வண்ணாத்தி அழுதது ஏன்? பாடகர் ஓடியது என்? (Post.7617)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7617

Date uploaded in London – 25 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி –  மூதுரை / வாக்குண்டாம்

ஒரு ஊரில் ஒரு கற்றுக்குட்டி பாடகர் இருந்தார். அவர் அறிந்ததோ குறைவு. அறியாததோ மலை அளவு. இருந்தபோதிலும் ‘குறை குடம் கூத்தாடும் நிறை குடம் தளும்பாது’ என்பதற்கு ஏற்ப ஆட்ட பாட்டம் அதிகமாக இருந்தது. நாட்டின் தலை நகருக்குச் சென்று ராஜாவுக்கு முன்னர் பாடி சன்மானம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு தலை நகருக்குப் போனார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

தினமும் சங்கீத சாஹித்யம் செய்வதற்காக அரண்மனையிலிருந்து தொலை தூரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். தினமும் பாடிப்பாடி பார்த்தார். ஆனால் இவர் ஒவ்வொரு முறை பாடும் போதும் அடுத்தவீட்டில் இருந்து அழும் குரல் ஒலித்தது. இவர் உச்ச ஸ்தாயியில் பாடினால் அழுகுரலும் உச்ச ஸ்தாயிக்குப் போனது . ஒருவாரம் இப்படியே ஓடியது.

பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா? அடுத்த வீட்டில் வசிக்கும் வண்ணான் மனைவிதான் இப்படி பிலாக்கணம் வைக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளை அழைத்துவருமாறு வீட்டுச் சொந்தக்காரனிடம் சொன்னார்.

அவளும் வந்தாள் . ஏ ! மூ ளை கெட்ட மூதேவி ! நான் பாடத் துவங்கியவுடன் ஏன் இப்படி அழுது தொலைக்கிறாய்?

உனக்கு என்ன ஆயிற்று? என்று சத்தம் போட்டார்; திட்டித் தீர்த்தார் .

அவள் சொன்னாள் , tamilandvedas.com, swamiindology.blogspot.com

“சாமி! மன்னிச்சுக்கங்க ! ஒரு மாதத்துக்கு முன்னர் நான் வளர்த்த அழகான கழுத்தை செத்துப் போச்சுங்க ! நீங்க பாட ஆரம்பிச்ச உடனே அதன் ஞாபகம் வந்துடுங்க; அதான் ஓ வென்று கதறி அழுதேன் என்றாள் .

பாடகருக்கு வெட்கம் நாக்கைப் பிடுங்கித் தின்றது . அவளை மரியாதையுடன் வெளியே அனுப்பி விட்டு ஊரைப் பார்த்து ஓடி வந்தார்.

xxx

ஆஸ்திரிய நாட்டு இசை மேதையும் சாஹித்ய கர்த்தாவுமான மோசார்ட் (Mozart) திருஞான சம்பந்தர் போல இளம் வயதிலேயே பாடல்களை எழுதியவர்; பாடியவர். அவரிடம் ஒரு பையன் வந்தான்.

“ஐயா, எப்படி ஸிம்பனி (symphony ) ஸ்வரத் தொகுப்பு) எழுதுவது என்று எனக்குச் சொல்லுங்கள் – என்றான்

“அட, நீ ரொம்பச் சின்னவன். முதலில் நாட்டுப் பாடல், கதை, பாட்டு (ballads) ஆகியவற்றை எழுதிப் பழகு” – என்றார்.

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் பத்து வயதிலேயே ஸ்வரங்களை எழுதினீர்களே!”

“அது உண்மைதான். ஆனால் ஸிம்பனி எப்படி எழுதுவது என்று நான் யாரிடமும் போய்க் கேட்கவில்லையே” – என்றார்.

கான மயிலாடக் கண்டு தானும் அதுவாகப் பாவித்த வான் கோழியின் கதை போல உள்ளது அந்தப் பையன் கதை!

Xxxx

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: