உடன் பிறப்பு (Brothers, Sisters) பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,477)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,477

Date uploaded in London – 26 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

THIS IS FOURTH VERSE WITH LONDON SWAMINATHAN’S COMMENTARY

4. உடன் பிறப்பு

கூடப் பிறந்தவர்க் கெய்துதுயர் தமதுதுயர்

     கொள்சுகம் தம்சு கமெனக்

  கொண்டுதாம் தேடுபொருள் அவர்தேடு பொருள்

     அவர்கொள் கோதில்புகழ் தம்பு கழெனத்,

தேடுற்ற அவர்நிந்தை தம்நிந்தை தம்தவம்

     தீதில்அவர் தவமாம் எனச்

  சீவன் ஒன்றுடல்வே றிவர்க்கென்ன, ஐந்தலைச்

     சீறரவம் மணிவாய் தொறும்

கூடுற்ற இரையெடுத் தோருடல் நிறைத்திடும்

     கொள்கைபோல் பிரிவின் றியே

  கூடிவாழ் பவர்தம்மை யேசகோ தரரெனக்

     கூறுவது வேத ருமமாம்;

ஆடிச் சிவந்தசெந் தாமரைப் பாதனே!

     அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆடிச் சிவந்த செந்தாமரைப் பாதனே – நடித்துச் சிவப்பான

செந்தாமரை மலரடிகளையுடையவனே! அண்ணல் – தலைவனாகிய, எமது

………… தேவனே!

கூடப் பிறந்தவர்க்கு எய்துதுயர் தமதுதுயர் கொள்சுகம்

தம்சுகம் என – உடன் பிறந்தவர்களுக்கு நேர்ந்த வருத்தம் தமது வருத்தம்

அவர்கள் கொள்ளும் இன்பம் தம் இன்பம் என்றும், தாம் கொண்டு தேடு

பொருள் அவர் தேடு பொருள்,

அவர்கொள் கோதுஇல்புகழ் தம்புகழ்என – தாம் முயன்று சேர்க்கும் பொருள் அவர்கள் சேர்க்கும் பொருள், அவர்கள் கொண்ட குற்றமற்ற புகழ் தம்முடைய புகழ் என்றும்,

அவர் தேடு உற்ற நிந்தை தம் நிந்தைதம் தவம் தீதுஇல் அவர் தவமாம் என –

அவர்கள் கொண்ட பழிப்பு தம்முடைய பழிப்பு, தம்முடைய தவம் குற்றமற்ற

அவருடைய தவமாகும் என்றும்,

 இவர்க்குச் சீவன் ஒன்று உடல்வேறு

என்ன – இவர்களுக்கு உயிர் ஒன்று, மெய் மட்டும் வேறு என்றும்,

சீறு அரவம் மணி ஐந்தலைவாய் தொறும் – சீறுகின்ற பாம்பின்

மாணிக்கங்களையுடைய ஐந்து தலைகளிலுமுள்ள வாய்தோறும்,

கூடு உற்ற இரை எடுத்து ஓர் உடல் நிறைத்திடும் கொள்கைபோல் – கிடைத்த

உணவை யெடுத்து ஒருடலை நிறைக்கின்ற இயற்கைபோலவும்,

 பிரிவேஇன்றி – பிரிவே யில்லாமல், கூடி வாழ்பவர் தம்மையே

சகோதரர் எனக் கூறுவதுவே தருமம் ஆம் – கூடிவாழ்கின்றவர்களையே உடன்பிறந்தோர் என்று கூறுவது அறமாகும். 

XXXX

லண்டன் சுவாமிநாதன் விளாக்க உரை- வியாக்கியானம்

இந்தப் பாட்டில் இரண்டு அருமையான உவமைகள் வருகின்றன; முதலா வது – ஈருடல் ஓருயிர் ; பொதுவாக கணவன் மனைவிக்கு அல்லது காதலன்-காதலிக்குப் பயன்படுத்தப்படும் வாசகம். இதை அம்பலவாணர் சகோதர்களுக்குப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது சித்திரம்- ஐந்து தலை நாகம், ஐந்து தலைகளால் சாப்பிட்டாலும் அது ஒரே உடலிலேயே செல்லுவது போல — என்ற சித்திரம் ஆகும். உலகில் 5 தலைப் பாம்பு கிடையாது; கற்பனைக் கதைகளில் மட்டுமே உண்டு. ஆ னால் சிவனுக்கு 5 தலைகள் உண்டு. அப்படிப்பார்த்தாலும் அவருக்கும் உடல் ஒன்றே ; ஆக அதையும் நினைவிற்கொள்ளலாம். 

உடன் பிறந்தார் என்பவர் எப்படி இருக்கவேண்டும் அல்லது யார் உண்மையன சகோதரர் என்று இலக்கணம் வகுக்கும் பாடல் இது. சம்ஸ்க்ருதத்தில் அண்ணன், தம்பி இருவருக்கும் பொதுவான சொல் சகோதரர் .

xxx

Linguistic points 

இது சக + உதர என்பதிலிருந்து உருவான சொல். உலகில் தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சகோதர மொழிகள். மெர்காத்தியர் சொல்லுவது போல இரு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல. இதை 200 கட்டுரைகள் மூலம் நிரூபித்துள்ளேன். இந்த இரண்டு மொழிகளே பேசசு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இன்று வரை சந்தி விதிகளைப் பின்பற்றுகின்றன.

ஸம்ஸ்க்ருத்த்தில் அ +உ = ஓ ;

ஓம்காரத்தையும்  நாம் அ +உ +ம என்றே பிரிப்போம். அவ்வகையில் ஸஹ + உதர = ஸஹோதர என்று மாறும் .

உதர என்றால் வயிறு ; அம்மாவின் ஒரே வயிற்றுப் பகுதியிலிருந்து வந்தவர்கள் சகோதர , சகோதரி ஆவர் . இந்தச் சொற்களும் தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சகோதர மொழிகள்– ஒரு தாய் வயிற்றுப்  பிள்ளைகள் என்பதைக்  காட்டும். ஸம்க்ருதத்தில் எப்படி பெண்பாற் சொற்கள் உருவாக்கப்படுகின்றனவோ அப்பாடித்தான் தமிழும் செய்யும். இதை உலகில் வேறு எந்த மொழிகளிலும் காண முடியாது. கொஞ்ச நஞ்சம் இருந்தால் அவை நம்மிடமிருந்து தோன்றியவையாக இருக்கும்.

சம்ஸ்க்ருதத்தில் ப்ராதா என்றால் சகோதரன்; இது ஆங்கிலத்தில் ப்ரதர் BROTHER ஆக மாறியது

xxxx

இனி மேற்கூறிய பாட்டின் விளக்கத்துக்கு வருவோம்

ஒரே வயிற்றிலிருந்து பிறந்தார் மட்டுமே சகோதரர் என்பதல்ல. அந்தக்  குணத்தை உடைய அனைவருமே சகோதரர் ஆவர். ஏனெனில் அவர்கள்,  மேற்கூறிய பாட்டில் உள்ளது போல, பிறர் இன்ப துன்பங்களைத் தமதாக ஏற்று உதவுகின்றனர். உலகில் முதல் முதலி ல் இதைப்  பின்பற்றிவர் ராம பிரான். அதனால்தான் அந்தப் பெ யரைச் சொன்னவுடன் இந்துக்கள் புனிதம் அடைகின்றனர்.

ராமனுடன் பிறந்தவர் எவருமிலர் ; கோசாலைக்கு அவர் ஒருவரே புதல்வர்; ஆயினும் பிற அன்னையர் வயிற்றில் பிறந்த மூவரையும் சேர்த்து நால்வர் என்று உலகம் அழைத்தது. ஆனால் ராமனோ அதற்கெல்லாம் பல படிகள் மேலே சென்று, வேடர் குல குகனை நீ என் சகோதரன் என்று சொல்லிவிட்டு, ,பின்னர் குரங்கின சுக்ரீவனை ஆறா வதாகச் சேர்த்துக்கொண்டு, இறுதியில் அரக்கர் குல விபீஷணனை ஏழாவது பிரதர் BROTHER என்கிறான்

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவரானேம் எம்முழை அன்பின்வந்த

அகம் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்

புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொ லிந்தான் நுந்தை

–வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம் 

பொருள்

அன்பின் காரணமாக எம்முடன் வந்து சேர்ந்தவனே! நாங்கள் பிறப்பால் நான்கு சகோதரர்கள்; கங்கைக் கரையில் குகனுடன் நட்புக் கொண்டு ஐவர் ஆனோம்; பின்னர் கிட்கிந்தையில், மேருவை வலம் வரும் சூரியனின் புதல்வனான, சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம்; இன்று உன்னுடன் நட்பு பூண்டு எழுவர் ஆகிவிட்டோம் . என் தந்தை எனக்கு காட்டை அளித்ததால் நிறைய பிள்ளைகள் ஏற்பட்ட மன நிறைவு அவனுக்கு கிடைத்துவிட்டது.- என்று ராமன் சொன்னான் 

என்ன அற்புதமான பாடல்! இதுதான் உண்மையான ‘யாதும் ஊரே, யாவரும் சுற்றத்தார் (கேளிர்)’.

XXXX

ராமனுக்கு டுத்து வந்தவன் கிருஷ்ணன். அவரை  மஹாபாரதத்தில் காண் கிறோம் ; அந்த மஹாபாரதத்தில் மேலும் ஒரு சகோதர இலக்கணம் கிடைக்கிறது. மஹாபாரதத்தில் மிகவும் புகழ்பெற்ற பொன் மொழிகள் உடையது “பேயின் கேள்விகள்” எனப்படும் யக்ஷப் ப்ரச்னம் ஆகும். 120-க்கும் மேலான கேள்விகளுக்கு உண்மையான பதில்களை சொன்னவுடன். மரத்தில் இருந்த பூதத்துக்கு பரம திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. பின்னர் ஏற்கனவே கீழே விழுந்து கிடக்கும் நால்வரில் யாரை உயிர்ப்பிக்க வேண்டும் என்று கேட்கிறது. என்னுடன் குந்தி வயிற்றில் பிறந்த மூவரில் நான் ஒருவன் இருக்கிறேன்..என் சிற்றன்னை மாதரி வயிற்றில் பிறந்த நகுலனை எழுப்பு என்று சொன்னவுடன் யக்ஷ /பூதத்துக்கு மனம் உருகிவிட்டது. ஆஹா இஃதல்லவோ ஸஹோதர பாசம் அனைவரும் உயிர்பெற்று எழுவதாக என்று சொல்லி பஞ்ச பாண்டவர்களை அனுப்பிவைக்கிறது . சகோதர இலக்கணத்தை நமக்குச் சொல்லிக் கொடுக்கத்தான் கம்பனும் வியாசனும் நமக்கு இதிஹாச புராணங்களை எழுதி வைத்தனர்.

XXX

இனி ஸம்ஸ்ருத நூல்கள் சிலவற்றைக் காண்போம்:

குறைகள் இருந்தாலும் அதையும் மீறி சகோதரர்களை நேசியுங்கள்

கர்த்தவ்யோ  ப்ராத்ருஷு ஸ்னேஹக விஸ்மர்தவ்யா குணே தராஹா

–பாஷா எழுதிய தூத வாக்ய நாடகம்

XXX

ஜ்யேஷ்டோ ப்ராதா பித்ரு ஸமஹ

அண்ணன் என்பவன் தந்தைக்குச் சமம்

—பாஷா எழுதிய மத்யம வ்யாயோக  நாடகம்

XXX

சகோதர பாசம் தெய்வீகமானது

ப்ராத்ரு ஸ்னேஹோ ஹ்யலெளகிகஹ

–விக்ரம சரித என்னும் விக்ரமாதித்யன் கதைகள் 

XXX

ப்ராத்ரா விஷமஸீலோபி கதம் ப்ராதா நிரஸ்யதே

ஒரு சகோதரன் தவறிழைத்தாலும் அவனை விட்டு நீங்குவதை எப்படி ஏற்க முடியும்?

—-வால்மீகி ராமாயணம் 6-87-20

XXXX

ந ஸர்வே ப்ராதரஸ் தாத பவந்தி பரதோபமா

எல்லா சகோதரரும் பரதனுக்கு சமம் ஆக முடியுமா ?

–வால்மீகி ராமாயணம் 6-18-15

न सर्वे भ्रातरस्तात भवन्ति भरतोपमाः ||६-१८-१५
मद्विधा ना पितुः पुत्राः सुहृदो वा भवद्विधाः |

“My dear one! Neither all brothers are like Bharata, nor all sons of a father like me nor all friends are like you.”

கம்பனும் வால்மீகியை எதிரொலிக்கிறான்

ஆயிரம் ராமர்  = பரதன்

‘தாய் உரைகொண்டு தாதை உதவிய     தரணிதன்னை,

‘‘தீவினை” என்ன நீத்து,     சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்றபோழ்து, புகழினோய்!     தன்மை கண்டால்,

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,     தெரியின் அம்மா!

     ‘புகழினோய்! – புகழ் உடையவனே!; தாய் உரை கொண்டு – (உன்)

தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு;  தாதை

உதவிய – (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த;  தரணி தன்னை –

(கோசல நாட்டு) அரசாட்சியை; தீவினைஎன்ன நீத்து – தீயவினை வந்து

சேர்ந்தது  போலக் கருதிக் கைவிட்டு; முகத்தில் சிந்தனை தேக்கி –

முகத்தில் கவலை தேங்கியவனாய்; போயினை – (வனத்துக்கு) வந்தாய்;

என்ற போழ்து – என்ற காலத்தில்; தன்மை கண்டால் – (உனது)

நல்லியல்புகளைஅறியுமிடத்து; தெரியின் – ஆராய்ந்தால்; ஆயிரம்

இராமர் நின்கேழ்ஆவரோ – ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின் ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா! -.

     தந்தைமட்டுமே அளித்த அரசை வெறுத்து வந்த இராமனிலும், தாயும்

தந்தையும் இணைந்து அளித்த அரசை வெறுத்த பரதன் மேன்மை புலப்பட

இவ்வாறு கூறினான்.

XXX

தமிழில் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற சொல் வழக்கும் உளது. லட்சுமணனின் புகழைப் பாடும் வரி அது. ராமனுக்கு நேரும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்தவன் அவன். 14 ஆண்டுக்காலம் இரவு முழுதும் தூங்கமால் காவல் காத்தவன் அவன் .

இதற்கு நிகராக அரக்கர் தரப்பில் கும்பகர்ணனையும் ராமாயணம் நமக்குக் காட்டுகிறது ராவணன் செய்த தவற்றைச் சுட்டிக்காட்டியும், நீ என் சகோதரன்; எனக்குச் சோறுபோட்டு வளர்த்தாய் அதற்காக உன் தரப்பில் சண்டையிடுகிறேன் என்பான்.

தமிழில் அண்ணன் தம்பிகளைப் போற்றியும் தூற்றியும் பழமொழிகள் இருக்கின்றன. தம்பி பிடித்த முயலுக்கு மூன்றே கால், அண்ணனுக்குத் தம்பி அல்லவென்று போகுமா  என்ற பழமொழி கள் சகோதர பாசத்தைக் காட்டும்.

வடக்கில் ரக்ஷா பந்தன் என்ற விழா சகோதர பாசத்தை அ னைவரிடமும் வளர்க்கும் விழாவாக இருக்கிறது. முஸ்லீம்கள் படையெடுப்பிலிருந்து இந்துப் பெண்களைக் காப்பாற்றுவதற்கு உருவான சடங்கு இன்று பெரிய விழாவாக வளர்ந்து விட்டது.

–SUBHAM— 

TAGS– உடன் பிறப்பு, சகோதரன், யக்ஷப்ரச்னம், பரதன், தம்பி உடையான் , ஆயிரம் ராமர், அறப்பளீச்சுர சதகம்,,குகன், பிராதா

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: