ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 6 (Post No.9204)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9204

Date uploaded in London – –30 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 6

ச.நாகராஜன்

9. இந்தியா:

இந்தியர்கள் பழங்காலத்திலேயே ஹிந்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தருபவையே. என்ற போதிலும் இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியர்ன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது; பின்னர் போர்த்துகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரது ஆளுகைக்கு உட்பட்டது. லட்சக்கணக்கான ஹிந்துக்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதம் மாற்றப்பட்டனர். 1947ஆம் ஆண்டு முடிய இந்திய ஜனத்தொகையில் சுமார் 25% இஸ்லாமுக்கும் 1.5% கிறிஸ்தவத்திற்கும் மாற்றப்பட்டனர். ஹிந்துக்கள் இதர மதங்களுக்கு மாற்றப்பட்ட போது அவர்களோ மற்றவர்களை மதம் மாற்றி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இப்படியாக, இந்திய முஸ்லீம்கள் மற்றும் இந்திய கிறிஸ்தவர்கள் ஹிந்து மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களையே தங்கள் முன்னோராகக் கொண்டிருந்தனர். ஹிந்துக்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதம் மாறியதற்கு கீழே உள்ள காரணங்களைச் சொல்லலாம்:

  1. ஹிந்து மதத்தின் ஜாதி முறை:

ஹிந்து சமூகத்தின் அமைப்பு சில சமூகங்களை/ ஜாதிகளைக் கொண்டிருந்தது உலகியல் சார்ந்த விஷயங்களில் தீவிரமான குறைபாட்டைத் தந்தது. இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்த சமூகங்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்தைத் தந்தது. ஆகவே கீழ் ஜாதி ஹிந்துக்களும் பழங்குடியினரும் தங்களது பழைய நம்பிக்கைகளை விட்டனர். உதாரணமாக, (இப்போது பாகிஸ்தானில் உள்ள) பெஹாவல்பூரைச் சேர்ந்த, சமூக ரீதியில் கீழாக இருந்த லோஹானா ராஜபுத்திரர்கள் முஸ்லீம் சூபி பரிதால் இஸ்லாமுக்கு மாற சில சலுகைகளைத் தந்த போது,  இஸ்லாமுக்கு மாற்றப்பட்டனர். கிறிஸ்தவர்களில் சுமார் 80%, கீழ் ஜாதி பழங்குடியினர் ஆவர்.

1. இங்கு ஒரு விஷயம் குறிப்பிடத்தகுந்த ஒன்று – தேச பிரிவினை ஏற்பட்டு பஞ்சாப் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் ஏற்படுத்தப்பட்டவுடன் 10000க்கும் மேற்பட்ட (துப்புரவுத் தொழிலாளர்கள்) மெஹ்தார்கள் தங்கள் தர்மத்தைக் காத்துக் கொள்ளவும் தங்கள் பெண்களின் கௌரவத்தைக் காக்கவும் இந்தியாவிற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். துரதிர்ஷ்டவசமாகஅவர்கள் திருப்பித் திருப்பி வேண்டிய கோரிக்கைகளுக்கு  நேரு  செவி சாய்க்கவில்லை. இஸ்லாமிற்கு மாற்றப்படுகையில், அவர்களது பெண்மணிகள் தங்கள் தர்மத்தைக்  காக்கவும்  தங்களது சொந்த நம்பிக்கைகளில் ஊன்றி நிற்கவும்

எதிர்மறை விளைவுகளைத் தொடர்ந்து பொறுத்து வந்தனர். அவர்கள் திருப்பித் திருப்பி வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட போது கிறிஸ்தவ மிஷனரிகள்  முன் வந்து குறுக்கிட்டு, தங்களது உதவிக்கரங்களை நீட்டினர். இதுவே காலகிரமத்தில் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மெஹ்தார் ஜனத்தொகை கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டதில் முடிந்தது. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் படும் அவலமும் துயரங்களும் ஒருபோதும் உணரப்பட்டதில்லை. பாரதத்தை வந்து அடைந்த பின்னரும் சமூக ரீதியாக, தாங்கள் துப்புரவுத் தொழிலாளர்களாகவே தான் நடத்தப்படுவர் என்பதை மெஹ்தார் மக்கள் நன்கு அறிவர். ஆனால் தொடர்ந்து தங்கள் தர்மத்தைக் காப்பாற்றும் முயற்சியில் அப்போது ஆண்டு வந்த போலி செக்குலர்வாதிகளான (ஹிந்து விரோத) அரசினால் இறுதியாக அவர்கள் புறக்கணிக்கப்பட்ட போது தோல்வி அடைந்தனர்.

ஆதாரம், நன்றி  : Truth Vol 88 No 21 dated 11-12-2020

{Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus) }

இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:

Preserving Hinduism – Sanatan Dharma  

9. India: 

Indians were referred to as ‘Hindus’ in ancient times and the two terms were fairly synonymous. However, large parts of the country passed under Islamic rule and subsequently under Portuguese, French, Dutch and British rule. Millions of Hindus were converted to Islam and Christianity till; by 1947 C.E. approximately 25% and 1.5% of the population of the Indian Subcontinent had converted to Islam and Christianity respectively. While Hindus converted to other religions, they themselves refused to accept any converts. Thus, most indigenous Muslims(26) and Christians are descended from Hindu and Buddhist Indian ancestors. We may summarize the following causes for the conversion of Hindus to Islam and Christianity: 

a. Hindu Caste System: 

The social structure of the Hindu society put some communities/castes at a severe disadvantage in all temporal matters. Islam and Christianity offered these communities social equality and so several Low Caste Hindus and tribals left their ancestral beliefs. For instance, the socially inferior Lohana Rajputs of Bahawalpur (now in Pakistan) converted to Islam when the Muslim Sufi Farid offered them sops for converting to Islam. About 80% Christians in India have Low Caste or Tribal origins.

[1. It deserves mention that after the partition of Punjab and creation of Pakistan, more than 10,000 Mehtars (Sanitary Workers) sought safe passage to India to save their Dharma and honour of their women. Unfortunately Nehru lent a deaf air to their repeated prayers. Their women continued to bear the brunt of the rabid proselytising Moslems, to protect their Dharma and continued to remain anchored to their moorings. After their repeated appeals were ignored, Christian Missionaries came forward and extended their helpful hands to intervene. This ultimately resulted in the conversion of the tormented Mehtar population to Christianity over years. The woes and sorrows of those Hindus in Pakistan was never recognised. The Mehtars knew that socially they will continue to remain sweepers only after reaching Bharat, but failed in their persistent effort to save their Dharma till being finally ignored by the then ruling pseudo-secular (anti-Hindu) ruling dispensation. 

***               தொடரும்

ஹிந்து, எண்ணிக்கை! – 6, Hindu census 6

Leave a comment

Leave a comment