வேத கணிதம் – ஒரு பார்வை! (Post No.11,241)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,241

Date uploaded in London – –    6 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேத கணிதம் – ஒரு பார்வை!

ச.நாகராஜன்

வேத கணிதம் என்றால் என்ன?

ஏன் உலகம் முழுவதும் அதை இன்று கொண்டாட ஆரம்பித்திருக்கிறது?

ஏன் உலகில் உள்ள பல சிறந்த பல்கலைக் கழகங்களும் அதை போதிக்க ஆரம்பித்துள்ளன?

ஏனெனில் அது கணிதத்தை வியக்கத்தக்க விதத்தில் சுலபமாகக் கற்பிக்கிறது.

மாதிரிக்காக அதன் மீது ஒரு பார்வையைச் செலுத்திப் பார்ப்போம்.

இணைய தளத்தில் பரவலாகப் பகிரப்படும் இதை இங்கு பார்க்கலாம்.

இதை அனைவருக்கும் பரப்பும்படி இந்த இணையதள வேண்டுகோளை ஏற்று அனைவருக்கும் பரப்பலாம்.

கணித வாய்பாடுகள் எத்தனை உங்களுக்குத் தெரியும்?

குறைந்த பட்சம் பத்தாம் வாய்பாடு வரை அனைவரும் அறிவர்.

மலையையே தாண்டி விட்ட முயற்சி தான் அது – அதை மனப்பாடம் செய்யப்பட்ட பாடு அந்த இளமைக் காலத்தில் ஒரு அரிய சாகஸ காரியம் தான்!

சரி, அதற்கு மேல் உள்ள வாய்பாடுகள் பற்றி இனி கவலைப்பட வேண்டாம்.

11 முதல் 99 முடிய – ஏன் அதற்கு மேலும் உள்ள வாய்பாடுகளைப் பற்றி இனி கவலை இல்லை.

இதோ இருக்கிறது வேத கணிதம் சுட்டிக் காட்டும் எளிய வழி முறை!

வேத கணிதத்தின் வழிப்படி இரண்டு இலக்க வாய்பாடு ஒன்றை அமைத்துப் பார்ப்போம்.

உதாரணத்திற்கு 87ஆம் வாய்பாடு!

08 0 7 (08+0) 87

—————————————

16 1 4 (16+1) 174

24 2 1 (24+2) 261

32 2 8 (32+2) 348

40 3 5 (40+3) 435

48 4 2 (48+4) 522

56 4 9 (56+4) 609

64 5 6 (64+5) 696

72 6 3 (72+6) 783

80 7 0 (80+7) 870

இதன் விளக்கம். முதலில் 8 x  1 = 8

அடுத்து 8 x  2 = 16 போடப்பட்டுள்ளது.

அடுத்து 8 x  3 =  24 போடப்படுள்ளது. இதே போல 8 x  10 = 80 முடிய வரிசையாக போடப்பட்டுள்ளதைக் காணலாம்.

அதே போல 7 x  1 = 7 அடுத்த படி போடப்பட்டுள்ளது.

அதன் கீழே வரிசையாக 7 x  2 = 14, 7 x  3 = 21 என இப்படி 14,21,28 என்று ஆரம்பித்து 70 வரை போடப்பட்டுள்ளது.

அடுத்து முதல் காலத்தில் உள்ள 16ஐயும் அடுத்த காலத்தில் முதலில் உள்ள எண் 1ஐயும் 17 போடப்பட்டிருக்கிறது. இப்போது ஏழாம் வாய்பாடில் உள்ள 14 என்ற எண்ணில் இரண்டாம் எண்ணாக உள்ள 4 ஐ 17இன் பக்கத்தில் போட்டால் வருவது 174.

அவ்வளவு தான், 2 x  87  = 174, 3 x  87  = 261, .. இப்படி போட்டு முடித்து விடலாம், ஒரு சில விநாடிகளில்!

இது தான் வேத கணிதம்.

மாதிரிக்காக இன்னும் இரண்டு வாய்பாடுகள். 38 மற்றும் 92க்கான வாய்பாடுகள்

38ஆம் வாய்பாடு இதோ!

38 ஆம் வாய்பாடு

03 0 8 (3+0) 38

06 1 6 (6+1) 76

09 2 4 (9+2) 114

12 3 2 (12+3) 152

15 4 0 (15+4) 190

18 4 8 (18+4) 228

21 5 6 (21+5) 266

24 6 4 (24+6) 304

27 7 2 (27+7) 342

30 8 0 (30+8) 380

33 8 8 (33+8) 418

36 9 6 (36+9) 456

அடுத்து 92ஆம் வாய்பாடு இதோ!

92 ஆம் வாய்பாடு

09 02 (09+0) 92

18 04 (18+0) 184

27 06 (27+0) 276

36 08 (36+0) 368

45 10 (45+1) 460

54 12 (54+1) 552

63 14 (63+1) 644

72 16 (72+1) 736

81 18 (81+1) 828

90 20 (90+2) 920

99 22 (99+2) 1012

108 24 (108+2) 1104

இப்படியாக 10 முதல் 99 முடிய வாய்பாடை நாமே உடனடியாக எழுதி விடலாம்!

இந்த வேத கணித வழியை அனைவருக்கும் பரப்புங்கள்.

நமது பாரத தேசத்தின் பிரமாதமான அறிவு அற்புதமான வியக்க வைக்கும் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது.

பண்டைய காலத்தில் குருகுலத்தில் குருமார்கள் சிஷ்யர்களுக்கு இதை இப்படித்தான் கற்பித்தார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி வந்தவுடன் அனைத்தும் காற்றிலே பறந்து விட்டது!

வேத கணிதம் என்றால் என்ன என்று கேட்டால் இதைச் சொல்லி விளக்குங்கள். இது ஒரு ஆரம்பம் தான். இன்னும் உச்ச பட்ச கால்குலஸ் வரை வேத கணிதம் காட்டும் வழி எளிய வழியே!

நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில வார இதழ் ட்ரூத் 8-7-2022 தொகுதி 90 இதழ் 13

*

இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்கு கட்டுரை ஆங்கிலத்தில் அப்படியே தரப்படுகிறது.

Vedic Mathematics- A glimpse

Upto which number do you know your tables?

At least upto 10, awesome!

You have crossed the mountain!

Don’t worry for the rest of the tables!

From 11th to 99th, any table, very easy!

[I didn’t know this. Because this Vedic mathematics was not taught to us in school of this secular country!]

How to write Table of any two digit number?

For example Table of 87:

First write down table of 8 then write

down table of 7 beside it.

08 0 7 (08+0) 87

—————————————

16 1 4 (16+1) 174

24 2 1 (24+2) 261

32 2 8 (32+2) 348

40 3 5 (40+3) 435

48 4 2 (48+4) 522

56 4 9 (56+4) 609

64 5 6 (64+5) 696

72 6 3 (72+6) 783

80 7 0 (80+7) 870

Now table of 38

03 0 8 (3+0) 38

06 1 6 (6+1) 76

09 2 4 (9+2) 114

12 3 2 (12+3) 152

15 4 0 (15+4) 190

18 4 8 (18+4) 228

21 5 6 (21+5) 266

24 6 4 (24+6) 304

27 7 2 (27+7) 342

30 8 0 (30+8) 380

33 8 8 (33+8) 418

36 9 6 (36+9) 456

Now table of 92

09 02 (09+0) 92

18 04 (18+0) 184

27 06 (27+0) 276

36 08 (36+0) 368

45 10 (45+1) 460

54 12 (54+1) 552

63 14 (63+1) 644

72 16 (72+1) 736

81 18 (81+1) 828

90 20 (90+2) 920

99 22 (99+2) 1012

108 24 (108+2) 1104

This way one can make Tables from 10. to 99.

Share this intelligence booster.

The brilliance of our country is full of unthinkable treasures! In olden times in all

schools, Gurus (teachers) used to teach children maths in Vedic way until Britishers and other

anti-forces washed it away.

This is our Vedic Mathematics!!.

(from Social Media)

Thanks : TRUTH Kolkata weekly dated 8-7-2022 Volume 90 No 13

***

 புத்தக அறிமுகம் – 48

அறிவியல் துளிகள் – பாகம் – 8

பொருளடக்கம்

என்னுரை

183. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் கட்டிய விமானம்!

184. பூமியைக் கொஞ்சம் நகர்த்துங்க! – 1

185. பூமியைக் கொஞ்சம் நகர்த்துங்க! – 2

186. 2069 – சபாஷ், சரியான கொண்டாட்டம்!

187. அந்தரத்தில் நிற்பதை அனைவருமே கற்கலாம்!

188. ஸ்வாமி விவேகானந்தரைச் சந்தித்த விஞ்ஞானிகள்!

189. அறிவியல் துலக்கிய ஒரு அதிசய ‘காலப் பயணக்’ கொலை! – 1

190. அறிவியல் துலக்கிய ஒரு அதிசய ‘காலப் பயணக்’ கொலை! – 2

191. சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள்! -1

192. சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள்! – 2

193. சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள்! – 3

194. யானையை மார்பில் நிற்க வைத்த சாண்டோ ராமமூர்த்தி!

195. தமிழகத்தின் விச்சுளி வித்தை!

196. இரண்டு நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்தியவர்!

197. முகபாவம் மூலம் முன்னேறலாம்! -1

198. முகபாவம் மூலம் முன்னேறலாம்! -2

199.சூப்பர் மனிதர்கள் உருவாகப் போகும் எதிர்காலம்!

200. நோபல் பரிசு – ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

201. அதிசய மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ்! – 1

202. அதிசய மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ் ! – 2

203. அதிசய மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ்! – 3

204. அன்றாட வாழ்வில் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை! – 1

205. அன்றாட வாழ்வில் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை! – 2

206. நோபல் வியாதி! – 1

207. நோபல் வியாதி! – 2

208. நோபல் வியாதி! – 3

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியல்பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் எட்டாம் பாகம் – 183 முதல் 208 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும்      29-8-2014 முதல் 20-2-2015 முடிய வாரா வாரம் வெளியானவை.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்                                                   ச.நாகராஜன்

11-3-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: