Picture of Platinum One Kilogram weight in Paris Museum
Post No. 10,750
Date uploaded in London – – 16 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிளாட்டினம் கிடைக்கும் இடம் :-
பிளாட்டினம் அதிக அளவில் கிடைப்பது தென் ஆப்பிரிக்காவில்தான். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது ரஷ்யா. வட அமெரிக்காவில் ஒண்டாரியோ (Ontario)பகுதியிலும் கிடைக்கிறது.. இது கட்டிகளாகவும் (Nuggets), ஏனைய உலோகங்களுடன் னும் கிடைக்கும்.ஆனால் உருகு நிலை (Melting Point) அதிகம் என்பதால் உலோகங்களாக வார்ப்பது எளிதல்ல.
உலக உற்பத்தியில் பாதி அளவு நகைகளைச் செய்ய பயன்படுகிறது. 30 சதவிகிதம் கிரியா ஊக்கி கன்வர்டர்களிலும் (Catalyst Coverters); மீதியுள்ள 20 சதவிகிதம் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. ஜப்பானியர் பிளாட்டினம் நகைகளை அதிகம் விரும்புகின்றனர். சீனர்களும் வைரஸ் நோய் தாக்கிய காலத்திக்கல் பிளாட்டின இறக்குமதியை அதிகரித்தனர். மோதிரம் நெக்லஸ் , தோடு முதலியன செய்யப்படுகின்றன.
இதை பாரிஸ் நகரிலுள்ள தரக் கட்டுபாடு எடை நிர்ணய அமைப்பு ‘ஒரு கிலோ என்றால் என்ன’, ‘ஒரு மீட்டர் என்றால் என்ன’ என்பதற்கு பிளாட்டின அளவுகளையே பயன்படுத்துகிறது. ஏனெனில் இதை காற்றோ வேறு ரசாயனமோ அரிக்க முடியாது. மேலும் இரிடியம் (Iridium) என்னும் உலோகத்தைக் கொஞ்சம் சேர்த்தாலும் மேலும் வலு கிடைத்துவிடுகிறது
இந்த உலோகம் மின்சார, மின் அணு, விமானம் கட்டும் தொழில்களில் உபயோகப்படுகிறது கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் (Coating Hard disks) பூச்சு கொடுக்கவும், மின்சாரத்தில் ஓடும் வாகனங்களில் பேட்டரிகளிலும் பயன்படுகிறது ;கண்ணாடி ஆலைகளில் ஆப்டிகல் பைபர் , எல்.சி.டி (Liquid Crystal Display) . டிஸ்பிளே ஆகியவற்றில் இதை உபயோகிக்கின்றனர்
ஜெட் எஞ்சின்கள், கார்களின் ஸ்பார்க் பிளக்குகள் இருதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் (Pace Makers) பேஸ் மேக்கர்ஸ், பலூன் கதீட்டர் (Balloon Catheter) ஆகியவற்றிலும் பிளாட்டினத்தைக் காணலாம். .
1997ல் அமெரிக்கா 25 டாலர் பிளாட்டினம் நாணயத்தை வெளியிட்டது.
தங்கத்தைப் போலவே இதையும் மெல்லிய தகடாகத் தட்ட முடியும். ஒரு மைக்ரோ மீட்டர் தடிமனுக்கும் இதைத் தட்ட முடிவதால் விண்வெளி ஏவுகணைகளிலும் இதைப் பொருத்துகிறார்கள்
ரசாயன குணங்கள்
Chemical Symbol குறியீடு – பி.டி Pt
Atomic Number அணு எண் 78
உருகு நிலை 1772 டிகிரி C செல்சியஸ்
கொதி நிலை 3800 டிகிரி C
தோற்றத்தில் வெள்ளி போலவே இருக்கும். ஆஸ்மியம், இரிடியம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அடர்த்தி – டென்சிட்டி Density — உடையது. காற்றில் கருக்காது. ஆனால் சூடாக்கப்பட்ட ராஜ திராவகத்தில் (Aqua Regia) கரையும் இதற்கு ஆறு ஐசடோப்புகள் (Isotopes) உண்டு. ஒன்று மட்டும் மிகவும் சிறிய அளவு கதிரியக்கம் உடையது.
பிளாட்டினத்தின் அபூர்வ குணங்களில் ஒன்று வினைகளைத் தூண்டிவிடும் (catalyst). சாதாரண அறை வெப்பத்தியேயே வினைகளை நிகழச் செய்யும் கிரியா ஊக்கி. ஒரு எடுத்துக் காட்டைக் காண்போம். ஒரு பிளாட்டினம் கம்பியை மெதனால் எனப்படும் (Methyl Alcohol) மெதில் ஆல்கஹாலின் ஆவியில் காட்டினால் அது செஞ் சுடராக ஒளிவிடும் அப்போது பார்மால்டிஹைட் (Formaldehyde) என்னும் உருவாக ஆக்சிடேஷனை ஊக்குவிக்கிறது .இதே குணத்தைப் பயன்படுத்தி சிகரெட் லைட்டர்களும் செய்தார்கள் ;எரிபொருள் வரும் இடத்தில் பிளாட்டினம் இருந்தால் உடனே அது ஆக்க்சிஜனுடன் கலந்து தீயை உண்டாக்க உதவுகிறது.
கிரியா ஊக்கி என்பது என்ன ?
தான் ஒரு மாறுதலையும் அடையாமல் மற்ற ரசாயன விளைவுகளைத் தூண்டி விடுவது கிரியா ஊக்கி (Catalyst).
ஏதோ ஒரு பெரிய செயலை நீங்கள் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அப்போது உங்களின் அருமை நண்பர் வருகிறார். உங்கள் திட்டத்தைக் கேட்டவுடன், ‘கவலையே படாதே ; கொஞ்சமும் தயங்காதே; உடனே இறங்கு’ என்று உங்களை ஊக்குவிக்கிறார். ‘குட் பய்’ சொல்லி விட்டுப் போய்விடுகிறார். அவர் எந்த மாறுதலையும் அடையவில்லை. அவர் சொன்ன ‘சொல்’, கிரியா ஊக்கியாக இருந்து உங்களை ஊக்குவிக்கிறது. உங்கள் செயலில் உங்களுக்கும் பெரிய வெற்றி கிடைக்கிறது. அவர்தான் கிரியா ஊக்கி ; உங்கள் வெற்றிதான் ரசாயன கிரியை/ வினை
XXX
Picture of Platinum necklace and ear ring
ஒருகாலத்தில் தங்கத்தை வீட அதிகம் மதிப்புடையதாக இருந்த பிளாட்டினம் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையை விட மிகவும் குறைந்துவிட்டது. காரணம் இதில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்ற எண்ணம் குறைந்துவிட்டது. மேலும் பாரம்பர்யமாக கல்யாண நகைகளை வாங்குவோர் தங்கத்தையே நாடுகின்றனர். பணக்காரர்களுக்கு மட்டுமே பிளாட்டினம் என்றால் என்ன என்று தெரியும் .அவர்கள் இன்றும் பிளாட்டினம் நகைகளை அணிந்து வலம் வருகின்றனர்.
பிளாட்டினத்தின் விலை மிகவும் ஏறியும் இறங்கியும் ஊசல் ஆடுகிறது இதை எழுதும் நேரத்தில் தங்கத்தின் விலையில் சரி பாதியாக பிளாட்டினத்தின் விலை சரிந்துவிட்டது .
பிளாட்டினத்தின் பெயர் ‘வெள்ளி’ என்ற ஸ்பானிய மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. அந்த மொழியில் பிளாட்டினா என்றால் கொஞ்சம்/ சின்ன வெள்ளி (Little Silver லிட்டில் சில்வர்) என்று பொருள்.
பிளாட்டினத்தை யார் கண்டுபிடித்தார்கள் என்றே சொல்ல முடியாது. அது என்ன என்று அறியாமலேயே பழங் காலத்தவர் நகைகளைச் செய்து அணிந்தனர்.
எகிப்தில் 2700 ஆண்டுகளுக்கு முன்னரும், தென் அமெரிக்காவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரும் பிளாட்டினம் நகைகளைச் செய்தனர் .முதலில் தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளைக் கொள்ளையடித்த ஸ்பானியர்கள் தங்கத்தை மட்டுமே ஸ்பெயினுக்கு கொண்டு சென்றனர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவர்களுக்கு இதன் மதிப்பு தெரிந்தது. தோற்றத்தில் வெள்ளி போல இருந்தாலும் அதைப் போல காற்றில் கருப்பாகாது என்பதைக் கண்டனர்.
முதலில் ஸ்பானிய அதிகாரிகள், பிளாட்டின உற்பத்திக்குத் தடை போட்டனர். இதை தங்கத்துடன் கலந்து நகைகளில் கலப்படத்தை (Adulteration) ஊக்குவிப்பதாக அவர்கள் எண்ணினார்கள். ஆகையால் இருக்கும் கையிருப்பை கடலின் ஆழத்தில் இற க்கும்படி உத்தரவிட்டனர் .பின்னர்தான் இதன் மஹிமை புரிந்தது. தென் அமெரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்குக் கப்பலில் அனுப்பினர் . ரஷ்யாவில் யூரல் மலைகளில் இது கிடைத்தவுடன் ரூபிள் நாணயங்களைக்கூட பிளாட்டினத்தில் வெளியிட்டனர். 15 லடசம் நாணயங்களை வெளியிட்ட பின்னர் இது அபூர்வமாகக் கிடைக்கும் உலோகம் என்ற ஞானோதயம் ஏற்பட்டது. அதற்குள் அந்த உலோகத்தின் மதிப்பு , நாணயத்தின் மதிப்பைவிட உயர்ந்தது. உடனே ரஷ்யா , நாணயம் அடிப்பதை நிறுத்தியது!
Picture of American 25 Dollar Platinum coin
—subham–
tags — பிளாட்டினம், நகை, நாணயம், உபயோகம், கிரியா ஊக்கி , இருதய நோய்