பாரத ஸ்தலங்கள்! – 2 (Post No.8093)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8093

Date uploaded in London – – – 3 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாரத ஸ்தலங்கள்! – 2

ச.நாகராஜன்

பாரத ஸ்தலங்களின் பட்டியல் தொடர்ச்சி..

10. துவாதச ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்

1. சோமநாத் (குஜராத்) 2.மல்லிகார்ஜுனம் (ஆந்திர பிரதேசம்) 3. மஹாகாலேஸ்வர் (மத்ய பிரதேசம்) 4. கேதார்நாத் (உத்தரகண்ட்) 5. ஓங்காரேஸ்வரர் (மத்ய பிரதேசம்) 6. பீமா ஷங்கர் (மஹராஷ்டிரம்) 7. காசி விஸ்வநாதர் ( உத்தர பிரதேசம்) 8. த்ரியம்பகேஸ்வர் (மஹராஷ்டிரம்) 9. வைத்யநாத் (ஜார்கண்ட்) 10. நாகேஸ்வரர் (உத்தரகண்ட்) 11.ராமேஸ்வரம் (தமிழ்நாடு) 12. குஷ்மேஷ்வர் (ராஜஸ்தான்)

*

11.108 சக்தி பீடங்கள்

கட்டுரை எண் : 7335  வெளியான தேதி : 13-12-2019 காண்க.

*

12. 108 வைஷ்ணவ திருப்பதிகள்

ஆந்திர பிரதேசம் மற்றும் வட இந்தியா

1. திருமலா (திருப்பதி) ஆந்திர பிரதேசம்  2. அஹோபிலம் ஆந்திர பிரதேசம் 3. முக்திநாத், சாலிகிராமம் நேபாளம் 4. நைமிசாரண்யம் உ.பி. 5. மதுரா உ.பி. 6. கோகுலம் உ.பி. 7. ரகுந்தாதர் ஆலயம் உத்தர்கண்ட் 8.பத்ரிநாத் ஆலயம் உத்தர்கண்ட் 9. ஜ்யோதிமட்  உத்தர்கண்ட் 10. அயோத்யா உ.பி. 11. த்வாரகா குஜராத்.

மலைநாடு

12. ஸ்ரீ பத்மநாபஸ்வாமி ஆலயம், திருவனந்தபுரம் 13. திருகட்கரை 14. மூழிக்களம் 15. திருவல்லா 16. திருகடிதானம் 17. செங்குன்றூர் 18. திருப்புள்ளியூர் 19. திருவாரன்விளை 20. திருவான்வந்தூர் 21. திருநாவாய் 22. வித்துவக்கோடு

மதுரை

23. திருமயம் 24. திருக்கோஷ்டியூர் 25. கூடல் அழகர் பெருமாள் கோவில் 26. அழகர்கோவில் 27.திருமோகூர் 28. ஸ்ரீ வில்லிப்புத்தூர் 29. திருத்தங்கள் 30. திருப்புல்லாணி

காஞ்சிபுரம்

31. திருக்கச்சி 32. அஷ்டபுஜகரம் 33. திருவெஃகா 34. திருத்தண்கா (தூப்புல்) 35.திருவேளுக்கை 36. திருக்கள்வனூ 37.திரு ஊரகம் 38. திரு நீரகம் 39. திருக்காரகம் 40. திருக்கார்வானம் 41. திருப்பரமேஸ்வர விண்ணகரம் 42. திருப்பவளவண்ணம் 43. திருப்பாடகம் 44. நிலாத் திங்கள் துண்டம் பெருமாள் கோவில் 45. திருப்புட்குழி

சென்னை

46. திருவல்லிக்கேணி 47. திருநீர்மலை 48. திருவாடானை 49. திருக்கடல்மல்லை 50. திருநின்றவூர் 51. திருவள்ளூர் 52. திருக்கடிகை

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி

53. திருவழுந்தூர் 54. திருவிந்தளூர் 55. காழீசிரம விண்ணகரம் 56. திருக்காவளம்பாடி 57.திருச்செம்பொன்சேய் 58. திரு அரிமேய விண்ணகரம் 59. திரு வண்புருஷோத்தமம் 60. திருவைகுந்த விண்ணகரம் 61. திருமணிமாடம்

62. திருதேவனார்தொகை 63. திருத்தெற்றியம்பலம் 64. திருமணிக்கூடம் 65.திருவெள்ளக்குளம் 66. திருப்பார்த்தன்பள்ளி 67. தலை சங்க நன்மதியம் 68. திருச்சிறுபுலியூர் 69. திருவாலி-திருநகரி

தஞ்சாவூர்

70. திருச்சித்ரகூடம் 71. திருக்கண்ணன்குடி 72. திருநாகை 73. திரு தஞ்சை 74. திருக்கூடலூர் 75. திருக்கவித்தாலம் 76. திரு ஆதனூர் 77. திருப்புள்ள பூதங்குடி 78. திருக்குடந்தை 79. திருச்சேறை 80. திருநந்திபுர விண்ணகரம் 81. திருநாரையூர் 82. திரு விண்ணகர் 83. திரு வெள்ளியங்குடி 84. திருக்கண்ண மங்கை 85. திருக்கண்ணபுரம் 86. திருவந்திபுரம் 87. திருக்கோவலூர் 88. திருக்கண்டியூர்

திருச்சி

89. ஸ்ரீரங்கம் 90. திருக்கோழி 91. திருகரம்பனூர் 92. திருவெள்ளறை 93. திரு அன்பில் 94. திருப்பேர் நகர்

திருநெல்வேலி

95. திருவரமங்கை 96. திருக்குறுங்குடி 97. ஸ்ரீவைகுந்தம் 98. திருவரகுணமங்கை 99. திருப்புளிங்குடி 100. திருக்குறுகூர் 101. திருத்துளை வில்லி மங்கலம் 102. திருக்கோளூர் 103. திருக்குளந்தை 104. தென் திருப்பேரை

கன்யாகுமரி

105. திருவட்டாறு 106. திருவன்பரிசரம்

விண்ணுலகம்

107. திருப்பாற்கடல் 108. பரமபதம்

108 திருப்பதிகளை சுலபமாக நினைவில் கொள்ள நூற்றெட்டு திருப்பதியகவல் உள்ளது ( 59 அடிகள் கொண்டது இந்த அகவல்)

*

13. அறுபடை வீடுகள்

1. திருப்பரங்குன்றம்  2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் 3. திருவாவினன் குடி (பழனி)   திருத்தணி 4. திருவேரகம் (சுவாமிமலை) 5.திருத்தணி 6. பழமுதிர்சோலை

*

14. பஞ்ச சபைகள்

1.ஆலங்காடு – இரத்தின சபை 2. குற்றாலம் – சித்திர சபை 3. சிதம்பரம் – கனக சபை (பொன்) 4. நெல்வேலி – தாமிர சபை 5. மதுரை – இரஜத சபை (வெள்ளி)

*

15. பஞ்ச பூத ஸ்தலங்கள்

1. திருவாரூர், காஞ்சி – பிருத்வி – நிலம்

2. திருவானைக்கா – அப்பு – நீர் 3. திருவண்ணாமலை – தேயு – தீ 4. திருக்காளத்தி – வாயு – காற்று 5. சிதம்பரம் – ஆகாயம் – விசும்பு அல்லது வான்

*

at Vdidhyanatham, Jyotirlinga sthala

16. நவகிரஹ ஸ்தலங்கள்

அனைத்து தலங்களும் தமிழ்நாட்டில் உள்ளவை.

1. சூரியனார் கோவில் – சூரியன் – கஞ்சனூரை அடுத்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

2. திங்களூர் – சந்திரன் (சூரியனார் கோவிலிலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் திருவையாற்றுக்கு நான்கு கிலோமீட்டர் முன்னதாக அமைந்துள்ள தலம் இது)

3. வைத்தீஸ்வரன் கோவில் – செவ்வாய் (மாயவரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)

4. திருவெண்காடு – புதன்

5. ஆலங்குடி – வியாழன் (குரு) (கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)

6. கஞ்சனூர் – சுக்கிரன் (மாயவரத்திலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)

7. திருநள்ளாறு – சனி (காரைக்காலிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது)

8. திருநாகேஸ்வரம் – ராகு (கும்பகோணத்திற்கு அருகில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இது)

9. மேலப்பெரும்பள்ளம் – கேது (காரைக்கால் தரங்கம்பாடி வழியே பூம்புகார் செல்லும் வழியில் மேலையூருக்கு அருகில் உள்ள தலம் இது)

tags – பாரத ஸ்தலங்கள்! – 2

***************

Leave a comment

Leave a comment