பூமிக்குள் நெருப்பு – வேதம் சொல்லும் அதிசய விஞ்ஞானம் (Post No.10,547)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,547

Date uploaded in London – –    10 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 8

அதர்வண வேதம் (அ .வே.) சொல்லும் அற்புத அறிவியல் செய்திகளைத் தொடர்ந்து காண்போம் .

சென்ற கட்டுரையில் ‘முனிவர்களா விஞ்ஞானிகளா ?’ என்ற தலைப்பில் பூமியின் வேகம் பற்றி கண்டோம். இன்று பிரபஞ்சம் முழுதும் உள்ள தீ (fire) பற்றி முனிவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்பதை ஆராய்வோம்.

பூமிக்கு நடுவில் சுமார் 4000 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் இரும்பும் நிக்கலும் கொதித்துக் கொண்டு இருக்கிறது.

சுனாமி TSUNAMI என்னும் ராட்சதப் பேரலைகள் தீயை உண்டாக்குகிறது. அதாவது கடல் நீரில் தீ மிதந்து வருகிறது.

ஹவாய் (SUBMARINE VOLCANOES IN HAWAI island) முதலிய இடங்களில் கடலுக்கு அடியில் எரிமலைகள் தீயைக் கக்கிய வண்ணம் உள்ளன.

கடலில் தோன்றும் வட முகாக்கினி (Horse shaped Vadamukhagni) , ஆந்திரப் புயலின்போது பிரம்மாண்டமான கடல் அலையில் தோன்றிய தீ (Fire  on top of Giant Waves in 1977 storm), மற்றும் கடலுக்கு அடியில் உள்ள சக்ரவாள மலைகள்  (submarine mountains around the world called Chakravala in Sanskrit) பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கே கட்டுரைகளை எழுதியுள்ளேன். புராணம் சொல்லும் விஷயங்களை எப்படித் தமிழர்களும் பாடல்களில் யாத்தனர் என்பதையும் இயம்பினேன்.

தீ கக்கும் எரிமலையே இல்லாத இந்தியாவில் வாழ்ந்த அ .வே. புலவன் பாடிய 19, 20 (HYMN TO EARTH- BHUMI SUKTAM) மந்திரங்களை முதலில் படியுங்கள்.

மந்திரம் 19 (AV Book 12; Bhumi Suktam; Hymn to Earth)

அக்னிர் பூம்யா மோஷதீஷ்வக்னிமாபோ பிப்ரத்யக்னி ரஸ்மஸு

அக்னிரந்த புருஷேஷு  கோ ஷ்வஸ்வே ஷ்வக்னயஹ —19

பொருள்

பூமிக்குள்தீ இருக்கிறது

தாவரங்களிலும் உளது ,

நீரும் அதை ஏந்திச் செல்கிறது;

கல்லில் தீ உளது .

மனிதர்களின் உடலின் உள்ளே அக்னி உண்டு.

மாடுகளில் தீ, குதிரைகளிலும் தீ இருக்கிறது – 19

XXXXXX

மந்திரம் 20

அக்னிர் திவ ஆ தபத்யக்னேர் தேவஸ் யோர்வ  அந்தரிக்ஷம்

அக்னிம் மதார்ஸ இந்ததே ஹவ்யவாஹம் தூதப்ரியம்  -20

பொருள்

அதே தீதான்  வானத்தில் எரிகிறது

இடைவெளியும் இந்த தெய்வீக அக்னியுடையதே .

மனிதர்கள் அவி கொடுப்பதற்காக தீ வளர்க்கிறார்கள்

உருகிய நெய் விரும்பும் அவி சுமக்கும் தூதன் அவன் (20)

XXX

எனது வியாக்கியானம் – கருத்துரை

வேதங்களை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்த வெள்ளைக்காரர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவ வெறியர்கள். அவர்கள் உலகம் என்பதும் மனித இனம் என்பதும் கி.மு.4100ல் தோன்றியதாக நம்பினார்கள். இந்து மதத்தைக் குறை கூறி மொழி பெயர்த்த அவர்கள் வேறு எந்த மதத்துக்கும் எதிராக ஒரு சொல் கூட எழுதவில்லை.அக்காலத்தில் இப்போதுள்ள அளவுக்கு அறிவியல் முன்னேற்றமும் இல்லை . ஆகையால் இந்த மந்திரங்களுக்கு மேம்போக்கான மொழி பெயர்ப்பு செய்தனரேயன்றி இதிலுள்ள விஞ்ஞான உண்மைகள் , அவர்களுக்குப் புலப்படவுமில்லை. இந்துக்களுக்கோ கடலுக்கடியில் தீ, கடலுக்குள் மலைகள், வானத்தில் தீ, உடலுக்குள் ஜடராக்கினி , பிரம்மாவின் ஒரு நாளே கோடிக்கணக்கான ஆண்டுகள் என்பதெல்லாம் அத்துபடி . சின்னக் குழந்தைக்கும் தெரிந்த உண்மை.

பூமிக்குள் நெருப்பு இருக்கிறது என்பது மிகவும் ஆழமான விஷயம். 4000 மைல் தோண்டினால்தான் பூமியின் மையத்தை அடையலாம். ஆனால் பூமியை 100 மைல் கூட தோண்ட முடியாது. அவ்வளவு வெப்பம்; கருவிகளை உருக்கிவிடும். மையத்திலோ 3700 டிகிரி வெப்பத்தில் நிக்கல், இரும்பு (Nickel and Iron in solid state due to pressure) ஆகிய உலோகங்கள் இருக்கின்றன. அதிக அழுத்தம் காரணமாக் கொதிக்காமல் கெட்டியாக நிற்கின்றன. 

நமது உடலில் உள்ள வெப்பம் 37 டிகிரி. நாம் சவம் ஆகிவிட்டால் உடல் ஐஸ்கட்டி போல இருக்கும். குதிரை, மாடு போன்றவற்றுக்கும் இந்த வெப்பம் தேவை.தாவரங்களில் சூரிய ஒளி மூலமே ஒளிச் சேர்க்கை ஏற்படுகிறது இதெல்லாம் இன்று நாம் அறிந்த விஞ்ஞானம்.

ஆதி மனிதன் கல்லையும் மரக்கட்டைகளையும் உரசி தீ எழுப்பினான். இந்த சாதாரண விஷயத்தை மறந்து , ஆழமாகச் சென்றால், ‘நீரில் தீ’ என்பதற்கெல்லாம் விளக்கம் கிடைக்கும்

சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகளில் தீ வருகிறது. அவை மின்சாரத்தையும் உண்டாக்குகிறது என்பதெல்லாம் 1977ம் ஆண்டு ஏற்பட்ட புயல் தாக்குதலுக்குப் பிறகு விரிவாக பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டது. சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகள் தீயை உண்டாக்கக் காரணம் கடலுக்கு அடியில் செல்லும் பெட் ரொலியக் குழாய்களின் வெடிப்பினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆயினும் இப்படிக் குழாய்களே இல்லாத இடத்திலும் அக்கினியைக் கண்டுள்ளனர். கடலுக்கு அடியில் தேங்கிக் கிடக்கும் மீத்தேன் (methane ) என்னும் வாயுவை கொண்டுவருதலால் , அது தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்ற விளக்கமும்  அளிக்கப்படுகிறது . அறிவியல்  தெரியாத வேத மொழி பெயர்ப்பாளர் இதை ‘மின்னல் ஒளி’ என்று எழுதிவைத்தனர். உண்மையில் வேதங்கள் சொல்லுவது விஞ்ஞான விஷயமே.

நீரானது பிரம்மாண்டமான மின்சார சக்தியில் ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் கூடப் பிரிந்து ஆக்சிஜன் எரிந்திருக்கலாம் . எதிர்கால ஆராய்ச்சி இதை முடிவு செய்யும்.

உயிருள்ள மனிதர்கள், பிராணிகள் எல்லாம் வெப்ப ரத்தப் பிராணிகள் . நம் உடலுக்குள் நடக்கும் ரசாயனக் கிரியைகளால் உடலில் எப்போதும் வெப்பம் உண்டு.

XXXX

இருபதாவது  மந்திரம், யாக, யக்ஞங்கள் பற்றிப் பேசுகிறது . யாகத்தினால்தான் மழை உண்டாகிறது. அதனால் விளைச்சல் மூலம் உணவு உண்டாகிறது. அதுவே மனிதர்கள், பிராணிகளுக்கு எல்லாம் உயிர் கொடுத்து, இனம்பெருக்கிவிட்டு, மறைந்து, மண்ணாகி விடுகின்றது. இந்த இயற்கைச்  சுழற்சியை பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் அழகாக வருணிக்கிறார். இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த விவசாயிகளான  வேத கால இந்துக்கள் அவைகளை அனுதினமும் இறைவனின் வெளிப்பாடாகவே போற்றி வணங்கினர் ; இதோ பகவத் கீதை ஸ்லோகம் :-

பகவத் கீதை 3-14

அன்னாத் பவந்தி பூதானி பர்ஜந்யாத்தன்ன ஸ ம்பவஹ

யக்ஞாத்  பவதி பர்ஜன்யோ யக்ஞ கர்ம ஸமுத் பவஹ – 3-14

பிராணிகள் அன்னத்தில்/ உணவு  இருந்து உண்டாகின்றன ;

உணவு  மழையில் இருந்து உண்டாகின்றது.;

மழை  வேள்வியில்  இருந்து உண்டாகின்றது.;

வேள்வி  உழைப்பில்/ கர்மத்தில்   இருந்து உண்டாகின்றது.;

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: |
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञ: कर्मसमुद्भव: || 14||

annād bhavanti bhūtāni parjanyād anna-sambhavaḥ
yajñād bhavati parjanyo yajñaḥ karma-samudbhavaḥ

annāt—from food; bhavanti—subsist; bhūtāni—living beings; parjanyāt—from rains; anna—of food grains; sambhavaḥ—production; yajñāt—from the performance of sacrifice; bhavati—becomes possible; parjanyaḥ—rain; yajñaḥ—performance of sacrifice; karma—prescribed duties; samudbhavaḥ—born of

ஊழித் தீ | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஊ…

20 Sept 2012 — கடலில் தோன்றும் மர்மத் தீ-1 … சுனாமி போல ராட்சத அலைகள் புகுந்ததில் ஆந்திரக் …

TO BE CONTINUED…………………………………..

tags- பூமி, நெருப்பு, தீ, அக்கினி , நீரில் , சுனாமி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: