பிரெஞ்ச் நாவல் ஆசிரியர் எமில் ஸோலா (Post No.9952)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9952

Date uploaded in London – 8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

19-ம் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல் ஆசி ரியர்களில் ஒருவர் எமில் ஸோலா (EMILE  ZOLA ) . இவர் உள்ளதை உள்ளபடியே வருணிக்கும் , தத்ரூபமாக வருணிக்கும் பாணியை பின்பற்றுபவர். இதை நேச்சுரலிசம் NATURALISM என்பர் . அவர் தொழிலாளர் வர்க்கம் பற்றிய உண்மைகளை நாவலில் கொடுத்தார். பாரீஸ் நகரில் பிறந்தாலும் தென்கிழக்கு பிரான்சில்தான் அவர் வசித்தார்.

அவருக்கு 7 வயதானபோது தந்தை காலமானதால் , குடும்பம் பணச் சிக்கலில் மாட்டிக்கொண்டது. 18 வயதில் அவர் தாயாருடன் பாரீஸ் நகரில் குடியேறினார். பள்ளி இறுதித் தேர்வை கோட்டைவிட்டார் (FAILED). இதனால் ஒரு பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர்

நாவல்களை எழுதத் துவங்கினார். 27 வயதில் அவர் எழுதிய தெரசா ரகீன் THERESE RAQUIN நாவல் அச்சாகியது

சோலா ஒரு அரசியல் சார்பு பத்திரிக்கைக்காரர். அப்போதைய மூன்றாம் நெப்போலியன் தலைமயில் உருவான இரண்டாவது குடியரசு ஆட்சியை அவர் குறைகூறினார். 31 வயதில் இது பற்றிய 20  தொடர் நாவல்களை எழுத ஆரம்பித்தார். ஆனால்  அதை 22 ஆண்டுகளுக்குப் பின்னரே முடித்தார். இரண்டாவது குடியரஸின் கீழ் வாழ்ந்த ஒவ்வொரு குடும்பத்தையும் வருணிக்கும் நாவல்கள் அவை.

வெவ்வேறு தொழில்புரிவோரின் குடும்பங்களைக் கதைகளின் கருப்பொருளாகப் பயன்படுத்தியதால் விபசாரி முதல் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் வரை இவர் நாவல்களில் இடம்பெற்றனர். ஏழை விவசாயிகளின் வாழ்க்கையையும் படம்பிடித்துக்காட்டினார்.

இதே பாணியில் வேறு இரண்டு தொடர் நாவல்களையும் எழுதினார். ‘மூன்று நகரங்கள்’ ‘நான்கு போதனைகள்’ என்று அவைகளுக்குத் தலைப்பு.வாழ்க்கையின் கசப்பான  பகுதியை வருணித்தாலும் பண்புகளையும் குணநலன்களையும் ஆதரித்துப் போற்றினார். 1898ல் பிரென்சு ஜனாதிபதிக்கு ஒரு யூத மத போர்வீரன் ‘ஸே அக்யூசே’ – நான் குற்றம்சாட்டுகிறேன் என்று எழுதிய கடிதத்தை ஆதரித்தார். அதை எழுதிய வீரனின் பெயர் ஆல்ப்ரெட் ட்ரைபஸ் .அந்த வீரன் மீது தேசத்துரோக- ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவருக்கு பல விரோதிகள் தோன்றினர் .

அவர் 62 வயதில் வீட்டில் புகைபோக்கியில் கசிந்த கார்பன் மோனாக்சைட் (CARBON MONOXIDE) விஷவாயுவை சுவாசித்ததால் இறந்தார். இது கூட விபத்து அல்ல; அவரைக் கொல்லத்  திட்டமிட்டோர்,  புகைபோக்கியை அடைத்து, விஷ வாயு கசிய வழிசெய்தனர் என்று பலரும்  கூறுவர்.

பிறந்த தேதி – ஏப்ரல் 2, 1840

இறந்த தேதி – செப்டம்பர் 29, 1902

வாழ்ந்த ஆண்டுகள் – 62

எழுதிய நூல்கள் –

1867 – THERESE RAQUIN

1873 – THE BELLY OF PARIS

1877 – THE GROG SHOP

1880 – NANA

1885 – GERMINAL

1887-  THE SOIL

1890 – THE HUMAN ANIMAL

1894-98- THE THREE CITIES- 3 VOLS

1898- I ACCUSE

1899- 1902- THE FOUR GOSPELS – 4 VOLS

–SUBHAM–

tags-நாவல் ஆசிரியர் எமில் ஸோலா, Emile Zola, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: