21 வகை நரகங்கள் – மனு எச்சரிக்கை! மநு நீதி நூல்- 27 (Post No.5448)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 19  September 2018

 

Time uploaded in London – 16-05 (British Summer Time)

 

Post No. 5448

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

21 வகை நரகங்கள் – மனு எச்சரிக்கை! மநு நீதி நூல்- 27 (Post No.5448)

 

நாலாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம்.

ஸ்லோகம் 76 ஒருவன் கை கை கால் கழுவிக்கொண்டு ஈரக்காலுடன் சாப்பிட வேண்டும், ஆனால் தூங்கும் போது ஈரக்காலுடன் படுக்கக்கூடாது என்ற மருத்துவக் குறிப்பை அளிக்கிறது

ஸ்லோகம் 82 முதல் தலை முடியைத் தொடுதல் பற்றிய விதிகளைச் சொல்லி எவை எவை தவிர்க்கப்பட வேன்டியவை என்கிறார்.

 

பின்னர் தானம் வாங்கக் கூடாத ஆட்கள் பட்டியலில் எண்ணைச் செக்கு ஆட்டுவோன், கசாப்புக் கடைக்காரன் முதல் அரசன் வரை இருக்கிறார்கள். ஒரு அரசன் 16,000 கசாப்புக் கடைக்காரனுக்குச் சமம் என்கிறார் மநு.

 

(ஆனால் யாக யக்ஞங்கள் செய்து பெறுவது தட்சிணை; அது இந்த வகையில் வராது என்றே கொள்ள வேண்டும்; அதாவது செய்த வேலைக்குக் கிடைக்கும் கூலி; அது வெறும் பரிசு அல்ல. அரசனிடமிருந்து காரணமில்லாமல் தானம், பரிசு பெற்றால் விதி முறைகளை, அரசனுக்கு ஏற்ப வியாக்கியானம் செய்யும் அவல நிலை ஏற்படும் என்பது மநுவுக்குத் தெரியும்)

 

 

ஸ்லோகங்கள் 87 முதல் நான்கு ஸ்லோகங்களில் 21 வகை நரகங்கள் பற்றி மநு எச்சரிக்கிறார்; ஒரு பேராசையுள்ள , சாஸ்திர விரோதமான அரசனிடமிருந்து/ ஆட்சியாளரிடமிருந்து பரிசுகளைப் பெறும் பிராஹ்மணன் 21 வகை நரகங்களுக்குச் செல்வான் என்று மநு நீதி நூல் எச்சரிக்கிறது.

 

இந்த 21 வகை நரகங்களின் ஸம்ஸ்க்ருத அர்த்தத்தைப் பார்த்தால் விநோதமாக இருக்கும். ஏன் இப்படியெல்லாம் பெயர்கள் இடப்பட்டன என்பது நூல்களிலிலிருந்து ஆழமாக ஆராயப்பட வேண்டியவை. மநு தர்ம நூலுக்குப் பல உரைகள் இருப்பதால் அவைகளில் விளக்கம் கிடைக்கும்.

 

 

நரகங்களின் சம்ஸ்க்ருதப் பெயர்களின் மொழி பெயர்ப்பு:-

இருள், குருட்டு இருள், பெரிய புள்ளி மான், மான், காலம் என்னும் நூல் இழை, பெரிய நரகம், மீண்டும் உயிர்கொடுத்தல், அடித்துக்கொண்டு போதல், எரிச்சல், பெரிய எரிச்சல், நசுக்குதல், அண்டங்காக்கை இடம்,

மொட்டு போல மூடுதல், நாற்ற பூமி, இரும்பு முட்கள், கசடு, விரட்டி அடித்தல், முள் ஆறு, வாள் இலை மரக் காடு, இரும்பை வைத்து வெட்டும் நரகம்.

 

இவை அனைத்தும் பழங்காலத்தில் மிகவும் பழக்கப்பட்ட சொற்களாக இருக்கலாம். சொல் ஆராய்ச்சிமொழி ஆராய்ச்சியாளருக்குச் சுவையான பகுதி.

அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் என்சைக்ளோபீடியா நரகங்கள் பற்றிய விஷயத்தை விவரமாகச் சொல்கிறது:

 

பல புராணங்கள் 21 அல்லது 28 நரகங்களின் பெயர்களையும் அதில், என்ன என்ன பாவம் செய்தோர் புகுவர் என்றும் விவரங்கள் உள்ளன.

 

ஸ்லோகம் 92ல் பிரஹ்ம முகூர்த்தத்தில் (அதி காலை 4 மணி) வேதம் ஓதுதல் பற்றியும் ஸ்லோகம் நூறு வரை எவ்வப்போது, எப்படி வேத அத்தியனம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்.

 

பிரபஞ்ச உற்பத்தி என்னும் நூலிலுள்ள சில பகுதிகளை இத்துடன் இணைத்துள்ளேன்.

  

கால் கழுவி ஈரக்கால்களுடன் சாப்பிடுக

 

அரசனிடம் தானம் வாங்காதே

ரௌரவாதி நரக வகைகள்

பிரம்ம முஹூர்த்தம்

 

 

 

 

 

 

to be continued………………

 

–SUBHAM–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: