WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,300
Date uploaded in London – – 5 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமி ராமதீர்த்தர்! – 4
சொல்ஜாலங்களில் அவர் வல்லவர். அதற்கு ஒரு உதாரணம்:
Say what you want to say, not what you ought nought.
Q : What is matter?
A : Never Mind
What is Mind?
No matter.
Q : Why are newspapers reliable?
A : They lie, then they lie again, or they re lie and so are reliable
அவரது நகைச்சுவைக்கு ஒரு உதாரணம் இதோ:
The President of a Railway Company being told by a fellow passenger in the train that he ( the passenger) had travelled on that road without paying any fare got his capitalist’s curiosity excited.
He paid $ 20 to learn the way to do that
The man said, “by walking!”
தனது கருத்துக்களை விளக்க அவர் இப்படிப்பட்ட ஜோக்குகளைச் சொல்வது வழக்கம்.
உத்வேகமூட்டும் எழுச்சியூட்டும் சம்பவங்களை அவர் தனது குறிப்பேடுகளில் பதிவு செய்து வைத்திருப்பார். அதை சமயம் வரும்போது அவர் சொல்வார்; அது அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும். அவர் கூறும் சில சம்பவங்கள் இதோ:
A man wanted to collect $ 2000 to start a hospital. He advertised for a lecture. He found the hall with only one man inmate. He lectured, that single man gave the $ 2000. (from notebook 5)
புதிர்களில் அவருக்கு அளவற்ற ஆர்வம் உண்டு. அதையும் அவ்வப்போது அவர் பயன்படுத்துவார். சில எடுத்துக்காட்டுகள் ;
Q : Why are people very generous when they hear a sermon?
A : They give it all away.
Q : Which is the largest room in the world?
A : Room for improvement
Q : What is that a king can do and God cannot?
A : A king can banish or deport man of his subjects from his kingdom, God cannot.
Q : What does a man see everyday and God never see?
A : His equal
Q : Why does a preacher have an easier time than a Doctor or Lawyer?
A : Easier to preach than practice.
Q : When is it right to lie?
A : When you are in bed.
Q : Is life worth living?
A : It depends on the liver.
தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றியவர் ஸ்வாமி ராமதீர்த்தர்.
ஏராளமான உவமைகளை அடுக்கடுக்காகச் சொல்வது அவர் வழக்கம். அறநெறி போதிக்கும் parables எனப்படும் குட்டிக்கதைகளை அவர் அடிக்கடி கூறுவதுண்டு. இந்தக் குட்டிக் கதைகள் புரிந்து கொள்வதற்குச் சிரமமான பல பெரிய உண்மைகளை அனாயாசமாக விளக்கி விடும்.
உதாரணத்திற்கு ஒரு குட்டிக்கதையைப் பார்க்கலாம் :
ஆண்டி ஒருவர் தனது சணலால் ஆன கம்பளியை இழந்து விட்டார். ஆண்டியை சோதனை செய்வதற்காகவோ என்னவோ ஒரு கான்ஸ்டபிள் அதைத் திருடி விட்டார். போலீஸ் ஸ்டேஷன் அருகே தான் அந்த ஆண்டி வசித்து வந்தார். நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவர் அங்கு இருந்த தானேதாரிடம் (போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரி – பழைய கால பதவியின் பெயர் இது) புகார் அளித்தார்.
தானேதார் : எதை இழந்து விட்டீர்கள்?
ஆண்டி : என்னுடைய எல்லாமே போச்சு. முதலில் என் மெத்தை போச்சு.
தானேதார் : அப்புறம் வேற என்ன?
ஆண்டி : என்னோட படுக்கை
தானேதார் : அப்புறம் வேற என்ன?
ஆண்டி : என்னோட போர்வை
தானேதார் : அப்புறம் வேற என்ன?
ஆண்டி : என்னோட கோட்டு மற்றும் மேலங்கியும் போச்சு
தானேதார் : அப்புறம் வேற என்ன?
ஆண்டி : என்னோட தலகாணியும் போச்சு
தானேதார் : அப்புறம் வேற என்ன?
ஆண்டி : என்னோட தரை விரிப்பும் போச்சு
தானேதார் : வேற ஏதாவது உண்டா?
ஆண்டி : ஆமாம், உண்டு. என்னோட குடையும் போச்சு
தானேதார் : அவ்வளவு தானா, இன்னும் இருக்கா?
ஆண்டி : இருக்கு சார், என்னோட வேஷ்டி, அதுவும் போச்சு
தானேதார் : வேற ஏதாவது போச்சா, யோசனை பண்ணி சொல்லுங்க
ஆண்டி : அப்புறம்.. அப்புறம்.. அப்புறம்…
அருகில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் விழுந்து விழுந்து சிரித்தார். ஆண்டியை நோக்கி ஏளனமாக அப்புறம்..அப்புறம் . அப்புறம் என்று கேலி செய்தார் அவர். “உன்னோட குடிசை ஒரு பெரிய வணிக கோடவுனா என்ன, எல்லாம் போறதுக்கு” என்றார் அவர்.
பின்னர் ஆண்டியினுடைய மெத்தையை அவர் மேல் தூக்கி எறிந்த கான்ஸ்டபிள் தானேதாரை நோக்கி, “சார்! இது மட்டும் தான் அங்கே திருடு போனது” என்றார்.
ஆண்டி அந்த மெத்தையைத் தன்னுடையது தான் என்று அடையாளம் காட்டி அதைப் பெற்றுக் கொண்டார். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நகர ஆரம்பித்தார்.
ஆனால் தானேதார் அவரை அரெஸ்ட் செய்தார் – பொய் புகார் அளித்த காரணத்திற்காக!
ஆண்டி புன்முறுவல் பூத்தார். தான் ஒரு பொய்யையும் சொல்லவில்லை என்றார்.
மெத்தையை தன் மேல் போட்டுக் கொண்டு இதோ என் மெத்தை என்றார். பின்னர் அதைத் தரையில் விரித்து அதன் மேல் உட்கார்ந்து, “இதோ எனது படுக்கை” என்றார்.
பிறகு அதைத் தன் தலை மேல் விரித்துக் காண்பித்து, “இதோ, எனது குடை” என்றார்.
இப்படி ஒவ்வொரு விளக்கமாக அவர் கொடுத்துக் கொண்டே போனார்.
பிரபஞ்சத்தை சிருஷ்டித்த பிரம்மத்தை உணர்ந்த ஒருவனுக்கு பிரம்மம் தான் எல்லாமே! அவனது உறவெல்லாம் பிரம்மம் தான். அவனை ஆள்வதும் பிரம்மமே; ஆளப்படுவதும் பிரம்மமே. அவனது நண்பர்களும் பிரம்மமே, எதிரிகளும் பிரம்மமே. அவனது தந்தை, தாய், சகோதரன், சகோதர் எல்லாமே பிரம்மமே. அவனுக்கு பிரம்மம் தான் ஆண்டியினுடைய மெத்தை!
ஸ்வாமி ராமதீர்த்தர் பிரம்மத்தை எப்படி விளக்கி விட்டார் பாருங்கள், ஒரு சின்னக் குட்டிக் கதையின் மூலமாக!
ஸ்வாமி ராமதீர்த்தரைப் பற்றி விரிவாக விளக்கி எழுதிய நூல் தமிழில் இல்லாதது ஒரு பெரும் குறை.
ஆங்கிலத்தில் பூரண் சிங் (Puran singh) எழுதிய வரலாறு அதிகாரபூர்வமான வரலாறு.
அடுத்து லக்னௌ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பி.பிரிஜ்நாத் சர்கா (P.Brijnath Sharga M.A., LL.B) எழுதிய Swami Rama His Life & Legacy என்ற நூல் ஏராளமான சம்பவங்களைத் தருகிறது. 720 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 1936ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
அடுத்து பாரதீய வித்யா பவன் வெளியிட்ட வாழ்க்கை வரலாறும் குறிப்பிடத் தகுந்தது. இந்திய அரசு ஸ்வாமி ராமதீர்த்தரின் தபால்தலையை வெளியிட்டு அவரைக் கௌரவித்துள்ளது.
ஸ்வாமி ராமதீர்த்தரைப் படிப்போம்; நடைமுறை வேதாந்தத்தை அறிந்து கடைப்பிடிப்போமாக.
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை YOU TUBE யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை நான்கு பகுதிகளாகத் தரப்பட்டது .
xxxxxx Subham xxxx
முற்றும்