ஔவைப் பாட்டியின் வாசகங்களைக் கண்டுபிடியுங்கள் (Post No.7083)

WRITTEN  by London swaminathan
swami_48@yahoo.com

Date: 11 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-29 am
Post No. 7083

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கூடியமட்டிலும் சொற்கள் பிரிக்கப்படவில்லை. மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாகப் பாருங்கள்; சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் கற்றது இவை.

Answers

ம் செ ய விரு ம்பு

ஆறு  வது சினம்

ல்வ  து கர  வேல்

ஈவ  து வில க்கே ல்

டை   து விள  ம்பே  ல்

ஊக்    து கை  விடே  ல்

எண் எழு த் து இ கழேல்

ஏற்பது இகழ்ச்சி

ஐயமிட்டு உண்

ஒப்புர வொழுகு

ஓதுவது ஒழியேல்

–subham–

மாநிலக் கேள்வி-பதில், Bilingual Indian Map Quiz (Post No.7032)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com

Date: 29 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 8-39 AM

Post No. 7032

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

1.Can you identify the six states that are missing in the Map, numbered 1 to 6?

2.Can you expand the 5 abbreviations of North Eastern States?

NL, MN, MZ, TR, ML

மாநிலக் கேள்வி-பதில்

1 முதல் 6 வரை இலக்கமிட்ட மாநிலங்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?

2. ஆங்கிலச் சுருக்கெக்ழுத்துக்கள் குறிக்கும் 5 வடகிழக்கு மாநிலங்கள் யாவை?

Answers – விடை

1.ஹிமாசலப் பிரதேசம் – HIMACHAL PRADESH

2.அஸ்ஸாம் – ASSAM

3.குஜராத் – GUJARAT

4.ஜார்கண்ட் – JHARKAND

5.தெலிங் கானா – TELENGANA

6.தமிழ்நாடு – TAMIL NADU

7. என் எல் – நாகாலாந்து ,N L –NAGALAND

எம் என் – மணிப்பூர், MN — MANIPUR

எம் இசட் – மிசோராம் MZ – MIZORAM

டி ஆர் – திரிபுரா, TR – TRIPURA

எம் எல் – மேகாலயா, ML – MEGHALAYA

–subham —

இந்துக்களின் தலைநகரங்கள் -வினா-விடை ‘க்விஸ்’ (Post No.5916)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 11 JANUARY 2019
GMT Time uploaded in London – 8-08 am
Post No. 5916
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial .

–subham–

DO YOU KNOW THESE HINDU CAPITAL CITIES? (Post No.5915)

images from Ayodhya

Compiled by London swaminathan

swami_48@yahoo.com


Date: 11 JANUARY 2019
GMT Time uploaded in London – 6-39 am
Post No. 5915
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial .

–subham–

ஈற்றடி இங்கே! முதலடி எங்கே? சொல்லுடா, தமிழா! (Post No.5038)

WRITTEN by London Swaminathan 

Date: 23 May 2018

Time uploaded in London – 16-05 (British Summer Time)

Post No. 5038

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழா, திருக்குறள் , திருக்குறள் என்று வாய் கிழியக் கத்துகிறாயே! அந்த உலகப் புகழ் பெற்ற நூல் உனக்குத் தெரியுமா? நீயே உன்னை ஆத்ம சோதனை செய்து கொள். இதோ பத்துக் குறள்கள். முதலடி சொல்லு பார்ப்போம்:

1.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

 

2.அன்பு ஈனும்  ஆர்வம் உடைமை அது ஈனும்

 

 

3.வறியார்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

 

4.வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

 

 

5.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

 

6.கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

 

7.அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

 

8.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

 

9.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

 

10.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

 

 

11.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 

12.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

 

13.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

 

14.ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

 

15.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

 

16.கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

 

 

விடைகள்

 

1.வேண்டாமை வேண்ட வரும்

 

  1. நண்பென்னும் நாடாச் சிறப்பு

 

  1. குறியெதிர்ப்பை நீர துரைத்து

 

  1. தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று

 

 

  1. புன்கண்நீர் பூசல் தரும்
  2. தாளை வணங்காத் தலை

 

  1. தீயுழி உய்த்துவிடும் –

 

  1. சுற்றமாச் சூழ்ந்து விடும்

 

 

  1. கோல்நோக்கி வாழும் குடி

 

10.நாவினாற் சுட்ட வடு

 

  1. செய்நன்றி கொன்ற மகற்கு

 

  1. சான்றோன் எனக்கேட்ட தாய்

 

  1. தெய்வத்துள் வைக்கப்படும்

 

  1. வேந்தனும் வேந்து கெடும்

 

  1. செல்வர்க்கே செல்வம் தகைத்து

 

  1. களை கட்டதனோடு நேர்

–Subham–

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

Compiled by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 6-37 am (British Summer Time)

 

Post No. 5009

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழேயுள்ள புகழ் மிகு, அருள் மிகு, கவின் மிகு, திரு மிகு சொற்றொடர்களை நுவன்றோர் யாவர் என்று செப்புக!

 

1.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

xxxx

 

2.உள்ளம் பெருங்கோயில்

ஊன் உடம்பு ஆலயம்

xxxx

 

3.ஆயநான் மறையனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்

 

xxx

4.தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்

xxxx

 

5.தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.

xxx


6.மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே

xxxx

7.நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடு இயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்

 

xxx

8.ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமுமம்

அரச குமரரும், பரத குமரரும்

xxx

9.திருமாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்

xxxx

10.அன்பின் வழியது உயிர்நிலை

xxx

11.தமிழ்நாடெங்கும் தடபுடல்! அமளி!

பணமே எங்கணும் பறக்குது விரைவில்

குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!

xxx

12.புகழும் நல் ஒருவன் என்கோ?

பொருவில் சீர்ப் பூமி என்கோ?

திகழும் தண் பரவை என்கோ?

தீ என்கோ? வாயு என்கோ?

நிகழும் ஆகாசம் என்கோ?

நீள் சுடர் இரண்டும் என்கோ?

 

xxxx

ANSWERS

1.பாரதி, பாரதியார் பாடல்கள், 2.திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. மாணிக்கவாசகர், திருவாசகம், 4.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 5.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 6.பட்டினத்தார் பாடல், 7. கம்பன், கம்ப ராமாயணம், 8.இளங்கோ, சிலப்பதிகாரம், 9.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் பாடல்கள், 12.நம்மாழ்வார் திருவாய்மொழி

 

–SUBHAM–

என்னப் பூ? சொல்லுப்பு! QUIZ (Post No.5002)

Compiled by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 6-19 am (British Summer Time)

 

Post No. 5002

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் நிறைய உள்ளன. ஸம்ஸ்க்ருதத்தில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்துச் சொற்கள் என்று அகராதியே உள்ளது. ஏனெனில் அங்கு இது மிகவும் அதிகம். இதோ ஒரு சிறு தமிழ் ‘சாம்பிள்’. 1958 தமிழ் மலர் ஆண்டு மலரில் இருந்து எடுக்கப்பட்டது.

 

ANSWERS:–

 

–SUBHAM–

 

என் கேள்விக்கு என்ன பதில்? சொல், சொல், மனமே!-2 (Post No.4969)

 

Written by London Swaminathan 

 

Date: 2 May 2018

 

Time uploaded in London – 9-59 am (British Summer Time)

 

Post No. 4969

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

என் கேள்விக்கு என்ன பதில்? சொல், சொல், மனமே!-2 (Post No.4969)

கீழ் கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி, உங்கள் தமிழ் அறிவினைச் சோதித்துக் கொள்ளுங்கள்.

 

1.தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளி

 

 

xxx

2.மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய்

xxx

3.என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே.

xxx

4.எங்கள் பகைவ எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

 

xxxx

5.நச்சு மாமரமாயினுங் கொலார்

நானும் அங்ஙனே யுடைய நாதனே

xxxxx

 

6.கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்து இருபல்முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

xxx

7.அஞ்சல்! அஞ்சல்! என்று தினம் அண்டையிலே தான் இருக்க

நஞ்சுதனை ஏன் அருந்தினார்?

xxxx

 

8.பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே………

தேவர் பாடையின் இக்கதை செய்தவர் மூவர்

xxxx

 

9.அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

xxxx

10.மாநீர்வேலி வச்சிர நல்நாட்டுக்

கோனிறை கொடுத்த கொற்றப்பந்தரும்

மகநல்நாட்டு வாள்வாய் வேந்தன்

பகைப்புறத்து கொடுத்த பட்டிமண்டபமும்

அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த

நீவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்

 

xxxx

 

11.அறமிருக்க மறம்விலைக்குக் கொண்டவாறே

பனிநீராற் பாவைசெயப் பாவித்தேனே

கரும்பிருக்க இரும்புகடித்து எய்த்தவாறே

xxx

 

12.ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்!

ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!

xxx

13.அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை

xxxx

 

ANSWERS

1.தற்கால அவ்வையார்

2.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை

3.பட்டினத்தார் பாடல்

4.பாரதிதாசன் பாடல்கள்

5.மாணிக்கவாசகர், திருவாசகம்

6.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம்

7.காளமேகம்,  தனிப்பாடல்கள்

8.கம்பன், கம்ப ராமாயணம்

9.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்

10.இளங்கோ, சிலப்பதிகாரம்

11.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை

12.பாரதி, பாரதியார் பாடல்கள்

13.திருமூலர் எழுதிய திருமந்திரம்

 

-SUBHAM–

 

 

தெய்வத் தமிழ் QUIZ/ கேள்வி-பதில் (Post No.4938)

தெய்வத் தமிழ் QUIZ/ கேள்வி-பதில் (Post No.4938)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 22 April 2018

 

Time uploaded in London –  6-48 am (British Summer Time)

 

Post No. 4938

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

கீழ்கண்ட தெய்வீக வசனங்களை யார், எந்த நூலில் சொன்னார்கள்? விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பாராமல் பகருங்கள். உங்கள் அறிவினைச் சோதித்துக்கொள்ள அரியதோர் வாய்ப்பு!!!

1.பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

நீலமேனி நெடியோன் கோயிலும்

 

 

2.மாட்டுக்கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைநகர்

ஆட்டுக்கோ நுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ

 

3.ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை

மாற்று அருங்கணிச்சி, மணிமிடற்றோனும்

கடல் வளர் புரி வளை புரையும் மேனி

அடல் வெந் நாஞ்சில் பனைக் கொடியோனும்

 

4.பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்

பரவு புகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்

இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம்

என்னென்று புகழ்ந்துரைப்போம்

 

5.ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே

 

6.கற்றூணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவயவே

 

7.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

 

8.உள்ளே உருகி நைவேனை

உளவோ இலளோ என்னாத

கொள்ளைகொள்ளிக் குறும்பனைக்

கோவர்த்தனனைக் கண்டக்கால்

கொள்ளும் பயன் ஒன்றில்லாத

கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட் டவன் மார்பில்

எறிந்தென் அழலைத் தீர்வேனே

 

9.பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும்

 

10.கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்

எங்கள் உள்ளம்!

 

11.தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
மான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய்.

 

12.கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்

 

விடைகள்

1.இளங்கோ, சிலப்பதிகாரம்

2.காளமேகம்,  தனிப்பாடல்கள்

3.புறநானூறு, நக்கீரனார் பாடல்

4.பாரதி, பாரதியார் பாடல்கள்

5.கம்பன், கம்ப ராமாயணம்

6.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை

7.திருமூலர் எழுதிய திருமந்திரம்

8.ஆண்டாள், நாச்சியார் திருமொழி

9.திருக்குறள், திருவள்ளுவர்

10.பாரதிதாசன்

11.மாணிக்கவாசகர், திருவாசகம்

  1. சேக்கிழார், பெரியபுராணம்

 

–SUBHAM–

 

உண்மைத் தமிழருக்கு ஒரு க்விஸ்- கேள்வி பதில் (Post no.4883)

Compiled by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  5-42 am (British Summer Time)

 

Post No. 4883

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழ்கண்ட பொருள் பொதிந்த — அர்த்த புஷ்ட்யுள்ள – அக்ஷர லக்ஷம் பெறும் வாசகங்களை யார் சொன்னார்கள்? எந்த நூலில் உரைத்தார்கள்; செப்பு! செப்படா, தமிழா!

 

1.வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை

வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்

ஓதருஞ் சாத்திரம் கோடி – உணர்ந்

தோதி யுலகெங்கும் விதைப்பாள்

xxx

2.இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்

தருமம் செய்யாதவர் தம்பாலதாகும்

xxxx

3.மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்

xxx

4.ஊன நாடகமாடு வித்தவா

உருகிநானுனைப் பருகவைத்தவா

ஞானநாடகமாடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே

xxx

5.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

xxxx

6.வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி

சேணியன் போற்றக், கடல் பள்ளிமுன் தொழ தீங்கரும்பைக்

கோணியன் வாழ்த்தக், கருமான் துகில்தனைக் கொண்டு அணிந்த

வேணியன்  ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே

xxx

7.இனி பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை

xxx

8.முத்தமிழ்த் துறையின் முறை போகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

xxx

9.பதினோர் ஆடலும், பாடலும் கொட்டும்

விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து- ஆங்கு

xxxx

10.விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்தவாறே

xxx

 

விடைகள்

1.பாரதி, பாரதியார் பாடல்கள்; 2. திருமூலர் எழுதிய திருமந்திரம்; 3. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்; 4. மாணிக்கவாசகர், திருவாசகம்; 5. பாரதிதாசன் பாடல்கள்; 6. காளமேகம்,  தனிப்பாடல்கள்; 7. சங்க கால அவ்வையார் ,புறநானூறு; 8. கம்பன், கம்ப ராமாயணம்; 9. இளங்கோ, சிலப்பதிகாரம்; 10. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை