமையால் நிகழ்ந்தன என்ற தகவலையும் அறிகிறோம்.
வால்மீகி தரும் தகவல்
வால்மீகி ராமாயணம் இந்த ஏரியின் இயற்கை அழகை மிக அழகாக வருணிக்கிறது. அடர்ந்த காட்டுக்குள் இன்னிசை ஒலி கேட்டவுடன் ராம, லெட்சுமணர்கள் , தர்மப்ருத் என்ற முனிவரிடம் இது எங்கிருந்து வருகிறது? ஜன நடமாட்டமே இல்லையே என்கிறார்கள். உடனே மேற்கூறிய கதையை அவர் விவரமாகக் கூறுகிறார். இதையே காளிதாசன் சுருக்கித் தந்துள்ளான்.
–subham–
You must be logged in to post a comment.