WRITTEN BY S NAGARAJAN
Date: 5 May 2016
Post No. 2782
Time uploaded in London :– 5-56 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)
ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்.
சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.
நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 2
ச.நாகராஜன்
மிருகசீர்ஷம், திருவாதிரை – சிதம்பரம், சிவகங்கை
சிதம்பரம் : கோயில் என்று சிறப்பாகச் சொல்லப்படும் தலம்.இறைவன் : திருமூலட்டானேசுவரர் இறைவி: உமையம்மை. தில்லை என்றும் பூலோக கைலாயம் என்றும் சிறப்பாக அழைக்கப்படும் தலம். பஞ்சபூத தலங்களுள் ஆகாய தலம் இது. பாடல் பெற்ற சிவ தலங்களில் முதலாவது தலம். பதஞ்சலி, வியாக்கிரபாதர், திருமூலர் ஆகியோர் வழிபட்ட தலம். கிழக்கு கோபுரத்தில் 108 பரத நாட்டிய நிலைகளைக் காண முடியும். பொன் கூரை வேய்ந்திருப்பதால் பொன்னம்பலம் என்ற சிறப்புப் பெயர் உண்டு.
புனர்பூசம் – இராமேஸ்வரம் முதலான இராமதீர்த்தம்
இராமேஸ்வரம்: பாண்டிய நாட்டுத் தலம். இறைவன்: இராமநாதர் இறைவி: மலைவளர் காதலி (பர்வதவர்த்திநி) அக்நி தீரத்தம் உள்ள கடற்கரைத் தலம்.இராவணனைக் கொன்ற தோஷத்திற்கு இராமன் பூஜித்த தலம். இராமநாதர் எழுந்தருளி இருக்கும் இடம் திருக் கந்தமாதனம் என்னும் மலையாகும்.இராமநாதர் திருமேனி சீதையால் வெண் மணலாற் செய்த திருவுருவமாக ஸைகத லிங்கமாக அமைக்கப் பெற்றது.
பூசம் – பிரசித்தம் ( பிரசித்தம் என்றால் ஏராளமான தலங்கள் என்று பொருள்)
ஆயில்யம் – வழுவூர், மாகாளம்
மகம், பூரம் – பிரசித்தம்
உத்திரம் – பங்குனி உத்திரம் – திருவாரூர்
திருவாரூர்: பஞ்சபூதத் தலங்களுள் பிருதுவி தலம். தேவர்கள் கறையான் வடிவு கொண்டியற்றிய புற்றை இடமாகக் கொண்டு இறைவன் சிவலிங்கப் பெருமானாக எழுந்தருளிய இடமாகையால் வன்மீகபுரம் என்ற பெயரும் உண்டு.சப்தவிடங்கத் தலங்களுள் முதன்மையான இது காசிக்கும் தில்லைக்கும் மேலானது.அம்பிகை தவம் செய்த தலமாதலால் பராசக்தி தலம். திருமகள் வழிபட்ட தலமாதலால் கமலாலயம். வீதி விடங்கராகிய தியாகேசர் எழுந்தருளி இருப்பதால் வீதிவிடங்கம் என்ற பெயரும் உண்டு.அகத்தியர், அரிச்சந்திரன் சனகாதி நால்வர் என்று இங்கு வழிபட்டுப் பேறு பெற்றோர் ஏராளம்.
ஹஸ்தம் – திருவாரூர்
சித்திரை – பிரசித்தம்
சுவாதி – கேதாரம் (தீபாவளி)
கேதாரம் : வடநாட்டுத் தலம். இமயமலைச் சாரலில் ஹரிதுவாரத்திலிருந்து 253 கிலோமீட்டரில் உள்ள தலம். இறைவன்: கேதாரநாதர் இறைவி: கேதார கௌரியம்மை. கேதாரம்: வளைந்த பூமி இங்குள்ள லிங்கம் எருமையின் பின்புறம் போன்ற வடிவில் இருப்பதாக அருணாசல புராணம் கூறுகிறது.
விசாகம் – (வைசாகம்) பிரசித்தம்
அநுஷம் – திருநெல்வேலி
திருநெல்வேலி: பாண்டிய நாட்டுத் தலம். இறைவர்: நெல்லையப்பர். இறைவி:காந்திமதியம்மை. தீர்த்தம்: தாமிரவருணி
கேட்டை – எலந்துறை, திருநெல்வேலி
-தொடரும்
You must be logged in to post a comment.