ஆங்கில மொழி விநோதங்கள் (Post No.8091)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8091

Date uploaded in London – 2 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்டர்நெட் மற்றும் ஈ மெயில் காரணமாக ஆங்கில மொழியில் பல புதிய சொற்கள் உருவாகி வருகின்றன . நாம் இப்போது ஸர்வ சாதாரணமாக  உனக்கு இ மெயில் செய்கிறேன், அதை. கூகுள் செய்து பார் என்று ஆங்கிலத்தில் புதிய வினைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

ஆங்கிலத்தில் 98 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய சொல் உருவாகிறது என்பது பத்து ஆண்டுக்கு முன் வெளியான செய்தி. இப்போது இன்னும் வேகமாக மொழி வளரும் .

ஆனால் ஒரு அதிசயம் பழைய கால ஆங்கில நூல் ஆகும். 1000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆங்கில மொழியில் புது நூல் வெளிவந்தது .அதன் பெயர் பியாவுல்ப் (Beowulf) . அது ஒரு ஸ்காண்டிமேவிய கதை. ஸ்காண்டிநேவியா என்பது சுவீடனும் நார்வேயும் சேர்ந்த பிரதேசம் ஆகும்..

அதை ஒரு ஆங்கிலேயனிடம் கொடுத்தால் அவனுக்கு எதுவும் புரியாது. எழுத்திலும் சொற்களிலும் பொருளிலும் அதி பயங்கர மாற்றம் . ஆனால் அதே கால கம்ப ராமாயணப் பாடலை ஒரு தமிழன் கையில் எடுத்தால் பெரும்பாலான சொற்களுக்கு அர்த்தம் புரியும். அதற்கு முன் வந்த திருக்குறளை எடுத்தாலும் அர்த்தம் சொல்லிவிடலாம். திருக்குறள் எழுதப்பட்ட தமிழ் எழுத்து வடிவம் மட்டும் மாறிவிட்டது. இது எதைக் காட்டுகிறது ? ஆங்கில மொழி அசுர வேகத்தில் மாறி வருகிறது; மாறிவிட்டது..

உலகில் கால் பகுதியினருக்கு ஆங்கிலம் தெரியும் .இந்தப் பூ உலகில் 25 சத மக்களுக்கு ஆங்கில மொழி தெரியும். நாலு பேரில் ஒருவருக்கு ஆங்கிலம் புரியும்.

உலக மொழி கண்காணிப்பு (Global Language Monitor) அமைப்பின் அதிகாரி பால் பேயாக் சொல்கிறார்- “நாங்கள் ஹாலிவுட், பாலிவுட் திரைப்பட உலகையும் விடுவதில்லை. அங்கும் புதிய சொற்கள் உருவாகின்றன”.

ஆங்கிலத்தில் பத்து லட்சம் சொற்கள் இருந்தாலும் சாதாரண மனிதன் பயன்படுத்துவது 14,000 சொற்கள்தான். ஆனால் சொல்வலை வேட்டுவர்கள் 70,000 சொற்கள் வரை பயன்படுத்துவர்.

ஒரு புதிய சொல்லை ஆங்கிலத்தில் எப்படிச் சேர்ப்பார்கள் தெரியுமா ? அது பத்து கோடிப் பேருக்கு விளங்க வேண்டும். அதை எப்படிக் கண்டுபிடிப்பது? உலகிலுள்ள முக்கியமான பத்திரிகைகள், திரைப்படங்கள், டெலிவிஷன் ஒளிபரப்புகளில் 25,000 முறை ஒரு புதிய சொல் புழங்கிவிட்டால் பின்னர் அகராதியில் சேர்த்துவிடுவார்கள்.

தமிழ் மொழிக்கு இப்படியெல்லாம் ஒரு அமைப்பு இல்லாதது பெரிய குறையே. இப்போது கடைகளில் வாங்கும் தமிழ் அகராதிகளில் தமிழ்ச் சொற்களைவிட ஸம்ஸ்கிருதச் சொற்கள்தான் அதிகம். அதில் தவறில்லை. மக்களின் புழக்கத்தில் உள்ளதை எல்லோருக்கும் புரிவதைச் சேர்த்துள்ளனர். ஆனால் பிறமொழிச் சொற்களை பிற மொழி என்று குறியீடு மூலம் குறிப்பிட்டால்  நலம் பயக்கும். ஸம்ஸ்கிருத சொற்களை அகற்றக்கூடாது . அப்படி அகற்றினால் திருக்குறள் கூடப் புரியால் போய்விடும். ஏனெனில் திருவள்ளுவரே 125-க்கும் மேலான ஸம்ஸ்கிருத சொற்களை பயன்படுத்துகிறார். இதில் ‘காமம்’ என்ற ஒரு சொல்லை எடுத்துக் கொண்டாலே 20 குறள்களில் அந்தச் சொல் வரும். ‘மனம்’ என்ற சொல் இப்படி பத்து குறளகளில் வரும். அதாவது பெரும்பாலான குறள்களில்  சம்ஸ்கிருதம்தான் !

xxxx

மொழி பெயர்ப்பால் மூழ்கிய கப்பல்

மொழியும் மொழி பெயர்ப்பும் எவ்வளவு முக்கியம் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. பைபிளானது ஏசு கிறிஸ்து பேசிய அராமிய மொழியிலிருந்து ஹீப்ரு , கிரேக்க மொழிகளுக்கு மாற்றப்பட்டு ஆங்கில மொழிக்கு வருவதற்குள் ஏராளமான பிழைகள் நேர்ந்தன. மொழி தெரியாததால் கப்பலையே மூழ்க வைத்த சம்பவம் இதோ :-

1545ம் ஆண்டில் பிரெஞ்சுக் காரார்களுக்கும் ஆங்கி  லேயர்களுக்கும் இடையே போர் நடந்தது அப்பொழுது பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலான மேரி ரோஸ் (Mary Rose) மூழ்கி விட்டது. இதன் காரணம் அதில் வேலை பார்த்த ஸ்பானியர் களுக்கு (ஸ்பெயின் நாட்டவர்) ஆங்கிலம் புரியவில்லை. பிரிட்டிஷாருக்கு சொந்தமான கப்பலில் பெரும்பாலும் ஸ்பானியர் வேலை பார்த்தனர். போர்க்கப்பலில் எமர்ஜென்ஸி ஏற்பட்டபோது கப்பல் மாலுமி கொடுத்த கட்டளையை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு நேர் எதிர் மாறாகச் செய்தனர். இறந்த கப்பல் ஊழியர்களின் பற்களை தற்போது,

ஆராய்ந்ததில் பெரும்பாலோர் ஸ்பெயின் நாட்டவர் என்பது தெரிய வந்தது.

xxxx

300 மொழிகள் முழங்கும் லண்டன்

உலகின் பெரும்பகுதியை ஒரு காலத்தில் பிரிட்டன் ஆண்டதாலும், உலகின் விமானப் போக்குவரத்துக்கு நடுவில் லண்டன் நகரம் அமைந்திருப்பதாலும் இங்கு 300 மொழிகளை பேசுவோர் காணப்படுகின்றனர். இவர்கள் 270 இன மக்கள் ஆவர். வேலை படிப்பு, என்ற காரணத்துக்காக குடியேற்றகாரர்கள்  வருவார்கள். ஆனால் திரும்பிச் செல்வதே இல்லை. அப்படி வெளியே போனால் அவர்களில் பெரும் பாலோர் வெள்ளைக்காரர்களாக இருப்பர்; சில ண்டுகளுக்கு முன்னர் வந்த புள்ளி விவரத்தின்படி இந்தியர்கள்தான்  அதிகம் வந்தனர் . அதற்கு அடுத்த நிலையில் இருப்பது நைஜீரியர்கள் .இப்படிச் சிறப்புடையது லண்டன நகரம் .

இங்கு பல்வேறு மொழி பேசுவோர் இருப்பதாலும் மேற்கிந்தியத்தீவு நாடுகளின் ராப் Rap Music மியூசிக் பிரபலமனதாலும் கொச்சை மொழி சொற்கள் புதிதாகத் தோன்றுவதும் உண்டு. ஜெம் Gem என்றால் ரத்தினம் அல்ல. முட்டாள் என்று பொருள். நங் Nung என்றால் நல்ல என்றும் கோஸ்ட் Ghost என்றால் ஆள் அடிக்கடி காணாமற் போவான் என்றும், கிரிஸி Greezy என்றால் கெட்ட என்றும் பொருள். Skadoosh ஸ்கடுஸ் = பை , குட் பை Good Bye !!!

tags- ஆங்கில மொழி, விநோதங்கள், கப்பல்,மொழி பெயர்ப்பு,300 மொழிகள்

—-subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: