பர்மாவில் தமிழ் இந்துக் கோவில்கள் (Post No.12,366)

Temple at Pilican in Burma/Myanmar

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,366

Date uploaded in London – –  3 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பர்மாவில் தமிழ் இந்துக் கோவில்கள்

பர்மா கோவில்கள் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதப் புகுந்தபோது தமிழிலும் சில சுவையான விஷ்யங்களைக் கண்டேன்; அவைகளைத் தொகுத்து சுருக்கமாக அளிக்கிறேன் ; இவை பல வெப்சைட்டுகளிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள். ஆங்கிலத்தின் நீண்ட ஆலயப் பட்டியல் உள்ளது . அதையும் காண்க. தற்காலக் கோவில்கள் பட்டியல் மட்டுமே இங்குள்ளது. அதாவது 200 ஆண்டுகளுக்குள் தமிழ் குடியேற்றக்காரர்களால் கட்டப்பட்ட கோவில்கள்:-

காளி கோவில் பர்மா

ஸ்ரீ காளி கோயில் என்பது பர்மாவில் உள்ள யங்கோன் (Yangon) நகரில் லிட்டில் இந்தியா பகுதியில்  அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது 1871 இல் தமிழ் குடியேற்றக்காரர்களால் கட்டப்பட்டது.. அக்காலகட்டத்தில் பர்மா மாகாணமானது பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த கோவில் அதன் வண்ணமயமான கட்டிடக்கலைக்கு குறிப்பிடத்தக்கது, குறிப்பாக அதன் கூரையில், பல இந்து கடவுளர்களின் கல் சிலைகளும் உள்ளன. இக்கோயில் உள்ளூர் இந்திய சமூகத்தால் பராமரிக்கப்படுகிறது.

Xxx

அங்காள பரமேஸ்வரி மூனீஸ்வரர் ஆலயம்

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி மூனீஸ்வரர் ஆலயம் இந்த நாட்டின் மிகப் பிரசித்தமான இந்து ஆலயங்களில் ஒன்று. இவ்வாலயம் 150 வருடங்களுக்கு முன்பு யங்கொன் நகருக்கு அருகாமையிலுள்ள பீலிக்கன் கிராமத்தில் அங்கு குடியேறிய தமிழகத் தமிழர்களால் அமைக்கப்பட்டது.

விசாலமான அரச மரத்தின் கீழ் திரிசூலத்தை நாட்டி அவர்கள் இந்தக் ஆலயத்தின் தோற்றத்திற்கு உதவினார்கள். பெருந்தொகையான தமிழர்கள் வாழ்ந்த பீலிக்கன் கிராமத்தில் இன்று இருபது தமிழ் குடும்பங்கள் மாத்திரம் வாழ்கின்றன. தமிழர்கள் மாத்திரமல்ல மியன்மாரின் பிற இனத்தவர்களும் இந்த கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.

மியான்மரின் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோவிலுக்கு அய்யர் கோவில் என்ற அழைப்புப் பெயர் உண்டு. அய்யர் கோவில் என்ற பெயர் தான் மியன்மார் வாழ் தமிழர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் அதிகம் தெரிந்த பெயர்.

இந்த ஆலயத்திற்கு நீதி நிலையம் என்ற காரணப் பெயரும் இருக்கிறது. தமக்கிடையிலான பிணக்குகளை இந்த வட்டாரத்தில் வாழும் மக்கள் கோவில் மண்டபத்தில் பேசித் தீர்ப்பார்கள். ற்பூரம் ஏற்றிச்  சத்தியம் செய்யும் வழக்கமும் உண்டு.

மியான்மர் நாட்டின் பீலிக்கான் நகரில் உள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா  10.-04.-2011, நடந்தது .அப்போது சுமார் 2 லட்சம் பக்தர்கள் கண்டு மகிழந்தனர்.

வயல் வெளிகள் சூழ்ந்த இக்கிராமத்தில் சுமார் 20 தமிழ்க் குடும்பங்கள் மட்டும் வாழ்கின்றனர் என்றாலும் 64 சுற்றுக் கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் குலதெய்வமாக விளங்குகிறது .

(ஒத்தக்கடை ராமன்)

XXXXX

தமிழ் கல்வெட்டு

பர்மாவின் பண்டைய தலைநகரான (Bagan) பாகனில் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாகன் நகரத்தில் உள்ள ஒரே ஒரு வைணவம் விஷ்ணு கோயிலுடன் ( Nat Hlaung Kyaung Temple) தொடர்புடையதாக இந்த கல் பொறிக்கப்பட்டுள்ளது .

கல்வெட்டு சம்ஸ்க்ருதத்தில் அமைந்த ஒரு செய்யுளையும், தமிழில் அமைந்த ஒரு உரைநடைப்பகுதியையும் கொண்டுள்ளது. சம்ஸ்க்ருதச் செய்யுள் கிரந்த எழுத்திலும், தமிழ்ப்பகுதி தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டிருந்தன. தமிழ் எழுத்து, 12-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் இருக்கிறது. சம்ஸ்க்ருதச் செய்யுள், வைணவ ஆழ்வாரான குலசேகராழ்வார் எழுதிய “முகுந்தமாலா”  என்னும் செய்யுள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது (செய்யுள் எண்.5 .

மலைமண்டலத்தைச் ( Kerala) சேர்ந்த மகோதயர் பட்டணம் (மலபாரைச் சேர்ந்த கிராங்கனூர்-தற்போதைய கேரளா, கொடுங்கல்லூர்) என்னும் பட்டணத்திலிருக்கும் ஸ்ரீகுலசேகர நம்பி என்பவர் அளித்த நன்கொடைகள்  பற்றிக் கல்வெட்டின் தமிழ்ப்பகுதி கூறுகிறது. இவர் தம்மைக் குலசேகர ஆழ்வாரின் அடியான் எனக்குறிப்பிடுகிறார் என்பதை இப்பதிவில் காணப்படுகிறதுஇப்

மொத்தம் 9 வரிகள் உள்ளன. இக்கல்வெட்டில் இடம்பெற்றது பின்வருமாறு எழுதப்பட்டது.

####.?1.ஸவஸ்தி ஸ்ரீ நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோப

2.போ⁴கே³யத்³யத்³ப⁴வ்யம் ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் |ஏத

3.த்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரே(அ)பித்வத்பாதா³ம்போ⁴ரு

4.ஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து || 5 || ?ஸ்ரீ ஸ்வஸ்திஸ்ரீ திருச்செலப்பெரு(க)

5.புக்கமான அரிவத்தனபுரத்து நானாதேசி விண்ணகராழ்வார் கோ

6 .யில் திருமண்டபமுஞ்செய்து திருக்கதவுமிட்டு இந்த மண்டப

7. த்துக்கு நின்றெரிகைக்கு நிலைவிளக்கொன்றுமிட்டேன் மலை

8.மண்டலத்து மகோதயர்பட்டணத்து இராயிரன் சிறியாநான (சீ )

9. குலசேகர(ந)ம்பியேன் இது ஸ்ரீஇதன்மம் மலைமண்டலத்தான். ####

. சம்ஸ்க்ருத. செய்யுள் விளக்கம். 

“மங்களம் உண்டாகுக. எனக்கு பெயர் புகழ் வாங்குவதில் நாட்டமில்லை. பொருள் சேர்ப்பதில் நாட்டம் இல்லை..உலக இன்பங்களை அனுபவிப்பதில் நாட்டம் இல்லை.. என்னுடைய விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும்.. ஆனால் நான் ஒன்றை மட்டும் உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன். எத்தனை பிறப்பு எடுத்தாலும் உன்னுடைய திருவடித் தாமரைகள் மீது அசையாத பக்தி இருக்க வேண்டுமென்று..

?கல்வெட்டின் இரண்டாம் பகுதி தமிழில் 12  நூற்றாண்டு தமிழ் வரிவடிவத்தில் அமைந்துள்ளது..அதன் விளக்கம்.

“மங்களம் உண்டாகுக..செல்வம் பெருகட்டும்.. புக்கம் என்னும் அரிவதனாபுரத்தில் அமைந்த நானாதேசி விண்ணகர் ஆழ்வார் கோவில் என்று வைணவக் திருமால் விஷ்ணு  கோயிலுக்குப் மலை மண்டலத்தை (சேரநாடு இன்றைய கேரளம்) சேர்ந்த ஈராயிரம் சிறியன் என்றும் ஸ்ரீ குலசேகர நம்பி என்பான்  ஒரு அழகிய மண்டபத்தை கட்டி அதற்கு கதவுகளும் செய்துகொண்டு அந்த மண்டபத்தில் எப்போதும் நின்று எரியும் விளக்கு ( எரிந்து ஒளி வீச நிலை விளக்கு ஒன்றையும்) கொடுத்தான்..எந்த தர்மம் மலைமண்டலதான் பெயரில் அறியப்படும்..”

இக்கோயிலை இன்றைய பர்மா நாட்டில் (Nat Hlaung Kyaung @ နတ်​​​​လျောင်ကျောင်း) என்று அழைக்கிறார்கள்.  இந்த கோவில் பர்மாவில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான  ஒரே ஒரு வைணவம் கோவிலாகும்.

தமிழில் நானாதேசி விண்ணகர் ஆழ்வார்  கோவில் என்று கூறப்பட்ட இக்கோவில் 10 ஆம் நூற்றாண்டில் அனவ்ரதா (அநிருத்தன்) மன்னர் காலத்தில்  கட்டப்பட்டது… 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேர நாட்டில் சேர்ந்த  குலசேகர நம்பி என்ற வணிகர் என்பவர் இங்கு வந்து ஒரு மண்டபத்தைச் சீர்செய்து கட்டியதாகத் தான் தமிழ்க் கல்வெட்டு கூறுகிறது.  (நானாதேசி என்பது பண்டைய தமிழகத்தை சார்ந்த ஒரு வணிகக் குழு.நான்கு திசைகளிலும் சென்று வணிகம் செய்பவர்கள் என்பதால் இந்தப் பெயர்; பிற்காலத்தில் மண்டபம் அமைத்துக்கொடுத்த ஈராயிரம் சிறியனான குலசேகரநம்பியும் இந்த வணிக கணத்தைச் சேர்ந்தவராகவே இருக்கக்கூடும்.

கோயிலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் சிலைகள் இருந்தன;  இன்று சேதம் அடைந்த ஏழு சிலைகள் மட்டுமே  எஞ்சியுள்ளன.

இக்கோவிலில் பொறிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டில் இடம் பெற்ற முகுந்தமாலை பாடலை எழுதிய குலசேகர ஆழ்வார் தமிழர்களின் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்..கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 750 – 780)

 XXXXXX

சைவ வைணவ திருக்கோவில்கள்

தேன்கருமாபிள்ளை அவர்களின் முயற்சியால் கட்டப்பெற்ற கமாயுட் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தானம் இராமநாதன் ரெட்டியாரால் கட்டப்பட்ட பெற்ற பெருமாள் கோவில், திருக்கம்பை முருகப் பெருமான் ஆலயம். காமாட்சியம்மன் கோவில்காளியம்மா (காளிபாடி) போன்ற கோவில்கள் எல்லாம் தமிழரின் கலைத் திறனையும் சமயவழி பண்பாட்டையும் பக்தி நெறியையும் பறைசாற்றி வருகின்றன. மேலும் பசுண்டான் நகரத்தெண்டாயுதபாணி தட்டோன் ஸ்ரீ தண்டாயுதபாணிமோல்மென் சிவஸ்தலம் தெண்டாயுதபாணி கோவில்களில் விழாக்கள் இன்றும் மிகவிமரிசையுடன் கொண்டாடப்பெற்று வருகின்றன.. பீலிக்கான் அங்காள ஈஸ்வரிமுனீஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் அதிகம் கூடுகின்றனர்.

XXXXXX

 ரங்கூன் சென்ற ஒருவர் எழுதியது

எங்களது ஹோட்டலின் மிக அருகில் இஸ்லாமிய பள்ளிவாசல் அதற்கு எதிரே பகோடா இருந்தது. சிறிது தூரத்தில் கிருஸ்ணர் கோவிலும் மேலும் சற்றுத்தூரத்தில் முத்துமாரியம்மன் மற்றும் சுப்பிரமணியர் கோவில்கள் இருந்தன. இந்தியா இலங்கையில் தென்படும் சமூக சூழ்நிலையை காணமுடிந்தது. முக்கியமான பல கட்டிடங்கள் கடைகள் என அமைந்திருந்த இடத்தில் நாலு இந்துக்கோயில்களை காணமுடிந்தது. கே எவ் சி KFC உணவகம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு அடுத்த கட்டிடமாக இருந்தது. அக்காலத்தில் இந்தியர்கள் யங்கூனில் நிறைந்து இருந்ததை ஆதாரமாக காட்டியது.

Xxxxxxxx

முணியான்டி கோயில்

முணியான்டி கோயில் தமிழர்த்திரு ” பெ.ந. குப்புசாமி கடாரத் தலைவர் ” அவர்களால் 1861 ஆண்டில் கட்டப்பட்டது.அங்காளம்மன் கோயில் தமிழர்த்திரு ” விரையா மழவராயர் ” அவர்களால் கட்டப்பட்டது.

முணியாண் டி, அங்காளம்மன் என இரு கோயில்களும் அருகாமையிலே உள்ளது. ஆண்டுதோறும் ஒரே நாளில் இரு கோயிலுக்கும் திருவிழா நடக்கும் , 1000  திற்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு பூக்குழி இறங்குவார்கள். 

தமிழர்கள் மட்டுமின்றி பர்மா ,சீனர் போன்ற பிற இனத்தாரும் , பர்மா அரசு அமைச்சர்கள் வரை பெரிதும் நம்பிக்கையோடு வணஙங்குவார்கள், பூக் குழி இறங்குவார்கள் ,

திருவிழா 10 நாட்கள் நடைப்பெறும்,

வருசம் முழுவதும் 24×7 சாப்பாடு போடுற ஒரே கோயில் இது தான் .. நடுராத்திரி போனாலும் வந்துருக்கும் ஆள் எண்ணிக்கை மட்டும் சொல்லிட்டுங்க .. உடனே அடுப்புல அரசி பருப்பு வேகும் .. இதற்காகவே சமைக்க , பரிமார ஆட்களை ஊதியம் வழங்கி வச்சிருக்கு கோயில் நிர்வாகம்.

இங்கு கள்ளர்களின் கடாரம்கொண்டான் , கடாரத்தலைவர், சோழகர், சோழங்கதேவர், ஈழம்கொண்டான், கோபாலர், கண்டியர், மழவராயர், சேர்வை, வாண்டையார் மேலும் பல பட்டம் உடைய கள்ளர்கள் உள்ளனர்.

Sri Krishna Temple in Burma

XXXX

பர்மாவில் ராமாயணம்

மியன்மாரில்( பர்மா) இதுவரை 9 இராமாயணத் தழுவல்கள் பர்மிய மொழியில் இயற்றப்பட்டுள்ளன.
பகனில் உள்ள நாத் ஹ்லவுங் க்யவுங் என்ற ஒரு விஷ்ணு கோவிலில் இராமர் மற்றும் பரசுராமரின் சிலைகள் காணப்படுகின்றன. பர்மாவை ஆண்ட பகன் இராஜவம்ச மன்னன் ஒருவன் தான் பூர்வ ஜென்மத்தில் இராமரின் உறவினராக இருந்ததாக ஒரு கல்வெட்டில் கூறியுள்ளார்.
பர்மிய நாடகக் கலைகளில் இராமாயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அரசர்களின் காலத்தில் பண்டிகைகளின் போது அரசு சார்பில் இராமாயணம் நாடகமாக நடிக்கப்பட்டதாம். மொத்தத்தில் இராமாயணம் பர்மிய கலாச்சாரத்தில் பெருமைமிகு இடத்தைக் கொண்டுள்ளது.

Xxxxx

Sri Varatharaja Perumal

பர்மாவில் நகரத்தார் ஆலயம் நிறுவிய ஊர்கள்

நகரத்தார்கள் பர்மாவில் கோயில் அமைந்த ஊர்கள் 59 . அவைகளின் பெயர்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

1. இரங்கூன்
2. பசுபதாங்
3. லெகூ
4. மொபி
5. தக்கி
6. அவுக்கான்
7. தொவுஞ்கிங்
8. லேப்பட்டான்
9. மீன்லா
10. அவுப்போ
11. சூப்பிங்கான்
12. சீக்கோம்
13. நத்தலின்
14. பவுண்டை
15. தேக்கோம்
16. புரோம்
17. ஈனாஞ்சான்
18. தயட்சியோம்
19. ஈந்தட்டோ
20. நந்தஞ்சான்
21. பாசியன்
22. மைனாங்
23. உவாக்கமா
24. மியாங்கிமா
25. சுமங்கை
26. ஐமன்
27. உவாக்மா
28. பியாப்பம்
29. சைலா
30. தெரியா
31. தொந்தை
32. போக்கலை
33. மேல்மேன்சுன்
34. சைபின்
35. சோசான்
36. முப்பின்
37. எவுண்டன்
38. மவுஞ்சுண்டான்
39. தொங்குவா
40. கட்டபின்னா
41. கையான்
42. டாப்பின்
43. பக்கோ
44. தன்னபின்
45. சைட்டோ
46. சைச்சோ
47. தத்துவன்
48. சுவைச்சான்
49. மேல்மேன்
50. தையு
51. நவுலீபன்
52. பென்விகோம்
53. பியூ
54. டாங்கோ
55. பின்மேனா
56. மீன்ஜான்
57. மாந்தளை
58. மணியுவா
59. மீன்பு

—-SUBHAM—–

பர்மா, மியன்மார், கோவில்கள்,விழாக்கள் , இந்துமதம், ராமாயணம்,  நகரத்தார் , செட்டியார், பர்மா தமிழ் கல்வெட்டு

Leave a comment

Leave a comment