சீனாக்காரன் கொடுத்த சூடான பதில்! (Post 7661)

Written by LONDON SWAMINATHAN

Post No.7661

Date uploaded in London – 7 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நம்ம ஊர் திராவிடங்களுக்கு பக்தர்கள் கொடுத்த, கொடுக்கும் சூடான பதில்கள் எல்லோரும் அறிந்ததே.

“அவருடைய  நாவில் சரஸ்வதி தேவி தவழ்கிறாள்” என்று உபன்யாசகர் சொன்னார் .

ஒரு திராவிடன் கேட்டான்- ஐயா!  அவர் நாவில் சரஸ்வதி தேவி வசித்தால் , சிறுநீர் கழிக்க எங்கே போவாள்? என்று கேட்டான்.

உபன்யாசகர் சொன்னார்- “அப்போது மட்டும் உன்னுடைய நாக்கிற்குள் வந்து விடுவாள் என்று !”

இதே மாதிரி “அதோ இருக்காண்டா , பூ ணுல்காரன் ! என்று ஒரு திராவிடம்” கத்திய ‘ஜோக்’கை முன்னரே எழுதிவிட்டேன்.

இதே போல சீனாக்காரனிடம் ஒரு  வெள்ளைக்காரன் நமட்டு விஷமம் செய்தா ன் ; அவன் கொடுத்த சூடான பதில் இதோ—

ஒரு வெள்ளைக்கார அதிகாரியிடம் வேலை பார்த்த சீன ஊழியர் ,

“ஐயா ! நாளை ஒரு நாள் விடுமுறை வேண்டும். நெருங்கிய சொந்தக்காரர் இறந்துவிட்டார் ;இறுதிச் சடங்கிற்குப் போகவேண்டும்” என்று சொன்னார் .

அதிகாரியும் “சரியப்பா , போய் வா” என்று அனுமதி கொடுத்துட்டு …….

“உங்கள் சீன வழக்கப்படி நீயும் கல்லறையில் உணவு படைப்பாயோ ?”  என்று விஷமத்த தொனியில் வினவினார்.

சீனாக்காரனுக்கு என்னவோ போல் இருந்தது .

“ஆமாம் ஐயா , கட்டாயம் உணவு படைப்பேன்” என்று விடையிறுத்தான் .

அந்த அதிகாரிக்கு விஷமம் அதிகரித்தது.

“செத்துப்போனவர் எப்போது அதைச் சாப்பிடுவார் ?” என்று நமட்டுச் சிரிப்புடன் வினவினார் .

அவன் பதில் வில்லில் இருந்து பாய்ந்த அம்பு போல வந்தது. அம்பு போலவே வெள்ளைக்காரன் நெஞ்சில் பாய்ந்தது —

“ஐயா, போன வாரம் நீங்கள் உங்கள் நெருங்கிய உறவினர் மரணத்துக்குப் போய்விட்டு கல்லறையில் மலர்கள் வைத்துவிட்டு வந்தீர்கள் அல்லவா ? செத்துப்போன உங்கள் உறவினர் அந்த மலர்களின் மணத்தை முகர வரும் நாளன்று எங்கள் உறவினரும் கல்லறையில் இருந்து வந்து படைத்த உணவை அருந்திவிடுவார்” என்றார் .

வெள்ளைக்காரனுக்கு சுரீர் என்றது.

இதைத்தான் தமிழில்’ நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்’  என்றும் புகல்வர் பழமொழி அறிந்தோர்!

tags – சீனாக்காரன் , சூடான பதில்

XXX SUBHAM XXXX

சாகும்போது ஹூடினி மாஜிக்! (Post No.7657)

picture of Houdini from Wikipedia

WRITTEN BY London Swaminathan

Post No.7657

Date uploaded in London – 6 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சாகும்போதும் சூதாட்டம் ஆடியவர்

ஸ்க்ரோப் டேவிஸ் ( Scrope Davies 1782-1852) என்பவர் சூதாட்ட மன்னன். இங்கிலாந்தில் ஹார்ஸ்லியில் பிறந்த பிரமுகர். இவர் நகைச் சுவை மன்னரும் கூட . பிரபல ஆங்கிலக் கவிஞரான பைரன் (Lord Byron)  பிரபுவின் நண்பர் என்பதால் ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ என்பது போல எல்லோருக்கும் தெரிந்த நபர்.

ஸ்க்ரோப் டேவிஸ் மரணப்படுக்கையில் கிடந்தார்; டாக்டர் வந்தார்;சாவு மணி அடித்தார் . ‘நாளை காலை எட்டு மணிக்குள் உம்முடைய உயிர் பிரியும் ; வேண்டுவதை செய்துகொள்ளுங்கள்’ என்று எச்சரித்தார். டேவிஸும் மிகவும் ஸீரியஸாக அதைக் கேட்டார் . டாக்டருக்கு தக்க மரியாதை செய்து குட் பை (Good Bye)  சொன்னார் . அப்பொழுதும் அவருக்கு சூதாட்டமும் மறக்கவில்லை ;நகைச் சுவை உணர்வும் அழியவில்லை . டாக்டரை அவசரமாக ‘சார் உள்ளே  வாருங்கள் ; ஒரு முக்கிய விஷயம் .ஐந்து கினி (five Guineas)  பணம் பந்தயம் கட்டுகிறேன் . நான் காலை 9 மணி வரை உயிருடன் இருப்பேன் ; பந்தயம் கட்டத் தயாரா ? என்றார் .

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’  என்ற பழமொழி உண்மைதான் !

Xxxx

சாகும்போது விடுகதையா ?

ஒரு மனிதன் மரணப் படுக்கையில் கிடந்தான் . வழக்கம்போல கிறிஸ்தவ பாதிரியார் துதி பாட வந்தார் ; ஐயா, செத்துக் கொண்டு இருக்கிறீர்களே ; எந்த தேவன் உம்மை ரட்சிப்பான் என்று நினைவிருக்கிறதா? என்று கேட்டார்.

செத்துக் கொண்டிருந்த மனிதன் சொன்னான் —

பாதிரியாரே! பாதிரியாரே !!விடுகதை போடுவதற்கு இதுவா தருணம் ?

என்று கேட்டுவிட்டு உயிரைவிட்டார்.

Xxxx

சாகும்போது ஹூடினி மாஜிக் !

உலகப் புகழ்பெற்ற மந்திரவாதி ஹாரி ஹுடினி (Harry Houdini, died in 1926) ; ஹங்கேரியில் பிறந்தவர் ; அமெரிக்காவில் வளர்ந்தவர் ; இந்தியாவின் கயிறு வித்தை மந்திரவாதிகள் (Indian Rope Trick)  போல மாயமாய் மறைவார் . ஸ்டண்ட்(Stunt) வித்தை மன்னன். 1926ல் அவர் இறந்தார் . அவரது சவப்பெட்டியைத் தூக்கும் பாக்கியம் ஹாலிவுட்டின் இரண்டு புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்தது ; அவர்களில் ஒருவர் பெயர் சார்ல்ஸ் டில்லிங்ஹம் (Charles Dillingham) ; இரண்டாமவர் பெயர் பிளாரன்ஸ் செக்பெல்டு (Florence Ziegfeld) . அழகான , கனமான சவப்பெட்டியை இருவரும் தோளில் ஏற்றிக் கொண்டனர்.

அப்போது டில்லிங்ஹம் ஒரு ஜோக் அடித்தார் –

ஏ ,  சிக்பெல்ட் ! ஒருவேளை அவர் சவப்பெட்டியில் இல்லையோ ! வழக்கம் போல ஸ்டண்ட் அடித்து எஸ்கேப் ஆயிருந்தால் ………….! நல்ல வேளை இதை அவர் காதுக்குள் கிசுகிசுத்தார்; உரக்கச் சொல்லவில்லை !

Xxxx subham xxx

An Optical Illusion ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் – 2 (Post No7648)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7648

Date uploaded in London – 4 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Swami Ramathirtha’s Parables – 2

ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் – 2

ச.நாகராஜன்

ஸ்வாமி ராமதீர்த்தரின் இன்னொரு குட்டிக் கதை இது :

“ ஆப்டிகல் இல்லூஷன் (Optical Illusion)  எனப்படும் ஒளியியல் கண்மாயத்தைக் கொண்ட பல படங்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன். ஒரு படத்தில், வலது பக்கத்திலிருந்து பார்த்தால்  ஒரு அரசன் யானை மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதே படத்தை இடது பக்கத்திலிருந்து பார்த்தால் ஒரு குதிரை வீரன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். படம் ஒன்று தான்!

இன்னொரு படம் ஒரு அறையில் சுவரில் மாட்டப்பட்ட ஒன்று. அறையின் எந்தப் பக்கத்திலிருந்து அந்தப் படத்தைப் பார்த்தாலும்  அந்தப் படம் உங்களை நோக்கியே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்; நீங்கள் அறையில் எங்கு நகர்ந்தாலும் சரி, அதன் கண்கள் உங்களோடு நகர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

ஆனால் ஒரு ஆங்கில நாளிதழின் விளம்பரத்தில் “Here is the Bohemian with his family, where is the cat? – “இதோ பொஹிமியன் தன் குடும்பத்துடன் இருக்கிறார், பூனை எங்கே?” – என்ற விசித்திரமான படத்தைப் பார்த்தேன். (பொஹிமியன் என்றால் பொஹிமியா நாட்டைச் சேர்ந்தவர்)

அந்தப் படம் ஒரு சுவாரசியமான படம். சாதாரணமாக ஒரு பார்வை பார்த்தால், அந்தப் படமானது பொஹிமியனையும், அவரது மனைவி, குழந்தைகள், அவரது வயல்வெளி, கலப்பை, பாரசீகச் சக்கரம், மரங்கள், பறவைகள், விலங்குகள், மற்றும் இதர பல டஜன் பொருள்களையும் காண்பிக்கும், ஆனால் அதில் பூனை மட்டும் இருக்காது!

எவ்வளவு உன்னிப்பாக ஜாக்கிரதையாக அந்தப் படத்தைப் பார்த்தாலும் கூட அதில் உங்களால் பூனையைக் கண்டுபிடிக்கவே முடியாது.

அந்தப் படத்தைத் தூக்கிப் போடுங்கள், ஆஹா!, அந்த கான்வாஸ் முழுவதும் பூனையே நிரம்பி இருக்கும், பொஹிமியன், அவர் குடும்பம் அனைத்தும் மறைந்து விடும்!

“நான் இருந்த போது, நீ இல்லை, இப்போது, நீ இருக்கிறாய், நான் இல்லை!”

இந்தப் படம் சுக்ல யஜுர் வேதத்தின் 40வது அத்தியாயத்தில் வரும் கீழ்க்கண்ட மந்திரத்தின் பொருத்தமான விளக்கப்படமாக அமைகிறது :

“ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத் |

தேன த்யக்தேன புஞ்ஜீதா மாக்ருத: கஸ்யஸ்வித்தனம் ||”

“உலகில் உள்ள அனைத்துமே கடவுளால்  நிறைந்திருக்கிறது.   நாமங்களையும் உருவங்களையும் துறந்து விட்டு, இப்படி கடவுளை எங்கும் பார்த்து ஆனந்தத்தை அனுபவி. ஆகையால், அனைத்துமே கடவுள் அல்லது கடவுளுடையது என்னும்போது, உலக செல்வத்தின் மீது கொண்ட ஆசையிலிருந்து விலகி விடு.”

பொஹிமியன் படத்தில் உள்ள பூனையைப் போல, உலகத்தில் ஒருவன் சந்தோஷத்தைக் காணவே முடியாது.

இப்படி கஷ்டமான ஈஸாவாஸ்ய உபநிடதத்தின் முதல் ஸ்லோகத்திற்குப் புரியும் வகையில் எளிய உதாரணத்தைக் குட்டிக் கதையாகக் கூறி விளக்குகிறார் ஸ்வாமி ராமதீர்த்தர்.

இது அவரது தனிப் பாணி!

*

இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்காக மூலம் கீழே தரப்படுகிறது. படித்து மகிழ்க; உணர்க!

An Optical Illusion

I have seen and heard of many pictures containing optical illusions. In one picture, looking from the right, you see a king riding on an elephant, from the left, a groom standing with the reins of a horst in his hand. But the picture is one and the same.

Another picture is hanging in a room on the wall, you may look at it from any side of the room, you will find the picture staring at you, wherever you move, its eyes move with you.

But I read in some English newspaper the advertisement of a strange picture, entitled, “Here is the Bohemian with his family, where is the cat?”

The picture was very interesting, a casual glance disclosed the Bohemian, his wife and children, his fields and plough and Persian wheel, trees, birds and beasts and dozens of other objects but not a trace of the cat. Look at it as carefully as you may, you find no cat. You throw away the picture, and lo! The whole canvas is covered with the cat, the Bohemian, his family and the whole paraphernalia disappear.

“When I was, Thou was not, now Thou art and I am not.”

This picture is an apt illustration of the following Mantra of Chapter 40 of Shukla Yajurveda :-

isavasyam-idagm sarvam yat-kinca jagatyam jagat,
tena tyaktena bhunjitha ma grdhah kasya svid dhanam 

All in the world is coverable by God. After thus renouncing the names and forms, do enjoy the bliss by seeing God everywhere. Hence refrain from the greediness of the worldly wealth when everything is God or God’s.

One can find no happiness in the world, like the cat in the Bohemian picture.

******

பாட்டி சுட்ட வடையும், விட்ட ஏப்பமும் (Post No.7638)

Written by London swaminathan

Post No.7638

Date uploaded in London – 1 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பழமொழிக் கதைகள் 

ஒரு ஊரில் ஒரு ஏமாந்த சோணகிரி இருந்தான்; அவனைப் பார்த்ததாலேயே அசல் கூமுட்டை என்பது தெரியும். அவனைப் பார்த்தால் எருதும் கூட மச்சான் முறை கொண்டாடும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்’ என்பது பழமொழி அல்லவா?

ஒரு நாள் அவனுக்கு சூடான வடை சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது. அந்தக் கிராமத்திலோ உடுப்பி ஹோட்டல், ஐயர் மெஸ் உணவு விடுதி, சரவண பவன் எதுவும் கிடையாது. அந்த ஊரில் வடை சுட்டு விற்கும் ஒரு  கிழவி இருந்தாள் ; அவளுக்கு இப்போதெல்லாம் (Business) ‘பிஸினஸ் கொஞ்சம (Dull) டல் . ஆகையால் பண முடை ; அந்த நேரத்தில் இந்த இளிச்சவாயன் போய், பாட்டி வடை சுட்டுத் தருவாயா ? உனக்கு என்ன கூலி ? என்று கேட்டான்.

“அட மவனே! உன்னைப் பார்த்து எவனாவது கூலி கேட்பானா? 15 வடைக்கு இவ்வளவு மாவு, எண்ணை , மற்றும் தேவையான மளிகை சாமான்களைக் கொண்டுவா , அதுவே போதும்” என்றாள்.

கெட்டிக்கார துஷ்ட! அவனும் மறு நாள் காலையில் அப்படியே கொணர்ந்தான் ; அதை வாங்கிக் கொண்ட கிழப் “பாட்டி மவனே! மத்தியானம் வாடா” – என்றாள் .

அவன் நாக்கில் ஜலம் ஊற மத்தியானம் திரும்பி வந்தான் ஒரு இலையில் அவனுக்கு பாட்டி, ஒரு வடையை வைத்து “சாப்பிடடா மவனே! “ என்று சொன்னாள் .

“ஏ கிழவி! என்ன, ஒன்னு தான் இருக்கு? மீதி வடை எல்லாம் எங்கே?” என்று சத்தம் போட்டான் .

“மவனே ; உப்பு போதுமா உரைப்பு போதுமா என்று ருசி பார்க்க நான்தாண்டா மிச்சத்தை  எல்லாம் தின்னேன்”  என்று கூசாமல் மொழிந்தாள் .

“அடிப் பாவி! கிழவி! எப்படி அவ்வளவையும் சில மணி நேரத்துக்குள் சாப்பிட்டாய் ? இது என்ன அக்கிரமம் ! அநியாயம்<” என்று திட்டிக்கொண்டே இருந்தான்.

அந்தக் கிழவி. இருந்த ஒரு வடையையும் வாயில் போட்டுக்கொண்டே “இப்படித்தான்டா சாப்பிட்டேன் என் அருமை மவனே !” என்று ஏப்பம் விட்டாள் .

Xxx

ஆமைக்கு இறக்கை உண்டா ?

ஒரு ஊரில் ஒரு ராஜா ; அவனுக்கு ஒரு பெண்ணரசி பிறந்தாள் ; பேரழகி ; வயதும் வந்தது . ராஜாவும் நல்ல இளவரசனைத் தேடினார் .

அப்பா, எனக்கு புத்திசாலியாகவும் அழகாகவும் உள்ள ஆண்மகன் வந்தால்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லிவிட்டாள் . tamilandvedas.com, swamiindology.blogspot.com

செய்தி பரவியது. பலரும் வந்தனர். இளவரசி கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டனர்  ஒரு நாள் ஒரு ஆண் அழகன் வந்தான் . அட இவன் நமக்கு வாய்த்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தாள் .

அந்த நேரத்தில் பல்லி சொல் கேட்டது .

அந்த அழகன் கேட்டான் – “இது என்ன க்ளிக் க்ளிக் (Click, click) சப்தம்?

அவள் சொன்னாள் – ஓ அதுவா , வேறு ஒன்றும் இல்லை, சுவற்றில் உள்ள பல்லி போட்ட சப்தம் .

அப்படியா , உடனே போய் எனக்கு ஒரு இறக்கையை பிய்த்துக் கொண்டு வா என்றான் .

அவன் சரியான முட்டாள் பயல் என்று தெரிந்தது. போய் வா மகனே போய் வா என்று வெளியே தள்ளி கதவை சாத்தினாள்

இன்னும் கொஞ்சம் நாட்கள் உருண்டோடின . இன்னும் ஒரு ஆண்மகன் வந்தான் . நம் நேரத்தை வீண் அடிக்காமல் இந்த ஆளுக்கு முதலிலேயே டெஸ்ட் (Test)  வைத்து விடுவோம் என்று நினைத்து சம்பாஷணையைத் துவக்கினாள் .

கொஞ்ச நாளுக்கு முன்னாலே ஒரு ஆள் வந்தான். பார்க்க நல்ல அழகு . ஆனால் பல்லி சொல் கேட்டும் அவனுக்கு பழக்கமில்லை. நான் பல்லி சப்தம் அது என்று சொன்னவுடன் , அப்படியா , அதிலிருந்து ஒரு இறக்கை கொண்டு வா என்றான் முட்டாள்- என்றாள்

இதை அவள் சொல்லி முடிப்பதற்குள் புதிதாக வந்த ஆண்மகன் வெடிச் சிரிப்பு சிரித்து விட்டு , tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஓ , அந்த முட்டாள் , அதை ஆமை என்று நினைத்து விட்டான் போல இருக்கு. அதான் ரெக்கை கேட்டிருக்கான் என்று சொல்லி மேலும் சிரித்தான்.

அவளும் போய் வா மகனே !போய் வா  ! என்று பாடிக்கொண்டே அவனை வெளியே தள்ளி கதவை சாத்தினாள்.

‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழி  சரிதான் என்று முனுமுனு த்தாள் .

Xxx subham xxxx

tags ஆமைக்கு இறக்கை, பாட்டி சுட்ட வடை

வண்ணாத்தி அழுதது ஏன்? பாடகர் ஓடியது என்? (Post.7617)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7617

Date uploaded in London – 25 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி –  மூதுரை / வாக்குண்டாம்

ஒரு ஊரில் ஒரு கற்றுக்குட்டி பாடகர் இருந்தார். அவர் அறிந்ததோ குறைவு. அறியாததோ மலை அளவு. இருந்தபோதிலும் ‘குறை குடம் கூத்தாடும் நிறை குடம் தளும்பாது’ என்பதற்கு ஏற்ப ஆட்ட பாட்டம் அதிகமாக இருந்தது. நாட்டின் தலை நகருக்குச் சென்று ராஜாவுக்கு முன்னர் பாடி சன்மானம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு தலை நகருக்குப் போனார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

தினமும் சங்கீத சாஹித்யம் செய்வதற்காக அரண்மனையிலிருந்து தொலை தூரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். தினமும் பாடிப்பாடி பார்த்தார். ஆனால் இவர் ஒவ்வொரு முறை பாடும் போதும் அடுத்தவீட்டில் இருந்து அழும் குரல் ஒலித்தது. இவர் உச்ச ஸ்தாயியில் பாடினால் அழுகுரலும் உச்ச ஸ்தாயிக்குப் போனது . ஒருவாரம் இப்படியே ஓடியது.

பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா? அடுத்த வீட்டில் வசிக்கும் வண்ணான் மனைவிதான் இப்படி பிலாக்கணம் வைக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளை அழைத்துவருமாறு வீட்டுச் சொந்தக்காரனிடம் சொன்னார்.

அவளும் வந்தாள் . ஏ ! மூ ளை கெட்ட மூதேவி ! நான் பாடத் துவங்கியவுடன் ஏன் இப்படி அழுது தொலைக்கிறாய்?

உனக்கு என்ன ஆயிற்று? என்று சத்தம் போட்டார்; திட்டித் தீர்த்தார் .

அவள் சொன்னாள் , tamilandvedas.com, swamiindology.blogspot.com

“சாமி! மன்னிச்சுக்கங்க ! ஒரு மாதத்துக்கு முன்னர் நான் வளர்த்த அழகான கழுத்தை செத்துப் போச்சுங்க ! நீங்க பாட ஆரம்பிச்ச உடனே அதன் ஞாபகம் வந்துடுங்க; அதான் ஓ வென்று கதறி அழுதேன் என்றாள் .

பாடகருக்கு வெட்கம் நாக்கைப் பிடுங்கித் தின்றது . அவளை மரியாதையுடன் வெளியே அனுப்பி விட்டு ஊரைப் பார்த்து ஓடி வந்தார்.

xxx

ஆஸ்திரிய நாட்டு இசை மேதையும் சாஹித்ய கர்த்தாவுமான மோசார்ட் (Mozart) திருஞான சம்பந்தர் போல இளம் வயதிலேயே பாடல்களை எழுதியவர்; பாடியவர். அவரிடம் ஒரு பையன் வந்தான்.

“ஐயா, எப்படி ஸிம்பனி (symphony ) ஸ்வரத் தொகுப்பு) எழுதுவது என்று எனக்குச் சொல்லுங்கள் – என்றான்

“அட, நீ ரொம்பச் சின்னவன். முதலில் நாட்டுப் பாடல், கதை, பாட்டு (ballads) ஆகியவற்றை எழுதிப் பழகு” – என்றார்.

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் பத்து வயதிலேயே ஸ்வரங்களை எழுதினீர்களே!”

“அது உண்மைதான். ஆனால் ஸிம்பனி எப்படி எழுதுவது என்று நான் யாரிடமும் போய்க் கேட்கவில்லையே” – என்றார்.

கான மயிலாடக் கண்டு தானும் அதுவாகப் பாவித்த வான் கோழியின் கதை போல உள்ளது அந்தப் பையன் கதை!

Xxxx

ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம்!- Part 1(Post No.7579)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7579

Date uploaded in London – – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஆதிசங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கள்,நூல்கள் – 1

பஜகோவிந்தம்!

ச.நாகராஜன்

1971ஆம் ஆண்டிலிருந்து 1972,73,74,75,76,77,78 என்று பல ஆண்டுகள் கல்கி வார இதழில் வாரந்தோறும் காஞ்சிபெரியவாளின் (ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகள்) அருளுரைகள் வெளியாகி வந்தன. அதில் ஆதி சங்கரரின் நூல்களுக்கு அவர் அவ்வப்பொழுது அளித்து வந்த விளக்கம் பக்தர்களைப் பரவசப்படுத்தி வந்தது.

ஆதிசங்கரரின் நூல்களுக்குச் சரியான விளக்கம் அறிந்து கொள்ள விரும்புவோர் அவற்றைப் படித்தாலேயே போதும்.

இந்தப் பகுதியில் ஆதிசங்கரரின் ஸ்தோத்திரங்கள், நூல்கள் பற்றிய ஒரு அறிமுகம் மட்டும் செய்ய விழைகிறேன். (விளக்கங்களுக்கு ஜகத்குரு உள்ளிட்ட மகான்கள், அறிஞர்களின் புத்தகங்கள் ஏராளம் உள்ளன, அவற்றை வாங்கிப் படித்துப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்)

  1. பஜகோவிந்தம்

ஜகத்குரு காஞ்சி பெரியவாள்  ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிக் கூறுவது இது:

“ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள் உலகத்திலுள்ள மேதைகள் எல்லாரும் ஆச்சரியப்படும்படியாக அத்வைத பாஷ்யங்கள் செய்திருக்கிறார். ஏற்கனவேயிருந்த ‘பிரம்மசூத்திரம்’, உபநிஷத்துக்கள், பகவத்கீதை முதலியவற்றை விளக்கி அவர் எழுதியதற்கு ‘பாஷ்யம்’ என்று பெயர்.

இது தவிர, தாமே (ஒரிஜினலாக) ‘விவேக சூடாமணி’, ‘உபதேச ஸாஹஸ் ரீ’ முதலான பல அத்வைத கிரந்தங்களைச் செய்திருக்கிறார்.

பாஷ்யத்திலிருந்து வித்தியாசம் தெரிவதற்காக  அவர் சொந்தமாகச் செய்த இது போன்ற நூல்களைப் ‘பிரகரண கிரந்தங்கள்’ என்பார்கள்.”

ஆக ஜகத்குரு பாஷ்யம் மற்றும் பிரகரண கிரந்தம் என்றால் என்ன என்பதை இப்படி விளக்கியுள்ளார். ஆதி சங்கரர் பக்தர்கள் ஓதி நலம் பெறுவதற்காக ஏராளமான ஸ்தோத்திரங்களையும் இயற்றியுள்ளார்.

இவை அற்புதமான லலிதமான தேர்ந்த சம்ஸ்கிருதச் சொற்களால் இயற்றப்பட்டிருப்பதால் சொல்லும்போதே ஆனந்தமாக இருக்கிறது; பொருளை உணரும் போது மனம் பண்படுகிறது. ஆன்மா உயர்கிறது.

1. பஜகோவிந்தம்

31 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்டது பஜகோவிந்தம். வேதாந்தக் கருத்துக்களை எளிய நடையில் தரும் இது எப்படிப் பிறந்தது என்பதற்கு ஒரு சுவையான கதை உண்டு.

ஒரு நாள் ஆதி சங்கரர் தனது சீடர்களுடன் வாரணாசியில் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வயதான பண்டிதர் ஒருவர் இலக்கண சூத்திரங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதைக்  கண்டார். வயதான காலத்தில் மரணம் நெருங்கி வரும் சமயத்தில் இந்த இலக்கணம் அவரை எப்படிக் காப்பாற்றும் என்று மிகவும் இரக்கப்பட்டு  அவரைக் கடவுள் பால் மனதைச் செலுத்தும் படி அருளுரை புகன்றார்.

உடனேயே அவர் பஜகோவிந்தத்தைப் பாடியருளினார்.

இந்த ஸ்தோத்திரம் 12 ஸ்லோகங்களைக் கொண்டதாக் அமைந்தது. அதனால் இதை ‘த்வாதசமஞ்சரிகா ஸ்தோத்ரம்’ என்று சொல்வது வழக்கம்.

கூட வந்த சீடர்கள் 14 பேரும் ஆளுக்கு ஒரு ஸ்லோகத்தைப் பாடி இதில் சேர்க்கவே இதை (14 ஸ்லோகங்கள் கொண்டது என்ற அர்த்தத்தில்) ‘சதுர்தச மஞ்சரிகா ஸ்தோத்ரம்  என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இந்த இரண்டையும் தனித்தனியே பல சுவடிகளில் காண முடிகிறது. ஒவ்வொன்றிலும் இறுதியில் ஒரு ஸ்லோகம் சேர்க்கப்பட்டது.

காலப்போக்கில் இது 31ஆக வளர்ந்து இப்போதிருக்கும் உருவை அடைந்து விட்டது.

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

பஜகோவிந்தம் மூடமதே |

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே

நஹி நஹி டுக்ருஞ்கரணே ||

என்பது முதல் ஸ்லோகம்.

இதை ஏராளமானோர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளனர்.

ஸ்ரீ காமாக்ஷிதாஸர் மொழிபெயர்த்துள்ள எளிய அழகிய இனிய மொழிபெயர்ப்பை எடுத்துக்காட்டாக இங்கு காணலாம்:

கோவிந்தனைத் துதி கோவிந்தனைத் துதி

கோவிந்தனைத் துதி மடநெஞ்சே!

காலத்திற்கெதிருன் காலத்தெல்லை

கசதப காத்திடல் இல்லை இல்லை.

இதை ஆங்கிலத்தில் அறிஞர் ஸ்ரீ T.M.P. மஹாதேவன் மொழிபெயர்த்துள்ளார்.

முதல் ஸ்லோகத்திற்கு அவர் மொழிபெயர்ப்பு இது:

Adore the Lord, Adore the Lord, Adore the Lord, O, Fool!

When the appointed time (for departure) comes,

The repetition of grammatical rules will not, indeed, save you.

புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீ ஜடரே சயனம் |

இஹ சம்ஸாரே பஹுதுஸ்தாரே

க்ருபயாபாரே பாஹி முராரே || (ஸ்லோகம் 21)

பொருள் : மீளவும் பிறப்பு; மீளவும் இறப்பு, மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு

இந்த சம்சாரமானது தாண்டுவதற்கு அரிதாக இருக்கிறது. முராரீ! (முரனை சம்ஹாரம் செய்த ஹே! கிருஷ்ணா!) என் மீது கருணை கொண்டு என்னைக் காப்பாற்று!

இப்படி ஒவ்வொரு ஸ்லோகமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் இருப்பதோடு  மிக நுட்பமான அதி ரகசியமான வேதாந்தக் கருத்துக்களையும் உபதேசிப்பதாக அமைந்திருக்கிறது.

பாரத ரத்னா ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி தனது இனிய குரலில் இதைப் பாடியுள்ளார். அதைக் கேட்டவர்கள் மனம் உருகி இதில் லயிப்பர்.

பக்திக்கு ஒரு கீதம் பஜகோவிந்தம்!

  (அடுத்து தொடர்வோம்)

****

பிகாஸோ -விளையும் பயிர் முளையிலே தெரியும் (Post No.7478)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7478

Date uploaded in London – 21 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Guernica

பேராசை பெரு நஷ்டம் : மூன்று சுபாஷிதங்கள்! (Post No.7477)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7477

Date uploaded in London – 21 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

லோபம் என்னும் பேராசை மனிதனை வீழ்த்தி விடும் ஒரு அபாயகரமான விஷயம்.

அதிலோபோ ந கர்தவ்ய: கர்தவ்யஸ்து ப்ரமாணத: |

அதிலோபஜதோஷேண ஜம்புகோ நிதனம் பத: ||

ஒருவன் பேராசைப் படக் கூடாது. ஆசை என்பது ஒரு அளவோடு இருக்க வேண்டும்.  பேராசையினால் ஒரு நரி மரணம் அடைந்தது!

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு : (By A.R.R.)

One should not be excessively greedy; but desire should be exercised in moderation. A fox met with his death due to the fault of excessive greed.

பஞ்சதந்திரக் கதையில் வரும் நரியின் பேராசையும் அதனால் அது மரணம் அடைந்ததும் அனைவரும் அறிந்ததே!

அதிலோபோ ந கர்தவ்யோ லோபம் நைவ பரித்யஜேத் |

அதிலோபாபிபூதஸ்ய சக்ரம் ப்ரமதி மஸ்தகே ||

பேராசைப் படாதே. பேராசைப் பட்ட ஒருவன் தன் தலையில் சக்கரம் சுழல்வதைக் கண்டான்.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு : (By A.W.Ryder)

Indulge in no excessive greed

A little help in time of need

A greedy fellow in the world

Found on his head a wheel that whirld.

இன்னொரு சுபாஷிதம்:

அதிலௌத்யப்ரஸக்தானாம் விபத்தினைவ தூரத: |

ஜீவம் நஷ்யதி லோபேன மீனஸ்யாமிஷதர்ஷனே ||

பேராசைப்படுபவர்களுக்கு அபாயம் வெகு தூரத்தில் இல்லை. ஒரு மாமிசத் துண்டிற்காக மீன் தனது உயிரை இழக்கிறது.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு :

For those who are exceptionally greedy, danger is not far off. The fish loses its life by its greed for the piece of flesh  (in the angler’s hook).

நாலடியாரில் வரும் பாடல் இது:

மெய்வாய்கண் மூக்குச் செவியெஅனப் பேர்பெற்ற

வைவாய வேட்கை யவாவினைக் – கைவாய்க்

கலங்காமற் காத்துய்க்கு மாற்ற லுடையான்

விலங்காது வீடு பெறும் (பாடல் 59)

அருஞ்சொற்பொருள் :

வேட்கை – பொருள்களின் மேல் தோன்றும் பற்றுள்ளம்

அவா – அப்பொருள்களைப் பெற வேண்டுமென்று மேன்மேல் நிகழும் ஆசை (மனத்தால் வரும் ஆசை என்றும் கொள்ளலாம்)

ஐவாய வேட்கை – ஐம்புலன் ஆசை

மெய், வாய், கண், மூக்கு, செவி என்று பெயர் பெற்ற ஐந்து புலன்களால் பொருள்களின் மேல் தோன்றும் பற்றை கைக்கொள்ளாமல் காக்கும் ஆற்றல் உடையவன் தவறாமல் முக்தி அடைவான்.

ஏராளமான தமிழ்ப் பாடல்களும் பழமொழிகளும் பேராசை பெரு நஷ்டம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

***

tags பேராசை, பெரு நஷ்டம்,  சுபாஷிதங்கள்

அதிர்ஷ்டம் பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.7392)

Written by london Swaminathan

Date – 28th December 2019

Post No.7392

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ஜனவரி 2020 காலண்டர்

மார்கழி மதம், விகாரி வருஷம்

சுபமுகூர்த்த தினங்கள் – ஜனவரி 20, 27, 30

முக்கிய பண்டிகைகள் – ஜனவரி 1 புத்தாண்டு தினம்;  6 வைகுண்ட ஏகாதஸி ; 10 ஆருத்ரா தரிசனம்; 14 போகிப்பண்டிகை; 15 தைப்பொங்கல்; 16 கனு, மட்டுப் பொங்கல்; 16 திருவள்ளுவர் தினம் ; 17 உழவர் திருநாள்; 24 தை  அமாவாசை; 26 குடியரசு தினம்.

அமாவாசை – 24; பவுர்ணமி -10, ஏகாதசி – 6, 20/21

ஜனவரி 1 புதன் கிழமை

KR – KAHAVATRATNAKAR; AM – AVI MARAKA DRAMA OF BHASA

RM – RAMAYANA MANJARI; BM – BHARATA MANJARI

RT – RAJA TARANGINI OF KALHANA; SVD -SVAPNAVASAVADATA OF BHASA

SP- SARNGADHARAPADDATHI; KSS – KATHA SARIT SAGARA

அநாயாசம் அம்ருதம் பத கசிய ந ரோசதே –பி எம்

வேலையே செய்யாமல் அமிர்தம் கிடைத்தால் யார் வேண்டாமென்று சொல்லுவார்

X

 ஜனவரி  2 வியாழக் கிழமை

அநித்யபதநோச்ராயாஹா  விசித்ரா பாக்யவ் ருத்தயஹ — ஆர் டி 5-262

மேடும் பள்ளமும் கொண்ட விதியின் விளையாட்டு விநோதமானதே

x

ஜனவரி  3 வெள்ளிக் கிழமை

அதிருட்டத்திற்கு அறிவில்லை – தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  4 சனிக் கிழமை

அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் ஒருவர் பங்கல்ல– தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  5 ஞாயிற்றுக் கிழமை

அனுகூலே யதா தைவே க்ரியா ல்பா சுபலா பவேத் – சம்ஸ்க்ருத பழமொழி

இறைவன் அருள் இருந்தால் தினை அளவு முயற்சியும் பனை அளவு பலன் தரும்

x

ஜனவரி 6 திங்கட் கிழமை

அனுபத் னாதி பவ்யானாம்  உதயே அப்யுதயாந்தரம் — ஆர் டி 8-2275

அதிர்ஷ்டம் கண் பட்டால் அலைபுரண்டு வரும் செல்வங்கள்

x

ஜனவரி  7 செவ்வாய்க் கிழமை

அபவ்யாஹா ப்ராப்தமப்யர்த்தம் நைவ ஜானாதி ரக்ஷிதம் – கதா சரித சாகரம்

கிடைத்த செல்வத்தையும் பாதுகாக்க வழிதெரியாது துரதிருஷ்ட சாலிகளுக்கு

x

ஜனவரி 8 புதன் கிழமை

அபீஷ்டம் லப்யதே தைவாத்யக்தம் ந புனரேதி தத் –ஆர் எம்

நம் ஆசைகளைப் பூர்த்தி செய்வது அதிர்ஷ்டம்; ஒருமுறை புறக்கணித்தால் மீண்டும் வராது .

x

ஜனவரி  9 வியாழக் கிழமை

ஆயாசபாஜனோ நிதியம் பாக்யஹீ னா னுகோ ஜனஹ — பி எம்

துரதிருஷ்டசாலிகளைப் பின்பற்றுவோருக்கு எப்போதும் கஷ்டம்தான்

x

ஜனவரி  10 வெள்ளிக் கிழமை

சக்ராபங்த்திரீவ  கச்சதி பாக்ய பங்த்திஹி  –எஸ் வி டீ

அதிர்ஷம் என்பது சக்கரம் போல சுழலும்

x

ஜனவரி  11 சனிக் கிழமை

அதிருட்டமுள்ளவன்  அலைகடலிலும் அமிழான் — தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  12 ஞாயிற்றுக் கிழமை

அதிருட்டம் ஆறாய் பெருகுகிறது —- தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி 13 திங்கட் கிழமை

பாக்யா னாம் உதயே விசந்தி சதசோ த்வா ரைர்ன  கைஹி ஸ ம்பதஹ – ஆர் டி

அதிர்ஷ்டம் உச்ச நிலையில் இருக்கும்போது பல வாசல்கள் வழியாக நூறு மடங்கு செல்வங்கள் வரமாட்டாதா ?

x

ஜனவரி  14 செவ்வாய்க் கிழமை

ரக்ஷந்தி பாவிகல்யாணம் பாக்யான்யேவ — கதா…………

அதிர்ஷ்டமே மேலும் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும்

x

ஜனவரி 15 புதன் கிழமை

அதிருட்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  16 வியாழக் கிழமை

ரூபேண ஹீனஹ  பிரபலஸ்ச பாக்யாத் – கே ஆர்

ஆள் அவலட்சணம்தான் ; அதிர்ஷ்டம் அவனுக்கு அள்ளித்தருகிறது

x

ஜனவரி  17 வெள்ளிக் கிழமை

பவந்த்யுதய காலே ஹி சத் கல்யாண பரம்பராஹா – கதா ………………….

அதிர்ஷ்டம் வந்தால் நல்லவை மலை போல பெருகும்

x

ஜனவரி  18 சனிக் கிழமை

நல்லவை எல்லா அவாந்  தீயவாம்  தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு – குறள் 375

விதி நன்றாக இருந்தால் கெட்டதும் நல்லதாகிவிடும் ; அதிர்ஷ்டம் இல்லையானால் நல்லதும் கெட்டுப்போகும்

x

ஜனவரி  19 ஞாயிற்றுக் கிழமை

பாக்யவந்தம் ப்ரஸு ஏ தாஹா மா சூ ரம் மா ச பண்டிதம் — எஸ் பி

வீரனும் வேண்டாம், அறிவாளியும் வேண்டாம், உனக்கு அதிர்ஷ்டசாலி கிடைப்பானாக

x

ஜனவரி 20 திங்கட் கிழமை

பாக்யம் ப்ரபூணாம் பலவத்தரம் ஹி – கே ஆர்

பலமுள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்தால் மேலும் சக்தி கிடைக்கும்

x

ஜனவரி  21 செவ்வாய்க் கிழமை

பாக்யம் பலதி  சர்வத்ர ந வித்யா ந ச பவ் ருஷம் — கே ஆர்

கல்வியும் இல்லை, வீரமும் இல்லை, அதிர்ஷ்டமே பலன் தரும்

x

ஜனவரி 22 புதன் கிழமை

பாக்ய க்ரமேண ஹாய் தனானி வாந்தி யாந்தி — எம் கே 1-13

செல்வம் வருவதும் போவதும் அதிர்ஷ்டத்தைப் பொருத்தே

X

ஜனவரி  23 வியாழக் கிழமை

அதிருட்டம் இல்லாதவனுக்கு கலப் பால் வந்தாலும் அதையும் பூனை குடிக்கும் — தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  24 வெள்ளிக் கிழமை

குதிரை ஏற யோகமிருந்தால் கொண்டேற வேண்டுமா ? தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  25 சனிக் கிழமை

அதிருட்டம் கெட்டதுக்கு அறுபது நாழியும் தியாஜ்ஜியம் தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  26 ஞாயிற்றுக் கிழமை

அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு குதிரை கு …….க்குக் கீழே தானே வந்து நிற்கும் — தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி 27 திங்கட் கிழமை

பிரயோ கச்சதி யத்ர பாக்யரஹிதஹ தத்ரைவ யந்த்யா பதஹ– நீதி சாஸ்திரம் 84

து ரதிருஷ்டசாலிகளைத் துன்பங்கள் தொடரும்

x

ஜனவரி  28 செவ்வாய்க் கிழமை

சவுபாக்கியேன வைத்யானாம் ரோகர்த்தோ ஜாயதே ந்ருபஹ — கே ஆர்

அரசனுக்கு வியாதி; வைத்தியர்களுக்கு அதிர்ஷ்டம்

X

ஜனவரி 29 புதன் கிழமை

Arudra darsan from Lalgudi Veda

ஹஸ்தி ஹஸ்த சஞ்சலானி  புருஷ பாக்யானி வாந்தி – ஏ எம்

யானையின் தும்பிக்கை போன்றது .

X

ஜனவரி  30 வியாழக் கிழமை

ஹே பூஷன், எல்லாவித அதிர்ஷ்டங்களையும் கொண்டுவருவாயாக .தங்க வாள்

ஏந்தியவனே , செல்வங்கள் அனைத்தும் எங்களுக்கு எளிதில் கிடைக்கட்டும் -ரிக்வேதம் 1-42

X

ஜனவரி  31 வெள்ளிக் கிழமை

மணமகளே, உன் கணவர் வீட்டுக்குள் வருவாயாக, அங்குள்ள மக்களுக்கும் பிராணிகளுக்கும் அதிர்ஷ்டத்தைத் தருவாயாக –  ரிக் வேதம் 10-85-44

X

எண்.12ன் சிறப்போ சிறப்பு! (Post No.7319)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 9 DECEMBER 2019

 Time in London – 13-41

Post No. 7319

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

to be continued………………….

–subham–