
Post No. 11,963
Date uploaded in London – – May 3 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஒரு கிறிஸ்தவ பாதிரியார் காந்திஜியை மடக்கிவிடும் நோக்கத்தோடு இந்துமதத்தை எதிர்த்துப் பல கேள்விகளைக் கேட்டார். காந்திஜியோ அந்தப் பாதிரியிடம் பல கேள்விகளைக் கேட்டுக் கிடுக்கிப் பிடி போட்டார். பாதி+ரி கால் +ரி ஆ கப் போய்விட்டது !
இதோ கேள்வியும் பதிலும்
கிறிஸ்தவ பாதிரியார் :- இந்துக்கள் மட்டும் ஒரே கடவுளை ஒப்புக்கொண்டால், இந்துமதமும், கிறிஸ்தவ மதமும் இணைந்து இந்தியாவுக்கு சேவை செய்யலாமே !
காந்திஜி :- அப்படிப்பட்ட ஒன்று நிகழ எனக்கும் ஆசைதான். ஆனால் இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசும் இன்றைய கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளவரை அது நடவாது. நீங்கள் இந்துமதத்தை கை விட்டால்தான் பரலோக சாம்ராஜ்யம் கிடைக்கும் என்றல்லாவா சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள்; கிறிஸ்தவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்து அந்த இனிய மணத்தை இந்துக்களின் மீது பரப்புவதையே நான் விரும்புகிறேன். ஒரு ரோஜா மலர், தன் வாசனை பற்றிப் பிரசங்கம் செய்யவில்லையே. அது இருந்த இடத்திலிருந்து மவுனமாக அல்லவா மணத்தைப் பரப்புகிறது . அதுபோலத்தான் நமது வாழ்வும். அப்படி கிறிஸ்தவர்கள் வாழ்ந்தால் இந்தப் பூமியில் அமைதியும் நல்லெண்ணமும் பரவும் . ஆனால் ராணுவம் போன்ற, தோள் வலிமை காட்டும் கிறிஸ்தவம் உள்ள வரை அது நடக்காது .பைபிளில் அது இல்லை. ஆனால் ஜெர்மனியிலும் பல மேலை நாடுகளிலும் அது உள்ளது..
பாதிரி : இந்துக்கள் விக்ரகங்களை வழிபடும் வழக்கத்தைக் கைவிட்டு ஒரே கடவுளை வணங்கினால், தடைகள் எல்லாம் விலகிவிடும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
காந்திஜி :- ஓஹோ, அத்தோடு கிறிஸ்தவர்கள் நிற்பார்களா? கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளார்களோ ?
கத்தோலிக்க பாதிரி : உண்மைதான்; கிறிஸ்தவர்களின் எல்லாப் பிரிவினரும் ஒற்றுமையாக இல்லைதான்..

காந்திஜி : அப்படியானால் நீங்கள் உதட்டளவு கொள்கை பற்றித்தான் பேசுகிறீர்கள் . ஒரே கடவுளை நம்புவதாகச் சொல்லும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஏன் இணையவில்லை என்று நான் உங்களைக் கேட்கிறேன். அப்படி அந்த இரண்டு மதங்களுமே இணைய முடியாதபோது இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஒரே கடவுள் விஷயத்தில் இணைய முடியாதே. இதற்கெல்லாம் ஒரு தீர்வு என்னிடம் இருக்கிறது; முதலில் நீங்கள் சொன்னீர்களே, இந்துக்கள் பல கடவுளர்களை நம்புகிறார்கள். விக்ரகங்களை வழிபடுகிறார்கள் என்று. அதுவே தவறு அவர்கள் பல கடவுள் பெயர்களைச் சொல்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு மேல் ஒரு கடவுள் – கடவுள்களுக்கு எல்லாம் கடவுள் ஒருவரே என்று முரசு கொட்டுகிறார்கள்.ஆகவே இந்துக்கள் எல்லோரும் பல கடவுளரை வழிபடுகிறார்கள் என்று சொல்லுவதே சரி இல்லை. அவர்கள் பல உலகங்களை நம்புவது உண்மையே .
மனிதர்களுக்கு என்று ஒரு உலகம் உள்ளது. அது போல மிருகங்களுக்கு என்று ஒரு உலகம் உள்ளது. அது போல உயர்ந்தோருக்கு ஒரு உலகம் உள்ளது. அதை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இருப்பது உண்மையே. எல்லாம் ஆங்கிலேயர் செய்த விஷமம். தேவர்களையும் கடவுளரையும் (தேவ, தேவதா ) GOD காட் என்று ஆங்கிலத்தில் மொழி பெ யர்த்தனர்.; கடவுளுக்கு சரியான சொல் ஆங்கிலத்தில் இல்லை . ஈஸ்வரன் என்பவன் தேவாதி தேவன்.
தெய்வீகத் தன்னமை உடைய (தேவர்) அ த் தனை பேரையும் GOD காட் என்று மொழி பெயர்த்ததால் குழப்பம் நேரிட்டது . நான் என்னை நல்ல இந்து என்று கருதுகிறேன். நான் பல கடவுளரை ஒருபோதும் நம்பியதில்லை. சின்ன வயசில் கூட நான் அப்படி பல கடவுளரை நினைத்ததில்லை. அப்படிப் பல கடவுள் பற்றி எனக்கு யாரும் சொன்னதுமில்லை.
xxxx

விக்ரக ஆராதனை
விக்ரக ஆராதனை விஷயத்துக்கு வருகிறேன். ஏதோ ஒரு வடிவத்தில் எல்லோரும் இதைச் செய்துதான் ஆகவேண்டும். கடவுளின் இருப்பிடம் என்று கருதும் மசூதி என்னும் கட்டிடத்துக்காக ஒரு முஸ்லீம் ஏன் உயிரையே கொடுக்கிறான்? பைபிள் என்னும் புஸ்தகத்தின் மீது சத்திய பிரமாணம் செய்யும் கிறிஸ்தவனுக்கு சர்ச் என்ற கட்டிடம் எதற்கு? இதை நான் எதிர்க்கவில்லை. மசூதி கட்டவும் கல்லறை கட்டவும் ஏராளமான பணத்தை வாரி இறைப்பது விக்ரக ஆராதனை போன்றது இல்லையா ? VIRGIN MARY வர்ஜின் மேரி (கன்னி மேரி) , புனிதர்கள் (செயிண்ட்ஸ்) முதலியோருக்கு முன்னர் ரோமன் கத்தோலிக்கர்கள் மண்டியிட்டு வணங்குவதை என்ன என்பீர்கள்? அவர்கள் கற்சிலைகளையும் துணி மீதோ கண்ணாடி மீதோ வரைந்த உருவங்களையும் வழிபடவில்லையா ?
கதோலிக்க பாதிரி இடைமறித்து : — நான் என் அம்மாவின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன்.அவளுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் அதற்கு முத்தம் தருகிறேன். அதை நான் வணங்கவில்லையே. அதுபோலத்தான் கிறிஸ்தவ செயிண்ட்ஸ் படங்களும் .
காந்திஜி :- அதே போலத்தான் இந்துக்களும். நாங்கள் கற்களை வணங்கவில்லை; கல்லிலோ, உலோகத்திலோ உள்ள குரூரமான உருவங்களை நாங்கள் வழிபடும்போது கடவுளைத்தான் நினைக்கிறோம்.
கதோலிக்க பாதிரி :- கிராமத்து மக்கள் கற்களை அல்லவா வழிபடுகிறார்கள் !
காந்திஜி : இல்லை; நான் சொல்லறேன் ; அவர்கள் கடவுளைத் தவிர எதையும் அங்கே காண்பதில்லை.. கன்னி மேரி சிலைக்கு முன்னர் மண்டியிட்டு நீங்கள் உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கவோ பிரார்த்தனை செய்கையில் என்ன செய்கிறீர்கள் ? அது போலவே ஒரு இந்துவும் கல்லின் மூலம் கடவுளுடன் தொடர்பு கொள்கிறான் . ஆனால் கன்னி மேரியிடம் நீங்கள் மண்டியிடுவது எனக்குப் புரிகிறது. ஒரு முஸ்லீம் மசூதிக்குள் நுழையும்போது பயமும் பக்தியும் அடைவது ஏன் ? உலகத்தையே அவன் ஏன் மசூதியாக (கடவுளின் இருப்பிடமாக) காணவில்லை ? நம் தலை மீது கவிழ்ந்து கிடக்கும் வானம் என்ன? மசூதியைவிட மதிப்பு குறைந்த இடமா? ஆயினும் முஸ்லீம்களின் செய்கை எனக்குப் புரிகிறது . அதை நான் போற்றுகிறேன். கடவுளை அடைய அவர்களுக்குத் தெரிந்த வழி அது. பரம பிதாவை அடைய இந்துக்களும் ஒரு வழி வைத்திருக்கிறார்கள் எங்களுடைய அணுகுமுறை வேறு; ஆனால் அவன் (கடவுள்) வேறு இல்லை .
பாதிரியார் : — ஆனால் கடவுள் , அவர்களுக்கு சத்தியமான பாதையைக் காட்டியதாக கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள்
காந்திஜி : ஆஹா அப்படியா; கடவுள் பைபிள் மூலம் மட்டுமே பேச முடியும் என்று எண்ணி விட்டீர்களா? மற்ற புஸ்தகங்கள் மூலம் பேச முடியாதா ? கடவுளின் மகத்தான சக்தியை ஏன் இப்படிச் சுரு க்கிவிட்டீர்கள் ?
பாதிரியார் : ஆனால் எங்கள் ஏசுபிரான் கடவுளின் வார்த்தைகளை பெற்றதை அற்புதங்கள் மூலம் நிரூபித்து இருக்கிறாரே !
காந்திஜி — முகமதுவும் அப்படித்தான் சொல்கிறார். நீங்கள் கிறிஸ்து சொல்லுவதை நம்பினால் முகமது சொல்வதையும் நம்பவேண்டும். இந்துக்கள் சொல்வதையும் நம்பவேண்டும்.
பாதிரியார் : ஆனால் தன்னால் அற்புதங்களை செய்ய இயலாது என்று முகமது சொல்லியிருக்கிறார் .
காந்திஜி : இல்லை. கடவுள் இருப்பதை அற்புதங்கள் மூலம் நிரூபிக்க அவர் விரும்பவில்லை. ஆனால் அவரும் கூட தனக்கான செய்தி இறை வனிடமிருந்து வந்ததாகவே சொல்கிறார்.
13-3-1937 ஹரிஜன் பத்திரிகை
Source book – Hindu Dharma, M K Gandhi, Navajivan Publishing House, Ahmedabad, 1950)
–subham—
Tags -விக்கிரக ஆராதனை, கிறிஸ்தவ பாதிரியார் ,காந்திஜி ,வாக்குவாதம், ஒரே கடவுள் , முகமது, முஸ்லீம் , மசூதி, சர்ச்