செப்டம்பர் 2022 காலண்டர் – மேலும் 30  மணிமேகலை பொன்மொழிகள் (Post.11229)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,229

Date uploaded in London – 31 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆகஸ்ட் காலண்டரில்,  மணிமேகலை காவியத்திலிருந்து 31 பொன்மொழிகளைக் கண்டோம். இதோ மேலும் 30 மேற்கோள்கள் :

பண்டிகைகள் / முக்கிய நாட்கள் :- செப்டம்பர் 1- ரிஷி பஞ்சமி , 3 -ராதாஷ்டமி , 5-ஆசிரியர் தினம்/டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் , 8- ஒணம் பண்டிகை , 10- மாளய பக்ஷம் ஆரம்பம் , 11- பாரதியார் நினைவு தினம், 17- விஸ்வகர்ம பூஜை , 25- மஹாளய அமாவாசை ,26- நவராத்ரி ஆரம்பம் .

பெளர்ணமி – 10, அமாவாசை-25, ஏகாதஸி விரதநாட்கள் – 6, 21;

சுப முகூர்த்த நாட்கள் – 1, 5, 7, 8, 9, 12

செப்டம்பர்  1 வியாழக் கிழமை

மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்

‘இளமை நாணி முதுமை எய்தி

உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு

அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்

செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ? 04-110

செப்டம்பர்  2 வெள்ளிக் கிழமை

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்

வினை விளங்கு தடக்கை விறலோய்! கேட்டி

வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது

செப்டம்பர்  3 சனிக் கிழமை

புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது

மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை

பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்

செப்டம்பர்  4 ஞாயிற்றுக் கிழமை

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை

அவலம் கவலை கையாறு அழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது

மக்கள் யாக்கை இது என உணர்ந்து    04-120

மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்’

செப்டம்பர்  5 திங்கட் கிழமை

தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப

சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?

நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?       05-020

செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக!’ என

செப்டம்பர்  6 செவ்வாய்க் கிழமை

‘வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி

தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!

ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம் 05-030

வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!

செப்டம்பர்  7  புதன் கிழமை

யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்

பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்

மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்

பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய

எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்

செப்டம்பர்  8 வியாழக் கிழமை

குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்

பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்

கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய

வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு

செப்டம்பர்  9 வெள்ளிக் கிழமை

தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்

இன்பச் செவ்வி மன்பதை எய்த

அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்

அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி

செப்டம்பர்  10 சனிக் கிழமை

மது மலர்க் குழலாள் மணிமேகலை தான்

சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்

இந்திர கோடணை விழா அணி விரும்பி

வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்

செப்டம்பர்  11 ஞாயிற்றுக் கிழமை

‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்
05-100
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ! 

செப்டம்பர்  12 திங்கட் கிழமை

காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?’ என்று

செப்டம்பர்  13 செவ்வாய்க் கிழமை

அந்தி அந்தணர் செந் தீப் பேண

பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப

யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்

கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள

செப்டம்பர்  14  புதன் கிழமை

ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்

பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி

செப்டம்பர்  15 வியாழக் கிழமை

காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்

சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்

அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும்   06-060

செப்டம்பர்  16 வெள்ளிக் கிழமை

அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால் வேறு வருணப் பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன

செப்டம்பர்  17 சனிக் கிழமை

சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்

தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்

செப்டம்பர்  18 ஞாயிற்றுக் கிழமை

மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு
இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்
06-090

விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்

செப்டம்பர்  19 திங்கட் கிழமை

அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்

கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து

மிக்க நல் அறம் விரும்பாது வாழும்

மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?

செப்டம்பர்  20 செவ்வாய்க் கிழமை

இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்

புயலோ குழலோ கயலோ கண்ணோ

குமிழோ மூக்கோ இதழோ கவிரோ

பல்லோ முத்தோ என்னாது இரங்காது

கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து

தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்

செப்டம்பர்  21  புதன் கிழமை

பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத்

தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை

யாரும் இல் தமியேன் என்பது நோக்காது

ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ?

செப்டம்பர்  22 வியாழக் கிழமை

அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா 06-150

பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக

ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது

மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்” என்றலும்

செப்டம்பர்  23 வெள்ளிக் கிழமை

தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை

நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்

மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின்   06-170

யானோ காவேன் என் உயிர் ஈங்கு” என

செப்டம்பர்  24 சனிக் கிழமை

நால் வகை மரபின் அரூபப் பிரமரும்
நால் நால் வகையில் உரூபப் பிரமரும்
இரு வகைச் சுடரும் இரு மூவகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்
06-180
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
 

செப்டம்பர்  25 ஞாயிற்றுக் கிழமை

சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து

நடுவு நின்ற மேருக் குன்றமும்

புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்

நால் வகை மரபின் மா பெருந் தீவும்

ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்

செப்டம்பர்  26 திங்கட் கிழமை

அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்

தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த

மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்

அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என் 06-214

செப்டம்பர்  27 செவ்வாய்க் கிழமை

மணிமேகலை தனை மணிபல்லவத்திடை

மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி

மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட

உதயகுமரன் உறு துயர் எய்தி

செப்டம்பர்  28  புதன் கிழமை

திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு” என

கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என்

நாமம் செய்த நல் நாள் நள் இருள்

“காமன் கையறக் கடு நவை அறுக்கும்

மா பெருந் தவக்கொடி ஈன்றனை” என்றே

செப்டம்பர்  29 வியாழக் கிழமை

தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி

விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி

அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி

குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக்

செப்டம்பர்  30 வெள்ளிக் கிழமை

வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப்

புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்

புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப

பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப 7-16

……

நல் மணி இழந்த நாகம் போன்று அவள்

Tags- மணிமேகலை மேற்கோள்கள், மணிமேகலை, பொன்மொழிகள்,  செப்டம்பர்  2022 காலண்டர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: