
Chinese Philosopher Confucius
Post No. 11,892
Date uploaded in London – – 11 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புத்தர் புதிதாக எதையுமே சொல்லவில்லை. ஏற்கனவே இந்து தர்மத்தில் சொன்னதைத் திரும்பச் சொன்னார். ஆனால் அறிஞர்கள் பேசும் சம்ஸ்க்ருத மொழியில் சொல்லாமல் பெண்களும், கீழ்மட்ட மக்களும் பேசும், பேச்சு வழக்கு, கொச்சை மொழியில் செப்பினார். மேலும் நான்கு வகை ஜாதி வேறுபாடின்றி யாரும் வரலாம் என்றார். ஆனால் பெண்கள் வரக்கூடாதென்றார் ; பெண்களை உள்ளேவிட்டால் தனது மதத்ததுக்கு அழிவு என்பது அவருக்குத் தெரியும். மற்றோர் வித்தியாசம் யாகம் யக்ஞம், சாமி, பூதம் இவையெல்லாம் தேவையே இல்லை. கடவுள் பற்றி கதைக்காமல் எட்டு நல்ல குணங்களை மட்டும் பின்பாறறினால் போதும் என்றார்.

அவரது பிரதம சீடன் ஆனந்தன் மன்றாடி , கெஞ்சிக் கூத்தாடி பெண்களை சேர்த்தே ஆக வேண்டும் என்றார் . சரி, போ, சேர்க்கிறேன். ஆனால் என் மதம் இந்த நாட்டில் 500 ஆண்டுகளே வாழும் என்றார். அது போலவே புத்த மதம் செத்துப் போனது. இதற்கு புத்தர் ஸம்ஸ்க்ருதத்தைப் புறக்கணித்ததே காரணம் என்று சுவாமி விவேகானந்தர் பிற்காலத்தில் சொன்னார்.
இன்று இந்தியாவுக்கு வெளியேயுள்ள புத்த மத நாடுகள் எல்லாம் வெகுவேகமாக கிறிஸ்தவ நாடுகளாகி வருகின்றன . இன்னும் பல நாடுகளில் புத்த மதம் பெயரளவுக்கு இருக்கிறது. புத்தர் சொன்ன அஹிம்சை முதலியவற்றைப் பின்பற்றுவதில்லை. நீ ஆடு, மாட்டை அடிக்காதே. மற்றவர்களை அடிக்கவிட்டு நன்றாக சாப்பிடு !தப்பே இல்லை என்று சொல்லி புத்தர் முகத்தில் கரிபூசிவிட்டனர்.
(புத்தரின் நல்ல, கெட்ட அணுகுமுறைகளை அறிய, உலகப் புகழ்பெற்ற தத்துவ வித்தகர், இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய தம்மபத முகவுரையையும் சுவாமி விவேகானந்தரின் உரைகளையும் படிக்க வேண்டும்.)
உலகில் அஹிம்சைக்கும் உண்மைக்கும் இந்துக்கள் கொடுத்த முக்கியத்துவத்தை வேறு எவரும் தரவில்லை. இந்தியாவில் தோன்றிய மதங்கள் எல்லாம் கர்ம வினை, மறுபிறப்பு, பாவ புண்ணியம் ஆகியவற்றை ஒப்புக்கொள்ளுகின்றன.
புத்தருக்கும் , பாபிலோனிய ஹமுராபிக்கும் காலத்தால் முந்தியவர் மனு. அவரது நூலில் சரஸ்வதி நதி, ரிக் வேதம் முதலியன பற்றிய குறிப்புகளால் இவற்றை அறியலாம். பிற்காலத்தில் சூத்திரர்களுக்கு எதிரான சில ஸ்லோகங்களை வெள்ளைக்காரர்கள் சேர்த்து இதற்கு கெ ட்ட பெயர் ஏற்படுத்தினர். அவைகளை சேர்த்து விட்டு திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாய்மூடி மெளனம் காத்தனர். அதாவது எல்லா இந்து மத நூல்களிலும் இடைச் செருகல், பிற்சேர்க்கை (Interpolations and Annexures) இருப்பதாக எழுதிய கள்ளர்கள் மனு நீதி நூலில் மட்டும் இடைச்செருகல் இருப்பதாக ஒரு வரி கூட எழுதவில்லை!
xxxx
புத்தர் சொன்ன கொள்கைகளை எண் வகை மார்க்கம் என்றும் பஞ்சசீலம் என்றும் பகர்வர்.
பஞ்சசசீலம் என்று சொன்னாலே எல்லோருக்கும் கோபமும் சிரிப்பும்தான் வரும். சீனாவை ஆண்ட சூ என் லாய் கள்ளனுக்கும் குள்ளன்; வெள்ளைக்காரனைவிட ஒரு படி கூடவே அயோக்கியன். இந்தியப் பிரதமர் நேருஜியைக் கூப்பிட்டு பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்துவீட்டுவிட்டு. அவர் இந்தியா திரும்பியவுடன் இந்தியாவைத்த தாக்கி 30, 000 சதுரமைல் களை பிடித்துக் கொண்டான். இன்றுவரை நம்மால் மீட்கமுடியவில்லை. புத்தர் பெயரில் நடந்த அயோக்கியத்தனம் இது.
Xxx
மனு என்ன சொன்னார் ?
अहिंसा सत्यमस्तेयं शौचमिन्द्रियनिग्रहः ।
एतं सामासिकं धर्मं चातुर्वर्ण्येऽब्रवीन् मनुः ॥ 10-६३ ॥
ahiṃsā satyamasteyaṃ śaucamindriyanigrahaḥ |
etaṃ sāmāsikaṃ dharmaṃ cāturvarṇye’bravīn manuḥ || 10-63 ||
அஹிம்சா ஸத்யம் அஸ்தேயம் செளசம் இந்த்ரிய நிக்ரஹக
ஏதம் ஸாமாசிகம் தர்மம் சாதுர்வர்ண்யே அப்ரவீத் மனுஹூ 10-63
பிறருக்கு தீங்கிழைக்காமமை (அஹிம்சை), உண்மை, நேர்மை, சுத்தம் (மனம், மொழி, மெய் மூஒன்றிலும் தூய்மை), புலனடக்கம் ஆகியன நான்கு ஜாதியினருக்கும் பொதுவான குணங்கள் -10/63
இதில் நேர்மை என்பது என்னவென்றால் பிறர் பொருள் நயவாமை.(அடுத்தவன் மனைவி, அடுத்தவன் சொத்து ஆகியவற்றை நாடாமை ).
இவை அனைத்தையும் நாம் தமிழ் வேதம் ஆகிய திருக்குறளிலும் காணலாம்.

புத்தரும் பஞ்சசீலம் (ஐந்து ஒழுக்க நெறிமுறை) என்ற பெயரில் இதையே சொன்னார். மோசஸ், ஜீஸஸ் (இயேசு) அறிவுரைகளிலும் இந்த 5 குணங்களைக் காணலாம். இதோ புத்தர் சொன்னது (பாலி மொழியில்):
பாணாதி பாத வெரமணி = பிற உயிர்களைக் கொல்லமாட்டேன்
முஸா வாத வெரமணி = உண்மையில்லாத விஷயங்களை உரைக்கமாட்டேன்
அதின்னாதான வெரமணி = பிறர் கொடுக்காத பொருளை அபகரிக்க மாட்டேன்
சுரா மேரய மஜ்ஜ பமாத த்தான வெரமணி = கவனத்தை இழக்க வைக்கும் குடி , போதைப் பொருட்களை சாப்பிடமாட்டேன்
காமேஷு மிச்சஹாசார வெரமணி = காம விஷயங்களில் தவறிழைக்கமாட்டேன்
இந்த ஐந்து கொள்கைகளையும் நான் ஏற்கிறேன் (சிக்கப்பதம் சமதியாமி)
Xxxx
மனு தர்ம சாஸ்திரம் இதையே சிறிது விரிவு படுத்தி பத்து குணங்களாகவும் பரிந்துரை செய்கிறது :
धृतिः क्षमा दमोऽस्तेयं शौचमिन्द्रियनिग्रहः ।
धीर्विद्या सत्यमक्रोधो दशकं धर्मलक्षणम् ॥ ९२ ॥
dhṛtiḥ kṣamā damo’steyaṃ śaucamindriyanigrahaḥ |
dhīrvidyā satyamakrodho daśakaṃ dharmalakṣaṇam || 6-92 ||
த்ருதி க்ஷமா தமோஸ்தேயம் செளச மிந்த்ரிய நிக்ரஹஹ
தீர்வித்யா ஸத்யமக்ரோதோ தசகம் தர்ம லக்ஷணம்
தர்மம் என்பதன் இலக்கணம் என்னெவென்றால் : திட சித்தம், மன்னிக்கும் மனப்பாங்கு (பொறுமை), புலனடக்கம், பிறர் பொருள் நயவாமை,, தூய்மை, தன்னடக்கம், விவேகம், அறிவு/ஞானம் , உண்மை, கோபப்படாமை
Xxx
ஐந்து குணங்களை சமண மதமும் ஏற்று ஸ்லோகங்களை செய்துள்ளன.
மத்ய மாம்ச மது த்யாகைஹி
ஸஹ அணு வ்ரத பஞ்சகம்
அஷ்டவ் மூல குணான் ஆஹுஹு
க்ருஹினாம் ஸ்ரமன் நோத்தமாஹா (சமந்த பத்ரா )
xxx
இந்தக் கொள்கைகள் சீனா வரை 2600 ஆண்டுகளுக்கு முன்னரே பரவிவிட்டன . புத்தருக்கும் சமண தீர்த்தங்கரரான மஹாவீரருக்கும் சம காலத்தவரான கன்பூசியஸ் என்பவரும் ஐந்து வூ சங் Wu-Chang என்று அவைகளை மொழிந்துள்ளார் :

ஜென் – பிறருக்கு நன்மை செய்யுங்கள்
யீ – உண்மை
லீ – நன்னடத்தை
ஷியான் – நம்பகத்தன்மை (நேர்மை)
சீ – அறிவு / ஞானம்
ஆக இந்துக்கள் வேத, உபநிஷதங்களில் சொன்ன அதே குணங்களை திருவள்ளுவர் வரை சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது .
Xxx
மனு தர்ம சாஸ்திரத்துக்குப் பின்னர் வந்த கிருஷ்ணரும் பகவத் கீதையில் இதையே மேலும் விரிவாக்கி 25 குணங்களாக விரித்துரைக்கிறார்
श्रीभगवानुवाच |
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थिति: |
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् || 16-1||
अहिंसा सत्यमक्रोधस्त्याग: शान्तिरपैशुनम् |
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् || 16-2||
तेज: क्षमा धृति: शौचमद्रोहोनातिमानिता |
भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत || 16-3||
(சங்கதம் வெப்சைட்) பகவத் கீதை 16ம் அத்தியாயம்
ஸ்ரீப⁴க³வாநுவாச
அப⁴யம் ஸத்த்வஸம்ஸு²த்³தி⁴ர்ஜ்ஞாநயோக³வ்யவஸ்தி²தி: |
தா³நம் த³மஸ்²ச யஜ்ஞஸ்²ச ஸ்வாத்⁴யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.
அஹிம்ஸா ஸத்யமக்ரோத⁴ஸ்த்யாக³: ஸா²ந்திரபைஸு²நம் |
த³யா பூ⁴தேஷ்வலோலுப்த்வம் மார்த³வம் ஹ்ரீரசாபலம் || 16- 2||
அஹிம்ஸா = கொல்லாமை,
ஸத்யம் = வாய்மை,
அக்ரோத⁴: = சினமின்மை
த்யாக³: = துறவு,
ஸா²ந்தி = ஆறுதல்,மன அமைதி
அபைஸு²நம் = வண்மை,
பூ⁴தேஷு த³யா = ஜீவதயை,உயிர்களிடத்தில் அன்பு
அலோலுப்த்வம் = அவாவின்மை,
மார்த³வம் ஹ்ரீ: = மென்மை, நாணுடைமை,
அசாபலம் = சலியாமை (குரங்கு மனத்தை அடக்குதல்)
தேஜ: க்ஷமா த்⁴ருதி: ஸௌ²சமத்³ரோஹோ நாதிமாநிதா |
ப⁴வந்தி ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதஸ்ய பா⁴ரத || 16- 3||
தேஜ: க்ஷமா த்⁴ருதி: ஸௌ²சம் = ஒளி, பொறுமை , உறுதி, சுத்தம்,
அத்³ரோஹ: = துரோகமின்மை –நன்றி மறவாமை
ந அதிமாநிதா = செருக்கு கொள்ளாமை
தை³வீம் ஸம்பத³ம் = தெய்வ சம்பத்தை
அபி⁴ஜாதஸ்ய ப⁴வந்தி = எய்தியவனிடம் காணப்படுகின்றன
பா⁴ரத = பாரதா (அர்ஜுனா!)
இவை (25 குணங்களும் ) தெய்வீக குணங்களாகும்
—suhbam—
Tags- பஞ்ச சீலம், எண்வகை மார்க்கம், மனு நூல், பகவத் கீதை, சமண மதம், கன்பூசியஸ்