உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! (Post No 2772)

cartoon-ladder-5

Compiled by london swaminathan

 

Date: 1 May 2016

 

Post No. 2772

 

Time uploaded in London :– 21-49

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

HitchYourWagonToAStar-jpg

அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ  எமர்சன் (1803-1882) ஒரு கட்டுரையில் எழுதிய வாசகம் ஆங்கில நூல்களில் ‘ஊக்கமுடைமை’ பற்றிய சிறந்த மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. உனது வாகனத்தை (பிறர் உதவியுடன்) நட்சத்திரத்தை நோக்கி நகர்த்து ‘Hitch your wagon to a star’ என்றார். இதன் உட்பொருள் உயர்ந்த குறிக்கோள் உடையவனாக இரு. ஏற்கனவே வெற்றி பெற்றவரின் பாதையைப் பின்பற்று என்பதாகும்

 

இதில் வியப்பான விஷயம் என்ன வென்றால் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னன் கோபெருஞ்சோழன் சொல்லியிருக்கிறான்:–

புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். யானையுடன் திரும்பி வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறம் 214)

 

ஆங்கிலப் பழமொழிகள்

இதை வேறு சில ஆங்கிலப் பழமொழிகளிலும் காணலாம்.

 

He who aims at the moon may hit the top of a tree; he who aims at the top of a tree unlikely to get off the ground.

நிலவை எட்டிப் பிடிக்க முயல்பவன் மரத்தின் உச்சியையாவது தொடுவான்; மரத்தின் உச்சியை அடைய முயல்பவன், தரையை விட்டுக்கூட எழுதிருப்பது சந்தேகமே- என்கிறது ஆங்கிலப் பழமொழி.

See mickle, and get something; seek little and get nothing (mickle = much)

இன்னொரு பழமொழியும் இதை வலியுறுத்தும். ‘நிறையக் கேட்டால் கொஞ்சமாவது கிடைக்கும்; கொஞ்சம் கேட்டால் ஒன்றும் கிடைக்காது’ என்று சொல்கிறது இப்பழமொழி!

 

நன்கொடை வசூலிக்கப் போகிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டால், கொடுப்பவன் பாதியாவது கொடுப்பான். விற்பனையாளர் தந்திரமும் இதுதானே! ஒரு பொருளின் விலையை ஆயிரம் ரூபாய் என்பான். நாம் நூறு ரூபாய்க்குத் தருகிறாயா? என்போம். கடைசியில் 500 ரூபாயில் பேரம் முடிவடையும். ஆக வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருந்தால்தான் நாம் முன்னேறுவோம். குறிக்கோளே இல்லாதவர் இறந்தர்க்குச் சமம். மரக்கட்டையும் அவர்களும் ஒன்றே என்பான் வள்ளுவன் (குறள் 600).

வள்ளுவனும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இரண்டு குறள்களில் மிக அழகாகச் சொல்கிறான்:

2lotus bloom

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளாமை தள்ளினும் நீர்த்து– குறள் 596

ஆனால் மேற்கூறிய எல்லா மேற்கோள்களுக்கும் முன்னதாகவே கண்ணபிரான் இக்கருத்தை பகவத் கீதையில் முன்வைத்துவிட்டான்:-

 

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

புறநானூற்றில் இமயம் போல உயர்ந்து புகழ் அடைவாயாக (பாடல் 214) என்பது கீதையிலும் இருக்கிறது

(கீதை 11-33) எழுந்திரு ! புகழடை!! உத்திஷ்ட ! யசோ லப !!

 

எனது முந்தைய கட்டுரைகள்:–

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள் …(31 Mar 2012) என்ற பதிவிலும், புறநானூற்றில் பகவத் கீதை- பகுதி 2-லும் (31-3-2012) இக்கருத்துகளை முன்னரே தொட்டுக்காட்டி இருக்கிறேன்

 

–சுபம்–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: