கரந்துறைப் பாட்டு – 1 (Post No.10,764)

PICTURE OF PAMBAN SWAMIKAL CHITRA KAVI FROM ANOTHER BLOG

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,764
Date uploaded in London – – 21 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!
கரந்துறைப் பாட்டு – 1

ச.நாகராஜன்

கரந்துறைப் பாட்டு என்பது சித்திர கவியில் ஒரு வகையாகும்.

ஒரு செய்யுளுக்குள் இன்னொரு செய்யுள் மறைந்திருக்கும் படி
ஒரு பாடலை அமைப்பது கரந்துறைப் பாட்டு ஆகும்.

குறிப்பிட்ட செய்யுளில் இன்னொரு செய்யுளைத் தேடிக் கண்டு பிடிப்பது என்பது ஒரு கடினமான காரியம்.

என்றாலும் இயற்றியவர் அதைச் சொல்லி விட்டாலோ, அல்லது நன்கு கற்றறிந்த ஒரு தமிழ்ப் புலவர் கரந்து உறையும் பாடல் எது என்று சொல்லி விட்டாலோ நமக்கு மகிழ்ச்சி தான்.

உதாரணத்திற்கு தண்டியலங்காரம் தரும் கரந்துறைப் பாடல் இது:

நேரிசை வெண்பா
அகலல்குற் றேரே யதர மமுதம்
பகர்தற் கரிதிடையும் பார்க்கின் – முகமதிய
முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல
மைத் தடங்கண் வெவ்வேறு வாள்

பாடல் ஒரு பேரழகியைப் பற்றியது.

அவளது அல்குல் (ஜனன உறுப்பு) தேர் போன்றது.
அதரம் அதாவது வாய் இதழ் அமுதம் போன்றது.
சொல்லவே முடியாத அரிய இடையை உடையவள் அவள்.
பார்த்தால் முகம் சந்திரனைப் போல இருக்கும்.
அவள் (முறுவல்) பற்களோ முத்துப் போல இருக்கும்.
மை தடவிய அவளது கரிய கண்கள் நீலோற்பல மலரை ஒக்கும்.
அக்கண்களோ வெவ்வேறு வாள் போலக் கூர்மையாகத் திகழும்.

சரி, இந்த அழகியைப் பற்றிய பாடலில் கரந்து உள்ள அதாவது ஒளிந்து இருக்கும் பாடல் என்ன?

அது தான் வள்ளுவரின் திருக்குறளில் வரும் முதல் குறளாகும்.

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு

இதைக் கண்டுபிடிப்பது எளிது.
என்றாலும் மேலே உள்ள செய்யுளில் கரந்து உறையும் திருக்குறளைக் காண குறள் எழுத்துக்கள் மட்டும் சற்று தடித்த எழுத்துக்களில், சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கிறது, கீழே :

அகலல்குற் றேரே யதர மமுதம்
பகர்தற் கரிதிடையும் பார்க்கின் – முகமதிய
முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல
மைத் தடங்கண் வெவ்வேறு வாள்

குறளில் உள்ள எழுத்துக்கள் 25.
அந்த 25 எழுத்துக்களையும் மேலே உள்ள பாடலில் தடித்த எழுத்துக்களாக சிவப்பு வண்ணத்தில் காணலாம்.

இது இப்படி இருக்க இதைப் பற்றிய இன்னொரு விளக்கமும் உண்டு.
அதை அடுத்துப் பார்ப்போம்.


tags– கரந்துறைப் பாட்டு – 1

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: