தொண்டை மண்டல வள்ளல் காளத்தி முதலியார்! (Post No.11,063)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,063

Date uploaded in London – –    30 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தொண்டைமண்டல சதகம் பாடல்கள் 88 & 89

தொண்டை மண்டல வள்ளல் காளத்தி முதலியார்!

ச.நாகராஜன்

தொண்டைமண்டலத்தில் வல்லம் என்ற ஊரில் காளத்தி முதலியார் என்ற தமிழ் அன்பர் வாழ்ந்து வந்தார். புலவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் அவர்.

திருக்குறுங்குடியில் வாழ்ந்து வந்த திருக்குறுங்குடி நம்பி என்னும் தமிழ்ப் புலவர் வறுமையால் வாடி வதங்கினார்.

தன் வறுமை நீங்கும் பொருட்டு அவர் காளத்தி முதலியார் மீது கவி மாரி பொழிந்தார். அதற்காக யானை உள்ளிட்ட பரிசுகளை அளித்தார் காளத்தி வள்ளல்.

அதை தொண்டைமண்டல சதகம் பாடல் 88இல் தெரிவிக்கிறது.

பாடல் இதோ:

சொல்லையிலாகச் சொரிகவிமாரி சுருதிவல்லான்

செல்லையில்சோலைக் குறுங்குடிவாழ்நம்பி சென்றுகண்ட

வெல்லையினீ டுங் கரடக்கடாக்களி ரென்றுசொன்ன

வல்லையிற்காளத்தி வாழ்வானதுந் தொண்டை மண்டலமே

இப்பாடலின் பொருள்;

வேலாயுதம் போலத் தவறாது பயன்படுத்த வல்ல சொற்கள் அமைந்த கவிகளை மழை சொரிவது போல மிகுதிபடச் சொல்வதிலும், சாத்திர உணர்ச்சியிலும் வல்லவராய்,

மேகம் சென்று தேன் குடித்தற்கு இடமாகிய சோலை சூழ்ந்த திருக்குறுங்குடியில் வாழ்ந்த நம்பி என்னும் புலவர் வல்லம் என்னும் ஊரில் வாழ்ந்த காளத்தில் முதலியாரிடம் சென்று கண்டவுடனே, “கரடக்கடாக் களிற்றாய்” என்னும் சொல் அமைந்த பாடலைத் துரிதமாகச் சொல்ல, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களில் உணர்த்தும் நூல்களைக் குற்றமறக் கற்றோருக்குப் பயனாகும் கணிதமும் இலக்கணங்களும் மனிதருக்கு இரண்டு கண்களாம், இதனைக் கற்றாலே கண்கள் உடையவர் எனப்படுவர். கல்லாதார் கண் இல்லாதவராவார். கற்றவர் கற்றோரையே சேர விரும்புவர். ஆதலால் கற்றோர் உயர்ந்தோர் ஆவர். அழிவில்லாத செல்வம் கல்வியே. இதை உணர்ந்து யானை முதலிய பரிசையும் துரிதமாகக் கொடுத்த வல்ல மாநகர் காளத்தி முதலியார் வாழ்வும் தொண்டை மண்டலத்திலேயே அமைந்ததாகும்.

திருக்குறுங்குடி நம்பி பாடிய பாடல் வருமாறு:-

பொரடக்கயம்பிடி யென்றான்மதனுமிப் பூவையுமா

தரடக்கமுஞ்சற் றறிந்திலனேதனைத் தாள்பணியா

முரக்கவுடக் கெடிமண்டலீகர் முடிபிடுங்குங்

கரடக்கடாக்களிற் றாய்வ்ல்லைமாநகர் காளத்தியே

இதே காளத்தி முதலியார் என்னும் வள்ளலைப் பற்றி அடுத்த பாடலிலும் (பாடல் 89) சொல்கிறது தொண்டை மண்டல சதகம்.

பாடல் வருமாறு:-

கொல்லையிற் பாற்பசு மேய்ப்போன்கறப்பவன் கொண்டு சென்றே

யெல்லையிற்சேர்ப்பவன் பாலடுவோனிவ ரித்தனையும்

சொல்லையிற்பாவல னோரோர்கவிசொல்லி சொல்லநல்கும

வல்லையிற்காளத்தி வாழ்வானதுந் தொண்டை மண்டலமே

கூரிய சொல் அமைந்த கவி பாடும் புலவர் ஒருவர் குழந்தைக்குப்  பால் இல்லாததால் காளத்தி முதலியாரிடம் வந்து கறவைப் பசு பெற்று வரும் பொருட்டு அவர் பேரால் கவி பாடிக் கொண்டு சென்றார்.

செல்லும் வழியிலே, கொல்லையில் பசு நிரை மேய்ப்பவன், கறப்பவன், கொண்டு போவோன், பால் காய்ச்சுவோன் ஆகிய அனைவரும் புலவரை உபசரித்துத் தம்முள் ஒவ்வொருவர் பேரிலும் பாடல் பெற்று ஒவ்வொருவரும் பசு கொடுத்துப் புலவர் வீடு சேர்த்துத் தமது எஜமானனுக்கு அக்கவியை தெரிவிக்க அவரும் அழைத்துப் பசு நிரையையும், திரவியத்தையும் பரிசாகக் கொடுத்தனுப்பினார்.

இத்தகைய வல்லத்துக் காளத்தி முதலியாரும் தொண்டை மண்டலத்தினரே.

குழந்தைக்குப் பால் கொடுக்க வசதி இல்லாத புலவர் காளத்தி முதலியாரைப் புகழ்ந்து பாடி வரும் போதே அங்கு பசுவை மேய்ப்பவன், கறப்பவன் உள்ளிட்ட அனைவரும் ஆளுக்கு ஒரு பசுவைக் கொடுத்தனராம்.

அப்படி ஒரு அருமையான வள்ளல் ஆவார் காளத்தி முதலியார்.

அவரைப் போற்றும் பாடல்கள் இவை.

***,

tags – தொண்டை மண்டல வள்ளல்,  காளத்தி முதலியார்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: