Venganur Temple Paintings; from Ponnambalam Chidambaram post
Date: 26 FEBRUARY 2018
Time uploaded in London- 7-48 am
Written by S NAGARAJAN
Post No. 4786
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
ச.நாகராஜன்
நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (Post No.4786)
சுமார் 28 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம்.
அலுவலக மேலிட நிர்வாகத்திடமிருந்து மிக சீரியஸான தாக்கீது வந்து விட்டது.
அவரவர் தங்கள் worth prove பண்ணுங்கள்! சுருக்கமான மெஸேஜ் தான். லவுட் அண்ட் க்ளியர்!
அந்தமானிலிருந்து டெண்டர் வந்தது.ரெஃப்ரிஜரேடட் கண்டெய்னர் கட்ட.
கோட் quote அனுப்பினோம்.
ஆர்டர் வந்து விட்டது. அதிசயம். மளமளவென்று வேலைகளை ஆரம்பித்தேன். சகாக்கள் அதிர்ஷ்டக்காரர் என்று சொன்னார்கள்.
வேலை முடிந்தது. அந்தமானிலிருந்து உயரிய ஆபீஸரை அனுப்புமாறு ஃபேக்ஸ் கொடுத்தேன்.உடனடியாக வந்து விட்டார். எந்த வித சான்ஸும் எடுத்துக் கொள்ள விருப்பமில்லை. ஆகவே ரா மெடீரியல் பர்சேஸ், அதன் தர் நிர்ணய சான்றிதழ், வேலை நேர்த்தி என ஒவ்வொரு பார்ட்டையும் வந்தவருக்கு விளக்கினேன். அவர் ஒரு பங்காளி பாபு.
ஒவ்வொன்றையும் செக் செய்தார். நுணுக்கமாக ஆராய்ந்தார். பின்னர் கையெழுத்திட்டார் – பேப்பர் பேப்பராக.
அனைத்தையும் கவனித்த நிர்வாகத்திற்கு சந்தோஷம்.
எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
இவற்றை நல்லபடியாக அந்தமானில் இறக்கி ஒப்படைக்க வேண்டுமே!
ஏற்பாடுகள் மளமளவென்று நிறைவேறின. எனது அஸிஸ்டண்ட் ஒருவர் அங்கு சென்று மேற்பார்வை பார்த்து கப்பலிலிருந்து கிரேன் தூக்குவது வரை பத்திரமாகப் பார்த்து அனைத்து கண்டெய்னர்களையும் உரிய முறையில் ஒப்படைத்து நல்ல முறையில் பெற்றுக் கொண்டோம் என்ற ரசீதையும் வாங்கி வந்தார்.
அனைவருக்கும் ஒரே சந்தோஷம்.
பத்து நாட்கள் கழித்து ஒரு பேக்ஸ் அனுப்பினோம் – பேமெண்ட் வாங்க வரலாமா என்று.
வந்தது பதில் அல்ல – இடி!
பேமெண்டா எதற்கு? எதுவுமே சரியாகக் கட்டப்படவில்லை. உடனடியாக ஒரு பெரிய டீமை அனுப்பி இங்கேயே சரி செய்யுங்கள். மற்றதைப் பற்றிப் பின்னர் யோசிக்கலாம்!
அனைவருக்கும் பகீர் என்றது.
மேலிடம் அவசர சம்மனை அனுப்ப அனைத்து பேப்பர்களையும் காண்பித்து ரப்பர் ஸ்டாம்புடன் உரிய கையெழுத்தை அனைத்து ஆவணங்களிலும் வாங்கியதைக் காண்பித்தேன்.
என்ன செய்யப் போகிறீர்கள்?
நேரில் போய்ப் பார்க்கிறேன்.
அடுத்த நாள் அந்தமானில் ஆஜர்.
காலை 10 மணி. டைரக்டரைப் பார்த்தேன். ஒரு தமிழர். இளைஞர். சிரித்த முகம். பண்பாட்டின் உரு. லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி. சென்ட்ரல் கவர்ன்மெண்டின் உயர்தர அதிகாரி.
அவருடன் அழாக் குறையாக அவரது ஆள் தந்த சர்டிபிகேட்டுகள், அப்ரூவல் ஆகியவற்றைக் காண்பித்து, வந்த ஃபேக்ஸையும் காண்பித்து, “இது நியாயமா ஸார்!” என்று குமுறினேன்.
அவர்,” யார்டுக்குப் போய் அவரைப் பாருங்கள்” என்றார்.
சென்றேன். மதுரை அப்ரூவல் ஒரு பேஸிக் அப்ரூவல் தான். இங்கு டெஸ்டுகள் உண்டு. அதில் பாஸாக வேண்டும். ஆனால் இவை pass ஆகாது. ஆகவே ஒரு பெரிய டீமை அனுப்புங்கள். பார்க்கலாம்.
ஆர்க்யுமெண்ட் எதுவும் செல்லுபடியாகவில்லை.
ஐந்து நாட்கள் ஓடின. நிர்வாகத்திடம் தெரிவித்தேன். என்ன செய்யலாம்?
இங்கு ஒன்றும் செய்ய முடியாது. கடற்கரை பரந்த வெளி. கண்டெய்னர்களை மதுரை கொண்டு வர வேண்டியது தான்.
ஓகே. கொண்டு வாருங்கள்.
டைரக்டரிடம் சென்று சொன்னேன். “ ஆனால் இது அநியாயம் சார்”
“இவன் இப்படித்தான். இரண்டு கம்பெனிகளைத் தவிர தீவுக்குள் வேறு யாரையும் வர விட மாட்டேன் என்கிறான். ஆல் தி பெஸ்ட்”
பெருத்த செலவில் கண்டெய்னர்கள் திருப்பிக் கொண்டுவரப்பட்டன.
அனைவரும் என்னைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள். ஆனால் தீவிர ஒத்துழைப்பை நல்க ஆரம்பித்தனர். இது அசாதாரணமான ஒன்று தான்.
மீண்டும் அந்தமான் அதிகாரியை வரவழைத்தோம்.
அந்தந்த ரா மெடிரியலின் கம்பெனியின் உயர்தர அதிகாரி வந்து முகாமிட்டார். பிரஸ்டிஸ் இஷ்யூ ஆகி விட்டது.
சீலண்ட் கம்பெனியோ ஒரு கை பார்த்து விடுவது என்று தீர்மானித்து தனது ஆட்களை அனுப்பியது.பெரிய டீம்.
வந்தவரிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டோம்.
என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதன்படி செய்கிறோம். எதானாலும் இங்கேயே ஃபைனல்.
சுமார் 30 அடிக்கு 60 அடி குடோனை வைத்து ஆட்டம் போடும் அவர் நூற்றுக்கணக்கான பிரமாண்டமான மெஷினரிகள், பல நூறு தொழில்நுட்ப தொழிலாளிகள், ஏழே கால் ஏக்கர் (பல்லாயிரம் சதுர அடி) பரப்பிலான ஃபேக்டரி ஆகியவற்றை பார்க்கத் தான் செய்தார்.
என் விதி, விடவில்லை – அவ்வளவு தான்!
எல்லாம் முடிந்தன. ஒவ்வொரு பேப்பராக கையெழுத்து வாங்கப்பட்டது. அவர் வந்தால் தான் வேலை துவங்கும். 10 மணி நேரம் பார்க்கச் சொன்னாலும் அனைத்துத் தொழிலாளர்களும் அபாரமான ஒத்துழைப்பை நல்கினர்.
எல்லாம் pass!
கண்டெய்னர்களை அந்தமான் அனுப்பலாம் என எழுத்துபூர்வமாக வாங்கிக் கொண்டோம்.
அவர் கிளம்பினார். அடுத்த நாள் கண்டெய்னர்களும் கிளம்பின.
ஃபேக்டரியில் பிரம்மாண்டமான இடம் காலி. அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு.
கண்டெய்னர்கள் சேர்ந்தவுன் ஃபேக்ஸ் அனுப்பினோம். பேமெண்டி ரெடியா, வரலாமா?
வாருங்கள் பார்க்கலாம்.
அடுத்த நாள் அந்தமானில் ஆஜர்.
ஆனால் இளங்கோ அடிகள் சொன்னார் இல்லையா – “ஊழ்வினை உருத்து வந்தூட்டும்” –என்று!
வினை வந்தது.
இன்னும் அது சரியில்லை, இது சரியில்லை. எங்கள் டெஸ்ட் முடிய பல வாரங்கள் ஆகும். டெஸ்டில் பாஸ் ஆனால் பேமெண்ட் பற்றி யோசிக்கலாம்.
டைரக்டரிடம் குமுறினேன். சார், இது பழி வாங்கும் நடவடிக்கை போல இருக்கிறது. நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா? இல்லையேல் நான் அந்தமான் கவர்னரைப் பார்க்க நேரிடும்.
பாருங்கள்.
கவர்னர் ஆபீஸ் அருகில் தான் இருந்தது. அங்கு ஒரே கும்பல். உடனடியாக ஒரு பெடிஷனை ரெடி செய்தேன்.
நடந்ததை நிர்வாகத்திடம் சொல்லி பெர்மிஷன் வாங்கினேன்.
கவர்னரைப் பார்ப்பது சாத்தியமா? பாருங்கள்.
மறுநாள் காலை கவர்னர் ஆபீஸில் ஆஜர். கூட்டத்தையே காணோம். வெறிச்சோடி இருந்தது. என்ன ஆயிற்று?
விசாரித்தேன். முதல்நாள் வரை கவர்னராக இருந்த புருஷோத்தமதாஸ் தாண்டன் ராஜிநாமா செய்து விட்டாராம். கேரளத்தில் சொந்த ஊரில் எலெக் ஷனில் நின்று தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறாராம்.
அப்போது அந்தமான் நிர்வாகம்?
புதுவை கவர்னராக இருக்கும் ராஜேந்திரகுமாரி பாஜ்பாயி அடுத்த ஆள் நியமிக்கும் வரை அந்தமானின் கூடுதல் பொறுப்பை நிர்வகிப்பாராம்.
நிர்வாகத்திடன் சொன்னேன். என்ன செய்யப் போகிறீர்கள்.’கிளம்பி வருகிறேன். அங்கு புதுச்சேரி கிட்ட இருக்கிறது. அங்கு அவரைப் பார்க்கிறேன்.
மறுநாள் மதுரை. உடனே அடுத்த நாள் புதுவை. கவர்னரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன்.
அங்கு அலுவலகம் சென்ற போது அவர் அலுவலகம் வரவில்லை.
கீழே அவர் இருப்பிடம். மேலே ஆபீஸ்.
அவர் வயது 87. உடல்நிலை சரியில்லை என்றால் வரமாட்டார்.
Picture from Lalgudi Veda’s post
ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
சரி அரவிந்த ஆசிரமம் கர்மயோகியையாவது பார்க்கலாம்.
அவர் இல்லம் சென்றேன். அவர் தனிப்பட்ட யோக சித்தியை மேற்கொண்டிருப்பதால் யாரையும் பார்க்க மாட்டாராம்.
வந்ததைச் சொல்லி அனுப்பினேன்.
சில புஷ்பங்களை ஆசீர்வதித்து அனுப்பினார். ஏமாற்றம் தான். புஷ்பங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
ஒரு நப்பாசை. எம்.பி.பண்டிட் பார்க்க அனுமதிப்பாரா என்று.
புன்முறுவலுடன் வரவேற்றார். வங்கத்தினரே அணியும் முறையில் வேஷ்டியை யோக வேஷ்டியாக்ப் போட்டிருந்த அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன். ஆசீர்வதித்தார்.
நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலம் கேட்டு மகிழ்ந்தார்.
நிறுவனமே அரவிந்த பக்த குடும்பம்.
ஆசிரமத்தில் சமாதி அருகே தியானம்!
பின்னர் ஊர் வந்து சேர்ந்தேன்.
என்ன செய்யப் போகிறீர்கள்?
நாளையே புதுவை மீண்டும் செல்லப் போகிறேன்.
போய் வாருங்கள்.
மறுநாள் புதுவையில் ஆஜர்.
காலை 10 மணிக்கு செக்யூரிட்டியின் அனுமது பெற்று முதல் ஆளாக கவர்னர் அலுவலகத்தில் ஆஜர்.
நான் கவர்னர் அறையில். விளக்கு கூடப் போடவில்லை. நான் அங்கு ரெடி!
****
அடுத்த பகுதியுடன் முடியும்