More (Atomic Science) Secrets from Vishnu Sahasranama -14 (Post No.13,243)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,243

Date uploaded in London – –   15 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

In one of the articles already posted here we saw what is big and small in Hindu scriptures . When the world was talking about earth appearing around 4000 BCE, Hindus sang about God who is Sahsra Koti Yugadhaarine i.e.ten thousand million Yugas(multiplied by 4,32,000 years). We know the famous quotation,

In the Katha Upanishad (1.2.20) it is said:

anor aniyan mahato mahiyan

atmasya jantor nihitah guhayam

tam akratuh pasyati vita-soko

dhatuh prasadan mahimanam atmanah.

Aṇor aṇīyān mahato mahīyān: “The Lord is smaller than the smallest and greater than the greatest.

Tamil Saint Manikkavasagar also sang about million galaxies in his Tamil Hymn Tiruvasagam. He used the Upanishad style and said

God (Shiva) is

Older than the oldest and newer than the newest.

He lived 1500 years ago.

(About the age of Manikkavasagar, Kalidasa, Adi Sankara and Rig Veda, please read my research articles).

xxxx

Where is the Anu (atom) in Vishnu Sahasranama (VS)?

Anuh- Word or Naamaa No.835

One who is extremely subtle.

Mundaka Upanishad says,

Esonur aatmaa cetasaa veditavyah – this subtle Atmn is to be comprehended by the mind.

This shows the word ANU is used from Vedic days.

xxxx

suukshma- word number 457

One who is subtle because He is without any gross causes like sound etc. The causes of the grossness of the succeeding elements from Aakaasa downwords is sound and other objects.

Then again Adi Shankara quotes Mundakopanishad 1-1-6

Sarvagatam susuukhmam – He who is very subtle and has entered into everything.

xxxx

But the Big Question is whether the Hindus ever understood the meaning of ATOM as we understand it today?

Yes, they did understand and even sang about splitting of atom; they used it as a simile.

According to Hindu linguistics, a simile must be used only if  it can be understood by the common man. No ancient Sanskrit or Tamil poet would have used biblical phrases David and Goliath or Doubting Thomas.

Anu is used by all Sanskrit and later Tamil poets.

Tirumular, who lived around 8th century CE used the word and sang about splitting it in his work Tirumanthiram,

.

“The Lord is the Beginning of all,

He is the Atom-within-the-atom;

Divide an atom within the atom,

Into parts one thousand,

They who can thus divide

That atom within the atom

May well near the Lord,

He, indeed, is the Atom-within-the-atom”

Spiritual Meaning:

 The inner core energy of the primordial atom exists within every individual atom. A yogi with true wisdom approaches the primordial atom through splitting the individual atom in to one thousand atoms. Thus a Kundalini Yogi merges his soul energy with the cosmic energy by realizing that universe is a conglomeration of individual atomic particles.

xxxx

There is an appendix to the Tamil Veda Tirukkural and it is called Tiruvalluva Maalai. There Tamil Poetess Avvaiyaar , while praising the greatness of Valluvar said,

He has put so much into this book as if one splits an atom and places seven oceans into it.

Another poet by name Idaikkadar replaced the word atom with mustard seed.

In short, splitting something and placing or creating a lot of energy is known to Hindus for thousands of years.

Tirumular in his hymns also speaks about splitting a cow’s hair into many thousand parts.

“Take one piece of cow’s hair and cut it into 100

Parts, then take one part of it and again cut it into

1000 parts, then take one part from that and again

cut it into another 10000 parts. The remaining 1 part

from those 10000 parts will resemble the size of the

Atom (Anu in Tamil)”.

This may not be exactly same in today’s Nuclear science book. But Tirumular did not write a science book or article. He wanted to explain something spiritual. But the simile he used shows what can be done with the smallest particle — ANU in Sanskrit, atom in English. Even the Greeks who gave us the word atom did not use the word with the meaning we use it today in science books.

Lord is Atom-Within-Atom

The Lord is the Beginning of all,

He is the Atom-within-the-atom;

Divide an atom within the atom,

Into parts one thousand,

They who can thus divide

That atom within the atom

May well near the Lord,

He, indeed, is the Atom-within-the-atom.– Tirumanthiram

xxxx

Aprameyah – word No.46

All the above examples such as mustard seeds, cow’s hair are only for laymen. The word Aprameyah is explained by Shankara as follows,

One who is not measurable or understandable by any of the accepted means of knowledge like sense perception, inference etc. even the scriptures cannot reveal Him directly.

xxxx

Tvastaa – word No.52

He who makes all beings shrunken at the time of cosmic dissolution. This explains the Big Crunch theory.

xxxx

Mahaadyudtih – word No.176

When we read books on astronomy, we see everything is explained as light or light emitting sources; in the pictures also, we see them as brilliant shining objects.

Shankara says in his commentary,

One who is intensely brilliant both within and without.

Brhad Aranyaka Upanishad says  4-3-9,

Svayam jyotih one who is self illumined

Jyotishaam jyotih- one who illumines the brilliance of all brilliant entities.

—- subham—-

Tags- Vishnu Sahsranama, Atom, Anu, Tirumular, Atomic science,  Tirumanthiram, splitting hair

ராமாயணத்தில் சாபங்கள் (2) (Post No.13,242)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.242

Date uploaded in London – — 15 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (2) – மாரீசன்சுபாகுவுக்கு ஏன் சாபம் கொடுக்கப்படவில்லை? 

ச.நாகராஜன் 

ஒரு சமயம் விஸ்வாமித்திர மஹரிஷி சித்தியின் பொருட்டு ஒரு தீக்ஷையை ஆரம்பித்தார். அப்போது வேண்டிய வடிவத்தை எடுத்துக் கொள்ளும் இரு ராக்ஷஸர்கள் அந்த யக்ஞ தீக்ஷைக்கு இடையூறு செய்ய வந்தனர். அந்த இரு ராக்ஷஸர்கள் மாரீசன் மற்றும் சுபாகு ஆவர்.

யக்ஞ தீக்ஷையின் போது திடீரென்று தோன்றிய அந்த இரு ராக்ஷஸர்களும் மேடையில் மாமிசத்துடன் கூடிய ரத்தத்தைச் சொரிந்தார்கள்.

யாகம் நின்றது.

விஸ்வாமித்திரர் தடைப்பட்ட யாகத்தால் மிகவும் வருத்தமுற்றார்.

நேராக மஹாராஜா தசரதனின் அரண்மனைக்கு வந்தார். மஹரிஷியைக் கண்டு மகிழ்ச்சி கொண்ட தசரதன் அவரைத் தக்க முறைப்படி வரவேற்று மரியாதை செய்து உபசரித்தான்.

விஸ்வாமித்திரர் நடந்ததைச் சொல்லி ராமரை தனது யாகத்தைக் காக்கும் பொருட்டு அனுப்ப வேண்டும் என்று வேண்டினார்.

தசரதனுக்கு தூக்கி வாரிப்போட்டது. சிறுவர்களான அவர்களை எப்படி அனுப்புவது? யோசிக்கலானான். ஆனால் குலகுருவான வசிஷ்ட மஹரிஷி குறுக்கிட்டு ராமரை அனுப்பலாம் என்று கூறி, தசரதனை சம்மதிக்கச் செய்தார்.

ராமருடன் கூடவே லக்ஷ்மணரும் விஸ்வாமித்திரருடன் சென்றார்.

யாகத்திற்கு இடையூறு விளைவிக்க வந்த மாரீசனின் மார்பில் அதிக கம்பீரமும் அதிக பிரகாசமும் உள்ள மானவ அஸ்திரத்தை ராமர் விடுத்தார். (பால காண்டம் 30-ம் அத்தியாயத்தில் விவரங்களைக் காணலாம்)

பின்னர் ஆக்கினேய அஸ்திரத்தை எடுத்து அரக்கர்களின் மீது விடுத்தார். அந்த அஸ்திரம் சுபாகுவின் மார்பைத் தாக்க அவன் பூமியில் விழுந்தான்.

பின்னர் வாயவாஸ்திரத்தை விடுத்து அனைத்து அரக்கர்களையும் ராமர் கொன்றார்.

யாகம் இனிதே நிறைவேறியது!

இந்தச் சம்பவத்தில் அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழுவது இயல்பு.

மஹரிஷி விஸ்வாமித்திரர் மிகுந்த தபோபலம் கொண்டவர்.

அவர் மிக சுலபமாக அரக்கர்களை ஒரு நொடியில் இல்லாமல் செய்து விடலாம்.

சாபம் இட்டால் போதும், அவர்கள் ஓடி விடுவர்.

ஏன் விஸ்வாமித்திரர் சாபம் இடவில்லை?

இதற்கான பதிலை விஸ்வாமித்திரரிடமிருந்தே நாம் பெறுகிறோம்.

பால காண்டம் பத்தொன்பதாம் அத்தியாயத்தில் தசரதனிடம் விஸ்வாமித்திர கூறுகிறார் : (ஸ்லோகம் 7,8)

ந ச மே க்ரோதமுத்சஸ்ருஷ்ட புத்திர்பவதி  பார்த்திவ |

ததாம்ருதா ஹி சா சர்யா ந சாபஸ்தன்ன முச்யதே ||

இதன் பொருள்:

பார்த்திவ – மன்னரே

க்ரோத – கோபத்தை

உத்சஸ்த்ருஷ்ட – பிரயோகிக்க

மே – எனக்கு

புத்தி ச – மனதில் எண்ணமே

பவதி ந – உண்டாகிறதில்லை

ஹி – ஏனென்றால்

சா – அந்த

சர்யா – அனுஷ்டானம்

ததா பூதா – அப்படிப்பட்ட ஒன்று.

தத்ர – அந்த விஷயம் அப்படி இருப்பதால்

சாப: – சாபம்

முச்யதே ச – இடலாகாது.

ஆக அந்த குறிப்பிட்ட யாகத்தின் அனுஷ்டானத்தில் கோபம் கொள்ளவும் கூடாது; சாபம் இடவும் கூடாது.

ஆகவே தான் மிக பிரம்மாண்டமான தபோ மஹிமை கொண்ட விஸ்வாமித்திரர் தசரதரிடம் வந்தார்.

சாபத்தால் மாரிசனையும், சுபாகுவையும் அழிக்க வல்ல மஹரிஷி சாபம் இடாததற்கான காரணம் அந்த யாகத்திற்கான குறிப்பிட்ட அனுஷ்டான முறையே.

இதை பால காண்டம் 19-ம் அத்தியாயம் விளக்குகிறது.

***

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்-32 (Post No.13,241)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,241

Date uploaded in London – –   14 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 32

xxxx

354.படைகளுக்கு

தகரை என்னும் சிறிய தாவரத்தின் சமூலத்தைக் கொண்டுவந்து சிதைத்து அத்துடன் கொஞ்சம்  கற்பூரம் சாம்பிராணி இவைகள் சேர்த்து குழித்தயிலமிறக்கி படர் தாமரை இடுப்புக் கடுவன் முதலிய படைகளுக்குத் தடவினால் உதிர்ந்துவிடும்.

XXXX

குழந்தை வியாதிக்கு

தழுதாழை என்னும் மூலிகை தனியாயாவது – செருப்படை – கற்பூரவள்ளி – கைம்மாறு வெற்றிலை இவை சமன் சேர்த்து பிட்டவித்துப் பிழி ந்த ரசத்தில்  கார மாத்திரை- லிங்க மாத்திரை – பேதி மாத்திரை-  இதுகளில் ஏதேனும் இழைத்து வார்த்தால் மாந்தங்கள் முதலிய குழந்தை வியாதிகள் தீரும்

XXXX

இந்திரகோப  உபயோகம்

தம்பலப் பூச்சி என்னும் இந்திரகோபப் பூச்சியை உலர்த்திப் பொடித்துத் தேனில் இழைத்து ஒரு வாரம் தின்றால் பெரும்பாடு வியாதியை நிவர்த்தியாக்கும்

XXXX

இதுவுமது

தம்பலப்  பூச்சியைப் பொடித்து மூல ரினத்தின் மேல் தூவிவந்தால் மூலம் ஆறிப்போகும் .

இதுவுமது

தம்பலப்  பூச்சியை சிகப்பு பட்டுத்துணியில் முடித்து கட்டியிருந்தால் தீராத சுர ம் தீரும்

XXXX

இதுவுமது

தம்பலப்  பூச்சியை உயிருடன் பிடித்து  நல்ல வெல்லத்தில் வைத்து உருண்டை செய்து வாயிற்போட்டு விழுங்கவேண் டியது . இப்படி ஒரு வருஷத்திற்கு  ஒரு வாரம் தினம் விழுங்கி வந்தால்  மறு வருஷம் வரையில் தாது விருத்தியதிகரிக்கும்.

XXXX

தாது புஷ்டிக்கு

தண்ணிவிட்டான்கிழங்கை இடித்துப் பாலில் போட்டுக் காய்ச்சி யுண்டுவந்தால் தாது புஷ்டியுண்டாகும் ; சிலநாள் விடாமல் சாப்பிடவும்.

XXXX

இதுவுமது

தண்ணிவிட்டான்கிழங்கை பாலில் உபயோகித்துவந்தால் விந்து கட்டுப்படும் . சுக்கில பிரமியம் – நீர் எரிவு-காந்தல் – கரப்பான் — இவை தீரும்.

XXXX

சூலை சொறி சிரங்குக்கு

தலைச் சுருளி என்னும் மூலிகையை பாலில் உண்டு வந்தால் அரவுக்கடி முதலிய பழைய விஷம்

சூலை சொறி  சிரங்கு  தீரும். தேகத்தில் பலமுண்டாகும் .

XXXX

பல்லு நோய்க்கு

தக்காளி அல்லது மணித்தக்காளி சமூலம் கொண்டுவந்து கிஷாயம் வைத்து நாலு க்கொரு பங்காய் இறக்கி வாய் கொப்பளித்து வந்தால் , பல்லு நோய்- உண்ணா க்கு வளர்ச்சி  தொண்டை நோய் இவை தீரும்.

XXXX

பொடியிருமலுக்கு

தவசுமுருங்கை சமூலம் சூரணம் செய்து சமன் சக்கரை கூட்டி வேளைக்கு திருகடிப் பிரமாணம் எடுத்து தேனில் குழைத்து தின்று  வரவும் . பொடியிருமல்  கபம் கோழை  தொந்த ரோகம் தீரும்

XXX

தா

வாயில் நீர் ஒழுக்கலுக்கு

தாணிக்காயை சுட்டு சூரணம் செய்து சமனிடை சக்கரை கூட்டி நித்தம் ஒரு விராகநிடையெடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால்  வாயில் அதிக நீர் ஒழுக்கல்  கட்டுப்படும்; கண் குளிர்ச்சியுண்டாகும் .

To be continued……………………..

Tags- தம்பலப் பூச்சி , இந்திர கோபம், தகரை, தழுதாழை ,தவசுமுருங்கை ,முனிசாமி , ,மூலிகை அதிசயங்கள் 32

ராமாயணத்தில் சாபங்கள் (1) – ராமாயணம் எழுந்த கதை! (Post No.13,240)

Ram Temple, Ayodhya

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.240

Date uploaded in London – — 14 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (1) – ராமாயணம் எழுந்த கதை! 

ச.நாகராஜன் 

உலகின் ஆதி கவியான வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணம் சூரிய சந்திரர் உள்ளவரை பூமியில் அனைவருக்கும் வழிகாட்டும் காவியமாக அமையும்.

ராமாயணத்தில் 61 சாபங்கள் வருகின்றன. இவற்றை முழுவதுமாக இந்தத் தொடரில் பார்க்கலாம்.

 ஆனால் ராமாயணம் எழுந்ததே ஒரு சாபத்தினால் தான்!

அதை முதலில் பார்ப்போம்.

 ஒரு முறை தமஸா நதி தீரத்தில் ஸ்நானம் செய்யச் சென்ற வால்மீகி முனிவர் தனது சிஷ்யரான பரத்வாஜரை நோக்கி, “எனது உதக பாத்திரம் கீழே வைக்கப்படட்டும். எனது மரவுரி என்னிடம் கொடுக்கப்படட்டும். சிரேஷ்டமான தமஸா நதியில் ஸ்நானம் செய்யப் போகிறேன்” என்றார்.

மரவுரி தரப்பட்டது. அதை கையில் எடுத்துக் கொண்ட வால்மீகி முனிவர் நாற்புறமும் பார்த்தவாறே சஞ்சரித்தார்.

அப்போது அவர் ஒரு அற்புதமான இணைபிரியாத இரு க்ரௌஞ்ச பக்ஷிகளைக் கண்டார். அந்த ஆண்- பெண் ஜோடியை அவர் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு குரூரமான வேடன் அந்த ஜோடியில் ஆணைக் குறி பார்த்து அடித்துக் கீழே தள்ளினான். பெண் பறவை ரத்த வெள்ளத்தில் மிதக்கும் தன் ஜோடிப் பறவையைப் பார்த்து கதறிற்று.

இதைப் பார்த்த முனிவர் திடுக்கிட்டார். அவர் இதயத்தில் கருணை பொங்கியது.

அவர் வாயிலிருந்து வார்த்தைகள் பொங்கி வந்தன!

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: சாஸ்வதீ: சமா: |

யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காம மோஹிதம் ||

–    பாலகாண்டம் இரண்டாம் ஸர்க்கம் – பிரம்மாவின் வருகை -ஸ்லோக எண் 13

இதன் பொருள் :

நிஷாத – ஓ, வேடனே!

க்ரௌஞ்சமிதுனாத் – கிரௌஞ்ச பக்ஷிகள் இணைபிரியாது இருக்கும் தருணத்தில்

காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த

ஏகம் – ஒன்றை

அவதீ: – கொன்றாய்

யத் த்வம் – அதனால் நீ

சாஸ்வதீ:  – நீடித்த

சமா: – ஆண்டுகளீல்

ப்ரதிஷ்டாம் – இருப்பை

மா அகம: – அடைய மாட்டாய்!

இப்படி ஒரு சாபத்தை வேடனுக்குக் கொடுத்தார் வால்மீகி.

இந்த பக்ஷியின் நிமித்தமாக சோகத்தினால் பீடிக்கப்பட்ட என்னால் சொல்லப்பட்ட இது என்ன? என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார்.

அந்த ஸ்லோகத்தின் நிஜமான அர்த்தம் அவர் மனதில் எழுந்தது.

மாநிஷாத – ஶ்ரீனிவாஸ!

க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில்                           காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட

ஏகம் – ஒருவனை

அவதீ: – கொன்றீர்

யத் – அதனால்

த்வம் – நீர்

சாஸ்வதீ: – நீடித்த

சமா: -ஆண்டுகளில்

ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை

அகம: – அடைவீராக

இப்படி ஒரு அர்த்தம் அவர் மனதில் உதிக்க அவர் வியந்து போனார்.

“இது பாதங்களுடன் அமைந்த எழுத்தொத்த வீணைத் தந்தியில் தாளத்தோடு கூடியது போன்று அமைந்த்ருக்கும் இது, ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே இருக்கட்டும்; வேறு விதமாக இல்லை” என்று அவர் கூறிய போதே பிரம்மா தானாகவே அவர் முன் தோன்றி, “. உம்முடைய வாக்கியமானது எனது அபிப்ராயத்தினாலேயே உண்டானது, நீங்கள் ராமாயண மகா காவியத்தை இயற்ற வேண்டும்” என்று சொல்லியதோடு “ஶ்ரீ ராமரின் சரித்திரமானது உலகத்தில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரை நிலைபெற்றிருக்கும். மேலும் ராமாயணம் எது வரை இருக்குமோ அதுவரை எனது உலகங்களில் நீர் ஸ்திரமாக இருக்கப் போகிறீர்” என்று கூறி அருளினார்.

 இப்படியாக பிரம்மா வால்மீகி முனிவருக்குக் கூற, அற்புதமான ராமாயண மகா காவியம் உருவானது.

 ஒரு சாபம் முனிவரது வாயிலிருந்து வர, அதுவே ராமாயண சரித்திரத்தின் ஆரம்பமாக அமைந்தது குறிப்பிடத் தகுந்தது.

 இன்னும் 60 சாபங்கள் ராமாயணத்தில் உள்ளன.

அவற்றையும் பார்ப்போம்!

***

More (Forests,Hills, Sea) Secrets from Vishnu Sahasranama -13 (Post No.13,239)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,239

Date uploaded in London – –   13 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

We have already seen the wonder of grouping all the three holy Ficus plants in one sloka of Vishnu Sahasranama (VS)

Three Holy Ficus Trees (Banyan, Pepul, Udumbara) of Family Moraceae.

Plant Soma is also explained already.

xxxx

Here more plant names who are considered Gods in VS.

Vrksah – Word number 555

One who is unshakable like a tree. Svatesvatara Upanishad

3-9 says,

Vrksa iva stabhdo divi tisthatyekah – in the spiritual dimension the Paramatma stands alone, unmoving like tree.

xxxxx

Mahidharah – Word number 369

One who props up the earth in the form of mountain.

Vishnu Purana says 2-12-38

Vanaani vishnur girayo disas ca- forests , mountains, quarters, all these are Vishnu Himself.

My comments

Vishnu purana is the oldest purana. V.S. is the oldest sahasranama. Both praise nature as God. We cant see such a thing anywhere in the old.

xxxx

jagatah Setuh – Word number 288

People’s Bridge or World Bridge

One who is the bridge to go across the ocean of Samsara.

Or one who like a setuh or a bund preserves the social order.

Says Brhadaranya Upanishad 4-4-22

Eas settur vidharana esaam lokaanaam asambhedaaya-

He is verily the Setu, the bund, that saves the worlds from the chaos of intermingling.

xxxx

Sea in VS

Apaam nidih- Word number 323

The word means water source or the ocean. the Gita 10-24 says Sarasaam asmi saagarah- among all the pools of water, I am Samudra or ocean. the Lord is called by that name because the ocean is one of His special manifestations.

Ambhonidhih – Word number 517

It can mean what is said in the Gita 10-24

Sarasaam asmi saagarah- among all the pools of water, I am Samudra or ocean. or one in whom the Ambas or all beings from Devas down dwell.

Ratnagarbah – Word number 473

The ocean is so called because gems are found in its depths. As the Lord has taken the form of the ocean, He is called by this name.

Srutissaagarah- Word number 264

Vedic Ocean. one to whom all the Sruti or Vedic words and sentences flow (that is, have as their purport just as all water flows to the ocean)

–Subham—

Tags- Plants, Hills, sea, Vishnu Sahasranama

நெல் உவமையும் பயிர் உருவகமும்  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-10 (Post.13,238)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,238

Date uploaded in London – –   13 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் நெல் முதலிய பயிர்களை பயன்படுத்தி என்ன செய்திகளைத் தருகிறார் என்று காண்போம்.

பயிர் உருவகம்

Kundalini Yoga

மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம் அணி கோலி தறியுற பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவில் செறு உழார்
கால் அணை கோலி களர் உழுவாரே

In the Triangular Field,

Are the Ploughs Three;

Yoke the bulls tight with rope;

Drive the ploughshare deep

They who held not their tongue,

Ploughed not in the Center

Closing their legs together,

They plough the waste in vain.

இதில் பிராணாயாமப் பயிற்சி மூலம் முன்னேற்றம் காணுவதை விளக்குகிறார். மூவணை ஏர் = இடகலை, பிங்களை , சுழுமுனை என்னும் மூன்று நாடி களுக்குரிய வாயு;

முக்காணி=மூலாதாரத்திலுள்ள முக்கோணம்; தறி = வீணாத்தண்டு ; அணிகோலி = வாயுவை முறையாகச் செலுத்தி; நாவணை கோலி = நாவால் அணைபோட்டு; நடுவிற் செறு = யோக வயல் ;

முறையாக யோகம்/ மூச்சுப் பயிற்சி செய்வோர்  மூச்சினை முறையாக வழிப்படுத்தி ஆறு பகைளை வெல்வர் ; அதைச் செய்யாதோர் பிறப்பு இறப்பு என்னும் விலங்குகளை காலில் மாட்டிக்கொண்டு பிறவி நிலத்தை உழுது மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்  இங்கு பயிர் செய்தலை உருவகமாகப் பயன்படுத்தியுள்ளார்.

xxxxxxx

பனை மரம் , 7 கடல்


ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனை உள
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு பனை
ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே

 Kundalini Yoga

Six are the streets

In their junction are juicy palm trees four;

With ladder difficult to climb,

I ascended the palm’s heights;

And there I saw the seas seven.

ஆறு தெரு= உடம்பிலுள்ள 6 ஆதாரங்கள் ; அகப்பட்ட சந்தி= மூலாதாரம்; சாறுபடுவன= இனிமை தருவன; நான்கு பனை = 4 இதழ்களையுடைய ப னை போன்ற மலர்;  ஏணி = சுழுமுனை; கடல் ஏழ் = 7 பிறப்பு.

மூலாதாரத்தில் தேன் போல இனிமை தரும் 4 பனைகள் உள்ளன. நாம் காணும் ஏணியால் அடைய முடியாது. ஆனால் சுழுமுனை மூலம் அடையலாம்.அதன் மூலம் அடைந்தபோது இறைவனைக் கண்டேன்; ஏழு பிறவியிலிருந்து மீண்டேன் .

xxxxx

நெல் உவமை 

கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி

உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார்

தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி

இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து

புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன

பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்

உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

They Care Not for Soul’s Well-Being

They borrow grain;

They pound it hard,

Feed the base (senses),

And nourish the body;

Thus they wander

Their lives to live;

But in the valley broad

A prey to raging flames

The body finally lies;

This they realize not.

xxxxxxx

In days of yore, the Sages Four

Sought the Holy One in Kailas;

There, under the wild banyan tree

The Supreme One His teachings imparted;

They are of evil speech

Who think not of Him;

Ready to march to the burial heap

They stand in wait.

நெல்லைக் கடன் வாங்கி சோறு சமைத்து உண்டு உடம்பை வள ர்க்கின்றனர்; அதுவோ முடிவு காலத்தில் தகனம் செய்யப்படும்; இதை அறிந்தும் உடம்புதான் உயிர் என்று எண்ணித் திரிகின்றனர். அதுவே கரும்பு என்று எண்ணுகின்றனர்.

முன்னொரு காலத்தில் ஆல மரத்துக்கு அடியில் தட்சிணாமூர்த்தியிடம் நால்வர் மெய்ப்பொருளைக் கேட்டறிந்தனர் அதை உணராதோர் பழி மொழிகள் பேசி காலம்தள்ளி இறுதி நாளுக்காக காத்திருக்கின்றனர்.

xxxx


ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே.

If you in ardour pursue

The search for power to acquire Kaya Siddhi,

You shall flourish far and wide

Like a seed of paddy planted

In a million, million fields;

Do you therefore meditate single-minded

On the mantra that conquers Fate.

ஒரு நெல் விதை, பல்லாயிரம் நெல் விதைகளைத்தருகிறது .அதுபோல காயசித்தி பெற விரும்புவோருக்கு பலன் கிடைக்க வேண்டுமானால் , விதியை வெல்லும் மந்திரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு தியானிக்கவேண்டும் .

xxxxx

வில்வமும் தருப்பையும்

மீது சொரிந்திடும் வெண்ணீறுஞ் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத வதகத்தான் மஞ்சனஞ் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலஞ் செய்யுமே.

Then pour the ashes white and powdered incense,

Shower flowers diverse, Kusha grass and Bilva leaves,

Sprinkle water holy,

And raise a platform three feet by three.

சமாதிக் கிரியை என்ற தலைப்பின் கீழ் திருமூலர் இதைச் சொல்கிறார்; சிவபெருமானை நீரால் அபிஷேகம் செய்யுங்கள் திருநீறு , மணம் மிகுந்த பொடிகள், தருப்பை, வில்வத்தால் அர்ச்சியுங்கள்; இப்படி வழிபாடு செய்ய, மூன்று மூன்று தேவை ;மூன்று காலம்- காலை மதியம், மாலை.மூன்று கருவி- உள்ளம், உரை, உடல்; மூன்று பணி – அன்பு, அறிவு, ஆற்றல்;

xxxx

நெருஞ்சி முள் உருவகம்

The Renunciate Shall Walk in the Straight Path

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்

நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்

நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு

நெறியின் நெருஞ்சில் முள் பாய கிலாவே.

உரை

(ப. இ.) அன்புநெறியாகிய இல்லறமும் அதன் முதிர்வாம் அருள் நெறியாகிய துறவறமும் இருகால்போல் அகம் புறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நெறியாகும். அந்நெறியினைப் படைத்தவன் சிவனே. அந்நெறி நில்லாது தீநெறி நிற்பார் துன்புற்று அந் நெறிக்கு வருமாறு செய்ய நெருஞ்சில் முள் போன்ற துன்ப நெறிகளையும் படைத்தளித்தனன். மெய்ந் நெறிக்கண் வழுவாது ஒழுகவல்லார்க்குப் பிறவித்துன்ப முதலிய எத்துன்பங்களும் எய்தா. அத்துன்பங்கள் நெருஞ்சிலாக உருவகப்படுத்தப்பட்டன.

(அ. சி.) நெறி – வழி. இம் மந்திரம் அறவழியிற் செல்லாதவர்களைத் துன்பம் சுடும் என்பதை உவமான முகத்தால் உணரவைத்தது.

He laid the path, and planted the thorns along;

When you from the path deviate

The thorns of temptation shall prick you;

They that deviate not,

Them the thorns prick not.

—subham—-

Tags- நெருஞ்சில் முள் உருவகம், பயிர் உருவகம் ,நெல் உவமை,  வில்வம், தரப்பை, 4 பனை மரம் , 7 கடல்

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 10 (Post No.13,237)

சைஸிஜியம் க்யூமினி / நாவல் மரம்நவாப்பழ மரம்

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,237

Date uploaded in London – –   13 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Part 10 

F40. Family: Menispermaceae 

141. Cissampelos pareira L.

குடும்பம் – மெனி ஸ்பெர்மேசி

சிஸ்ஸம்பெலோஸ் பரெய்ரா

வட்டத்திருப்பிபொன்முசுட்டை

தமிழ்நாட்டில் விழுப்புரம் வட்டாரம், மற்றும் ராஜஸ் தான் , மேற்குவங்கம், பாகிஸ்தான் மக்கள் பயன்படுத்தும் பாம்புக்கடி மாளிகை இது வேரை இடித்துப்பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கிறார்கள் .

xxxx

142. Parabaena sagittata Miers

142.பாரபீனா சஜிட்டாடா

நிகோபார் தீவு மக்கள் இதன் இலையை தேங்காயெண்ணெயில் பொறித்து காயத்தின் மீது தடவுகிறார்கள் .

xxxx

143. Stephania hernandiifolia (Willd.) Walp.

ஸ்டெபானியா ஹெரென்டிபோலியா

வங்க தேசத்தில் சிட்டகாங் வட்டார மக்கள் பயன்படுத்தும் மூலிகை .

xxxxxx

144. Tinospora cordifolia (Willd.) Miers

டினோஸ்போரா கார்டி போலியா /சீந்தில் கொடி / Seenthil Kodi.

அமிர்தவல்லி /அம்ருதம் என்ற பெயரில் சேர்வராயன் கல்ராயன் மக்களும், மத்திய பிரதேச, உத்தர பிரதேச மக்களும் இதன் தண்டை சாறு பிழிந்து பயன்படுத்துவர். பில் பழங்குடி மக்கள் இதன் வேரினை கழுத்தில் சுற்றிக்கொள்கிறார்கள்.

xxxx

F41. Family: Moraceae 

145. Artocarpus hirsutus Lam.

குடும்பம் – மோரேசி

ஆர்டோகார்பஸ் ஹிஸ்ருடஸ் /அயனி (மரம்)

மேற்குத் தொடர்ச்சி மலை மலண்ட் வட்டாரமக்கள் பட்டையை தேங்காயெண்ணெயுடன் பயன்படுத்துகிறார்கள் .

அயனி என்பது பலா இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதனுடைய பழமானது சிறிய பலா பழத்தைப் ஒத்திருக்கும். இது நேராக வளரும் தன்மையுடையது. இது கேரளாவிலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள பசுமையிலைக்காடுகளில் அதிகமாக வளர்கிறது.

.xxxx

.146. Ficus hirta Vahl

பைகஸ் ஹிர்ட்டா

வங்க தேச மக்கள் இதன் வேர் மற்றும் பழங்களை நசுக்கி பாம்பு கடித்த இடங்களில் அப்புகிறார்கள்.

xxxx

147. Ficus prostrata (Wall. ex Miq.) Miq.

பைகஸ் ப்ரோஸ்ட்ரேட்டா

மேற்கு மிஜோரம் மக்கள் வேரின் சாற்றைப் பயன்படுத்தி பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

xxxx

148. Ficus racemosa L.

148.பைகஸ் ரேசிமோசா

மத்தியப் பிரதேச மக்கள் இதன் விதைகளை பயன்படுத்துகிறார்கள் இதன் கஷாயத்தை மூக்கில் விட்டு விஷத்தை வாந்தி எடுக்க வைக்கிறார்கள். ராஜஸ்தான் உதய்ப்பூர் மக்கள் பட்டையை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைக்கிறார்கள்.

xxxxx

F42. Family: Moringaceae 

149. Moringa oleifera Lam.

குடும்பம் – மோரிங்கேசி

149.மொரிங்கா ஒலிபெரா

அஸ்ஸாம் மக்கள் வேரினை மசித்துப் பயன்படுத்துகிறார்கள்

xxxx

F43. Family: Myrtaceae 

150. Syzygium cumini (L.) Skeels

குடும்பம்- மிர்ட்டேசி

சைஸிஜியம் க்யூமினி / நாவல் மரம்நவாப்பழ மரம்

ஒரிஸ்ஸா மக்கள் மரப்பட்டையை மசித்து உபயோகிக்கிறார்கள் .

xxxx

F44. Family: Nyctaginaceae 

151. Boerhaavia diffusa L.

குடும்பம் – நிக்ட்டா ஜினேசி

போராவியா டிப்யுஸா

ஒரிஸ்ஸா, மத்திய பிரதேச, உத்தர பிரதிசெம்மா மக்கள் செடியை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைக்கின்றனர்

xxxx

152. Boerhaavia repens L.

போராவியா ரெபென்ஸ்

அஸ்ஸாம் மக்கள் இதன் வேரை உபயோகிக்கிறார்கள்

xxxx

F45. Family: Onagraceae 

153. Ludwigia adscendens (L.) H. Hara

குடும்பம்- ஓனக்ரேஸி (Water Primrose)

லுட் விகா அட் சென்டென்ஸ்/ நீர்த்தண்டு கீரை, சதுப்பு மல்லிகை

கன்யாகுமரி வட்டார மக்கள் செடியை நசுக்கி பாம்புக்கடித்த இடங்களில் அப்புகின்றனர்.

xxxx

F46. Family: Orchidaceae 

154. Eulophia nuda Lindl.

குடும்பம் – ஆர்க்கிடேசி

யூலோபியா நூடா

மத்திய பிரதேச சித்திர கூட மக்கள் வேரின் சாற்றினைப் பயன்படுத்துகிறார்கள்

 xxxx

 F47. Family: Orobanchaceae 

155. Lindenbergia muraria (Roxburg ex D. Don) Brühl

குடும்பம்- ஒரோ பஞ்சேஸி

155.லிண்டேன்பேர்ஜியா முராரியா

ராஜஸ்தான் மாநில ஆள் வார் வட்டார மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.

xxxx

F48. Family: Oxalidaceae 

156. Biophytum candolleanum Wight

குடும்பம்- ஆக்சாலிடேசி 

பயோ பைடம் சண்டோல்லேனம்

நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் வேறு நான்கு மூலிகைகளுடன் இதையும் சேர்த்தது நீரில் காய்ச்சி 14 நாட்களுக்கு குடிக்கச் சொல்கிறார்கள்

xxxxx

157. Oxalis corniculata L.

157. Oxalis corniculata L.

ஆக் சாலிஸ் கார்னிகுலேடா

மேகாலயா மற்றும் பாகிஸ்தான் பழங்குடி மக்கள் இதன் இலைகளை பயன்படுத்துகிறார்கள் .

xxxxx

158. Oxalis debilis var. corymbosa (DC.) Lour.

ஆக்சாலிஸ்  டெபிளிஸ்

உத்தர பிரதேச மக்கள் உபயோகிக்கும் மூலிகை இது.

xxxxx

F49. Family: Papaveraceae 

159. Argemone mexicana L.

குடும்பம் பாபாவேரேசி

ஆர்ஜிமோன் மெக்சிகானா

ராஜஸ்தான் ஆள்வார் வட்டார மக்கள் இதை பயன்படுத்துகிறார்கள்

xxxxx

 F50. Family: Phyllanthaceae  

160. Antidesma alexiteria L.

குடும்பம்- பில்லாந்தேசி

160.ஆன்டி டெஸ்மா அலெக்சிடேரியா

நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் இதன் இலைகளை பயன்படுத்துகிறார்கள்

இலங்கையில்  “Heen embilla – හීන් ඇඹිල්‍ල”; கேரளத்தில் Thathalamaram என்று பெயர்கள்.

To be continued…………………………………………..

பாம்புக் கடி,   200  மூலிகை மருந்துகள் ,  Part 10, நாவல் மரம்,

கால் பந்து மன்னன் பீலே! -2 (Post No.13,236)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.236

Date uploaded in London – — 13 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

கால் பந்து மன்னன் பீலே! -2 

ச. நாகராஜன் 

விளையாட்டுத் துறை அமைச்சர்

பிரேஜில் நாடு வளர்ந்து வரும் உலக கதாநாயகனைப் போற்றியதோடு ஒரு சமயம் பயப்படவும் செய்தது – எங்கேயாவது அவர் இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்று விடுவாரோ என்று!

1995-ல் அவர் பிரேஜிலின் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டார்.

மூன்று ஆண்டுகால பதவி காலத்தில் பிரேஜில் நாட்டில் இருந்த லஞ்சம் உள்ளிட்ட களைகளை எல்லாம் பீலே சட்டம் என்பதால் அறவே ஒழித்த அவர் நாட்டின் விளையாட்டுத் துறையையே நவீன மயமாக்கினார்.

பீலே தினம்

அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் நாள், பீலே தினமாக பிரேஜில் கொண்டாடி வருகிறது.

1969-ல், நவம்பர் 19-ம் நாளன்று  சாண்டோஸ் நகரில் அவர் தனது ஆயிரமாவது கோலைப் போட்டு சாதனை நிகழ்த்தினார். இந்த கோலைப் போட்டவுடன் ரசிகர்கள் உற்சாகம் மீறி மகிழ்ச்சி பொங்க மைதானத்தில் நுழைந்து விடவே அரை மணி நேரம் விளையாட்டு நிறுத்தப்பட்டது.

இந்த ஆயிரமாவது கோல் நினைவாக பிரேஜில் ஒரு விசேஷ தபால் தலையை வெளியிட்டு இவரை கௌரவித்தது.

நூற்றாண்டின் இணையற்ற வீரர்

சென்ற நூற்றாண்டில் இணையற்ற வீரராகத் திகழ்ந்த இவர் “நூற்றாண்டின் வீரர்” என்று கொண்டாடப்படுகிறார்.

வெண்கலத்தினாலான இவரது சிலை ஒன்று ரியோ டி ஜெனிரோவில் திறந்து வைக்கப்பட்டது.

ரொனால்ட் ரீகன், எலிசபத் மகாராணி உள்ளிட்ட ஏராளமானோர் அவரைச் சந்தித்து புகழ்ந்து மகிழ்ந்துள்ளனர்.

இவரை அனைவரும் ப்ளாக் பெர்ல் – கறுப்பு முத்து என்றே அழைப்பது வழக்கமானது. 

இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு மிக்க நூறு பேர்களைத் தேர்ந்தெடுத்த டைம் பத்திரிகை பீலேயையும் ஒருவராக அறிவித்தது. 

குடும்பம்

பீலே மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஏழு குழந்தைகள் அவருக்கு உண்டு.

அதிர்ஷ்ட சட்டை எங்கே?

எல்லோரையும் போல பீலேக்கும் அதிர்ஷ்டம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். நண்பர்களும் கால்பந்து ஆர்வலர்களும் மிகவும் கவலையுற்றனர்.

பீலே தனக்கு ஏன் இப்படிஒரு சோர்வு ஏற்பட்டது என்று யோசிக்கலானார். விடை அவரது  மனதில் பளிச்சென உதயமானது.

வழக்கமாக அவர் அணியும் சட்டையை ஒரு கால்பந்து ரசிகர் விரும்பிக் கேட்கவே பீலே அவருக்கு அதைக் கொடுத்துவிட்டார். தனது சட்டை போன அன்றிலிருந்து தான் இந்த மனச்சோர்வு தனக்கு வந்தது என்று அவர் எண்ணினார்.

உடனே ஒரு துப்பறியும் நிபுணரை நியமித்தார். யாருக்கு தான் தனது சட்டையைத் தந்தாரோ அவரைக் கண்டு பிடித்து அதைப் பெற்றுத் தரவேண்டும் என்பதே துப்பறிவாளருக்கு அவர் இட்ட கட்டளை.

பெரும் தேடலை மேற்கொண்ட துப்பறிவாளரும் ஒரு வழியாக அந்த ரசிகரைக் கண்டுபிடித்து சட்டையைத் திருப்பி வாங்கி வந்து அதை பீலேயிடம் தரவே அவருக்கு அடங்காத மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்றிலிருந்து அவர் பழைய பீலே ஆனார். உற்சாகம் அவருக்குக் கரை புரண்டோடியது.

சரி, உண்மையில் நடந்தது என்ன? துப்பறிவாளர் பீலேயைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். ஆகவே பீலே விளையாடிய முந்தைய விளையாட்டின் சட்டையையே செட்- அப் செய்து அவரிடம் தந்து விட்டார் – உண்மையைச் சொல்லாமலேயே!

 எல்லாம் மனதில் தான் இருக்கிறது என்பதையே இந்தச் சம்பவம் சுட்டிக் காட்டுகிறது! 

பீலே அறக்கட்டளை

1977-ல் அவர் தீவிர விளையாட்டிலிருந்து ஒய்வு பெற்றார். கால்பந்தாட்டத்திற்கான உலக தூதுவராக ஆனார்.

மிக்க ஏழ்மையில் வாழ்ந்த அவருக்கு வறுமை என்றால் என்ன என்பது நன்கு தெரியும். ஆகவே உலகின் ஆகப் பெரும் செல்வந்தராக அவர் ஆன போது ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அதில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உதவலானார். 

மரணம்

2019-ல் சிறுநீரகக் கற்களை அகற்ற ஒரு அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டார். தொடர்ந்து பெருங்குடலில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது.

கொரானா காலத்தில் அவர் புற்று நோய் முற்றவே 2022, டிசம்பர் மாதம் 29-,ம் நாள் உயிரிழந்தார்.

சாண்டோஸ் நகரில் பெல்மிரா ஸ்டேடியத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் கூடிய ரசிகர்கள் வரிசையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரேஜில் நாடு 3 நாள் துக்கம் அனுஷ்டித்தது.

சுயசரிதமும் டாகுமெண்டரி படமும்

பீலே திரைப்படங்களில் தோன்றிய காட்சிகளும் உண்டு. இவரைப் பற்றிய டாகுமெண்டரி படமும் எடுக்கப்பட்டது. தனது சுயசரிதத்தையும் பீலே எழுதியுள்ளார். ‘மை லைஃப் அண்ட் தி பியூட்டிஃபுல் கேம்’ என்பதே அந்த புத்தகத்தின் பெயர். அழகிய விளையாட்டு – பியூட்டிபுல் கேம் – என்பதே இவர் கால்பந்துக்கு சூட்டிய அழகிய பெயராகும்.

இவருக்கு அளிக்கப்பட்ட விருதுகள், மெடல்கள் கணக்கிலடங்கா.

பயிற்சிபயிற்சிபயிற்சி

பீலே தனது வாழ்க்கைச் செய்தியாக அறிவித்திருப்பது ஒரே ஒரு வார்த்தை தான் : அது தான் பயிற்சி!

பயிற்சி! பயிற்சி!! பயிற்சி!!! இதுவே வெற்றிக்கான வழி என்பது அவரது கொள்கையாகும். 

அவரது புகழ் பெற்ற பொன்மொழிகளில் சில:

வெற்றி என்பது ஒரு தற்செயலான விஷயம் அல்ல. கடும் உழைப்பு, விடாமுயற்சி, நன்கு கற்பது, தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக செய்யும் வேலையில் அளவற்ற ஈடுபாடு – இதுவே வெற்றிக்கு வழி! 

 ஒரு தனிப்பட்ட நபர் ஒரு போதும் ஒரு விளையாட்டை அவரால் மட்டுமே வெல்ல முடியாது. 

நான் கால்பந்து விளையாடுவதற்காகவே பிறந்துள்ளேன் – எப்படி பீத்தோவன் இசைக்காகப் பிறந்தாரோ, எப்படி மைக்கெல் ஏஞ்சலோ ஓவியம் படைக்கப் பிறந்தாரோ அது போலத் தான் நான் கால்பந்து விளையாடப் பிறந்துள்ளேன். 

கால்பந்து பற்றி அவர் கூறியது : தலை இதயத்துடன் பேசுகிறது; இதயம் கால்களுடன் பேசுகிறது

கால்பந்து எனக்கு ஒரு மதம் போல! நான் பந்தையே வழிபடுகிறேன். அதையே கடவுளாகக் கருதுகிறேன்.

***

More (Birds and Animals) Secrets from Vishnu Sahasranama -12 (Post No.13,235)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,235

Date uploaded in London – –   12 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 No one would expect names of birds and animals in a hymn to God. But Hinduism sees gods even in animals and birds, trees and lakes, rivers and oceans.

All of us know about the holiness of Mount  Kailash , River Ganga, Agni Theertha (Rameswaram Sea), Peepul Tree and thousand other things. Even the Dasavataram of Vishnu has many from the animal kingdom. If you travel to Tamil Nadu you will come across several places with animals and birds. In Madurai and nearby places Lor Shiva gave liberation to Black birds and Pigs.

Here in Vishnu Sahasranama (VS) we see Swan (Hamsa), Eagle (Suparna), Falcon(Garuda), Simha (Lion; also Narasimha), Vyagra (Tiger), Saaranga (honey beetle, deer, parakeet etc.), Sringi (Fish with horn), Sipivistah (Cow),Vyaalah (Big Snake), Sikandi (Peacock), Rohita (Red Fish), Vrshakapi (Boar) and Sasabindu (moon with Hare).

xxxx

Let us look at the details now,

Naarasimha- vapuh- Word No.21 in VS

One in whom the bodies of a man and a LION are combined; one of the Ten Avatars of Vishnu

***

Vyaalah – Word No.92 in VS

Being ungraspable like a SERPENT.

***

Vrsaakapih Word No.101 in VS

Shankara gave three meanings; one of them is from Mahabharata, whereKapih means Varaaha- a BOAR.

***

Hamsah- Word No.191 in VS

One who took HAMSAVATARA

Hamsa= SWAN

***

Suparnah- Word No.192  in VS

One who has two wings (My Comments: Suparna means EAGLE/GARUDA in the Vedas)

***

Simhah- Word No.200 and 488 in VS

One who does Himsaa or destruction to sinners (It also means LION)

***

Sahasrapaat – Word No.227 in VS

One with a thousand or innumerable legs (It also means MILLEPEDE in Sanskrit)

***

Sipivistah — Word No.273 in VS

Sipi means COW.one who resides in COW as Yajna.

***

Sasabiduh – Word No.285 in VS

Who has the mark of the HARE, that is, the moon.

***

Sikhandi — Word No.311 in VS

Sikhanda means a feather of a PEACOCK. He used it as a decoration when He adopted the form of a cowherd (gopa).

***

Garudadhvajah – Word No.354in VS

One who has a GARUDA/FALCON as his flag.

***

Rohitah – Word No.364 in VS

One who assumed the form of a RED FISH.

***

Ajah – Word No.521 in VS

A means Mahavishnu. So the word means one who is born of Visnuh i.e. Kama Deva (It also means GOAT)

***

Mahaasrngah – Word No.536 in VS

One with a great antenna in the Matsyavatara (FISH incarnation).

***

Nandih – Word No.618 in VS

One who is of the nature of Supreme Bliss (also means BULL)

***

Vyagrah- Word No.762 in VS

One who has no Agra or end ( I give meaning TIGER only by changing the spelling Vyaagrah)

***

Naikasringah- Word No.763 in VS

One with four horns. Shankara quotes Tittriya Aranyaka where Lord is shown in the form of OX with four horns.(RV. 4-58-3 also says the same)

***

Sringi — Word No.797 in VS

FISH with one horn at the time of Pralaya (Cosmic dissolution)

***

Kapih – Word No.899 in VS

Ka means water; one who drinks all water by his rays is Kapih. Kapi means BOAR or Varaaha, one of the incarnations of Vishnu.

***

It is no wonder that Bhisma used at least 20 names from animal kingdom with two or more meanings.  Even today most of these animals or birds are shown as Vahanas. During South Indian Temple Festivals, all these animal figures are used as Vahanas/ Mounts of Gods. Hindus don’t kill them unless there is a threat from them.

–subham—

Tags- Vishnu Sahsranama, Animals, Birds,, secrets, part 12

வாழைப்பழம் வாழ்க! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-9 (Post No.13,234)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,234

Date uploaded in London – –   12 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மா, பலா , வாழை ஆகிய மூன்றும் முத்தமிழ் போல இனிக்கும் முக்கனிகள் ஆகும். திருமந்திரம் 3000 இயற்றிய திருமூலர் வாழைப் பழத்தைப் பயன்படுத்தி,  நமக்கு பல ஆன்மீகச் செய்திகளை அளிக்கிறார்.

வாழை அல்லது வாழைப் பழத்தை  பல பொருள்களில் பயன்படுத்துவது திருமந்திரத்தின் சிறப்பு ஆகும். ஆனால் திருமந்திரத்திற்கு உரை எழுதியோர் சிக்கலான மொழியைப் பயன்படுத்தி அர்த்தத்தை விளங்காமல்  செய்துவிடுகின்றனர். சிமெண்ட் ரோட்டில் செல்ல விடாமல் தார் போடாத கரடு முரடான சாலையில் நம்மை அழைத்துச் செல்கின்றனர்.  ஆகையால் நான் உங்களுக்கு சில வரிகளில் பொருள் சொல்ல விழைகிறேன்

முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்

செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன

பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்

நக்கு மலருண்டு நடுவுநின் றாரே.

யோகப் பயிற்சியில் பக்குவப்பட்டோர் மாதர்களிடம் சிக்கார். தவத்தில் மூ ன்று நிலைகளை கடந்து சிவானந்த யோகத்தை நுகர்வர்.

முக்குணங்கள் வழியிலே தேர்ச்சி பெற்ற பெரியோர் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களையும் வென்று நனவு, கனவு, உறக்கம் என்ற நிலைகளைக் கடந்து (3 வாழை), அழகிகள் வலையில் சிக்காமல் சிவானந்தத்தைப் பருகுவர்.

முக்காதம் ஆற்றிலே= மூன்று குணங்கள் வழியிலே ;

மூன்றுள வாழை = கனவு, நனவு, சுழுத்தி நிலைகள் ;

மலருண்டு = சிவானந்தத்தைப் பருகி ;

படங்கினார்= நகை அணிந்து அழகிகள்;

பக்கனார் = பக்குவப்பட்ட ஆன்மாக்கள் .

2916: Yoga’s Triumph

In the river of Leagues Three

Are Plantain Trees Three;

Ruddy fruits of triple Malas they bore;

They who are with the Lord exceeding,

Hoisted their Flag;

And seeking the Virgin through Central Sushumna,

Inhaled the Flower’s fragrance, divine sweet.

xxxxx

வானச் சிறப்பு
அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.  105

பொருள்

மழைநீர் அமுதம் ஆகும் அதனால் பூமியில் அமிர்தம் போன்ற உணவினை வழங்கும் பயிர்கள் தழைக்கும்

கமுகு என்னும் பாக்கு மரம், தென்னை மரம் , கரும்பு, வாழை முதலியன அமிர்தம் போன்றவை மழையில்லாவிடிலோ காஞ்சிரங்காய் நிலை / வறட்சி / துன்பம் நேரிடும்

248: Vegetation Blooms

The fertilising flood of rains outpouring

Makes trees and plants bloom enriched with sap;

The areca palm, coconut, cane and plantain green,

And vomica to Samadhi’s nectar leading-Stand laden rich with crop.

xxxxx

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது

தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”

இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன்.அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது. அதில் பூசணி பூத்தது. அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,  தொழுது கொண்டு ஓடினார்கள்.  அதன் பின் அக்கொடியில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”

இந்தப் பாடலுக்கு பல விளக்கங்கள் தரப்படுகின்றன.அனைத்துப் பாடல்களும் வேதம் போல மறைவாகப் பேசுகின்றன. அதாவது உண்மைப்பொருளை மறைத்துப் பேசுகின்றன.

இதோ ஒரு விளக்கம் ,

வழுதலை  விதை= யோகப் பயிற்சி ,

பாகற்காய் – வைராக்கியம்,

புழுதியைத் தூண்டினேன் – தத்துவ ஆராய்ச்சி செய்தேன் ,

பூசணி பூத்தது –  சிவம் வெளிப்பட்டது ,

தோட்டக்  குடிகள் – புலன் இன்ப வேட்கை ,

வாழைக்கனி – ஆன்ம லாபம்

சுருக்கமாகச் சொன்னால் யோகப் பயிற்சி மூலம் ஆன்மீக முன்னேற்றம் கண்டேன் .

இதற்கு குண்டலிணி சக்தியை எழுப்புதல் போன்ற விளக்கங்களும் உண்டு.

2869: Abnegation of Desires Leading to Liberation Through

Yoga

I sowed the seed of brinjal

And the shoot of bitter gourd arose;

I dug up the dust;

And the pumpkin blossomed;

The gardner-gang prayed and ran;

Full well ripened the fruit of plantain.

xxxxx

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை

எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்

கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்

எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.

(குளமாகிய ஆருயிரின்கண் புணர்வும் புலம்புமாகிய கொட்டியும் ஆம்பலும் பூத்துக்கிடந்தன. சுட்டியுணரப்படுவதாகிய பெயரும் வடிவும் விடத்தக்கன. ஆதலின் அவற்றை எட்டியும் வேம்பும் என உருவகித்தனர். இவையகலவே இனியதோர் வாழையும், கட்டியும், தேனும் கலந்துண்ணலாகும். இம் மூன்றும் முறையே உண்மை, அறிவு, இன்ப, வடிவ உருவமாகும்.

உலக இன்பங்களை வேண்டுவோர் எட்டிப்பழத்துக்கு ஆசைப்படுவோர் ஆவர்.

எட்டிப்பழம் பார்க்க அழகானது ஆனால் விஷத்தன்மையுடையது.  உலக இன்பங்களும் அப்படித்தான் 

கொட்டிக்கிழங்கு (Aponogeton natans) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.

2901 : Sweet Ambrosia and Bitter Nux Vomica Within the Body

In the tank where bloomed Kotti and Lily

Are Neem and Nux Vomica, too;

They who eat not the Salad of Plantain sweet,

With candy and honey mixed,

Lo! hanker after the fruit of nux vomica.

xxxxx

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன

வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்

வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு

வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே.

வாழைமரமும், சூரை முள்ளும் ஓரித்தில் வளர்ந்திருந்தன. வாழை மென்மையானது. சூரை வலிமையானது. மக்கள் வாழையை விரும்புகின்றனர். 

வாழை- இன்பம்; சூரை – துன்பம்

இன்பமும் துன்பமும் வந்து நம்மை ஆட்டுகிறது; இதில் துன்பமே வலியது  இந்த இரண்டினையும் மனத்திலிருந்து விலக்கிவிட்டு இரண்டினையும் ஒப்ப நோக்கினால் சிவம் என்னும் இன்பத்துடன் வாழலாம்.

2922: Iruvinai Oppu Leads to Siva

The Plantain Tree and the Surai Creeper (pepper) together covered space;

The Surai creeper is stronger by far than the Plantain tree, they say;

Cutting down the Plantain tree and Surai creeper together,

The Plantain extending flourishes sure.

—subham—-

Tags- வாழையும் சூரையும், கொட்டியும் ஆம்பலும், வழுதலை வித்திடப் பாகல், அமுதூறு மாமழை, முக்காதம் ஆற்றிலே, திருமூலர், வாழைப்பழம், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-9