
WRITTEN BY Dr A. Narayanan, London
Post No. 11,543
Date uploaded in London – 14 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
M argazhiththingal 1-4
மார்கழித்திங்கள் 1 to 4
திங்களைப்போற்றுவோம் மார்கழித் திங்களைப் போற்றுவோம்
திங்களில் மார்கழியாய்த் திகழும் திருமாலைப் போற்றுவோம்
திருமாலைப்போற்றுவோம் திருமாலைப் போற்றுவோம்
திருமாலைப் பற்றிய மங்கைக் கோதையைப் போற்றுவோம்
கோதையைப் போற்றுவோம் கோதையைப் போற்றுவோம்
கோதை செப்பியத் திருப்பாவையைப் போற்றுவோம் 1
புன்னகைத் தவழும் பூவிழிக் கண்ணன்
பொன் நிறக் கோதையின் திருப்பாவையில் சங்கமம்
புவியோர்க் கெல்லாம் இப்பூமகளின் கீதையே 2
புன்னெறித் தவிர்க்கும் பக்தி யோகப் பாதையே
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்
குமரனும் யசோதை இளஞ்சிங்கமும் கார்
முகில் வண்ணணனும் கதிர்மதியம் செங்கண்
முகத்தானுமே பாரோர் போற்றிப் பறைதரும்
நாராயணனே வென முகுந்தனுக்கு
முகவுரை முதற்பாவில் வரைந்து மார்கழி
முதல் நாளே மதி நிறைந்த நன்னாளாகப்
பாசுரம் துவக்கிய பாவை கோதை வாழியே 3
சீரார் செழு நிலம் சுகந்தம் கமழும் சோலையிலே
ஊரார் போற்றிய பெரியாழ்வார் கை தவழ்ந்த நாளே
நாராயணனே வேத பாராயணமாய் தன் நாவினிலே
மாறா மறவா வென்றுமுறவாய் கொண்ட கோதையே
போறாதொரு சன்மம் புதிரான இவன் பேர் பாடவென
பேராயிரமுடையோனின் பிரிய நாயகியானவளே 4
By
நாராயணன்
DR A NARAYANAN, Ph.D
London , December 2022
XXXX
ON MEENAKSHI AND SIVA
விடி காலை வருமுன்னெழுந்துன் கோயில்
படி வாசல் நின்றுக் கருவறையிலுள்ளோனை
அடி பணிந்து வேணுவதோ கருப்பையில் மறு
படியும் தள்ளாது நும் வீடுமெமை கொள்வீரோ 1
கண்களிரண்டும் கயல் மீனெழிலாய்
கண்டு மையல் கொண்ட கங்காதரனை
துண்டு வலை விழி விசி சிக்கிய சொக்கியே!
கருவறையில் நினது திருவடி கிடந்தோரை
கருப்பையில் தள்ளி பிறவியெனும் பெரும்
கருங்கடலில் ஆசையெனும் அலை ஓசை
ஒழியா வாழ்க்கையில் பழியாயுழல
திக்கறியா கரை தெரியா நின் நடைவாய்
தஞ்சமடைவோர் கெஞ்ச அஞ்சுகம் தோள்
கொஞ்சும் வஞ்சிக்கொடி வஞ்சிப்பதேன் 2
By
நாராயணன்
DR A NARAYANAN, Ph.D
London , December 2022
—subham—tags–லண்டன் டாக்டர் அ .நாராயணன், மார்கழிக் கவிதைகள்