கடவுளை வணங்க வேண்டிய நேரங்கள் (Post No.3107)

IMG_3203

Written by London Swaminathan

 

Date: 31 August 2016

 

Time uploaded in London: 10-59 AM

 

Post No.3107

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

 

உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப்

பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின்பாதத்திலே

நண்ணும் கருத்துத் தமியேனுக்கென்றைக்கு நல்குவையோ

விண்ணும் புகழ்க் கடவூர் வாழும் கள்ள விநாயகனே

— அபிராமி பட்டர்

 

பொருள்:-

தேவர்களும் போற்றும் திருக்கடவூரில் வாசம்புரியும் கள்ளப் பிள்ளையாரே! என்றைக்கு உண்ணும் பொழுதும், உறங்கும் போதும், எந்தத் தொழிலையும் செய்யத் தொடங்கும் போதும், பேசுவதற்குத் தொடங்கும் போதும் உன் திருவடிகளை நினைக்கும் நல்ல பண்புகளை எனக்குத் தரப்போகிறாயோ — என்று அபிராமி பட்டர் துதிக்கிறார். ஆகையால் அவர் கருத்துப் படி எவ்வப்பொழுது கடவுளை வணங்க வேண்டும் என்று தெரிகிறது.

HY14-PUSHKAR_2472025g.jpg,hindu 2

காலையில் 12 மந்திரங்களைச் சொல்லி சூரியனை  வழிபடும் வழக்கமிருப்பதால் (சூர்ய நமஸ்காரம்) அதி காலையில் கடவுளை வணங்க வேண்டும் என்பதும் சொல்லாமலேயே விளங்கும்.

 

பிராமணர்களும் — பழங்காலத்தில் மூவர்ணத்தினரும் — “காணாமல் கோணாமல் கண்டு” கொடுத்தனர்.

 

அதாவது சூரியனைக் காணாமல் ( சூர்ய உதயத்துக்கு முன்), கோணாமல்,  சூரியன் உச்சியில் இருக்கையில் நிழல் விழாது/சாயாது, கண்டு, அதாவது சூரியன் மலைவாயில் விழுந்து மறைவதற்கு முன் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்று அறிந்தனர்.

 

தேவாரம் போன்ற துதிகளிலும் “முப்போதும் தீண்டுவார்” என்ற வரியில் இவ்வழக்கத்தைக் காணலாம்.

 

ஆக குறைந்தது முப்பொழுது, முதிர்ந்த நிலையியில் எப்பொழுதும், எதைச் செய்தாலும் இறைவனை நினைத்தல் அவசியம்.

 

 

காலை எழுந்தவுடன் சொல்லவேண்டிய துதி

 

கராக்ரே வசதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதீ

கரமூலேது கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

 

பொருள்:-

வலது கையின் நுனியில்  லக்ஷ்மியும், நடுப்பகுதியில் சரஸ்வதியும், அடிப்பகுதியில் கோவிந்தனும் வசிக்கிறார்கள் காலியில் கரத்ர்சனம் செய்யவேண்டும்.

சிலர் கோவிந்த: என்ற இடத்தில் கௌரீ வாசம் செய்வதாகக் கொண்டு கௌரீஸ்யாத் என்றுமுரைப்பர்.

IMG_5160 (2)

இதிலிருந்து தூங்கி எழுந்தவுடன் வலது கையைப் பார்த்து கடவுளின் பெயரை உச்சரித்தல் ஆன்றோர் வகுத்த வழி என்பதும் தெரிகிறது. இதை ப்ராத ஸ்மரணம் என்பர்.

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: