
Post No. 11,588
Date uploaded in London – 26 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
அறப்பளீசுர சதகம் 34. ஒன்றின் இல்லாமையாற் பாழ்படல்
தாம்பூல தாரணம் இலாததே வருபூர்ண
சந்த்ரன்நிகர் முகசூ னியம்!
சற்சனர் இலாததே வெகுசனம் சேர்ந்துவாழ்
தரும்பெரிய நகர்சூ னியம்!
மேம்பா டிலாதமன் னவர்கள் வந்தாள்வதே
மிக்கதே சச்சூ னியம்!
மிக்கசற் புத்திரன் இலாததே நலமான
வீறுசேர் கிருகசூ னியம்!
சோம்பாத தலைவரில் லாததே வளமுடன்
சொல்லுயர் சபாசூ னியம்!
தொல்லுலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே
சுத்தசூ னியமென் பர்காண்!
ஆம்பல்வத னத்தனைக் குகனையீன் றருள்செய்த
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆம்பல் வதனத்தனைக் குகனை ஈன்று அருள் செய்த
அத்தனே – யானைமுகத்தவனையும் முருகனையும் அளித்தருளிய
தலைவனே!, அருமை ………. தேவனே!,
தாம்பூல தாரணம் இலாததே
வருபூரண சந்திரன் நிகர்முக சூனியம் – தாம்பூலம் தரித்துக்கொள்ளாமல் இருப்பதே முழுமதியென விளங்கு முகத்திற்குப் பாழாகும், சற்சனர் இல்லாததே வெகுசனம் சேர்ந்து வாழ்தரும் பெரியநகர் சூனியம் –
நல்லோர் வாழாததே மிகுதியான மக்கள் கூடிவாழும் பெரிய நகர்க்குப் பாழாகும், மேம்பாடு இலாத மன்னவர்கள் வந்து ஆள்வதே மிக்க
தேசச்சூனியம் – உயர்ந்த பண்பு இல்லாத அரசர்கள் வந்து ஆட்சிபுரிவது பெரிய நாட்டுக்குப் பாழாகும், மிக்க சற்புத்திரன் இலாததே நலமான வீறுசேர் கிருக சூனியம் – சிறந்த நன்மகன் இல்லாமையே அழகிய பெருமைபெற்ற வீட்டுக்குப் பாழாகும், சோம்பாத தலைவர் இல்லாததே
வளமுடன் சொல்உயர் சபாசூனியம் – ஊக்கமுடைய தலைவர்கள்
இல்லாமையேசெழிப்புடன் செப்பப்படுகின்ற அவைக்குப் பாழாகும், தொல்லுலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே சுத்தசூனியம் என்பர் –
பழமையான உலகத்தில் யாவருக்கும் பெருஞ்செல்வம் இல்லாமையே பெரும் பாழாகும் என்றும் (அறிஞர்) கூறுவர்.
(வி-ரை.) ஆம்பல் – யானை. வதனம் (வட) முகம். சற்சனர் x
துர்ச்சனர். சூனியம் – பாழ். தாம்பூலத்திற்கு முகவாசம் என்று பெயர்.
தொன்மை + உலகு : தொல்லுலகு.
(க-து.) எவற்றிற்கும் அவற்றைச் சிறப்பிக்க ஒரு பொருள் வேண்டும்.
Xxxx
பணம் பற்றிய பாடல்களையும் பொன்மொழிகளையும் பார்த்தாலே செல்வம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துவிடும்
பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள்

பொருளிலார்க் கின்பம் இல்லை புண்ணியம் இல்லை என்றும்,
மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை,
கருதிய தரும மில்லை கதிபெற வழியுமில்லை,
பெருநிலந் தனிற்சஞ் சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே.
—-விவேக சிந்தாமணி
கையில் பணம் இல்லாத ஏழைக்கு இவ்வுலகில் மகிழ்ச்சியானது இல்லை, நற்செயல்களை செய்ய முடியாததால் புண்ணியமில்லை, புகழ் இல்லை, அவரது புதல்வர்களுக்கும் பெருமை ( ஸமூக அந்தஸ்து) இல்லை. தான தர்மங்களைச் செய்ய முடியாததால் மறுபிறவிக்கும் நன்மை இல்லை. இந்த பெரும் பூமியில் அவர்கள் நடைப்பிணங்களைப் போல திரிவார்கள். ——-விவேக சிந்தாமணி
XXXX
பொன்னொடு மணியுண் டானால் புலையனும் கிளைஞன் என்று, தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியின் மணமும் செய்வார்,
மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவா ராகில்
பின்னையும் ஆரோ வென்று, பேசுவார் ஏசு வாரே.— விவேக சிந்தாமணி
பொன்னும் மணியும் நிறைந்த செல்வம் இருந்தால் கீழானவரையும் உறவினன் என்று சொல்லி புகழ்ந்து கொண்டாடி அவன் வீட்டில் திருமணமும் செய்து செய்துகொள்வார்கள். அதேசமயம் மன்னரைப் போல் வாழ்ந்து பின்னர் செல்வம் இழந்து யாருக்கும் எவ்வித உதவியும் செய்ய சக்தி அற்றவராக ஒருவர் ஆனால் அவரை யாரும் கண்டு கொள்ளமாட்டார், இகழ்ந்தும் பேசுவார்.– விவேக சிந்தாமணி
XXXXX
பணம் பத்தும் செய்யும்
xxx
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – குறள் 247
xxxx
பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்
xxxx
பணமும் பத்தாயிருக்க வேணும், பெண்ணும் முத்தாயிருக்க வேணும் ,முறையிலேயும் அத்தை மகளாய் இருக்கவேணும்
xxxx
பணமிருக்க வேணும், இல்லாவிட்டால் பத்து சனமிருக்கவேணும்
xxxx
முதலிலார்க்கு ஊதியம் இல்லை – குறள் 449
பணம் இருந்தால் பாட்சா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி
xxx
காசேதான் கடவுளடா; பணம் இல்லாதவன் பிணம்
xxx
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்
Xxxx
பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறது
Xxxx
காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்களும் ஆத்தாளும் கூட வருவார்கள்
Xxxx
பணக்கார அவிசாரி பந்தியிலே, அதில்லாத அவிசாரி சந்தியிலே
Xxxx
பணமிருந்தால் பத்தும் வந்து சேரும்
Xxxx
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே- கா.மு.செரீப் (திரைப்படப் பாடல்)
பணம் குலமாகும் ,பசி கறியாகும்
XXXX
சபைக்கு அழகு அறிஞர்
‘‘கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்குஅறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும், பாத்து உண்ணும்
தன்மை யிலாளர் அயல்இருப்பும், இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல– —திரிகடுகம்
கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊர்; வழக்கைத் தீர்த்து
வைக்கின்ற அறிவு முதிர்ந்தவர் இல்லாத சபை; தமக்கு உள்ளதைப்
பிறருக்கும் பகுத்துக்கொடுத்து உண்ணும் தன்மை யில்லாதவர்களின்
பக்கத்திலே வாழ்வது; இம்மூன்றும் நன்மை தருவதில்லை’’ (பா.10)
XXX

சபைக்கு அழகு விகட கவி (தெனாலி ராமன்)
நகைச்சுவை இறை வணக்கம்
ககனே காக ரத்னானி க்ரக ரத்னானி மூஷிகா
சயனே மட்குண ரத்னானி சபாரத்னானி விதூஷக
ககனே- ஆகாயத்திற்கு
காக ரத்னானி – காகங்கள் பறப்பது அழகு
க்ரகரத்னானி – வீட்டிற்கழகு
மூஷிகா – பெருச்சாளிகள் வசிப்பது
சயனே- படுக்கைக்கு
மட்குண ரத்னானி – மோட்டுப் பூச்சிகள் வசிப்பது
சபாரத்னானி- சபைக்கு அழகாவது
விதூஷகா – காணதனைத்தியும் கண்டவிதம் பிரசங்கம் செய்யும் விகடப் பிரசங்கிகள்
தெனாலி ராமன் போன்ற விகட கவிகள் பேரறிஞராகத் திகழ்ந்தனர்
XXX
நேர்மையான ஆட்சி இல்லாத நாடு பாழ்
கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற்
கடும்புலி வாழுங் காடு நன்றே. 63– வெற்றிவேற்கை
கொடுங்கோல் மன்னர் ஆளும் நாட்டில் வாழ்வதை விடக்
கொடிய புலி வாழும் காட்டில் வாழ்வது நல்லது.
கொடுங்கோல் மன்னன் புலியை விடக் கொடுமையானவன்.
XX
குறள் 559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]
பொருள்
நூல்கள் கூறியுள்ள அரச நீதி தவறி, ஒழுக்கம் தவறி, நடுவுநிலைமை தவறி ஒரு மன்னன் ஆட்சி செய்தால் அந்நாட்டின் பெருமை புகழ் செல்வம் உணவு ஆயுதங்கள் மழை ஆகியவை தவறும். மழை பொழியாமல் போனால் நாடு வறண்டு விடும். மிகுந்த துன்பம் நிலவும். அத்தகைய ஆட்சி ஒரு கொடுமையான ஆட்சி.
XXXX
மனு நீதி நூல் சொன்னதையே வள்ளுவரும் சொல்லியிருக்கிறார்
यत्र वर्जयते राजा पापकृद्भ्यो धनागमम् ।
तत्र कालेन जायन्ते मानवा दीर्घजीविनः ॥ २४६ ॥
யத்ர வர்ஜயதே ராஜா பாபக்ருத்ப்யோ தனாகமம்
தத்ர காலேன ஜாயந்தே மானவா தீர்க்க ஜீவனஹ
—-9-246 MANU SMMRITI
எந்த நாட்டில்அரசன் பாவிகளிடமிருந்து செல்வத்தைப் பெறுவதில்லையோ அந்த நாட்டில் முறையான விதத்தில் பிறந்து நீண்ட கால ம் சுகமாக வாழ்வார்கள் -9-246
XXX
निष्पद्यन्ते च सस्यानि यथोप्तानि विशां पृथक् ।
बालाश्च न प्रमीयन्ते विकृतं च न जायते ॥ २४७ ॥
நிஷ்பத்யந்தே ச சஸ்யானி யதோப்புதானி விசாம் ப்ருதக்
பாலாஸ் ச ந பிரமீயந்தே விக்ருதம் ச ந ஜாயதே 9-247
விவசாயிகளின் பயிர்கள் செழித்து வளரும் ; குழந்தைகள் மரணம் அடையாது ; உடலூனமுள்ள பிள்ளைகளும் பிறக்காது.
XXX
BONUS POINTS- TAMIL FILM SONGS
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே – அவனை
உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை – உலகம்
எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே
ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் – பணம்
அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை – இதை
எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை
உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு – அவர்கள்
உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு – நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
XXX
ANOTHER TAMIL FILM SONG
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணங்காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே
டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுனாயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா
கெட்டவங்க பட்டணத்தை
ஒட்டிக்கோணும் என்பதாலே
கெட்டவங்க பட்டணத்தை
ஒட்டிக்கோணும் என்பதாலே
பட்டிக்காட்டை விட்டுப் போட்டு
பல பேரும் போவதாலே
கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே
அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேங் கேளுங்க
அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேங் கேளுங்க
காலேஜு படிப்பு காப்பியாத்துதாம்
பி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம்
ஆளை ஏய்ச்சி ஆளு பொழைக்குதாம்
அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போனது நூத்திலே ஒண்ணாம்
மிச்சம் உள்ளது லாட்டரி அடிக்குதாம்..
எப்படி..
ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே..மாப்பிள்ளே
ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணாம போனா
பின்னாலே கேடு மாமா..
ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
டிராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன்
ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேர்த்துப் புழுங்குனாப் பீச்சுக்குப் போவேன்
மீந்த பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன்
ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்..
மேலே?
இதுக்கு மேலே
சொல்ல மாட்டேண்டி பொம்பளே
இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி
நான் இப்போதே போவோணும்
உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணங்காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே
டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுனாயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
கணக்குக்கும் மீறி பணம் வந்த போது
மனுஷனை சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து
எல்லா வேலையும் செய்யவே துணிஞ்சு
இரவு ராணிகள் வலையிலே விழுந்து
ஏமாந்து போவே..இன்னும் கேளு
அப்புறம்..?
போலீசுப் புலி புடிக்கும் மாப்பிள்ளே
புர்ராவைப் பெயர்த்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா
பெண்சாதி பேச்சைக் கேளு.
அப்பிடியாஆஹா.
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு
உண்மையோட சொன்ன சொல்லு
நன்மையாக தோணுது.
பட்டணம்தான் போக மாட்டேண்டி
உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே
என் கண்ணைத் தொறந்தவ நீ தான்
பொண்டாட்டி தாயே..
மாமா ஏம்மா?
என்னைத் தனியா விடவே மாட்டேனுன்னு
என் தலை மேலடிச்சி சத்தியம் பண்ணு
எங்கப்பனானே சத்தியம் ..சத்தியம் .. சத்தியம் ..
ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே
நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு
நாம் உல்லாசமாக வாழ்வோம் (2)
–SUBHAM—
TAGS- அவிசாரி, பட்டணம், மனு நீதி நூல், பணம் பந்தியிலே, பணம் ,தமிழ், பொன் மொழிகள் ,