விஷ முறிவுக்கு ரத்னங்கள், -மூலிகைகள் மநு நீதி நூல் தகவல் (Post No.5999)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 28 JANUARY 2019
GMT Time uploaded in London -9-45 am
Post No. 5999
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மநு நீதி நூல்- பகுதி 38 (7-162 to 7-226)

இன்று ஏழாவது அத்தியாயத்தை முடித்து விடுவோம். மநு நீதி நூல் நிறைய, சட்டத் தொடர்பில்லாத விஷயங்களையும் தருகிறது. மேலும் பல உரைகாரர்கள், அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயத்துக்கும் தரும் விளக்கங்கள், ஒரு கலைக்களஞ்சியத்துக்கும் மேலான தகவல்களை அளிக்கிறது. தமிழில் இது கிடைக்கதது நமது துரதிருஷ்டமே. இந்தியிலும், ஸம்ஸ்க்ருதத்திலும், ஓரளவுக்கு ஆங்கிலத்திலும் மட்டும் கிடைக்கிறது.

ஏழாவது அத்தியாயத்தின் இறுதிப் பகுதி பெரும்பாலும் போர் தொடுக்கும் முறை, நண்பர்கள், எதிரிகள் யார், மன்னரின் அன்றாடப் பணியில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன, உளவாளிகள் ரிப்போர்ட் ஆகியன பற்றியதே. ஆயினும் அவர் சொல்லும் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டுகளில் தருகிறேன். முடிந்தால் இணைப் பையும் படியுங்கள். இன்னும் ஐந்து அத்தியாயங்கள் உள. அவைகளையும் வரிசையாகக் காண்போம்.

1.முதலில் பல ஸ்லோகங்களில், படையெடுக்க இரண்டு முறைகள், நண்பர்களை ஏற்படுத்த இரண்டு முறைகள், முகாமிட,அணி வகுத்துச் செல்ல இரண்டு முறைகள் என பல விஷயங்களை இரட்டை இரட்டையாகப் பிரித்து இருக்கிறார்.

2.ஸ்லோகம் 7-180 ல் அரசியலில் விவேகமான செயல் என்ன என்று விளம்புகிறார்.

3.ஸ்லோகம் 7-182ல் படை எடுக்க மார்கழி முதலிய மாதங்கள் உகந்தன என்று செப்புகிறார். இந்தியாவில் அந்த மாதங்களில் பருவநிலை சாதகமாக இருக்கும்; உணவு தான்யங்கள் அதிகம் கிடைக்கும் என்று இது பற்றி பாஷ்யக்காரர்கள் வியாக்கியானம் செய்கின்றனர்.

4.ஸ்லோகம் 7-185 ல்மூன்று வகை சாலைகள் பற்றிப் பேசுகிறார்.

5.ஸ்லோகம் 7-187 ல் படைகளை அணிவகுக்கும் வியூகங்கள் பற்றி அறிவுரை பகர்கிறார்; மஹா பாரத யுத்ததில் இதை அதிகம் காண்கிறோம். அபிமன்யு, சக்ர வியூகத்தில் இருந்து வெளியே வரக் கற்காத குற்றத்தையும் சிற்பங்களில் காண்கிறோம்.

6.ஸ்லோகம் 7-193 ல் எந்த நாட்டு சிப்பாய்களை முன்னனியில் நிறுத்த வேண்டும் என்றும் மொழிகிறார். அந்த தேச வீரர்கள் மற்றவர்களை விட உயரமானவர்கள் என்பது வியாக்கியானக் காரர்களின் விளக்கம்.

7.ஸ்லோகம் 7-210ல் பயங்கர எதிரி யார் என்று விளக்குகிறார். அறிவுள்ள எதிரியைக் கண்டு அஞ்ச வேண்டும் என்பார்.

8.ஸ்லோகம் 7-218 ல் உணவில் விஷம் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துவிட்டு மந்திரங்கள், ரத்தினங்கள், மூலிகைகள் மூலம் உணவை விஷமற்றதாக்க ஆக்கலாம் என்கிறார்.

9.ஸ்லோகம் 7-223 ல் தினமும் ரஹஸியமாக உளவு அறிக்கைகளைப் பெற வேண்டும் என்பார்.

10.இறுதிப் பகுதியில் ஒரு மன்னன் அன்றாடம் செய்ய வேண்டிய டைம் டேபிள் time table ,கால அட்டவணை- தருகிறார்.

11.ஸ்லோகம் 7-206 ல் ஒரு போரினால் கிடைக்கும் மூன்று ஆதாயங்கள் புது நண்பர்கள், தங்கம், நாடு என்று சொல்கிறார்.

இணைப்பில் மேல் விவரம் காண்க.

–subham–