
Post No. 11,661
Date uploaded in London – – 12 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
(எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் நைசாக , நாசூக்காக என் சுய சரிதையையும் கொடுத்துள்ளேன் ; அடைப்புக்குறிக்குள் நான் நுழைத்திருக்கும் விஷயங்களை படிப்பதும் படிக்காததும் உங்கள் இஷ்டம்)
xxxx
அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாணக் கவிராயர் , புகழ் பெற்ற அருணாசலக் கவிராயரின் புதல்வர் ஆவார். அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் . அவர் சொல்லும் புராண நிகழ்ச்சிகளின் காலம் (மாதங்கள்) இதுவரை பாரும் அறியாத விஷயம் ஆகும். சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் புது வீட்டுக்குக் குடிபோகலாம் என்று செப்புகிறார்.
Xxxx
அடுத்த பாடலில் விருந்து உண்ணவும் செய்யவும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் தகாதவை; மற்றவை நலமானவை என்கிறார்.
நான் பிராமண குடும்பத்தில் பிறந்தாலும் இந்த விஷயத்தை அறியேன். குடிபோகக்கூடாத மாதங்கள் தெரியும். ஆனால் அதற்குப் புலவர் சொல்லும் கரணங்கள் எனக்குப் புதுமையானவை..
xxxx
என் சுய சரிதை
((ஒரு முறை ஒரு இலங்கைத் தமிழ் டாக்டர் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்திக்க விரும்பினார். நான் ஒவ்வொரு நாளாகச் சொல்ல அவர் அந்த நாட்களில் வேலை இருக்கிறதே என்று தட்டிக்கொண்டே வந்தார். அதற்கென்ன வியாக்கிழமை வாருங்கள் என்றேன். அவர் பதறிப்போய், “முடியவே முடியாது; எந்தக் கிழமை போனாலும் நாங்கள் வியாழக்கிழமை முதல் சந்திப்பை வைக்க மாட்டோம்” என்றார். அப்போதுதான் எனக்கு வியாக்கிழமை பற்றித் தெரிந்தது. பொதுவாகப்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று பலரும் பாராட்டுவார்கள். மனித குலம் முழுதும் இப்படி எவ்வளவோ வினோதமான நம்பிக்கைகள்! மேலை நாடுகளில் 13-ம் ஆம் எண் அறை கிடையாது . 666 என்ற எண் பேயின் எண் என்பார்கள்.
xxxx
நான் லண்டனில் உலக இந்து மஹாசங்கத்தின் செயலாளர்.
ஒரு நிகழ்ச்சிக்கு நான் தயாரித்த இந்து மஹா சங்க அழைப்பிதழில் பார்டர் border முழுதும் ஸ்வஸ்திகா Swastika Symbol சின்னம் போட்டு அலங்கரித்து இருந்தேன். மேற்கூறிய டாக்டர் எனக்கு போன் செய்து அவருடைய வெள்ளைக்கார (டாக்டர்) நண்பர்கள் அந்த அழைப்பிதழைப் பார்த்து அதிர்ச்சியுற்றதாகவும், அது பயங்கரமான சின்னம் என்றும் கூறினார்.
ஆரியன் என்ற சொல்லையும், ஸ்வஸ்திகாவையும் ஹிட்லர் (Hitler) பயன்படுத்தியதால் வந்த வம்பு அது. நான் சொன்னேன் ; இந்துக்களுக்கு அது மிகவும் புனிதமான சின்னம். இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் பத்திரிக்கைகளின் அதிபர் ராம்நாத் கோயங்காவின் குடும்ப கல்யாண அழைப்பிதழ் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அதில் பெரிய ஸ்வஸ்திகா சின்னம்தான் இருந்தது என்று குறிப்பிட்டேன். இந்தியாவில் வடக்கத்தியர் வீடுகளிலும் கடைகளிலும் ஸ்வஸ்திகா சின்னம் சுவற்றில் வரையப்பட்டிருக்கும் .
கார்த்திகை நட்சத்திரம், செவ்வாய்க் கிழமைகளில் எங்கள் குடும்பத்தினர் எந்த புது விஷயங்களையும் செய்ய மாட்டோம்.
இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் நுழைந்ததும் கார்த்திகை நட்சத்திரத்தன்றுதான். அது எனக்குத் தெரியாது. காஞ்சி சங்கராசார்யார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் , “அடாடா ! கார்த்திகை நட்சத்திரத்தன்று போகிறார்களே” என்று வருத்தப்பட்டதாக பின்னர் ஒருவர் கூறினார்.
அவரவர் நம்பிக்கை, அனுபவத்தின் பேரிலும், காலாகாலமாக இருந்துவரும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் எழுகின்றன தமிழ் சம்ஸ்க்ருத இலக்கி யம் முழுவதிலும் தும்மல், கண்துடிப்பு (Sneezing, Eye Twitching) பற்றி ஒரே மாதிரியான நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால் மேலை நாட்டில் அப்படி இல்லை.
இதே போல, அம்பலவாணர், சில விஷயங்களுக்குக் காரணம் சொல்கிறார். சில விஷயங்களுக்கு சொல்லுவதில்லை.
திருமூலரும் சம்ஸ்க்ருத நூல்களும் பயணம் செய்யக்கூடாத திசைகளை வார சூலை என்று குறிப்பிட்டுள்ளனர்.. எதையும் பின்பற்றுவதும் புறக்கணிப்பதும் அவரவர் இஷ்டம்.
Xxxx
எனக்கு அடிக்கடி போன் செய்து பல்வேறு விஷயங்களைக் கதைக்கும் ஐயங்கார் இளைஞன், ஒரு நாள் போன் செய்து நாம் எல்லோரும் X Y Z செய்கிறோமே; என் நண்பன் சொல்கிறான் ; அப்படிச்செய்தால் நாம் பிராமணர் இல்லையாமே என்றான்.
எனக்கு ஒரே சிரிப்பு !
நான் கேட்டேன்- உன் நண்பரும் அவரது மனைவியும் லண்டனில் இருக்கிறார்களா ? என்று
ஆமாம், ஆமாம் இங்கேதான் இருக்கிறார்கள் என்றார். நாளைக் காலையில் இரண்டு பேரும் இந்தியாவுக்கு டிக்கெட் வாங்கிச் செல்ல வேண்டும் என்று ஒரு பெரிய பிராமண அறிஞர் சொன்னார் என்று சொல் என்றேன்.
அவர் பதறிப்போய் What? What? வாட், வாட், என்றார் .
திருப்பியும் அதையே அழுத்தம் திருத்தமாக சொல்லி , பிராமணர்கள் கடல்கடந்து போகக்கூடாது என்று மனு நீதி நூல் சொல்கிறது. பெண்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று தொல்காப்பியம் சொல்கிறது. அவர் சாஸ்திர விதிகளில் நம்பிக்கை உடையவர் என்பதால் நாளைக் காலையே இந்தியாவுக்குப் போக வேண்டும் என்றேன். அவர் நைஸாக பேச்சை வேறு திசைக்குத் திருப்பினார். நானும் விட்டுவிட்டேன் .ஆக வேண்டுமென்றால் சாஸ்திரம்; வேண்டாமென்றால் அது தெரியாது போல நடிப்பது என்பது பலருக்கும் வாடிக்கை ஆகிவிட்டது

இன்னும் இரண்டு சுவையான விஷயங்களை பின்னர் எழுதுகிறேன்
என்னுடைய பிராமண உறவினர் லண்டனில் சனிக்கிழமை காலை உண்ணாவிரதம் முடிந்து மலையில் என்னுடன் சுற்றிப்பார்க்க வந்தபோது மக் டொனால்டில் (Chicken in Mc Donald) சிக்கன் ஆர்ட்டர் கொடுத்தார் ; அதற்குப்பின்னர் என்ன நடந்தது என்பதை பின்னர் எழுதுகிறேன் !
மற்றோரு சம்பவம் மதுரையில் செளராஷ்டிர பிராமணன் மாமிசம் சாப்பிட்ட கதை. என் தம்பியிடம் அந்தப் பையன் சொன்னான் : நாங்களும் ஐயர் Iyer தான் ; எங்க அப்பா ஒரு டையர் Dyer (சாயம் ஏற்றும் தொழிலாளி) ஆனால் நாங்கள் கறி (மாமிசம்) மட்டும் சாப்பிடுவோம் என்று சொல்ல , என் தம்பி அதை வீட்டில் வந்து சொல்ல , அன்று முழுதும் ஒரே தமாஷ்தான் ; பின்னர் விரிவாகக் காண்போம்.))
xxxx
67. மனை கோலுவதற்கு மாதம்
சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்
செல்வம்உண் டதினும் நலமே
சேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்
தீயிட்ட தானி யாகா;
வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்
வீறல்ல; ஆவ ணிசுகம்;
மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;
மேன்மையுண் டைப்ப சிக்கே;
உத்தமம் கார்த்திகைக் காகாது மார்கழியில்
ஓங்குபா ரதம்வந் தநாள்;
உயர்வுண்டு மகரத்தில்; மாசிமா தத்தில்விடம்
உம்பர்கோன் உண்ட தாகாது;
அத்தநீ! மாரனை எரித்தபங் குனிதானும்
ஆகுமோ! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அத்த – தலைவனே!, அருமை …… தேவனே!, சித்திரைத்
திங்கள்தனில் மனைகோல மனைபுகச் செல்வம் உண்டு – சித்திரைத்
திங்களில் வீடுகோலினாலும் வீடு குடி புகுந்தாலும் செல்வம் உண்டாகும், அதினும் வைகாசிக்கு நலமே சேரும் –
சித்திரையிலும் வைகாசித் திங்களில் நன்மையே உண்டாகும், மேனாள் ஆனி அரன்புரம் தீ இட்டது; ஆகா – முற்காலத்தில் ஆனித்திங்களிலேதான் சிவபெருமான் முப்புரத்திற்கு நெருப்பிட்டது ஆகையால் ஆனி ஆகாது,
வெற்றிகொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம் வீறு அல்ல –
வெற்றியைக்கொண்ட இராமன் மனைவி சிறைசென்ற ஆடித்திங்கள்
சிறப்புடையது அன்று, ஆவணி சுகம் மேவிடும் – ஆவணித்திங்கள் நலம் பொருந்தும், கன்னி இரணியன் மாண்டது; ஆகாது – புரட்டாசித்திங்கள் இரணியன் இறந்தது, ஆகையால், தகாதது, ஐப்பசிக்கு மேன்மை உண்டு –
ஐப்பசித் திங்களில் உயர்வு ஆண்டு, கார்த்திகைக்கு உத்தமம் –
கார்த்திகைத்திங்களில் நன்மை, ஓங்கு பாரதம் வந்தநாள் மார்கழியில்
ஆகாது – பெரிய பாரதச் சண்டை வந்த காலமான மார்கழித்திங்களில் தகாது, மகரத்தில் உயர்வு உண்டு – தைத்திங்களில் மேன்மை உண்டாகும்,
உம்பர்கோன் விடம் உண்டது மாசி மாதத்தில் ஆகாது – வானவர்
தலைவனான சிவபிரான் நஞ்சுண்டதாகிய மாசித்திங்களில் தகாது, நீ மாரனை எரித்த பங்குனிதானும் ஆகுமோ – நீ காமனை எரித்த பங்குனித்திங்களும் தகுமோ? (தகாது)
xxxxx

68. விருந்து வாரம்
செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்
செய்யொணா துண்ணொ ணாது;
திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்
செவ்வாய் விருந்த ருந்தார்;
பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்
பொன்னவற் கதிக பகைஆம்;
புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்
போனவுற வுந்தி ரும்பும்;
மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்; இதனினும்
மனமொத் திருந்த இடமே
வாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ
வாய்த்தநாள் என்ற றியலாம்;
அங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அம்கையில் விளங்கி வளர்துங்கம் மழுவாளனே –
அகங்கையில் விளக்கமுற்று ஒளிரும் தூய மழுவையுடையவனே!,
அண்ணலே – பெரியோனே!, அருமை …… தேவனே!, செங்கதிர்க்கு
விருந்து ஒருவர் செய்ய ஒணாது; உண்ண ஒணாது; உறவு போம், பகை
வரும் – ஞாயிற்றுக்கிழமையில் ஒருவர் விருந்துசெய்யவும் உண்ணவும் ஒவ்வாது, (செய்தால்) உறவு நீங்கிப் பகை உண்டாகும், திங்களுக்கு உறவு
உண்டு; நன்மைஆம் – திங்கட் கிழமையில் (விருந்துண்டால்) உறவு வரும்;வேறு நன்மையும் உண்டாகும், செவ்வாய் விருந்து அருந்தார், பகை வரும்- செவ்வாய்க்கிழமையில் விருந்துண்ணமாட்டார், (உண்டாற்) பகையுண்டாகும்,
பொங்கு புதன் நன்மை உண்டு; உறவுஆம் – நலம்மிகு புதன்கிழமையில்
நலமுண்டாகும், உறவும் உண்டாகும், பொன்னவற்கு விருந்து உண அதிக
பகைஆம் – வியாழனில் விருந்துஉண்டால் மிகு பகைவரும், புகரவற்கு ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப் போன உறவும் திரும்பும் –
வெள்ளிக்கிழமையானால் நீண்ட நாட்களாகப் பகையான உறவினரும் திரும்புவர், மங்குல் நிகர் சனிவாரம் நல்லது ஆம் – முகில் அனைய
சனிக்கிழமை நலம் உண்டாகும், இதனினும் மனம் ஒத்து இருந்த இடம்
வாலாயமாய்ப்போய் விருந்துஉண விருந்துஉதவ வாய்த்தநாள் என்று
அறியலாம் – மேலும் இந்த நாளே உளம் ஒத்தும் உள்ள இடத்தில்
வழக்கமாகச்சென்று விருந்து உண்ணவும் செய்யவும் பொருந்திய நாள் என
உணரலாம். (வி-ரை.) சனியின் நிறம் கருமையாகையால், ‘மங்குல் நிகர் சனி’
என்றார். அகம் + கை – அங்கை.
To be continued………………………………..
Tags–குடி போக, விருந்துக்கு அழைக்க, போக, நல்ல நாட்கள், மாதங்கள் , சதகம், என் சுய சரிதை