ஆசை வெல்லுதற்கரியது! அதை வெல்லும் உபாயம் என்ன? (Post.11,487)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,487

Date uploaded in London – –   30 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாபாரதச் செல்வம்

காம கீதா!

ஆசை வெல்லுதற்கரியது! அதை வெல்லும் உபாயம் என்ன?

ச.நாகராஜன்

மஹாபாரதத்தில் 14வது பர்வமாக அமையும் ஆஸ்வமேதிக பர்வத்தில் பதிமூன்றாவது அத்தியாயம் ஆசையை வெல்லுவது கஷ்டம் என்றும் அதை எப்படி வெல்வது என்பதையும் கூறுகிறது.

மாதவர், யுதிஷ்டிரருக்கு இந்த ரகசியத்தைக் கூறுகிறார்.

இது ‘காம கீதா’ என்று அழைக்கப்படுகிறது.

மாதவர் தர்மபுத்திரரிடம் கூறுகிறார் இப்படி : யுதிஷ்டிரரே! இந்த (ஆசை) விஷயத்தில் பூர்வ விருத்தாந்தம் தெரிந்தவர்கள் காமனால் பாடப்பட்ட காதைகளைச் சொல்லுகின்றனர். அவைகளை முழுதும் சொல்கிறேன் கேள்”

காமன் உரைத்த காதைகள் இவை:

“நாஹம் ஷக்யோபாயேன ஹந்தும் பூதேன கேனசித் | (ஸ்லோகம் 12)

ஒரு பிராணியாலும் என்னை உபாயமின்றிக் கொல்ல முடியாது.

யோ மாம் ப்ரயததே ஹந்தும் ஞாத்வா ப்ரஹரனே பலம் |
தஸ்ய தஸ்மின் ப்ரஹரனே புன: ப்ராதுர்பவாம்யஹம் || (ஸ்லோகம் 13)

எவன் ஒருவன் ஆயுதத்திலுள்ள பலத்தைத் தெரிந்து என்னைக் கொல்ல முயற்சி செய்கின்றானோ, அவனுடைய அந்த ஆயுதத்தில் நான் மறுபடியும் தோன்றுகிறேன்.

யோ மாம் ப்ரயததே ஹந்தும் யக்ஞைர்விவித தக்ஷிணை: |

ஜங்கமேஷ்விவ தர்மாத்மா புன: ப்ராதுர்பவாம்யஹம் || (ஸ்லோகம் 14)

எவன் என்னைப் பலவித தக்ஷிணைகள் உள்ள யாகங்களால் கொல்ல முயற்சிக்கிறானோ, தர்மாத்வானவன் ஜங்கமங்களுள் (உயர்ந்த ஜாதியில்) பிறப்பது போல நான் மறுபடியும் அவனுடைய (சித்தத்தில்) தோன்றுகிறேன்.

எவன் என்னை வேதங்களாலும், வேதாந்தத்தில் சொல்லிய சாதனங்களாலும் கொல்ல முயற்சிக்கிறானோ, அவனிடத்தில் ஜீவன் ஸ்தாவரங்களில் தோன்றுவது போல நான் தோன்றுகிறேன்.

யோ மாம் ப்ரயததே ஹந்தும் த் ருத்யா சத்ய பராக்ரம: |

பாவோ பவாமி தஸ்யாஹம் ச ச மாம் நாவபுத்யதே || (ஸ்லோகம் 16)

உண்மையான பராக்ரமுள்ள எவன் ஒருவன் என்னை தைரியத்தினால் கொல்ல முயற்சி செய்கிறானோ, அவனுடைய சித்தமாக நான் ஆகிறேன். அவனும் என்னைத் தெரிந்து கொள்வதில்லை.

கடுமையான விரதமுள்ள எவன் ஒருவன் என்னைத் தவத்தினால் கொல்ல முயற்சிக்கிறானோ, அவனுடைய தவத்தில், பிறகு நான் மறுபடியும் தோன்றுகிறேன்.

யோ மாம் ப்ரயததே ஹந்தும் மோக்ஷமாஸ்தாய பண்டித: |

தஸ்ய மோக்ஷரதிஸ்தஸ்ய ந்ருத்யாமி ச ஹசாமி ச |

அவத்ய: சர்வபூதானாமஹமேக: சனாதன: ||  (ஸ்லோகம் 18)

எந்தப் பண்டிதன்  மோக்ஷத்தைக் கருதி என்னைக் கொல்ல விரும்புகிறானோ, மோக்ஷத்தில் ஆசையுள்ள அவனிடத்தில் நான் நர்த்தனம் செய்கிறேன். நகைக்கிறேன்.”

எப்போதுமுள்ள நான் ஒருவனே ஒரு பிராணியினாலும் கொல்ல முடியாதவன்.

ஆக, நாம் ஒருவனாலும் கொல்ல முடியாதவன் என்று காமன் கூறும் இந்த காம கீதையை உணர்வோர் நிச்சயம் திடுக்கிடுவர்.

ஆகவே இந்த ஆசையை வெல்வது எப்படி என்பதை மாதவர் கூறுவது மிக முக்கியமானதாக ஆகிறது!

“மம (என்னுடையது என்று பொருள்) என்னும் இரண்டு அக்ஷரம் சம்சாரத்திற்குக் காரணமாகும்.

ந மம (என்னுடையதன்று என்று பொருள்) என்பது சாஸ்வதமான பிரம்மத்தை அடையக் காரணம் ஆகும்.

பண்டித யோகியான ஒருவன் மனிதன் பயனில் ஆசைப்படுவது தர்மமன்று; ஆசையை அடக்குவது தான் தர்மம். அதுவே மோக்ஷத்திற்குக் காரணம் என்று ஆலோசித்துத் தெரிந்து கொண்டு அடக்குகிறான்.”

இது தான் மாதவர் விண்டு உரைக்கும் ரகசியம்.

‘எந்த கர்மத்தைச் செய்தாலும் அதில் பயன் பற்றி நினையாதே; பயன் கருதாது கர்மத்தைச் செய்!’ என்பது தான் மொத்த சாரம்!

மஹாபாரதம் மானிட உலகிற்குத் தரும் மிகப் பெரும் ரகசிய செய்தி இது தான்!

***

புத்தக அறிமுகம் 127

கடவுளைக் காட்டு!

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. கடவுளைக் காட்டு – 1                                                     2. கடவுளைக் காட்டு – 2                                                     3. கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி: கடவுள் இல்லை       என்பதை நிரூபி!                                                     4. கடவுளுக்கு சவால்!  குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை!                   5. கடவுளைக் காட்டு நம்புகிறேன்! – என்போருக்கு இதோ பதில்!                     6. இறைவன் இருக்கிறான்! – அறிவியல் தரும் ஆதாரங்கள்!                        7. இறைவன் இருக்கிறான்?! நாத்திகமும் (?) ஆத்திகமும் (!)                    8. கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்!               9. கடவுள் எங்கே? – 1                                                                                                                                           10. கடவுள் எங்கே – 2                                    11.கம்ப்யூட்டர் கடவுளே சரணம்!                                                 12. இறைவன் பற்றிய இரகசியங்கள்!                                                                                13. கடவுளும் கம்ப்யூட்டரும்                                                                                                                                  14. மறக்கின்ற தருணமும் நினைக்கின்ற தருணமும்!                                                                           15. கென்னடி – மிட்சுபிஷி – செர்னோபில் – பிரமிக்க வைக்கும் கர்ம பலன் சம்பவங்கள் மூன்று!                                                    16. கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!                                                                                           17. கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கரன்ஸி!
18. நல்லதும் கெட்டதும் ஏன் ஏற்படுகிறது?                                       19. காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்!                      20. காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்!                                21. பிரார்த்தனையின் சிறப்பு                                                                                                                                22. பிரார்த்தனை செய்வது எப்படி?                                                                                                                 23. மொத்தம் எத்தனை கடவுள்?                                           24. கடவுளுக்கு ஜாதி பேதம் இல்லை; பக்திக்கும் அது இல்லை!         25. லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!!                                               26. தர்ம விளக்கம்!                                                                      27. ஒரு ஹிந்துவாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது?                                   28. இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே!                             29. தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர்மூடர்!                    30. உண்மை ஒன்றே!

*

நூலில் இடம் பெற்றுள்ள என்னுரை :

என்னுரை

மனித வாழ்க்கையில் எழும் சிக்கலான கேள்விகள் பல!

அவற்றில் முக்கியமான சில : எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடவுள் இருக்கிறாரா? பிரார்த்தனைக்குப் பலன் உண்டா? கர்ம பலன் என்றால் என்ன? – இப்படிப் பல கேள்விகள்.

இவற்றிற்கு அருளாளர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் அவ்வப்பொழுது விடை அளித்து வந்துள்ளனர்.

ஆனால் அறிவியல் யுகத்தில் கடவுளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.

அறிவியலில் தங்கள் தங்கள் சோதனைச்சாலைக்கு ஏற்ப கடவுளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர் விஞ்ஞானிகள். அவர்களில் சிலர் புதிய நாத்திகவாதத்தை அறிவியல் துணையோடு மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர்.

அதே சமயம் விஞ்ஞானிகளில் பலரும் அதே அறிவியலின் துணையோடு கடவுளை ஆய்வுக்கு உட்படுத்தி இறைவன் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

இறைவன் பற்றிய சுவையான பல உண்மைகளைத் தொகுத்துத் தருகிறது இந்த நூல்.

கர்ம பலனைப் பற்றிய கேள்விகளுக்கு விடைகளையும், பிரார்த்தனையின் மகிமை பற்றிய செய்திகளையும் கூடவே இந்த நூல் தருகிறது.

ஞான ஆலயம், மாலைமலர், www.tamilandvedas.com ப்ளாக் உள்ளிட்டவற்றில் வெளியானவை இவை.

இவற்றை வெளியிட்டோருக்கும் இவற்றைப் படித்து என்னை ஊக்குவித்த அன்பர்களுக்கும் எனது நன்றி.

அழகிய முறையில்இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                                                            .நாகராஜன்                                            28-9-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: