உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்? (Post No.11175)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,175

Date uploaded in London – –    8  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்?

ச.நாகராஜன்

சார்லஸ் ப்ளம்ப் (Charles Plumb) அமெரிக்காவில் கான்ஸாஸில் ஒரு பண்ணையில் வளர்ந்தவர்.  கடற்படை அகாடமியில் சேர்ந்த அவர் தனது திறமையால் பைலட்டாக ஆனார்.

அவருக்கு ‘டாப் கன்’ (TOP GUN) என்ற திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

ஜெட் ஃபைட்டராக ஆன அவர் உக்கிரமான வடக்கு வியட்நாம் போரில் 75 முறை விமானத்தில் பறந்து சாகஸ செயல்களைச் செய்தார்.

இறுதியில் 75வது முறையாக அவர் வியட்நாமில் பறக்கும் போது, அவரது பணி முடிய இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் போது, வியட்நாமில் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பாராசூட் மூலமாகத் தப்பிக்க முயன்ற போது ஹனாய் அருகே அவர் எதிரிகளால் பிடிக்கப்பட்டார்.

ஆறு வருட காலம் வியட்நாமிய சிறையில் அவர் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். சரியாகச் சொல்லப் போனால் 2103 நாட்கள், எட்டு அடிக்கு எட்டு அடி கொண்ட ஒரு செல்லில் அவர் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளானார். C

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் சில காலம் தொடர்ந்து பணியில் இருந்தார். பின்னர் பணி ஓய்வு பெற்றார்.

ஒரு நாள் தனது மனைவி மகனுடன் அமெரிக்க ஹோட்டல் ஒன்றில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகே ஒரு மனிதர் வந்தார்.

“நீங்கள் ப்ளம்ப் தானே!. வியட்நாமுக்கு ஜெட் ஃபைட்டரில் பறந்தவர் ஆயிற்றே, சரி தானா?” என்றார் அவர்.

ப்ளம்பிற்கு அவர் யார் என்றே தெரியவில்லை. குழப்பமாக இருந்தது.

“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டார் அவர்.

“நான் தான் உங்கள் பாராசூட்டை பாக் செய்தவன்” என்று பதில் சொன்னார் அந்த மனிதர்.

பின்னர் மெதுவாகத் தன் தலையை ஆட்டியவாறெ அவர் கூறினார்: “அது நன்கு வேலை செய்தது என்று நான் நினைக்கிறேன்”

உடனடியாக ப்ளம்ப் பதில் சொன்னார் ;”அது அற்புதமாக வேலை செய்தது. இல்லையென்றால் நான் இப்படி உங்களுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்!”

அன்று முழுவதும் ப்ளம்ப் தான் ஒரு போதும் முன்னர் பேசி இராத அந்த மனிதரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.

தனது உயிரே அவர் கையில் இருந்ததை அப்போது தான் அவர் உணர்ந்து கொண்டார். அவர் கப்பலில்  இருந்த போது அந்த மனிதரை எத்தனை முறை பார்த்திருக்கக் கூடும். ஒரு முறை கூட அவரைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்ததில்லை; பேசியதில்லை..

பின்னால் சார்லஸ் ப்ளம்ப் அனைவரையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் சுயமுன்னேற்றப் பேச்சாளராகத் திகழ்ந்தார்.

தனது உரைகளில் மறந்து விடாமல் அவர் அரங்கத்தில் உள்ள அனைவரையும் பார்த்துக் கேட்கும் ஒரு கேள்வி:

“உங்கள் பாராசூட்டை பாக் செய்தது யார்?”

நம்மில் ஒவ்வொருவரும் உடல்ரீதியிலான பாராசூட், மன ரீதியிலான பாரசூட், உணர்வு ரீதியிலான பாராசூட் மற்றும் ஆன்மீக ரீதியிலான பாராசுட்டி ஆகியவற்றின் தேவையைக் கொண்டுள்ளோம்.

நமது வாழ்வில் பலரும் நமக்கு பாராசூட்டை பத்திரமாக மடித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாம் தான் அவர்களை இனம் காண வேண்டும். பாராட்ட வேண்டும். பரிசுகள் வழங்க வேண்டும்.

தினமும் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி : ‘எனது பாராசூட்டை மடித்து வைப்பது யார்?’ என்று தான்!

***

புத்தக அறிமுகம் – 22

வெற்றிக்குத் திருக்குறள்!

பொருளடக்கம்

என்னுரை

1. எவை எவை வேண்டும்? – வள்ளுவரின் அறிவுரை!

2. எவை எவை வேண்டாம்? – வள்ளுவரின் அறிவுரை!

3. வள்ளுவரின் சுடும் குறள்கள்!

4. பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

5. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 1

6. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 2

7. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 3

8. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 4

9. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 5

10. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 6

11. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 7

12. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 8

13. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 9

14. வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி!

15. மனிதரில் எத்தனை வகை? வள்ளுவரின் பதில்!

16. வள்ளுவர் அறிவுறுத்தும் விரைந்து செய்ய வேண்டிய மூன்று செயல்கள்!

17. வள்ளுவர் குறளில் கையாண்ட வடமொழிச் சொற்கள்

18. வால்டேரும் வள்ளுவரின் திருக்குறளும்!

19. பொய்யும் மெய்யும் – திருவள்ளுவர், பர்ட்ரெண்ட் ரஸ்ஸல், மஹாத்மா காந்திஜி, துர்வாஸர்!

20. திருக்குறளுக்குத் தற்காலத்தில் சிறந்த உரைநூல் இதோ!

21. திருக்குறளில் தேவர் உலகம் வள்ளுவரும், வானவரும்!

22. திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! – 1

23. திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2

24.சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! -1

25. சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! – 2

26. அரவிந்தர் ஆக்கிய குறள் தமிழாக்கம்!

27. முடிவுரை

நூலாசிரியர் பற்றிய குறிப்பு

*

இந்த நூலுக்கு நான் அளித்த என்னுரையில் ஒரு பகுதி :

என்னுரை

உலகத்தில் உள்ள ஒப்பற்ற நூல்களில் முதலிடத்தைப் பெறும் அதிசய நூல் திருக்குறள்.

இதில் உள்ள 4310 சொற்களை ‘திருக்குறள் சொல்லடைவு’ என்ற தனது நூலில் தமிழ் மணி சாமி.வேலாயுதம் பிள்ளை அவர்கள் விளக்கி அரும் பணி ஆற்றியுள்ளார். 1952இல் வெளிவந்த நூல் இது.

இந்தச் சொற்கள் மூலம் உலகம் முழுமைக்கும் பொதுவான, எந்தக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமான, ஒரு நூலை இயற்றியுள்ள வள்ளுவரின் மாண்பை எப்படிப்பட்ட சொற்களாலும் விளக்கி விட முடியாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் மூலம் பல்வேறு வழிகளில் அவற்றை இணைத்துப் பொருள் காண வழி வகுத்துள்ள வள்ளுவரே வள்ளுவர்.

அவருக்கு இணை யாரும் இருக்க முடியாது.

மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற உறுதுணையாக அமையும் நூல் இதுவே.

பலகாலும் இதைப் படித்து மகிழ்ந்து வருபவன் என்ற முறையில் இதை ஆராய்ந்து என்னிடம் வைத்திருக்கும் குறிப்புகளைக் கொண்டு அவ்வப்பொழுது கட்டுரைகள் படைத்து வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.

இதை www.tamilandvedas.com இல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த PUSTAKA DIGITAL MEDIA வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்களூர்
13-1-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

tags- பாராசூட்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: