WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,863
Date uploaded in London – – 19 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
வெங்கடாசலபதியிடமே விளையாட்டா – 2
ச.நாகராஜன்
TTDயின் விதிகள் ஹிந்துக்கள் மட்டுமே இங்கு ஊழியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.
அதையும் மீறி இவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
2012 மற்றும் 2018ஆம் ஆண்டில் இங்கு வருகை புரிந்த பக்தர்கள், நாகராஜு, யசோதம்மா, கிருஷ்ணம்மா, ஈஸ்வரய்யா என்ற பெயரைக் கொண்ட நால்வர் இங்கு வந்த பக்தர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்ற போது கையும் களவுமாகப் பிடித்து விட்டனர். அநத நால்வரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்..
இதைப் பற்றி TTD அதிகாரிகள் வெட்கமே இல்லாமல், ‘ஆமாம், இங்கு மதமாற்றம் நடைபெறத்தான் செய்கிறது’ என்கின்றனர்.
இப்படி ஹிந்து அல்லாதவரை ஊழியர்களாகச் சேர்ப்பது Y.S. ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல் அமைச்சராக இருந்த போதிலிருந்தே ஆரம்பமாகி விட்டது. ரெட்டி என்று பெயரில் வருவதால் அவரை யாரும் ஹிந்து என்று நினைத்தால் அது மஹா தப்பு. அவர் ஒரு கிறிஸ்தவர். (மதவெறி பிடித்த கிறிஸ்தவர் என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது)
இன்னொரு ஷாக்கிங் நியூஸையும் ஏழுமலையானின் பக்தர்களுக்கு இங்கு தெரிவிக்க வேண்டியுள்ளது.
ஏழு மலைகளில் இரண்டு மட்டுமே இப்போது TTDயின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள ஐந்து மலைகளும் அரசின் பிடியில்- கட்டுப்பாட்டில் – உள்ளன. பிரிட்டிஷார் ஆட்சி செய்த போது உள்ள ஆவணங்கள் இந்த ஏழு மலைகளும் TTDயின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் குறிப்பிடுகின்றன.
ராஜசேகர ரெட்டி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது இங்குள்ள மலைகளில் சர்ச்சுகள் கட்ட ஏராளமான கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சர்ச்சுகளும் ஏழுமலையான் கோவிலுக்கு இணையாக பிரம்மாண்டமாக அமைக்கத் திட்டமிடப்பட்டன.
ராஜசேகர ரெட்டி B.கருணாகர ரெட்டி என்பவரை TTDக்கு நியமித்தார். ரெட்டி என்ற சொல் பெயரில் இருந்தாலும் கூட கருணாகர ரெட்டி உண்மையில் ஒரு கிறிஸ்தவரே.
அவர் வந்த பிறகு நிறைய கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இங்கு வேலைக்குச் சேர்க்கப்பட்டனர்.
ஆகம சாஸ்திர விதிகளின் படி ப்ரஹ்மோத்ஸவத்தின் போது வெங்கடாசலபதிக்கும் ஹிந்துக்கள் மட்டுமே வஸ்திரங்களைத் தர வேண்டும் என்பது விதி.
மஹாராஜாக்கள் ஆட்சி புரிந்த பழைய காலத்திலிருந்து இந்த விதி அமுலில் இருந்து அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ராஜசேகர ரெட்டி வந்த பிறகு அந்த கிறிஸ்தவரே வெங்கடாசலபதிக்கு ஆடைக:ளைத் தந்தார்.
வெள்ளண்டி, வெள்ளண்டி என்று சொல்லி பக்தர்களை அப்புறப்படுத்தும் அர்ச்சகர்கள் ஒரு கிறிஸ்தவர் ஆடையை திருமலையானுக்கு எடுத்துத் தரும் போது வெள்ளண்டி என்று சொல்லவில்லை!
இது தான் செகுலரிஸம் என்றால் அந்த செகுலரிஸம் நமக்குத் தேவை தானா?
கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கு TTD யின் கார்கள் உபயோகப்படுத்தப்படுவது இன்னும் வேதனை தரக்கூடிய ஒரு விஷயம்.
இதையெல்லாம் கேள்வி கேட்க ஆளே இல்லையா?
மலை மீது ஏறும் போது முதலாவதாக இருக்கும் இடம் அலிபிரி.
இங்கு தான் பக்தர்கள் டிக்கட்டையும் இதர பொருள்களையும் வாங்குகின்றனர்.
இதை உல்லாசப் பயணிகள் இருக்குமிடமாக மாற்ற முயற்சி நடக்கிறது. ஏழு மலை டூருக்கு இந்த இடம் ஜாலி ரைட் ஆரம்ப இடமாகப் பயன்படுத்த முயற்சி உள்ளது.
கோபுரத்தின் மேலும் கலசத்தின் மேலும் செல்வது ஆகம விதிகளின் படி நடக்கக் கூடாத ஒன்று.
கிறிஸ்தவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் ரைட் மூலம் தர்ம சாஸ்திர விதிகளை உடைக்க முயற்சி மேற்கொள்கின்றனர்.
கிறிஸ்தவர்களுக்கு இது ஜாலி ரைடு இடம். ஆனால் ஹிந்துக்களுக்கோ புனிதமான இடம் அல்லவா?!
ராஜசேகர ரெட்டி எப்படி மதவெறி பிடித்த கிறிஸ்தவர் என்பதை எடுத்துக்காட்ட ஒரு விஷயத்தை இங்கு காணலாம்.
அவர் டைவர்ஸ் ஆன கிறிஸ்தவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை கொடுக்க ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இதன் விளைவு, கிறிஸ்தவர்கள் பேப்பரில் டைவர்ஸ் ஆனதாகக் காண்பித்து விட்டு, தம்பதிகளாக இணைந்து இரண்டு ஏக்கர் நிலத்தை ‘ஆட்டையை’ப் போட ஆரம்பித்தனர்.
ராஜசேகர ரெட்டி இருந்தவரை கிறிஸ்தவர்களுக்கு இது தான் சரியான முகாமாக இருந்தது.
இப்போது ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியிலும் இது தொடர்கிறது.
அவரை முதல் அமைச்சராக எப்படி நிலை நிறுத்துவது என்பது பற்றித் தான் சர்ச்சில் ஆலோசனைகளே நடைபெறுகின்றன.
கிறிஸ்தவர்கள் எப்படி கோவிலுக்குள் அனுமதிக்கப்படலாம் என்று கேட்ட போது அவர்கள் எங்களுக்கு வெங்கடாசலபதி மீது நம்பிக்கை உண்டு. ஆகவே நுழைகிறோம் என்றனர்.
ஆனால் ஏன் தொப்பியையும் சிலுவை சின்னத்தையும் அணிந்து கொண்டு உள்ளே வருகிறீர்கள், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டவுடன் அவர்கள் கோர்ட்டுக்குச் சென்று விட்டனர்.
வெவ்வேறு பிரிவுகளுக்கு அவர்கள் மாற்றப்பட்ட போதும் அவர்கள் திடமாக வைக்கும் கோரிக்கை வெள்ளிக்கிழமைகளில் வேலை நேரத்தில் நமாஸ் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான்.
வெங்கடாசலபதிக்கே இவர்களை அகற்றுவது கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறது இன்றைய சூழ்நிலை.
வெள்ளிக்கிழமை கோவிலை மூடினால் மற்ற தொழுகை, ஜபத்திற்கு சுலபமாக இருக்கும் என்பது இவர்களின் கோரிக்கை என்று பலரும் சொல்கின்றனர்.
அட, வக்ப் போர்டில் ஒரு ஹிந்து மெம்பர் கிடையாது, அட, மஜ்ஜித் போர்டில் ஒரு ஹிந்து மெம்பர் கிடையாது, அட, மிஷனரி போர்டில் ஒரு ஹிந்து மெம்பர் கிடையாது வெங்கடாசலபதி குடிகொண்டிருக்கும் கோவிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் மட்டும் கிறிஸ்தவ மெம்பர்களா?
என்ன அநியாயம் இது!
ஹிந்துக்கள் தூங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக! இன்னும் விழிக்கவே இல்லை!!
வெங்கடாசலபதியிடமே விளையாட்டா?
குல்லாய் தாடி கொண்ட சிலரும், மெழுகுவர்த்தி ஏற்றும் சிலரும் ‘திம்மப்பா சந்நிதிக்கு’ வருமுன் அவர்கள் மற்ற அனைவரையும் வெள்ளண்டி சொல்லு முன் திருப்பதி பக்தர்கள் உள்ளிட்ட ஹிந்துக்கள் விழித்துக் கொள்வார்களா?
***
Tags- வெங்கடாசலபதி, விளையாட்டா?