பிராமணன் பெரியவனா ? ஆட்சி செய்பவன்  பெரியவனா? புறநானூறு பதில் (Post.10,599)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,599

Date uploaded in London – –    26 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எல்லோருக்கும் தெரிந்த கதை விசுவாமித்திரர்– வசிஷ்டர் மோதல் கதை.  இது ராமாயணத்தில் பால காண்டத்திலும் , மஹா பாரதத்தில் முதல் பர்வமான ஆதி பருவத்திலும் உளது

விசுவாமித்திரர் ஒரு அரசன்; அதாவது க்ஷத்திரியன். வசிஷ்டர் ஒரு முனிவன்; அதாவது பிராமணன்.

ஒரு நாள் காட்டில் வேட்டையாடிக் களைப்படைந்த விசுவாமித்திரர் பெரிய பரிவாரங்கள் , படைவீரர்கள் புடைசூழ, வசிஷ்டரின் ஆஸ்ரமத்துக்கு வருகிறார். அவரும் அரசனுக்குரிய மரியாதைகளுடன் வரவேற்று ராஜ உபசாரம் செய்கிறார். இறுதியில் விலை உயர்ந்த பரிசுப்  பொருட்களை– ஜொலிக்கும் ரத்ன மணிகளுடன் கூடிய நகைகளையும் அளிக்கிறார். விசுவாமித்திரருக்கு ஒரே வியப்பு. காட்டில் வாழும் இந்த ஐயருக்கு எப்படி இவ்வளவு வசதிகள் ? என் பரிவாரம் முழுதும் சாப்பிட இவர் எப்படி சமையல் செய்தார்? என்று எண்ணி அவரிடமே கேள்வியும் கேட்டார்.

வசிஷ்டரும் பதில் சொன்னார்: “என்னிடம் நந்தினி என்று ஒரு பசு உள்ளது. அது கேட்டதை எல்லாம் தரும் காமதேனு” என்றார் .உடனே அதை எனக்குக் கொடு என்று விசுவாமித்திரர் கேட்டார். வசிஷ்டர் மறுத்தார். நான் அரசன்! என்ன செய்கிறேன் பார், என்று பலப் பிரயோகம் செய்தார். நந்தினி என்னும் பசு மாட்டை இழுத்தார், அடித்தார், உதைத்தார் அது நகரவில்லை.

அப்போது  வசிஷ்டரின் உத்தரவின் பேரில் அந்த பசுமாட்டின் உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வெவ்வேறு இன மக்கள் வந்தர். அவர்கள் திராவிடர்கள், பல்லவர்கள், சகரர்கள் , ஹூணர்கள், புலிந்தர்கள், யவனர்கள் ஆவர். அவர்கள் எல்லோரும் வசிட்டனுடன் சேர்ந்து விசுவாமித்திரர்  படையை துவம்சம் செய்தனர். விசுவாமித்திரர் படு தோல்வி அடைந்தார். அப்போது அவர் என்ன சொன்னார் என்று வியாசர் நமக்கு எழுதி வைத்துள்ளார். ((இதிலுள்ள திராவிட யவன, பல்லவ என்பதெல்லாம் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் உண்டு; அவற்றைத் தனியாகக் காண்போம்; மனு ஸ்ம்ருதியிலும் இந்த இனங்கள் பட்டியல் வருகிறது.))

திக் பலம் க்ஷத்ரிய பலம் பிரம்ம தேஜோ பலம் பலம்

பலாபலம்  வினிஸ்ரித்ய தப ஏவ பலம் பலம்

பொருள்

வெட்கம், வெட்கம். க்ஷத்ரிய பலம் ஒரு பலமா ? பிரா ணனின் பலம் அன்றோ உண்மையான பலம்.பலத்தையும் அபலத்தையும் /வலுவின்மை ஒப்பிட்டால் தவமே பெரிய பலம்..

அதாவது தவ வலிமையுடைய ஐயர் பலம்தான் உண்மையான பலம். இதை புறநானூற்றுப் புலவரும் வள்ளுவரும் பாடியுள்ளனர். அதைக் காணும் முன்னர் விசுவாமித்திரர்  என்ன செய்தார் என்பதையும் காண்போம். அய்யர் போல நமக்கும் சக்தி கிடைக்க நாமும் தவம் செய்வோம் என்று போகிறார். இரண்டு முறை அஹங்காரம் என்னும் வலையிலும், காதல்  வலையிலும் சிக்கித் தொ      ற்றுப் போகிறார். திரிசங்கு , மேனகா கதைகளில் இவற்றைக் காணலாம். இறுதியில் வெற்றி பெறுகிறார். வசிஷ்டர் அவரை ‘ஐயரே வருக வருக’ என்று அழைக்கிறார். விசுவாமித்திரருக்கு பரம சந்தோஷம் . அதை இன்றுவரை நாமும் ‘வசிஷ்ட்டர் வாயால பிரம்மரிஷி’ என்று மரபுச் சொற்றொடராக  IDIOMS AND PHRASES பயன்படுத்துகிறோம்.  இந்த மூன்று TEMPTATIONDS டெம்ப்ட்டேஷன்களை புத்தரும் ஏசுவும் ‘காப்பி’ அடித்தனர். மாறன் வந்தான் ;புத்தர் ஜெயித்தார் என்று.

உலகிலுள்ள எல்லா குற்றங்களும் காமம், க்ரோதம்,லோபம் என்ற மூன்று விஷயங்களளால்தான் நடைபெறுகினறன. பகவத் கீதையில் இதை நரகத்தின் மூன்று வாசல்கள்  என்று கிருஷ்ண பரமாத்மா வருணிக்கிறார்.

புறநானூறு பதில்

பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தியற்றே!

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்

கைவிட்டனரே காதலர்; அதனால்

விட்டோரை விடா அள்திருவே;

விடாஅதோர் இவள் விடப்பட்டாரே

–வான்மீகியார், புறம் 358

கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.

xxx

இந்தக் கருத்து 2000 ஆண்டுப் பழமையான புற  நானூற்றிலும் பின்னர் வந்த திருக்குறளிலும் உளது .

பாடலின் சொற்களை மட்டும் பாருங்கள் – உலகத்தையும் தவத்தையும் தரசுத் தட்டில் வைத்து நிறுத்தால் , தவம் மிகப்பெரியது ; உலகம் சிறு கடுகு போன்றது (ஐயவி ) பாடலை எழுதிய புலவரின் பெயர் வான்மீகி என்பதால் இது ராமபிரான் பற்றிய க தை  என்றும் உரைகாரர்கள் கருதுகின்றனர். இங்கு வையம் என்பதை கிருஹஸ்தாச்ரமம் கொண்ட இல்லறவாசிகள் என்று உரை கூறுகிறது. அதாவது தவமே வலியது. சிலர்தான் அதைச் செய்ய முடியும்; அதனால்தான் உலகில் தவ சீலர்கள் குறைவு. மற்ற எல்லோரும் காதல் வலையில்- காம வலையில் சிக்கி இல்லறம் நடத்துகின்றனர். இதுவும் ‘பிரம்ம தேஜோ பலம் பலம்’ என்ற விச்வாமித்திரர் வாக்கினை மெய்ப்பிக்கிறது.

திருவள்ளுவர் ஒரு குறளில் முனிவர்கள் கோபித்தால் அ ரசாங்கம் பொடித்து விழும் என்கிறார். நஹுஷன் என்ற இந்திரனை அகஸ்தியர் என்ற பிராமணர் வீழ்த்திய கதை நமது நூல்களில் உளது. நந்தன் என்னும் நாலாம் வர்ண மன்னன், பிராமண சாணக்கியனை அவமானப்படுத்தியதால் அவன் அந்த வம்சத்தையே வேரோடு அழித்து, மயில் வளர்க்கும் ஜாதியைச் சேர்ந்த,  மௌர்ய சந்திர குப்தனை பணியில் அமர்த்தி அலெக்ஸ்சாண்டர் படைகளையும் பயமுறுத்தி திரும்பி ஓடச் செய்ததையும் நாம் அறிவோம்.

இதோ இந்திரன் பற்றிய திருக்குறள்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

உயர்ந்த கொளகைகளை உடைய பெரியார்கள் கோபம் அடைந்தால், இந்திரன் போல (பெரிய வேந்தர்களும்) ஆட்சியை இழந்து கெட்டுப்போவர்.

இங்கு ‘வேந்தன்’ என்ற சொல் இரு பொருளுடைத்து ; பரிமேல் அழகர் தொல்காப்பியரைப் போல வேந்தன் என்றால் இந்திரன் என்றே பொருள் சொல்கிறார்.

அடுத்த குறள்

இறந்தமைந்த சார்புடையராயினும்  உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின் – 900

பொருள்

பெரியவர்கள் கோபம் கொண்டால் , எவ்வளவு ஆதரவு உடைவராக இருந்தாலும், தப்பித்து உயிர் வாழ்தல் முடியாது

ஆக ‘தபோ பலம்’ – தவம் என்னும் வலிமை – மிகவும் சக்தி வாய்ந்தது; அரசர்களையும் விழுத்தாட்டும் வல்லமை உடையது  என்று மஹா பாரதம், புற நானூறு , திருக்குறள் ஆகியன இயம்புவதைக் கண்டோம்

வாழ்க முனிவர்கள் (அந்தணர்கள்); வாழ்க தவ வலிமை.

முனிவர்கள் = அந்தணர்கள் என்ற கருத்தும் தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் இழையோடி செல்வதைக் காணலாம். முனிவர்கள் பலம் இந்திரனையும் வீழ்த்தும் என்பதற்கு பிராமண சிரேஷ்டர்களான அகஸ்தியரையும், வஷிஷ்டாரையும்தான் எடுத்துக்கட்டுகளாகத் தந்துள்ளனர்.

உண்மைப் பொருளும் அஃதே !

அந்தத்தை அணவுவார் அந்தணர் (உள்  முகப் பார்வை உடையோர் )

பிரம்மத்தை நாடுவார் பிராஹ்மணர் !

XXXX

MY OLD ARTICLES

மஹாலெட்சுமி வசிக்கும் இடங்கள்: புறநானூறு …

https://tamilandvedas.com › மஹ…

20 Jan 2017 — Pictures are taken from different sources; thanks. contact; swami_48@yahoo.com. பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்.

You visited this page on 23/01/22.


January | 2017 | Tamil and Vedas | Page 7

https://tamilandvedas.com › 2017/01

·

21 Jan 2017 — பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம். ஒருபகல் எழுவர் எய்தியற்றே!

–SUBHAM—

TAGS– பிராமண பலம், க்ஷத்ரிய பலம், ஆள்வோர், வசிஷ்டர், விசுவாமித்திரர்,  பெரியவன் யார்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: