Post No. 11,187
Date uploaded in London – – 12 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில் – 2
பால் எர்டோஸின் தனி அகராதி!
ச.நாகராஜ
ஹங்கேரிய கணித மேதையான பால் எர்டோஸ் ஒரு நகைச்சுவை விஞ்ஞானி. (தோற்றம் 26-3-1913- மறைவு : 20-9-1996)
அவர் தனக்கென ஒரு விசேஷ அகராதியைக் கொண்டிருந்தார்.
அது இது தான்:
மிகப்பெரிய பாஸிஸவாதி என்றால் கடவுள் என்று பொருள்!
Supreme Fascist = God (Also abbreviated as SF)
‘நேரடியாகப் புத்தகத்திலிருந்து’ என்று சொன்னால் அழகான அற்புதமான நிரூபணம் என்று பொருள்!
straight from the book = beautiful, elegant proof
பாஸ் என்றால் பெண்மணி என்று பொருள்
boss = woman
அடிமை என்றால் ஆண் என்று பொருள்
slave = man
‘அவன் பிடிபட்டு விட்டான்’ என்றால் அவன் திருமணம் செய்து கொண்டவன் என்று பொருள்.
captured = married
‘அவன் விடுதலையானவன்’ என்றால் அவன் டைவர்ஸ் செய்தவன் என்று பொருள்
liberated = divorced
‘அவன் மறுபடியும் பிடிபட்டவன்’ என்றால் அவன் மறுபடியும் திருமணம் செய்து கொண்டவன் என்று பொருள்
recaptured = remarried
எப்ஸிலான் (கணித குறியேடுகளில் ஒன்று) என்றால் குழந்தை என்று பொருள்
epsilon = child (for the mathematical symbol)
= a little
உபதேசிப்பது என்றால் கணிதம் பற்றிய சொற்பொழிவு ஆற்றுவது என்று பொருள்
to preach = to give a math lecture
உயிருடன் இருப்பது என்றால் கணிதம் போடுவது என்று பொருள்
to exist = to do math
இறப்பது என்றால் கணிதம் போடுவதை நிறுத்துவது என்று பொருள்
to die = to stop doing math
சின்னப் பயல் என்றால் கணிதம் போடாதவன் என்று பொருள்
trivial being = Someone who does not do math
போவது என்றால் இறப்பது என்று அர்த்தம்
to leave = to die
வருவது என்றால் பிறப்பது என்று அர்த்தம்
to arrive = to be born
ஜோ என்றால் ரஷிய ஜோஸப் ஸ்டாலின் என்று அர்த்தம்
Joe = USSR (for Joseph Stalin)
சாம் என்றால் அமெரிக்காவில் குறிப்பிடப்படும் அங்கிள் சாம் என்று பொருள்
Sam = USA (for Uncle Sam)
சாம் அண்ட் ஜோ என்றால் உலக செய்திகள் என்று பொருள்
Sam and Joe show= International news
நெட் என்றால் ஆஸ்திரேலியா என்று அர்த்தம். (நெட் கெல்லி 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான கொள்ளைக்காரன்)
Ned = Australia (for Ned Kelly, a famous Australian
bandit from the 19th century)
நீண்ட அலைவரிசை என்றால் சிவப்பு கம்யூனிஸ்ட் என்று பொருள்
On the long wavelength = communist (for red)
குறுகிய அலை வரிசை என்றால் பாஸிஸவாதி – கம்யூனிஸ்டுக்கு எதிராளி என்று பொருள்
On the short wavelength = fascist (opposite of red)
சத்தம் என்றால் இசை என்று அர்த்தம்
noise = music
விஷம் என்றால் மது என்று அர்த்தம்
poison = alcohol
எனது மூளை திறந்த ஒன்று என்றால் நான் கணிதம் போடத் தயார் என்று பொருள்
my brain is open = I am ready to do mathematics
அவருடன் பழகிய அனைவருக்கும் இந்த அகராதி வார்த்தைகள் அத்துபடி!
இவரது நகைச்சுவை தனி ரகம்; அதை அனைவரும் வெகுவாக ரசித்தனர்!
இவரைப் பற்றிய ஏராளமான சுவையான செய்திகள் உண்டு.
அதில் ஒன்று : இவரிடம் ஒருவரின் வயதைச் சொன்னால் அதில் உள்ள விநாடிகள் எத்தனை என்பதை கன கச்சிதமாக சொல்லி விடுவாராம்.
இந்தத் திறமை இளவயது முதலே அவரிடம் இருந்தது!
***
புத்தக அறிமுகம் – 26
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!
பொருளடக்கம்
1. அதிசய புருஷர் ஸ்வாமி விவேகானந்தர்!
2. கிருஷ்ணார்ஜுனர்: பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார ரகசியம்!
3. பெரிய மரங்கள் இருந்தால் சிறிய மரங்கள் வளராது: ஸ்வாமிஜி!
4. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (1)
5. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (2)
6. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (3)
7. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (4)
8. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (5)
9. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (6)
10. பெல்காமில் ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 1
11. பெல்காமில் ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 2
12. ஸ்வாமி விவேகானந்தர்: ‘நான் இந்தியாவின் திரண்ட வடிவமே’!
13. ஸ்வாமி விவேகானந்தரும் அக்பர் சமாதியும்!
14. ஸ்வாமி விவேகானந்தரும் நெப்போலியனும்!
17. பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்!
19. உலகத்தோரின் துன்பத்தைக் கண்டு உருகி அழுத உத்தமர்!
20. என்ன பேசுவது என்று திகைத்த ஸ்வாமி விவேகானந்தர்!
21. கானகத்தில் புலியும் ஸ்வாமி விவேகானந்தரும்!
22. ஸ்வாமி விவேகானந்தரின் ஹிருதயமும் ராதாவின் ஹிருதயமும்!
23. ராமகிருஷ்ண மிஷனின் வியாஸர்!
24. கத்தி முனை உன் பக்கமும், கைப்பிடி எதிரிலிருப்பவரிடமும் இருக்க வேண்டும்!
25. ஸ்வாமி விவேகானந்தர்: அளக்க முடியா, அறிய முடியா, மாபெரும் மஹான்!
26. சிவபிரானின் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம்!
27. மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா?
*
இந்த நூலுக்கு நான் அளித்த என்னுரை :
என்னுரை
ஸ்வாமி விவேகானந்தர்!
ஹிந்து மதத்தின் உயர்வை உலகிற்குக் காட்ட என உதித்த மஹான்!
ஹிந்துக்களை உறக்கத்திலிருந்து எழுப்பி உத்வேகம் ஊட்டி உயரச் செய்த அவதார புருஷர்!
சுதந்திரக் கனலை இந்தியாவில் ஊட்டக் காரணமாக அமைந்த தேசபக்தர்!
ஹிந்து வேத, உபநிடத, சாஸ்திரங்களின் ரகசியத்தை விண்டுரைத்த பேரறிஞர்!
அற்புதங்களை நிகழ்த்தி அனைவரையும் வியக்க வைத்த அற்புத சித்தர்!
முக்திக்கு வழி சொன்ன முக்தர்!
இந்தியாவின் திரண்ட வடிவமாகத் திகழ்ந்து இந்தியாவின் உண்மை சொரூபத்தை உலகிற்குக் காட்டிய உன்னத தெய்வீகப் பேரருளாளர்!
வெளிநாட்டு அறிஞர்களையும், மேதைகளையும் இந்தியாவை நோக்கிக் கவர்ந்த யோகி!
அமெரிக்காவை ஆன்மீகத்தால் வென்றதோடு உலகெங்கும் பயணித்து அனைவரின் உயர்வுக்காகவும் பாடுபட்ட உத்தமர்!
ஏழைகளின் துயர் தீர்க்கவும், அவர்களை உயர்த்தவும் வானிலிருந்து உலகிற்கு இறங்கி வந்த ராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர்!
இந்தியாவை அறிய வேண்டுமெனில் முதலில் அறிய வேண்டிய மஹா புருஷராக வாழ்ந்து காட்டிய வித்தகர்!
இப்படி ஸ்வாமி விவேகானந்தரின் அருமை பெருமைகளை முடிவற்று முழங்கிக் கொண்டே இருக்கலாம்!
குறுகிய காலமே வாழ்ந்த அவரது வாழ்வில் தான் எத்தனை நிகழ்வுகள். அனைத்தும் அருமையானவை; சத்தியத்தோடு பரிமளிப்பவை.
அந்த நிகழ்வுகளின் சிறு துளிகளே இந்த நூல்.
இந்தக் கட்டுரைகளைப் படித்து உத்வேகம் பெற்று ஸ்வாமி விவேகானந்தரின் அனைத்து உரைகளையும் படித்து அவர் காட்டிய வழியில் ஹிந்து மதத்தின் பெருமையை உலகெங்கும் பரப்பி உயர்வோமாக!
ஞான ஆலயம், பாக்யா, முதல் ஓசை உள்ளிட்ட பத்திரிகைகளிலும், www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கிலும் அவ்வப்பொழுது நான் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூலாக மிளிர்கிறது.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு என்னை ஊக்குவித்த ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ், பாக்யா ஆசிரியர் திரு கே.பாக்யராஜ், லண்டன் திரு சுவாமிநாதன், திரு தென்னவன் பாலு ஆகியோருக்கு எனது நன்றி.
இந்த நூலை அழகுற அமைத்து வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
சான்பிரான்ஸிஸ்கோ
21-7-2022
ச.நாகராஜன்