Compiled by london swaminathan
Date: 30 April 2016
Post No. 2769
Time uploaded in London :– 6-46 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
நீங்கள் முருக பக்தரா? எங்கே, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இதில் பத்துக்கு பத்து கிடைக்கவில்லையென்றால் நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே பிளாக்கில் போட்ட 25-க்கும் மேலான கேள்வி பதில்களுக்குப் போங்கள். ஏதாவது ஒன்றிலாவது நூற்றுக்கு நூறு எடுக்க முடிந்தால் நீங்கள் மெத்தப் படித்தவர். மிகவும் குறைவாக மதிப்பெண்கள் கிடைத்தால் மெதுவாகப் படிப்பவர்கள்!!!
1.முதலில் ஒன்று என்ற எண்ணுடன் துவங்குவோம். எந்த ஓரெழுத்து மந்திரத்தின் பொருளை சிவனுக்கு முருகன் உபதேசித்தார்? எங்கு?
2.முருகனுக்கு எத்தனை மனைவியர்? யார் அவர்கள்?
3.திருத்தணியில் எத்தனை படிகள் உள்ளன?
4.கதிர்காமத்தில் எத்தனை திரைகள் உள்ளன?
5.நமக்கு திருப்புகழ் பாடல்கள் எவ்வளவு கிடைத்துள்ளன?
6.பழனியிலுள்ள முருகன் சிலை எத்தனை பொருட்களால் ஆனது?
7.முருகப் பெருமானுடன் தொடர்புடைய முக்கிய எண் எது?
8.பழனி மலையில் எத்தனை படிகள் ஏறிச் சென்றால் முருகனை தரிசிக்கலாம்?
9.மலேசியாவில் பத்துமலைக் குகைக் (Batu Caves) கோவிலில் எத்தனை படிகள் இருக்கின்றன?
10.நக்கீரரை பிடித்த பூதம் அவரை எத்தனையாவது ஆளாகப் பிடித்தது?
விடைகள்: 1.ஓம், சுவாமி மலை 2.இரண்டு மனைவியர்:வள்ளி, தெய்வானை 3. மொத்தம் முன்னூற்று அறுபத்தைந்து படிகள் 4.ஏழு திரைகள் 5.அருணகிரிநாதர் பாடியது 16,000க்கும் மேலான திருப்புகழ் பாடல்கள்; இன்று பட்டியலிடப்பட்டவை 1334; யாரேனும் 1300 அல்லது அதற்கு நெருங்கிய எண் சொன்னால் முழு மதிப்பெண். 6.நவபாஷாணம் எனப்படும் ஒன்பதுவகை மருந்துப் பொருட்களால் ஆன சிலை என்பது ஐதீகம் 7.முருகப் பெருமானுடன் மிகவும் தொடர்புடைய எண் ஆறு; அவன் பெயரே ஆறுமுகன், ஷண்முகன், அவனது புகழ்பெற்ற தலங்கள் ஆறு படைவீடு, அவனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர்; அவனது யந்திரம் அறுகோணம் 8.பழனியின் படிகள் 689 அல்லது 690 என்ற இரண்டும் சரியே; நாம் கடைசி படியைக் கோவிலாகவோ அல்லது அதையும் ஒரு படியாகவோ எண்ணலாம் 9.பாட்டு கேவ்ஸ் (Batu Caves) என்றும் பத்துமலை என்றும் அழைக்கப்படும் மலேசியாவின் புகல் மிகு முருகன் கோவிலில் 272 படிகள் உள 10. குகையில் 999 பேரை அடைத்து வைத்து ஆயிரமாவது ஆளாக நக்கீரரைப் பிடித்தது ஒரு பூதம்; அப்போது அவர் முருகன் அருள் வேண்டிப் பாடியதே திருமுருகாற்றுப்படை..
Earlier Quiz posted by me:
(1&2) 27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
25. Are you familiar with Number Four?
26. நீங்கள் நாலும் தெரிந்தவரா?
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.