ரிக்வேதத்தில் பாவ மன்னிப்பு துதிகள் (Post No.4208)

Written by London Swaminathan

 

Date: 13 September 2017

 

Time uploaded in London- 6-54 am

 

Post No. 4208

 

Pictures are taken from various sources; thanks.

 

மனிதன் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது இந்துக்களின் தினசரி வழிபாட்டிலேயே இடம்பெற்றுள்ளது. எல்லா  பூ ஜைகளும் முடிந்தபின்னர் யானிகானிச பாபானி… என்ற மந்திரத்தைச் சொல்லி ஆ த்ம  ப்ரதக்ஷிணம் (தன்னையே சுற்றிக் கொள்ளல்) செய்வது வழக்கம். பிராமணர்கள் தினமும் 3 முறை செய்யும் சந்தியாவந்தனத்திலும் பாவ மன்னிப்பு கோரும் மந்திரம் வருகிறது. ஆண்டுதோறும் வரும் உபாகர்மா (ஆவணி அவிட்டம்-பூணூல் மாற்றும் நிகழ்வு) மந்திரத்தில் பாபங்களின் நீண்ட பட்டியல் வருகிறது; பெரிய பாவவங்கள், சின்ன பாவங்கள் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பு கேட்பர். இந்த மாதிரியான அற்புத மந்திரம் உலகில் வேறு எந்த நூலிலும் இல்லை.

 

கிறிஸ்தவமதம் போன்றவற்றில் பாவ மன்னிப்பு இருந்தாலும் அவை எல்லாம் ஒரு பெட்டிக்குள் ஒளிந்து கொண்டு பக்கத்துப் பெட்டியில் நிற்கும் பாதிரிமாரிடம் சொல்லுவதோடு நின்றுவிடும். இந்துமதத்தில் தினசரி பிரார்த்தனையில் இருப்பது அதன் சிறப்பு. எல்லோரும் சொல்லும் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றிலும்  “எத்தனை குறைகள்,எத்தனை பிழைகள் எத்தனையடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்” என்று வேண்டுகிறோம்.

 

ஆனால் இந்தக் கட்டுரையில் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் (கி.மு1500 முதல் கிமு.6000) உள்ள சில பாவ மன்னிப்பு துதிகளைக் காண்போம்.

 

நாங்கள் எங்களை அன்பாக நேசிக்கும் மனிதனுக்கு எதிராகவோ சகோதரனுக்கு எதிராகவோ, நண்பனுக்கு எதிராகவோ, சகாவுக்கு (கூட்டாளி) எதிராகவோ, எங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவனுக்கு எதிராகவோ, முன்பின் தெரியாத ஒருவனுக்கு எதிராகவோ பாவம் (தீங்கு) செய்திருந்தால், ஓ வருண பகவானே அவைகளை நீக்கு வாயாக.

 

விளையாட்டில் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தாலோ  அவற்றையும் நீக்குக

 

இந்த எல்லா பாவங்களையும், கட்டுகளை அவிழ்ப்பது போல அவிழ்த்துவிடு; ஓ வருண பகவானே என்றைக்கும் உன் அன்புக்குப் பாத்திரமானவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்- 5-85-7/8

 

 

எங்கள் தந்தையர் செய்த பாவவங்களில் இருந்து எங்களை விடுவிப்பாயாக; எங்கள் தேகத்தினால் செய்த பாவங்களிலிருந்தும் விடுவி.

 

நாங்கள் திட்டமிட்டு செய்த பாவம் இல்லை; ஓ வருணா! நாங்கள் குடித்த பானமோ, உணர்ச்சிவசமோ, சூதாட்டமோ, சிந்திக்க மறந்ததாலோ தவறான வழியில் செலுத்தப்பட்டுவிட்டோம்; வலுவானவர், பலவீனமானவரை தீய வழிகளில் செலுத்துகின்றனர்; தூக்கம் கூட அதர்மத்துக்கு வழிகோலுகிறது – 7-86

 

 

அதிதி, மித்ரா, வருணா எவ்வளவு பாவங்களை உங்களுக்கு எதிராகச் செய்தாலும்  எங்களை மன்னித்து விடுக 2-27-14

 

அஸ்வினி தேவர்களே! எங்கள் வாழ்நாட்க ளை நீட்டியுங்கள் பாவங்களை துடைத்து அழியுங்கள் 1-157-4

 

அழகிய இளம் கடவுள் அக்னி தேவனே! இந்த மானுட உலகத்தில் அறிவீனத்தால் நாங்கள் இழைத்த பாவங்களை

 

பெருமைமிகு அதிதிக்கு முன்னால் அடியோடு அகற்றிவிடு; நாங்கள் செய்த கொடுமைகளைத் துடைத்தொழி 4-12-4

 

மற்றவர் செய்த பாவங்களுக்காக எங்க ளை  வருத்தாதீர்கள் வசுக்களே: எங்க ளைத் தண்டிக்காதீர்கள் 6-51-7

மருத் தேவதைகளே! நாங்கள் ரஹசியமாகவோ பகிரங்கமாகவோ செய்த எந்த பாவச் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டது? விரைவாக அவைகளை அழிப்பாயாக -7-58-5

அந்த எல்லையற்ற வ ளம்பெற்ற பிருஹஸ்பதி எங்களைப் பாவமற்றவர்களாகச் செய்யட்டும்; ஒரு தந்தை போல எங்களைக் கவனிக்கட்டும் 7-97-2

 

செய்த பாவவங்களில் இருந்தும் செய்யாத பாவங்களில் இருந்தும் எங்களைப் காப்பாற்றுங்கள் விஸ்வே தேவர்களே! இன்று எங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை அருளுக 10-63-8

 

 

எவ்வளவு நேர்மையான முறையீடுகள்!

எவ்வளவு அழகான சொற்கள்;

அடிமனத்தின் ஆழத்திலிருந்து வருந்தி வெளியிட்ட மனக்குமுறல்கள்!

 

உலகில் பாபிலோனிய, எகிப்திய கிரேக்க நாகரிகங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவ மன்னிப்பு துதிகள் உண்டு.

 

ஆயினும் கி.மு 3100ல் வியாசரால் நான்காக வகுக்கப்பட்ட வேதங்களில் பழமையான ரிக் வேதத்தில் கோர்வையாக, தொகுப்பாக துதிகள் இருப்பது போல வேறு எங்கும் காணக்கிடைக்கில!

 

 

சுபம்

 

TAGS: வேதம், பாவ மன்னிப்பு, துதிகள்

 

மன்னிக்க வேண்டுகிறேன் !

Written by london swaminathan

Dated 9th January 2013.

 

மனிதன் செய்த தவறுகளை கடவுள் மன்னிப்பாரா?

மன்னிப்பார் என்றே பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன.

கிறிஸ்தவ மதத்தில் “பாவ மன்னிப்புச் சீட்டு” விற்று அதை விலைக்கு வாங்குவோர் பாவங்களைக் கழுவலாம் என்று சொன்னவுடன் பெரிய எதிர்ப்பு கிளம்பியது; கிறிஸ்தவ மதம் இரண்டாக உடைந்தது. ரோமன் கத்தோலிக்க தலைமைப் பீடத்துக்கு எதிராக மார்ட்டின் லூதர் போர்க்கொடி தூக்கி ப்ராடெஸ்டன்ட் பிரிவைத் துவக்கி வைத்தார்.

Picture of confession box inside St Peter Basilica in Vatican. I took it when I went to Vatican in December 2012.

 

மற்ற மதங்களில் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுப் பெறும் வாய்ப்பு உண்டு என்றாலும் விலைக்கு “பாவ மன்னிப்புச் சீட்டு” விற்கும் அளவுக்குப் போகவில்லை. ஆனால் சோதிடர்களும் பூசாரிகளும் பரிகாரம் செய்வதாகச் சொல்லி பணம் வாங்கினர். நம்பிக்கை இருப்போர் அதைப் பயன்படுத்தினர். பலர் அதனால் மன நிம்மதி அடைந்தனர்.

 

இந்து மதத்தில் பாவ மன்னிப்பு உண்டு. ஆனால் ரோமன் கிறிஸ்தவ மதம் போல ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் பெட்டிக்குள் ஏறி ரகசியமாக பாதிரியாரிடம் பேசத் தேவை இல்லை. கடவுளிடம் கெஞ்சிக் கேட்டால் போதும். இன்னும் ஒரு சிறப்பு,  துதிப் பாடல்களிலும் பூஜைகளிலும் மன்னிப்புக் கேட்கும் பகுதிகளும் இருக்கின்றன. பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் இப்படி மந்திரம் இருக்கிறது. பூஜை மந்திரங்களிலும் இப்படி இருக்கிறது. பலர் புனித யாத்திரை, நேர்த்திக் கடன்கள் மூலமும் பாவங்களைத் தீர்ப்பதுண்டு. எல்லா குளங்கள், ஆறுகள், கடல்கள், குறிப்பாக கங்கை ஆறு முதலிய நீர் நிலைகளுக்கும் பாவம் தீர்க்கும் சக்தி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

யஜூர் வேதத்தின் சதபத பிராமணத்தில் ஒரு பகுதி வருகிறது. யக்ஞ சாலயில் ஸ்த்ரீகளை அழைக்கும்கால் நீ எவனுடன் சேர்ந்தாய் என்று கேட்பது வழக்கம் அப்படி செய்வது வர்ண (ஜாதி) குற்றமாகும். அப்படிச் செய்திருந்தால் மனத்தினால் யக்ஞத்துடன் சேராதே. நீ பாபத்தைச் சொல்லிவிட்டால் அது குறைவாகிவிடும் உண்மையைச் சொல்லவில்லையேல் குடும்பத்துக்கு ஹானியாகும் (ச.பி. இரண்டாவது காண்டம், ஐந்தாவது பிராமணம்)—ஆதாரம்: யஜூர்வேதக் கதைகள்—எம்.ஆர். ஜம்புநாதன், பக்கம் 11.

Picture: A Hindu going to Batu Caves in Malaysia

Every saint had a past; Every sinner has a future

இந்து மதத்தின் ஒரு சிறப்பு பூர்வ ஜன்மங்களில் செய்த பாபங்களையும் போக்க வழி செய்வதாகும். மேலும் பாவங்களை மஹா பாவம், உப/சிறிய பாவம் என்று வகைப்படுத்தி எல்லாவற்றுக்கும் மன்னிப்பு பெறுவதாகும். ஆண்டுதோறும் ஒரு முறையாவது இப்படி (பிராமணர்க்ள்) வேண்டுவது உண்டு பிராமணர் அல்லாதோருக்கும் பிராமண புரோகிதர்கள் யாகம், யக்ஞம், பூஜை முதலியன செய்யும்போது இப்படி வேண்டிக் கொள்கிறார்கள். இதோ அந்தப் பெரிய மந்திரம்:

மஹா சங்கல்பம்:

அனாத்யவித்யா வாசனயா……………… என்ற மந்திரத்தில்

அனாதியான அவித்யா வாசனையால் வளர்ந்துவரும் இந்தப் பெரிய சம்சார சக்கரத்தில் விசித்திரமான கர்மப் போகில்  பலவிதமான இடங்களில் பலவாறாய்ப் பிறந்து ஏதோ ஒரு புண்ணிய செயலின் நலத்தால் , இந்த மானிட ஜன்மத்தில் பிராமணத் தன்மை அடைந்த எனக்குப் பல பிறவித் தொடரில் பிறவிதோறும் இதுவரை பால்யத்திலும் கௌமாரத்திலும், யௌவனத்திலும் மூப்பிலும் ஜாக்ர சொப்ன சுஷூப்தி நிலைகளில் மனத்தாலும் வாக்காலும் உடலாலும் கர்மேந்திரிய ஞானேந்திரிய வியாபாரங்களால் இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் விளைந்தனவாய்த் தெரிந்தும் தெரியாமலும் செய்துள்ள மகா பாதகங்கள் மகா பாதகங்களுக்கு உடந்தையாய் இருத்தல் சம பாதகங்கள், உப பாதகங்கள் மனத்தைக் கரைப்படுத்தும் வகையில் பொருளீட்டி வாழ்க்கை நடத்தியது, தகுதியற்ற இடத்தில் கொடுத்தல் வாங்கல், ஜாதியின் மேன்மையைக் குலைக்கும் செயல்கள், விஹித கர்மங்களைவிட்டது, இன்னும் இவை போன்று ஒரு முறையோ தெரியாமல் பல முறையோ செய்யப்பட்ட எல்லா பாவங்களும் இப்போதே நீங்குவதற்காக இந்த க்ஷேத்திரத்தில் சரீர சுத்தியின் பொருட்டு பரிசுத்தமான நீரில் ஸ்நானம் செய்கிறேன்.

 

சங்கரர் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்த்லும் பாவ மன்னிப்பு பகுதி உண்டு.

Christian confession and blessing

இதோ மேலும் சில மன்னிப்புக் கேட்கும் துதிகளும் மந்திரங்களும்:

 

தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்

***

பகவத் கீதை 18-66:

சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

பொருள்: எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறேன்.கவலை வேண்டாம்.

 

****

பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி

—மாணிக்கவாசகர் திருவாசகம்

 

பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே—- அப்பர்

 

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

—– பட்டினத்தார்

Picture of Fire Walking for atonement

அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை

அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

________

பிழையே பொறுத்து இருதாளிலுற்ற

பெரு வாழ்வு பற்ற அருள்வாயே

——— அருணகிரிநாதரின் திருப்புகழ்

 

பூஜை முடிவில்:

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச

தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே என்று சொல்லி தன்னைத் தானே மூன்று முறை சுற்றிக் கொள்வார்கள்.

பொருள்: பல ஜன்மங்களில் செய்த பாவங்கள் எல்லாம் வலம் வருவதன் மூலம் நசித்துவிடும்

***

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஸுரேஸ்வர:

யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே

பொருள்: மந்திரங்கள் சொல்வதில் ஏற்பட்ட குறைகளும் கிரியைகள் செய்வதில் ஏற்பட்ட குறைகளும், பக்தி ஈடுபாட்டில் ஏற்பட்ட குறைகளும் கடவுளை பூஜிப்பதால் பரிபூர்ணமாகட்டும்

***

அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்

ஸமஸ்த பாப க்ஷயகரம் விநாயக பாதோதகம் சுபம்

அகாலத்தில் மரணம் அடைவதையும், வியாதிகளையும் பாவங்களையும் தடுத்து சுகம் அளிப்பது விநாயகரின் தீர்த்தமாகும்.

When I went to Venice last month I took this photo in St Marco Basilica

இப்படி எல்லாம் பாவ மன்னிப்பு பெறுவது மீண்டும் பாவம் செய்வதற்காக அல்ல. ஒரு முறை தெரியாமல் செய்த பாவத்தை மறுமுறை செய்யமாட்டேன் என்று உறுதி எடுக்கவே இந்த மந்திரங்கள் உதவும்.

1.சூர்யச்ச மா மன்யுச்ச………………………என்ற சந்தியாவந்தன மந்திரத்தில்

அனைத்தையும் இயக்குவிக்கும் சூரியனும் , அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் கோபத்தையாளும் தெய்வ சக்திகளும் கோபத்தாற் செய்யப்பட்ட பாவங்களினின்று என்னைக் காப்பாற்றட்டும். இரவில் மனத்தாலும் வாக்காலும் கைகளாலும் கால்களாலும் வயிற்றாலும், ஆண்குறியாலும் எந்த பாவத்தைச் செய்தேனோ, இன்னும் என்னிடத்தில் எந்த பாவம் உண்டோ அனைத்தையும் ராத்திரியின் அதிதேவதை நீக்கியருளவேண்டும். இங்கனம் பாவம் நீங்கிய என்னை  மோட்சத்திற்குக் காரணமாகிய சூர்ய வடிவான பரஞ்சோதியில் ஹோமம் செய்கின்றேன்.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளாலும் செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கேட்கும் அருமையான மந்திரம் இது.

வேங்கடேஸ்வர சுப்ரபாதம்: க்ஷமஸ்த்வம் க்ஷமஸ்த்வம் சேஷ சைல சிகாமினே என்று பிழை பொறுக்க வேண்டுகிறோம். சுந்தரர் பாடிய தேவாரத்திலும் சிவனின் பெருமைகளக் கூறுகையில் கல்லால் அடித்தது, எச்சிலால் அபிஷேகம் செய்தது முதலிய எல்லாவற்றையும் பொறுத்தாயே, உன்னுடைய இந்தக் கொள்கைதான் என்னை உன்பால் ஈர்த்தது என்கிறார்.

இப்படி மனமுருகிப் பிரார்த்தித்து எளிய வழியில் பாவச் சுமைகளை இறக்கிவிடலாமே!

****