IF YOU DONT SEE THE PICTURES , PLEASE GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,697
Date uploaded in London – – 27 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சப்த ரிஷிக்கள் மூலம் மனித இனம் உருவானதாக பகவத் கீதையின் பத்தாவது அத்தியாயத்தில், கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். மனித இனம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் மனித இனத்திற்கு முன் மாதிரி, 7 வகைககள் என்று காட்டின. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலான அஷ்டாத்யாயி நூலும் சப்த ரிஷிக்களின் பெயரை அடுக்குகிறது .அதிசயம் என்னவென்றால் தமிழ் பிராமணர்கள் இன்றும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் அதே வரிசையில் ரிஷிகளின் பெயர்களை அடுக்குகின்றனர். அதாவது அத்ரி, ப்ருகு , குத்ச , வசிஷ்ட, கௌதம, காஷ்யப, ஆங்கீரஸ ரிஷிகளின் பெயர்களை சொல்லுகின்றனர்.
Xxx
இதோ பகவத் கீதை ஸ்லோகம்:–
महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥१०- ६॥
மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா² |
மத்³பா⁴வா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: || 10- 6||
லோகே இமா: ப்ரஜா: = உலகில் இந்த பிரஜைகள் அனைவரும்
யேஷாம் ஜாதா = எவரிடம் இருந்து உண்டானார்களோ அந்த
ஸப்த மஹர்ஷய: பூர்வே = சப்த ரிஷிகளுக்கும் முந்தையவர்களான
சத்வார: ததா² = சனகர் முதலான நான்கு முனிவர்களுக்கும் அவ்வாறே.
மநவ: மாநஸா: மத்³பா⁴வா ஜாதா: = மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர்
முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்.
xxxx
இந்த ஏழு ரிஷிகள் பற்றிய விளக்கத்தில் 7 பண்புகள் விவரிக்கப்படுகின்றன.
1.நீண்ட ஆயுள்.
2.மந்திரங்களைக் காணும் சக்தி
3.ஈசுவரத் தன்மை
4.தெய்வீகப் பார்வை
5.குணத்தாலும் வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தை பிரத்தியட்சமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லட்சணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.
இவர்களில் முக்கியமான ஏழு ரிஷிகளே சப்த ரிஷிகள்.
(பகவத் கீதைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அண்ணா அவர்கள் எழுதிய உரையில் 7 லட்சணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .)
ஒவ்வொரு மந்வந்தரத்திலும் இவர்கள் மாறுவர்.இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரமான ஸ்வயம்புவ மந்வந்தரத்தில் தோன்றிய ஸப்த மஹரிஷிகளே இங்கு முக்கியமானவர்களாகக் கூறப்பட்டவர்கள்.
மரீசி, அங்கிரஸ் , அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது , வசிஷ்டர் என்னும் எழுவர்.
இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்திரத்துக்குரிய ரிஷிக்கள் —
அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, பரத்வாஜர், கௌதமர், காசியபர் .
சிலரிஷிகளின் பெயர்கள் அந்த கோத்திரத்த்தில் வந்த வேறு ஒரு ரிஷியின் பெயரால் குறிக்கப்படும்.
சில புஸ்தகங்களில் அகஸ்திய மகரிஷியை எட்டாவது ரிஷியாக சேர்த்து இருப்பர்.
xxx
கல்யாணம் நடந்த முதல் நாள் இரவில் அருந்ததி பார்த்தலென்னும் நிகழ்ச்சியில் இடம்பெறுவது வடக்கு வானத்தில் பளிச் என்று தெரியும் சப்த ரிஷி மண்டலத்தின் மூலமே நடைபெறும். பட்டம் பறப்பது போல காணப்பாடும் இந்த நட்சத்திரக் கூட்டத்தில் வால் பகுதியில் உள்ள 3 நடசத்திரங்களில் கடைசி நடசத்திரத்துக்கு முந்தையது வசிஷ்ட நட்சத்திரம். இது ஒரு இரட்டை நட்சத்திரம்.
அருந்ததியும் வசிட்டரும் ஒன்றோடொன்று சுற்றும் இரட்டை நட்சத்திங்கள், “அருந்ததி காட்டல்” நிகழ்ச்சியில் இடம்பெறும். இது ஒன்றை ஒன்று மறைத்து சுற்றுவதால் இதை அராபியர்கள் அல்கால்/ பேய் (ALCOL) என்று பெயர் இட்டனர். அதே சொல்லை — அலகை = பேய் என்னும் பொருளில் வள்ளுவரும் திருக்குறளில் பயன்ப டுத்துவதை முன்னரே எழுதியுள்ளேன்.
கடைசியாக வரும் அதிசயச் செய்தி கரடி – ரிஷி ஆன கதையாகும். நாம் 7 ரிஷி என்று அழைப்பதை, கிரேக்கர்கள்/ யவனர்கள் ஒரு கரடியின் உருவமாக கண்டனர். அதனால் இதற்கு பெருங்கரடிக் கூட்டம் என்று பெயர் வைத்தனர் ; ரிக் வேதத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு இடத்தில் இதை ‘ரிக்ஷா’ (கரடி) என்று குறிப்பிட்டனர் பின்னர் 7 ரிஷிகளின் பெயரில் அழைத்தனர். கிரேக்க மொழியில் மட்டும் கரடி என்றே அழைத்தனர். இந்துக்கள் சொன்ன ரிஷி – ரிக் ஷா குழப்பத்தினால் ரிஷி, கரடி ஆனாரா என்பது பற்றி அறிய நீண்ட ஆராய்ச்சி தேவைப்படும்
Xxx subham xx
tags- கீதை, சுவையான சொற்கள், 7 ரிஷிகள்; சப்த ரிஷிகள்,