Post No. 11,009
Date uploaded in London – – 21 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
அஸ்டடீன் ASTATINE என்ற மூலகம் (element) யாருமே காணமுடியாத மூலகம்/தனிமம் ; இந்தப் பூவுலகில் 118 தனிமங்கள் உண்டு என்பதை நம் அறிவோம். ஆனால் யாருமே காண முடியாத, மறைவான மூலகம் பற்றிப் பலரும் அறியார். இதன் பெயரை சம்ஸ்க்ருதம் அறிந்தவர் எளிதில் புரிந்து கொள்ளுவர் .அஸ்டடோஸ் (astatos) என்ற கிரேக்க சொல்லுக்கு நிலையற்ற, நீடித்திராரத என்று பொருள்; ஸம்ஸ்க்ருதத்தில் அ+ ஸ்தித .
அயோடின் என்னும் மூலகத்தை அடுத்து இப்படி ஒரு மூலகம் இருக்கவேண்டும் என்பதை அறிந்து இதைக் கண்டுபிடித்ததாக அல்லிசன் (F Allison) என்ற விஞ்ஞானி 1931ல் அறிவித்தார். அதற்கு அமெரிக்காவின் அலபாமா (Alabamine) பெயரையும் சூட்டினார். அவர் சொன்னதை உலகம் தவறாகப் புரிந்து கொண்டது ஆகையால் 1940-ல் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூவர் இதை உற்பத்தி செய்து காட்டியவுடன் உலகம் ஒப்புக்கொண்டது
அவர்களும் ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லை. இரண்டாவது உலக யுத்தம் காரணமாக எல்லா விஞ்ஞானிகளும் அணுகுண்டு உற்பத்தியில் (Manhattan Project) முனைப்பு காட்டினார்கள் .
பூமியின் மேற்பரப்பில் 30 கிராம் மட்டுமே இந்த தனிமம் (element) இருப்பதாக மதிப்பிடுகின்றனர். தோரியம், யுரேனியம் போன்ற மூலகங்கள் கதிரியக்கத்தில் தேயும் போது அஸ்டடீன் உற்பத்தியாகிறது. ஆனால் இது நிலைத்திராது .இதன் ஐசடோப்புகள் 215, 218, 219 ஆகும் பிஸ்மத் என்னும் மூலகத்தை ஆல்பா துகள்களால் தாக்கினால் ஐசடோப் Astatine 210, Astatine 211 ஆகியன கிடைக்கும்.
ரசாயன குணங்கள்
குறியீடு – At
அணு எண் – 85
உருகு நிலை – 300 டிகிரி C
கொதி நிலை – 340 டிகிரி C
அஸ்டடீன் ஒரு உலோகம் அல்ல. அயோடின் போன்ற ஒரு உப்பு. அதே போல ஹாலோஜன் (Halogen Group) குழுவைச் சேர்ந்தது.
இதன் ஐசடோப்புகளில் நீண்ட காலம் வாழும் பொருள் அஸ்டடீன்- Astatine 210 ஆகும். அது எட்டு மணி நேரத்தில் பாதியாக (Half life) கரைந்துவிடும். அடுத்த எட்டு மணி நேரத்தில் அதில் பாதி போய்விடும். இதனால் இதை ஆராய்வது கடினம். சில கரைசல்களில் இது இருப்பதை வைத்து இதன் இருப்பு/ பிரசன்னம் அறியப்படுகிறது .
ஒரு கிராமில் ஒரு லட்சத்தில் ஒரு பகுதிதான்(Millionth of a Gram) இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது!!!! அப்படி உற்பத்தியானதும் கதிரியக்கத் தேய்மானம் மூலம் மறைந்துவிட்டது. ஆகையால் இதை எவரும் கண்டதில்லை. கண்டுபிடிக்கும் அளவுக்கு உற்பத்தியும் செய்ய முடியாது. அப்படி எவரேனும் உற்பத்தி செய்தாலும் அதன் கதிரியக்க (Radiation Heat) வெப்பம் அதை ஆவியாக மாற்றி விடும்
யார் அறிவார் ? பயனற்ற, கண்ணுக்குத் தெரியாத இந்த தனிமமும் ஒரு காலத்தில் மனித குலத்துக்கு ஏதேனும் நன்மை செய்யக்கூடும் .
–subham–
tags- Astatine, அஸ்டடீன் ,கண்ணுக்குத் தெரியாத, தனிமம்